ஆசிரியர்களுக்கான கல்வியியல் ஐ.சி.டி கருவிகள் – ஓர் பார்வை

/

முனைவர். த. சகாய சைலா

என். கே. தி. தேசிய பெண்கள் கல்வியியில் கல்லூரி (தன்னாட்சி)

எண்.41, டாக்டர். பெசன்ட் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005

மின்னஞ்சல் முகவரி: arunsailajesun@yahoo.co.in

ஆய்வுச்சுருக்கம்:

அண்மையில் உலகெங்கும் கவனத்தைப் பெற்ற ஒரு துறையாக ஐ.சி.டி துறை விளங்குகிறது. அசாதாரணமான இந்த காலகட்டத்தில் தொன்றுதொட்டு வரும் கல்வி முறைகளில் மிகப்பெரிய மாற்றம்  ஏற்பட்டுள்ளது. கல்வி செயல்பாட்டில் ஐ.சி.டியின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. சுயபயிற்சி, சுயகற்றல் மற்றும் ஆசிரியர்களின் செயல்திறனை அதிகரிப்பதற்கான ஒரு பகுத்தறிவு வழியாகவும் இது செயல்படுகிறது. தொழில்நுட்பங்களின் முக்கிய கல்வி மதிப்பு என்னவென்றால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இருவருக்குமிடையே பல உணர்ச்சிகரமான ஊடாடும் கல்விச் சூழலை உருவாக்குவது. ஐ.சி.டி கருவிகள் ஆசிரியர்களின் அறிவுசார் ஆக்கப்பூர்வமான திறன்களையும் புதிய அறிவையும் சுயாதீனமாக பெறுவதற்கான அவர்களின் செயல்திறனையும் பல்வேறு தகவல்களுடன் பணியாற்றுவதற்கும் அனுமதிக்கின்றது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உயர்தரமான ஐ.சி.டி கருவிகளின்  அறிமுகம் இச்சூழ்நிலையில் கிடைத்திருக்கின்றது. ஆகவே இக்கட்டுரையானது ஆசிரியர்களுக்கான கல்வியியல் ஐ.சி.டி கருவிகளை அறிமுகப்படுத்தும் ஒரு களமாக அமைகின்றது.

குறிப்புச்சொற்கள்:

புத்தொளிர் திறன் பலகை, மெய்நிகர் கற்றல் வகுப்பறை, கற்றல் மேலாண்மை அமைப்புகள், ஊடாடும் வெண்பலகைகள், மன வரைபடங்கள், மதிப்பீட்டுக் கருவிகள்,

முன்னுரை (Introduction)

கற்பித்தலை உங்கள் மாணவர்களுக்கு அதிக விளையாட்டுத்தனமாகவும் மற்றும் கலந்துரையாடலாகவும் உருவாக்க விரும்புகிறீர்களா? உங்கள் மாணவர்களை வகுப்பில் சிறந்த விதத்தில் ஈடுபடுத்த விரும்புகிறீர்களா? இதைச் செய்வதற்கு இணையவழி கற்பிப்பு கருவிகளே சாவியாகும். வீடியோக்கள், படக்காட்சிகள், விளையாட்டுகள், மற்றும் குழு விவாதச் செயல்பாடுகள் போன்றவை உங்கள் சார்பில் முக்கிய கருவிகளாக இருக்க வேண்டும் மேலும் நீங்கள் மாணவர்கள் போல தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவராக இருக்கும் போது, வகுப்பறையில் அற்புதமான விஷயங்கள் நடக்கும். வகுப்பறையில் கணினியை ஒருங்கிணைப்பது 21 ஆம் நூற்றாண்டில் வேகமாக வளர்வதற்கு மாணவர்களுக்கு தேவைப்படும் முக்கிய தொழில்நுட்ப திறன்களை பலப்படுத்துவது மட்டுமின்றி மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கிறது மற்றும் கற்றலையும் மேம்படுத்துகிறது. 

புத்தொளிர் திறன் பலகை (Smart Board) நவீன கற்பித்தல் முறையின் முதல்கட்ட வளர்ச்சியாக, புத்தொளிர் திறன் பலகை கற்பித்தல் முறை (Smart Board Education) பல பள்ளிகளில் கல்லூரிகளில் மற்று ம்பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாடங்களைக் காட்சி வடிவிலும், காணொளி வாயிலாகவும் கற்பிக்கும் புத்தொளிர் (Smart Classrooms) வகுப்பறைகள் கற்றலை மேலும் எளிமையாக்குகிறது. ஆசிரியர்கள் நேரடியாக வகுப்பறையில் கற்பிக்கும்போது, சில சமயம் சில பாடங்கள் புரியாமல் போகலாம். ஆனால், படங்கள், வீடியோக்கள் மூலம் பாடம் கற்பிக்கப்படுவதால், கற்பனைத் திறன் விரிவடைகிறது. வேறு எங்கும் கவனம் சிதறவே சிதறாது. திரையில் என்ன வரும் என்பதைப் பார்த்து தெரிந்துகொள்வதில்தான் கவனம் இருக்கும். கவனம் சிதறாமல் படிப்பதால், ஏராளமான விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. எல்லா பாடங்களும் காட்சிப்படுத்தப்படுவதால், வகுப்பில் ஆசிரியரால் புரியவைக்க முடியாத விஷயங்களையும் புரிந்துகொள்ள முடியும். இது கரும்பலகையாகவும் தொடுதிரையாகவும் தொலைக்காட்சியாகவும் பயன்படுகிறது. புத்தொளிர் திறன் பலகையின் சிறப்பே, அதன் நேரடித்தன்மையும் அதனோடு இணைந்துள்ள இணையமும்தான். எந்த வகுப்பாக இருந்தாலும், அதில் நடைபெறும் சமீபத்திய விஷயங்களை, உடனடியாக இணையத்தில் இருந்து தரவிறக்கமும் செய்து கொள்ளவும் இயலும்.

மெய்நிகர் கற்றல் வகுப்பறை (Smart Virtual Classroom)

கற்றல் கற்பித்தலை கணினி, வெண்பலகைகள், படம் காட்டும் கருவிகள், சிறப்பு மென்பொருட்கள், காணொளி கருத்தரங்குக்கள் போன்றவைகளைக் கொண்டு ஒருங்கிணைக்கும் வாய்ப்புகளை  நல்கி தொழில்நுட்ப வகுப்பறைகளை உருவாக்கும்  நோக்கத்தோடு துவங்கப்பட்ட ஒரு செயல்திட்டமே மெய்நிகர் கற்றல் வகுப்பறைகள் ஆகும். மெய்நிகர் கற்றல் வகுப்பறையானது (Smart Virtual Classroom) தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு நிறுவப்பட்ட படபிடிப்புக் கூடத்திலிருந்து (Studio) ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளானது அந்த படப்பிடிப்புக் கூடத்தோடு இணையதளம் மூலம் இணைக்கப்பட்ட பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பபடுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் நிகழ்ச்சியில் காணொளிக் கலந்துரையாடலில் உள் நுழைந்து (logged) ஊடாடும் வெண்பலகை (Interactive White Board), பட வீழ்த்தி , கணினி ஆகியவைகள் உதவியோடு  மெய்நிகர் வகுப்பறைச் சூழலில் கற்றுக்கொள்கிறார்கள்

கற்றல் மேலாண்மை அமைப்புகள் (Learning Management Systems)

எல்எம்எஸ் (LMS) எனப்படும் Learning Management Systems என்பது ஒரு மென்பொருள் செயலி. இந்த செயலியைப் பயன்படுத்தி கல்வி நிறுவனங்களில் கற்றல் நிகழ்ச்சிகளை நடத்தவும், செயல்படுத்தவும், கற்றல் தொடர்பான ஆவணங்களை தயாரிக்கவும், தயாரித்த ஆவணங்களை சரிபார்க்கவும், கற்போரின் கால அட்டவணைகளைக் கண்காணிக்கவும், கற்கத்தேவையான பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தலுக்குத் தேவையான வளங்களை ஒருங்கிணைக்கவும், கற்போரின் வளர்ச்சியை மேம்படுத்தவும் முடியும். பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. அசாதாரணமான இந்த காலகட்டம் தான் நிகழ்நிலை கற்றல்-கற்பித்தல் கருவிகளை நம் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஊடாடும் வெண்பலகை (Interactive Whiteboard)

ஊடாடும் வெண்பலகைகள் (Interactive Whiteboard) தொழில்நுட்பத்தின் மூலமாக கற்பித்தல் நடைபெறுகிறது. ஆசிரியரும், மாணவரும் தங்களுக்கான கணினியில் அமர்ந்து கொள்வார்கள். கணிப்பொறி மற்றும் ப்ரொஜெக்டருடன், ஒரு ஊடாடும் வெண்பலகை (Interactive Whiteboard) இணைக்கப்பட்டிருக்கும். அந்த ப்ரொஜெக்டர், பேனா, விரல், தொடுஊசி (Stylus) உள்ளிட்ட சாதனங்களைக் கொண்டு ஒரு பயன்பாட்டாளர் கட்டுப்படுத்தக்கூடிய பலகைப் பகுதியில், கணினியின் திரையை வடிவமைக்கிறது. இதன்மூலம், ஒரு ஆசிரியரும், மாணவரும், தங்களுக்கான உரையாடலை தடையின்றி தொடர முடியும். ஊடாடும் வெண்பலகைகள் என்பது ஒரு எளிய கருவியாகும், ஒரு இலவச, கட்டண மற்றும் திறந்த-மூல ஊடாடும் வெண்பலகை மென்பொருள்களும் உள்ளன. இது உடனடியாக பயன்படுத்தலாம். ஒரு வகுப்பை உருவாக்கி, உங்கள் மாணவர்களை சேர அனுமதிப்பதன் மூலம், அனைவருக்கும் டிஜிட்டல் வெண்பலகை கிடைக்கும். இது உங்கள் வகுப்பறைக்கான உடனடி மதிப்பீட்டு கருவியாகும், இது உங்கள் மாணவர்களின் நேரடி கருத்து மற்றும் உடனடி கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்குகிறது. தொலைதூரக் கற்றல் மூலம் ஒன்றாகச் செயல்பட்டாலும், கல்வியாளர்கள் அனைத்து மாணவர்களையும் கற்றல் செயல்பாட்டில் ஈடுபடுத்த முடியும்.

மனவரைபடம் (Mind Map)

மனத்தில் தோன்றும் கருத்துக்களையும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளையும் வரைபடமாக ஆவணப்படுத்தும் ஒரு எளிய முறை ஆகும். சொல், படம், குறியீடு என எந்த எளிய முறையாலும் ஒரு கருத்தை குறித்து, அதனோடு தொடர்ந்து தோன்றும் கருத்துக்களையும் கோடுகளால் இணைத்து குறிப்பதாகும். கருத்துக்களை ஆக்க, பாக்க, பகுக்க, கட்டமைக்க பயன்படும் இந்த வழிமுறை, படித்தல், ஒழுங்குபடுத்தல், சிக்கல் தீர்த்தல் , முடிவு செய்தல் ஆகிய செயல்களில் உதவுகிறது. இது டெஸ்க்டாப் கருவியாகும் விண்டோஸ் மற்றும் மேக். இலவச விகிதத்தில் மன வரைபடங்களை உருவாக்குவதற்கான 25 வார்ப்புருக்கள் கிடைக்கின்றன. பதிவு இல்லாமல் கூட இந்த இலவச சேவைகளைப் பயன்படுத்தலாம்.

மதிப்பீட்டுக் கருவிகள் (Assessment Tools)

இணைய யுகத்தில் எல்லாமே எளிதாகிவிட்ட நிலையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் எளிதான வழிமுறைகள் வந்துவிட்டன. இணையதளத்தில் மாணவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய முடியும். உங்கள் பள்ளியின் அல்லது கல்லூரியின் பெயர், மாவட்டத்தின் பெயர், பின்கோடு, கேள்விகள் மற்றும் மதிப்பெண் ஆகியவற்றைப் பதிவு செய்தாலே போதுமானது. கடவுச் சொல்லை உருவாக்கி நமது ஐடியைப் பதிவு செய்த உடனே FA, SA, Total Grade ஆகிய எல்லாவற்றையும் அதுவாகவே செய்து சமர்ப்பித்து விடுகிறது. இதை ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்தமுடியும். ஒரு முறை இதனை உங்கள் கணினியில் அல்லது உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

நிகழ்நிலை கற்றல்-கற்பித்தல் கருவிகளின் நன்மைகள்

மின் வழிக்கற்றல் (e-learning) மூலமாக கல்வி சம்மந்தமான காணொளிகளை பார்ப்பது, மைய சேவையகத்தில் சேமித்து வைத்திருக்கும் காணொளிகளை தரவிறக்கிப் பார்ப்பது (Download), காணொளிக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு பிற பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுவது, பல்வேறு விதமான பங்களிப்புகளை பகிர்ந்துகொள்வது, பதிவு செய்து வைக்கப் பட்டிருக்கும் காணொளிகளையும் (Recorded videos), ஒலிப்பதிவுகளையும் (audios) பயன்படுத்துவது என மாணவர்களுக்கான பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆசிரியர்களுக்கு இது ஒரு முற்றிலும் வேறுபட்ட களம். அவர்கள் மெய்நிகர் கற்றல் வகுப்பறைச் சூழலில் இருப்பதால் மாணவர்களுடன் நேரடியாக பயணிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. ஆனாலும் பொதுவான வலைப்பின்னல் மூலமாக மாணவர்களுடன் இடைவினை புரிவதும் ஒரு அருமையான தருணம் தான். நேரலையாக ஒளிபரப்பப்படும் இந்த பாடங்கள் பதிவுசெய்து வைக்கப்படுவதால் மாணவர்கள் எந்த நேரத்திலும் அவற்றைப் பயன்படுத்தலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் அவற்றைக் கண்டுகளிக்கலாம். நிகழ்நிலை கற்றல்-கற்பித்தல் கருவிகள் மூலம் நேரலை வகுப்பு ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் நடைபெறுவதால் ஆசிரியர் பற்றாக்குறையினையும் சரிசெய்யலாம்.

முடிவுரை

நிகழ்நிலை கற்றல்-கற்பித்தல் கருவிகள் ஒலி, ஒளி, உரைநடை, உருவப்படங்கள் சித்தரிக்கப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் உயிரோட்டமான வகுப்பறைகள் ஆகியவற்றை கொண்டிருப்பதனால் சிறப்பான கற்றல் அனுபவங்களைப் பெற ஊக்கமளிக்கிறது, இன்றைய கணினி உலகில் உயர்தர படிப்புக்கும் அதிக ஊதியம் உடைய வேலைக்கும் செல்லத் தேவையான திறமைகளையும் வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வி (Online Education) ஏற்படுத்தித் தருகிறது.

மேற்பார்வை நூல்கள்

கே. புவனேஸ்வரி (2009) Computer A to Z விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை சென்னை- 600 002.

வலைப்பூக்களின் முகவரிகள்

https://www.onenote.com/edupartners?omkt=ta-IN
https://www.dellaarambh.com/tamil/post/5-free-online-teaching-tools-for-teachers/

Leave a Reply

error: Content is protected !!