ஆன்லைன் வகுப்புகளும் அதன் பாதகங்களும்

ஆன்லைன் வகுப்புகளும் அதன் பாதகங்களும்

செந்தில்குமார் தியாகராஜன், கல்லூரி பேராசிரியர்,

எக்ஸ்ல் பிசியோதெரபி கல்லூரி, குமாரபாளையம், நாமக்கல், இந்தியா,

மெயில் : senphysio1981@gmail.com

ஆய்வுச் சுருக்கம்

சமீப காலமாக தினமும் நாம் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருந்த அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு அரசு கூறும் வாழ்க்கைமுறையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறைந்தது ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரம் கணிப்பொறி முன்பு அமர்ந்து வேலை  செய்வதோ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களை கவனிப்பது இன்றைய சூழல் கட்டாயமாக்கி இருக்கிறது. கணிப்பொறி முன் அமர்ந்து வெகு நேரம் வேலை செய்யும் பொழுது அதேபோல் ஒன்லைன் வகுப்புகள் கவனிக்கும் பொழுது  பல்வேறு உடல் பிரச்சினைகள் ஏற்பட நேரிடுகிறது. எலும்பு தசை நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் மலச்சிக்கல் சிறுநீரக பித்தப்பை கல் ஏற்படுதல் சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் கணிப்பொறி முன்பே அமர்ந்திருப்பதால் இதுபோன்ற பெரிய பிரச்சனைகளும் ஏற்படும்பொழுது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். நம் காலம் கணிப்பொறியோடு சேர்ந்துதான் கழிகிறது, கழித்ததாகத்தான் வேண்டும் அதனால் இதுபோன்ற பிரச்சனைகளை நாம் எப்படி தவிர்ப்பது என்பதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளலாம் அதற்கு சில வழிமுறைகளையும் இங்கே பட்டியலிடுகிறேன். கணிப்பொறி வலியோடு வாழ நாம் பிறக்கவில்லை வலி இல்லாமல் வாழ நமக்கு தெரியும் தொடரும் வாழ்க்கை இனிமையாக அமைய நல்ல வழிமுறைகள் உள்ளன.

முன்னுரை

நாம் தான் உலகை ஆண்டு  கொண்டிருக்கிறோம்  என்று மனிதன் நினைத்துக் கொண்டிருந்தபோது யாருமே எதிர்பாராத வண்ணம் இந்த உலகத்தையே மனிதர் கைக்கு அப்பால் இருந்து வெளிப்பட்ட வைரஸ் கிருமி இன்று நம்மை கடந்த சில மாதங்களாக ஆண்டு கொண்டிருக்கிறது. சமீப காலமாக தினமும் நாம் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருந்த அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு அரசு கூறும் வாழ்க்கைமுறையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அப்படி வாழ்வது தான் சிறப்பும் கூட. ஆன்லைன், ஒர்க் பிரேம் ஹோம், லாக்டவுன், கரோனா, வைரஸ், சானிடைசர், முகக் கவசம், தனிமனித இடைவெளி இந்த வார்த்தைகளெல்லாம் இனிமேல் நம் வாழ்க்கையோடு ஊடுருவி விட்டது. ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து கவனிக்கும் பொழுது கழுத்து முதுகு தசைகள் தெய்வடைகின்றன. இதனால் 86% பள்ளி மாணவ மாணவிகளுக்கு கழுத்து முதுகு தோள்பட்டை மற்றும் மூட்டு தசைகளில் வலி மற்றும் இறுக்கம் ஏற்படுவதாக ஆய்வு விளக்குகிறது. [1]

பொருளுரை மற்றும் கருத்து விளக்கம்

உன் வேலையை உன்  வீட்டிலேயே நீ செய் என்று பெரும்பாலான பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் கணிப்பொறி ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். [2]. அதேபோல பள்ளி மாணவ மாணவியர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் இதே போன்ற வாழ்க்கைக்கு வாழ கற்று கொண்டு இருக்கிறார்கள்,  குறைந்தது ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரம் கணிப்பொறி முன்பு அமர்ந்து வேலை  செய்வதோ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களை கவனிப்பது இன்றைய சூழல் கட்டாயமாக்கி இருக்கிறது. இந்த வாழ்க்கை முறை மாற்றம் நம்மில் அனைவருக்குமே மிகவும் புதியதாக இருக்கும். செல்போனிலோ கணிப்பொறி முன்பு அமர்ந்து விளையாடுவது அல்லது அப்பா வேலை செய்து கொண்டிருந்தபோது கணிப்பொறி கடந்து செல்வது என்றிருந்த பள்ளிக்குழந்தைகள் இன்று ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.[3]

இந்த கால சூழ்நிலை மாற்றம் நாம் மிகவும் எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும் நமது பொருளாதாரத்தை கட்டிக் காக்கவும் அதேபோல அலுவலக வேலைகளை முடிக்கவும் கணிப்பொறியோடு வாழும் வாழ்க்கை சாதாரணமாக மாறிவிட்டது. முன்பெல்லாம் நம் பிள்ளைகளை  கணிப்பொறி முன்பு அமர விடாத அப்பாக்களும் அம்மாக்களும் தனது மகனையும் மகளையும் இன்று கணிப்பொறி முன்போ அல்லது செல்போன் முன்போ  அமர கட்டாயப்படுத்துகின்றனர், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல ஆறு மணியிலிருந்து எட்டு மணிநேர ஆன்லைன் வகுப்புகளில் உள்ள அல்லது கணிப்பொறி வேளைகளில் மூழ்கி இருக்கும் பொழுது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. ஏம்மா  கம்ப்யூட்டரை பார்க்க வேணாம்னு சொல்லுவா அப்பல்லாம் இப்ப எல்லாம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார சொல்ற என்று கேள்வி கேட்கும் குழந்தைகளுக்கு பதிலைத் தேடும் பெற்றோர்கள் ஏராளம்.  காலைல  பல்லு தேய்ச்சியா பால் குடிச்சிட்டு போய் உட்காரு மேக்ஸ் டீச்சர் ஆன்லைன் கிளாஸ் போகுது பாரு என்று பெற்றோர்கள் குழந்தைகளை வருத்தும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது.[4]

கணிப்பொறி முன் அமர்ந்து வெகு நேரம் வேலை செய்யும் பொழுது அதேபோல் ஒன்லைன் வகுப்புகள் கவனிக்கும் பொழுது  பல்வேறு உடல் பிரச்சினைகள் ஏற்பட நேரிடுகிறது.[5] காலை 9 மணிக்கே தயாராகும் ஆன்லைன் வகுப்புகளை குறைந்தது ஆறு மணி நேரம் தொடர்ந்து ஒரு குழந்தை கவனிக்கும் பொழுது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதில் மிக முக்கியமான ஒன்று முதுகு வலியும் கழுத்து வலியும் கைவிரல் வலியும் பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இப்பொழுது ஏற்படும் சிறுசிறு கழுத்துவலி முதுகுவலி பின்னாளில் நாள்பட்ட அதாவது தொடர் பிரச்சினையாக பூதமாக மாறலாம். முன்பெல்லாம் எலும்பு தேய்மானம் என்பது  55 வயதிற்கு மேலே இருப்பவர்களுக்கு ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் எடுத்துக்கூறினர். ஆனால் கணிப்பொறி பயன்பாடும் செல்போன் பயன்பாடும் இந்த எலும்பு தேய்மானம் தளர்ச்சியுறுதல் போன்ற உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதை துரித படுத்துகின்றன.[6]

பொதுவான தொடர் கணிப்பொறி மாறும் செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

1. கழுத்து வலி

2.  தோள்பட்டையில் ஏற்படும் வலி

3. கணிப்பொறியில் இருக்கும் செயல்பாட்டை(மௌஸ்) கட்டுப்படுத்துவதால் ஏற்படும் கை விரல்களில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல்

4. கட்டைவிரல் ஆட்காட்டி விரல் நடு விரல்களில் ஏற்படும்  உணர்ச்சி மாறுபட்டு உணருதல்

5. முழங்கை மற்றும் மூட்டு வலி

6. முதுகு வலி மற்றும் தலை வலி கண் எரிச்சல், கண்களில்  நீர் வடிதல்

7. இடுப்பு தசைகளில் அதிக நேரம் அமர்வதால் ஏற்படும் வலி

8. முதுகு மற்றும் கால் பகுதி வரை மேலிருந்து கீழாக வலி வருதல்

9. கால் விரல்கள் மருத்துபோதல்

10. உடம்பில் நிலைப்பாட்டை மாற்றம்(POSTURE)அதாவது உடம்பில் கூன் விழுதல்

இதுபோன்ற எலும்பு தசை நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் மலச்சிக்கல் சிறுநீரக பித்தப்பை கல் ஏற்படுதல் சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் கணிப்பொறி முன்பே அமர்ந்திருப்பதால் இதுபோன்ற பெரிய பிரச்சனைகளும் ஏற்படும்பொழுது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற பிரச்சினைகளை எப்படி தவிர்ப்பது அதற்காக ஆன்லைன் வகுப்புகளை தவிர்த்து விடலாமா இது கணிப்பொறி முன் அமர்ந்து வேலை செய்வதை தவிர்த்து விடலாமா என்றால் கண்டிப்பாக அது நம்மால் முடியாது. அது சரியான தீர்வாகவும் இருக்காது, நம் காலம் கணிப்பொறியோடு சேர்ந்துதான் கழிகிறது, கழித்ததாகத்தான் வேண்டும் அதனால் இதுபோன்ற பிரச்சனைகளை நாம் எப்படி தவிர்ப்பது என்பதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளலாம் அதற்கு சில வழிமுறைகளையும் இங்கே பட்டியலிடுகிறேன்.

பெற்றோர்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்

1. உங்கள் குழந்தைகளை கண்டிப்பாக காலையிலோ மாலையிலோ விளையாட சிறுசிறு விளையாட்டுக்களை  பழக்குங்கள் நீங்களும் அவர்களோடு விளையாடலாமே

2. உங்கள் குழந்தைகளோடு  பெற்றோர்களும் மட்டைப்பந்து கால்பந்து போன்ற விளையாட்டுக்கள் விளையாடும் பொழுது மேற்குறிப்பிட்ட தசை எலும்பு நரம்பு சார்ந்த பிரச்சினைகளை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்

3. உங்கள் குழந்தைகள் அமர்ந்து ஆன்லைன் வகுப்புகள் கவனிக்கும் பொழுது அவர்கள் இருக்கைகள் உள்ள அறை நல்ல காற்றோட்ட வசதி உள்ளதாகவும் அதேபோல நல்ல வெளிச்சம் உள்ளதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்

4. ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பு முடியும் பொழுது இருக்கையிலிருந்து எழுந்து நடக்குமாறு உங்களின் குழந்தைகளுக்கு அறிவுறுத்தவும்.

5. கணிப்பொறி முன் அமர்ந்து வேலை செய்யும் பொழுது, வயது வந்தவர்களும் தொடர்ந்து வெகுநேரம் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்வதை தவிர்த்து நேர இடைவெளியை அனுசரிக்கும்.

6. அதிக நீர் பருகுவதையும் சிறுநீர் வரும்பொழுது சிறுநீர் கழிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவும் அதனை விடுத்து சிறுநீரை அடக்கும் பொழுது சிறுநீரக கற்கள் நோய்தொற்று  போன்றவை ஏற்படுவதை தவிர்க்கலாம்

7. பழங்கள் உண்பதையும் பழச்சாறுகள் உண்பதையும் குழந்தைகளுக்கு பழக்கபடுத்துவதோடு பெரியவர்களும் பருகுவதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது சத்துக்களும் இதனால் கிடைத்துவரும்.

8. நொறுக்குத்தீனிகள் உண்பதை கணிப்பொறி முன்  இருக்கும் பொழுது தவிர்ப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமன் போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

சில உடற்பயிற்சிகள்

கழுத்து முதுகு வலிகளை மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றை  தவிர்க்க சில உடற்பயிற்சிகளை இங்கே உங்களுக்கு தருகிறேன்.

1. கழுத்து தசைகளை இலகுவாக்க வானத்தை நோக்கிய நேர்கொண்ட பார்வை  இருக்குமாறு ஒரு ஐந்து மணித்துளிகள் மேலே நோக்குதல் அதேபோல கழுத்தை தரையை நோக்கியவாறு ஐந்து மணித்துளிகள் கீழ் நோக்கியவாறு பிடித்திருப்பது இதுபோன்று காலை மாலை  10 முறை செய்துவருவது உங்களுக்கு கழுத்து தசைகளை இலகுவாக்கும்.

2. அதேபோல கண்பார்வை இடதுபுறமும் திருப்பியவாறு அதேபோல வலதுபுறமும் திருப்பியவாறு ஐந்து மணித்துளிகள் பிடித்திருப்பது இதுவும் 10 முறை செய்யலாம்.

3. தோள்களை வானத்தின் நோக்கியவாறு உயர்த்துவது  உயர்த்திய வண்ணம் ஐந்து மணித்துளிகள் பிடித்திருப்பது இதுபோன்று 10 முறை செய்வது.

4. கழுத்து தசைகளை இலகுவாக்க உங்களது கையை பின்புறம் கட்டிக்கொண்டு படத்தில் நோக்கியவாறு உங்கள் கழுத்தை வலது புறமோ அல்லது இடப்பக்கமோ உங்கள் தலையில் கை வைத்து இழுக்கும் பொழுது கழுத்து தசைப்பிடிப்புகளை தவிர்க்கலாம்.

5. நின்றுகொண்டு நேராக குனிந்து கட்டைவிரலை தொடுவதை தினமும் 10 முறை செய்வது முதுகு தசைகளை இலகுவாக்கும்.

6. முடிந்தவரை உங்கள் உணவு உண்பதை டைனிங் டேபிள் போன்றவற்றில் உண்ணாமல் தரையில் அமர்ந்து உங்கள் குழந்தைகளோடு உணவு உண்ணுவது சிறப்பானது.

7. அதேபோல மாலையிலும் சிறிது நேரம் உங்கள் குழந்தைகளோடு விளையாடுங்கள்.

8. தினமும் எட்டு மணி நேர உறக்கத்தை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். உறக்கம் உங்கள் உடல் தசைகளில் ஏற்படும் தசை தளர்ச்சியை தவிர்க்கும்

9. நீங்கள் படுத்துறங்கும் தலையணை மற்றும் படுக்கை உங்களுக்கு நல்ல உறக்கத்தை கொடுக்கும் வகையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

10. நிறைய நீர் அருந்துவதையும் அதேபோல நீங்கள் உங்கள் குழந்தையோடு ஆன்லைன் வகுப்புகள் அமர்ந்து அல்லது அவர்கள் அருகில் இருப்பது நல்லது.

முடிவுரை

நாம் வாழும் வரை நோயில்லாமல் வாழவே எல்லோரும் விரும்பிகிறோம். ஆனால் கால மாற்றம் பல்வேறு சூழல் சார்ந்த பிரச்சனை நம் வாழ்வை மாற்றி கொண்டே இருக்கிறது. மேலே குறிபிட்ட வழிமுறைகளை நீங்கள் பின்பற்றும் பொழுது உங்கள் குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் ஏற்படப்போகும் பல்வேறு பிரச்சினைகளை வருமுன் காப்பதோடு தவிர்க்கவும் முடியும்.  பொதுவாக பிற்காலத்தில் ஏற்படப்போகும் கை கால் மூட்டு கழுத்து முதுகு வலிகள் ஒருபக்க தலை வலி கண் பார்வை குறைபாடு போன்றவற்றை தடுத்து நிறுத்தவதோடு நோயில்ல வலியில்லா வாழ்க்கை வாழ்வதோடு மேற்குறிப்பிட்ட சிறு உடற்பயிற்சிகள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதோடு நீங்கள் செய்யும் வேலைகளையும் அதேபோல ஆன்லைன் வகுப்புகளையும் சிரமமில்லாமல் நல்ல ஊக்கத்தோடு கவனிக்க செய்ய முடியும்.

நன்றி

References

1. Parthibane S, Majumdar A, Kalidoss VK, Roy G. Prevalence and patterns of musculoskeletal pain among school students in Puducherry and its association with sociodemographic and contextual factors. Indian J Pain 2017;31:119-26

2. Picavet HS, Schouten JS. Musculoskeletal pain in the Netherlands: prevalences, consequences and risk groups, the DMC (3)-study. Pain. 2003;102:167–78.

3.  Dockrell S, Simms C, Blake C. Schoolbag carriage and schoolbag-related musculoskeletal discomfort among primary school children. Appl Ergon. 2015;51:281–90.

4. “Neck pain: overview.” 17 December 2015. Pub Med Health, https://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0084213/#i2374.prevalenceandoutlook

5. Viana MC, Lim CC, Pereira FG, Aguilar-Gaxiola S, Alonso J, Bruffaerts R, et al. Previous mental disorders and subsequent onset of chronic back or neck pain: findings from 19 countries. J Pain. 2018;19(1):99–110.

6. San Francisco State University. “Computers can be a real pain in the neck.” ScienceDaily. ScienceDaily, 4 January 2019. <www.sciencedaily.com/releases/2019/01/190104131233.htm>.

error: Content is protected !!