சுகந்தி நாடார்

சுகந்தி நாடார் கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அவர் தன் தாய் மொழிப் பற்றின் காரணமாக தமிழ் அநிதம் என்னும் இணைய தளத்தைத் தொடங்கி ஆங்கிலம் வழியாகத் தமிழ் கற்று பட்டயம் பெற வழி செய்துள்ளார். இதுவே இன்றைய நிலையில் முழுக்க முழுக்க இணையதளம் வழி தமிழ் மாணவர்கல் பாடங்கள்படித்து தேர்வு எழுதி பட்டம் படிக்கும் வசதியை செய்து உள்ளார் இந்த முயற்சியில் அவருடைய பெண் குழந்தைகள் இருவரும் உறுதுணையாகவும்,பக்க பலமாகவும் இருக்கின்றனர். தமிழ் இணைய தளத்தை நல்ல முறையில் நடத்திச் செல்லும் பொருட்டு சுகந்தி தற்போது பாடத்திட்டங்களை வடிவமைத்து அவற்றை செயல்படுத்தும் பணியைச் செய்து வருகிறார் கணினித் துறையில் கற்பனையை வெளிப்படுத்தும் பல்வேறு ஊடகங்களில் தனது திறமையை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்.தற்போது அவர் கற்றல் கற்பித்தலுக்கான தொழில்நுட்பங்களில் அக்கறை காட்டி வருகிறார்

குழந்தைகளுக்காக சிறுகதைகளையும் பாடல்களையும் தமிழில் எழுதி வரும் சுகந்தி நாடார் அதற்கான படங்களை வரையும் முறையையும் கற்று வருகிறார்.விரைவில் அவரது புத்தகங்களை மின் இதழ்களாக மாற்றும் முயற்சியிலும் அவர் இறங்கி இருக்கிறார். தமிழ் கணினியில் உத்தமம் கணினி குழு வழியாக கணினிக் கட்டுரைகளை சமர்பித்த பேராளர் இவர். திருமணமாகி அமெரிக்கா வரும் முன் சுகந்தி தொழிலாளர்கள் நல வழக்கறிஞராக மதுரையில் சில காலம் பணியாற்றினார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *