தமிழுக்கான தொழில் நுட்பங்கள்

 

education

நுகவோரும் தமிழும்

நுகர்வோருக்குப் பயன்படும் பல தொழில்நுட்பங்களில் இன்று கற்றல் கற்பித்தலுக்கான தொழில் நுட்பங்கள் இன்று முன்னணி வகிக்கின்றன. அவற்றைத் தமிழ் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்லும் நோக்கமே இது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தமம் மாநாட்டில் நடந்த ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சிக்கான காணொலியை இங்கு இட்டுள்ளேன். கணினி எப்போது மாணவர்களால் முழுமையாகக் கல்விக்காக பயன்படுத்தப் படுகிறதோ அன்று தான் தமிழ் கணினியியலின் வளர்ச்சி ஒரு உன்னத நிலையை அடைந்து விட்டதாகக்கருதலாம். இணையம் வழி சமூக ஊடகங்கள் வழி அப்படி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இங்கு இதைப் பதிகிறேன்.இங்கு இடப்பட்டுள்ள இந்தக் காணோலி என் பதிவுகளின் முதல் தொடக்கம். கற்றல் கற்பித்தலுக்கான தொழில் நுட்பங்களுக்கான விளக்கங்கள் இன்றிலிருந்து தொடங்கும்.

தமிழ் எழுத்துருக்கள்

தமிழில் ஒருங்குறி டேஸ் ஆகிய இரு எழுத்துரு வகைகளைக் கொண்டு இன்று தட்டச்சு செய்து வருகிறோம். ஆனால் ஒருங்குறி பயன்பாடு கணினிகள் முழுவதும் பயன் படுத்தப்படுவதால் நாம் தமிழைக் கணினியில் பயன்படுத்துவது எளிதாகிறது. எனவே முதலில் தமிழ் மொழியை எப்படி கணினியில் பயன்படுத்துவது எனப் பார்ப்போம்.
இன்றைய எல்லாக் கணினி இயங்கு தளங்களிலும் ஒருங்குறியில் தமிழ் தட்டச்சு செய்வது என்பதுமிக எளிதான ஒன்று, என்றாலும் எகலப்பை , NHM எழுத்துரு மாற்றி ஆகிய இரண்டையும் நான் அதிகமாகப் பயன்படுத்துவேன்.
இங்குள்ள சுட்டிகளையும் இங்கே கொடுத்து உள்ளேன்.இன்றைய நிலையில் தமிழைக் கணினியில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
என் பதிவுகள் இன்னும் தமிழைக் கணினியில் பயன்படுத்தத் தயங்குபவர்களுக்கானது.
Mac இயங்குதளங்களில் அஞ்சல், தமிழ்99 தட்டச்சு முறைகள் உள்ளன. ஒரு கணினியில் தமிழில் தட்டச்சு செய்து முதலில் பழகிக் கொண்டால் தமிழ்க் கணினியை தமிழ்க் கல்விக்காகவும், தமிழ் வழிக் கல்விக்காகவும் ஆசிரியர்களாலும், மானவர்களாலும் எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.இன்னும் சில தமிழ் தட்டச்சு மென்பொருட்களை பொது மக்கள் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தலாம் என்றாலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அவர்களுடைய பொருளாதாரத்திற்கும் திறவூற்று மென்பொருட்களே வசதியானது என்பதால் நான் இங்கே திறவூற்று மென்பொருட்களைப் பற்றியும் அவர்களின் கணினியில் ஏற்கனவே இருக்கக் கூடிய மென்பொருட்கள் பற்றியும் மட்டுமே இங்கு ஆராய்ந்து எழுத இருக்கிறேன்.

எழுத்துரு தரவிறக்கம் செய்ய
கூகுள் எழுத்துருக்கள்
ekallappai
NHM writer
nhmconverter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *