ஆசிரியர்களுக்கான வளங்கள்

ஆசிரியர்களுக்கான வளங்கள்

முனைவர் தே. பிரியா,

உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,

வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி (தன்னாட்சி),

விருதுநகர்.

 

 

 

ஆய்வுச்சுருக்கம்:

  • உலகமயமாதலினால் உலகமானது சுருங்கி உள்ளங்கைக்குள் இயங்கத் தொடங்கியுள்ளதை எவரும் மறுக்க இயலாது . கணினி சார்ந்த தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடானது ஆசிரியர்களுக்கு இன்றைய காலக்கட்டத்தில் தவிர்க்க இயலாதவை. பாரம்பரிய கல்வி முறைகளில் இருந்து விடுபட்டு , எளிமையாக, இருக்கும் இடத்திலிருந்து மாணவர்கள் விரும்பும் நேரத்தில் கற்பதற்கு ஏற்ற வகையில் கல்விப் புகட்டுதலில் திறவூற்று தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் விளக்கப்படுகின்றன.திறவூற்றுத் தொழில்நுட்பத்தில்(Open sourse) ஒருங்குகுறி (Unicode)உதவியோடு, தமிழ் மொழி வழி கற்பித்தல் முறை மற்றும் தமிழ் இலக்கண, இலக்கியங்களை நுட்பமாக , எளிதாக மாணவர்கள் மனங்கொள்ளத்தக்க வகையில் கற்பிக்கும் முறைகள் புலப்படுத்தப்படுகின்றன .வலையமைப்பு உதவியோடு இணையம்வழி தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் உதவும் கருவிகள் வலையமைப்பு உதவியோடு இணையம்வழி தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் உதவும் கருவிகளை இனம் காணுவதாய் இக்கட்டுரை அமைகின்றது.வலைப்பூக்கள்(BLOGS), வலைத்தளங்களின்(WEBSITE) பங்களிப்புகள் கல்விப் புலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள பாங்கும் ,பயன்பாடும் எடுத்துரைக்கப்படடுள்ளன.தமிழ் வளங்களான சுவடிகள், கல்வெட்டுக்கள் , பழந்தமிழ் இலக்கியங்கள் போன்றவற்றை மென்பொருள் உதவியோடு எதிர்காலப் பயன்பாட்டிற்கும் விரைவான- இலகுவான முறையிலும் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக மென்பொருள் வடிவமைப்பு முறைகள், தேடு தளங்கள் குறித்த கருத்துக்கள் இக்கட்டுரையில் ஆராயப் பட்டுள்ளன .  கணினியின் வழியாக இணையத்தின் சேவையைப் பயன்படுத்தி, தரமான முறையில் கல்வி வழங்கிடவும் கற்றல் அமைவதற்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இணையவழியில் கற்பித்தலுக்கு உதவும் செயலிகள் மற்றும் முறைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

 

இணையவழி கற்றல் (virtual learning)

இணையவழி கற்றல் (virtual learning) முறையில் கற்றல் – கற்பித்தல் இரண்டுமே தொழில்நுட்பங்களின் வழியாக நிகழ்கின்றது.இம்முறையில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவனின் நிலையையும் கருத்தில் இருத்தி , மாணவர்களிடையே ஆர்வத்தையும் புரிதலையும் யாருடைய உதவியும் இன்றி மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பாடங்களைத் திட்டமிட்டு வடிவமைத்தல் அவசியமாகின்றது. ஏனெனில் இம்முறையானது  ஒரு ஆசிரியர் ஒரு மாணவன் என்ற நிலையிலேயே நிகழ்கின்றது .அதில் ஆசிரியர் மாணவர்களை மதிப்பீடு செய்திட, Discussion, Problem solving, Storytelling,Presenting , Brainstorming ,Collaborative writing, Joumailing என்பதன் அடிப்படையில் கற்றல் முறைகளைத் திட்டமிட்டு உருவாக்குதல் இன்றியமையாதது ஆகும். http://tsaponar.blogspot.com/2013/12/elearning-technology-compass.html?m=1

 

முன்வைப்பி (Power Point Presentation)

முற்காலத்தில் தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் புகட்டும் பொழுது மனனம் செய்யும் பழக்கத்தையும் நினைவாற்றலைத் தக்க வைக்கும் முறைகளையும் கற்றுக் கொடுத்ததோடு தேர்ந்த பயிற்சியும் வழங்கினர். ஆதலால் தமிழ் இலக்கண நூற்பாக்கள் மற்றும் தமிழ் இலக்கியத்தில் சிறந்த பாடல்களை எக்காலத்திலும் மறவாமல் சொல்வதற்கு ஏற்ப தளம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்காலத்து கொரானா பெருந்தொற்றுக் காலத்திலும் கற்றல் கற்பித்தல் தொடர் சங்கிலி இணைப்பானது அறுந்து விடக்கூடாது என்ற நிலையில் இணைய வழி வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருக்கின்ற பொழுது மாணவர்களின் மனம் கவர்ந்து , பாடங்களை ஆர்வத்தோடு கேட்பதற்கும் நினைவில் எளிதில் நிறுத்துவதற்கும் பல்வேறு நுணுக்கமான உத்திகளை பல்லூடகங்களை (Multimedia) உதவியோடு தயாரித்துப் பாடங்களை நடத்திட வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது. இந்தச் சூழ்நிலையில் முன்வைப்பி (PowerPoint presentation) உதவியோடு இயங்குபடம்(Animation) தயாரித்து மாணவர்களுக்கு விருப்பமான நேரத்தில் இருந்த இடத்தில் இருந்தே கற்கச் செய்வதற்கும், இணைய வகுப்புகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்கும் ஆசிரியப்பெருமக்களுக்கு உதவும் தொழில்நுட்பம் எனலாம்.

வலையொளி (YouTube)

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் ஆர்வம் மிக்கவர்கள் எளிதில் கற்றுப் புரிந்துகொள்வதற்கும் முன் வைப்பி (PowerPoint presentation) மற்றும் இயங்குபடம் (Animation)உதவியோடு உருவாக்கிய காணொளி காட்சிகளை(video) தங்கள் மின்னஞ்சல் முகவரி (email ID) வழி வலையொளியில் தனி வலையொளி   வரிசையினை உருவாக்கி ,தமிழ் பணியாற்றிட உதவும் ஒரு புதிய மைல்கல்லாக வலையொளி (YouTube) அமைப்பினைப் பாராட்டலாம்.

குறுவட்டு (CD) மற்றும் குறுஞ்செயலி(app)

இணையவழியில் தமிழ் ஆர்வம் உடையோர் கற்பதற்கு பல்லூடகங்களின் (Multimedia) உதவியோடு மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான எழுத்துப் பயிற்சி, கதைகள், பாடல்கள் குறுவட்டு (CD)மற்றும் குறுஞ்செயலி(app) வழியாகவும் பயிற்றுவிப்பதையும் கற்பதையும் மையமிட்ட வகையில் சில மென்பொருள் நிறுவனங்கள் உதவியோடு தயாரித்து இலவசமாகவும் மிகக் குறைந்த விலையிலும் கையடக்க கணினி (iPad, tablet PC) Smartphone போன்றவற்றில் உபயோகப்படுத்தி, பயன் பெறும் வகையில் உருவாக்கலாம்.

வலைப்பூ (Blog)

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இணையதளத்தை (website )தனி நபர்கள் உருவாக்கி , தொடர்ந்து  கையாளுதல்  என்பது எளிதான செயல் அல்ல. தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியானது அடித்தளமாக அமைகின்றது. மேலும் கட்டணத்திற்கு சிறிதளவு பொருட்செலவும் ஏற்படக்கூடும். தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவி, பொருட்செலவு ஏதுமின்றி மின்னஞ்சல் முகவரியை (e mail ID) வைத்து இட்டு நிரப்பி (upload)பயன்படுத்துவதற்கு வலைப்பூ (Blog)என்ற அமைப்பு பேருதவியாக உள்ளது. இதில் இடப்படும் தகவல்கள் படங்களாகவோ (image), காணொளிகளாகவோ (video)ஒலி கோப்புகளாகவோ (audio), செய்தி அல்லது உரையாகவோ (text)பகிர்ந்து கொள்ளலாம். பின்னர், அதற்கான பின்னூட்டங்களையும் பெற முடியும்.தமிழ்மொழி கற்றல் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் புதிய படைப்பாக்கங்களுக்கு வித்திடவும்  வலைப்பூ (Blog)சேவையைத் தமிழ் பணியாற்ற விரும்புவோர் பயன்படுத்திடலாம். ஆசிரியர்கள் தங்களுக்கு என வலைப்பூக்களை உருவாக்கி, சிந்தனைக்கு விருந்தளிக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பதிவிடும் பொழுது புதிய கருத்துக்கள் தமிழுலகுக்கு புலப்படுதலோடு அக்கருத்துக்கள் குறித்துப் பெறப்படும் பின்னூட்டங்கள் வழி பகிர்ந்து கொண்ட கருத்துக்களை செம்மையாக்கம் செய்து பொலிவுபடுத்தி வலுப்படுத்த இயலும். மேலும் மாணவர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் தங்களுக்கென தனி வலைப்பூவை உருவாக்கி எழுத்தாற்றலை ஊக்குவிக்க இயலும்.

மின் நூலகம் (e library )

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகமானது நூல்கள், அகராதிகள்,கலைக்களஞ்சியங்கள் கலைச்சொல் தொகுப்புகள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் என்னும் பிரிவுகளில் நூலகங்கள் சென்று சேகரிக்கும் அரிய தகவலை தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இந்த மின்நூலகம் வழி தமிழ் கணினி மற்றும் தமிழ் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால்  தமிழ் மென்பொருள்கள் வடிவமைப்பின் வாயிலாக இருந்த இடத்தில் இருந்தே பெறுவதற்கு மென்பொருள் நிறுவனங்கள் சேவை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்தத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உதவியோடு தமிழ் பண்பாட்டினை அடுத்ததலைமுறைக்குக் கொண்டு செல்வதற்கும், ஓலைச்சுவடிகளை மென்பொருள் உதவியோடு படி எடுத்து ,தாள் சுவடியாக்கி  அதில் இருக்கும் அரிய கருத்துக்களை இருக்குமிடத்திலேயே சுவடி வாசிப்பைக் கற்று எழுத்து வடிவத்தைப் புரிந்து அறிந்து  அழிவின் விளிம்பில் இருந்து  மீட்டெடுக்க இயலும்.

துணைநூல்

  1. சுந்தரம். இல, 2015, கணினித்தமிழ், விகடன் பிரசுரம், சென்னை.
error: Content is protected !!