ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான கணிதம் கற்பித்தல் முறைகளை வலையொளி வாயிலாக கற்பித்தலால் ஏற்படும் பயனுறுதி

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான கணிதம் கற்பித்தல் முறைகைளை வலையொளி வாயிலாக கற்றலால் ஏற்படும் பயனுறுதி

முனைவர் இரா.முத்தையன்,

உதவிப் பேராசிரிரயர் 

drmuthaiyantamiluniv@gmail.com  ,

கோ.பெரியசாமி,

முனைவர்பட்ட ஆய்வு மாணவர்,

கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை,

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10.

gpdietkrr@gmail.com

 

ஆய்வுச் சுருக்கம்

கணிதம் கற்பித்தல் முறைகளை வலையொளி வாயிலாக கற்பிக்கும் போது ஏற்படும் விளைவினை கண்டறியும் நோக்கில் ஒற்றைகுழு முறை பரிசோதனை வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்விற்கு கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி நிறுவனத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளும் 50-ஆசிரியர் பயிற்சி மாணவர்களை ஆய்வு மாதிரியாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வுக்கு இன்மை கருதுகோள் உருவாக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இவ்வாய்வின் முடிவாக பாலினம், இருப்பிடம், குடும்பநிலை, பெற்றோர் கல்வித்தகுதி மற்றும் பெற்றோர் தொழில் போன்ற மாறிகளின் சராசரி வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை எனத் தெரியவருகிறது.

முக்கிய வார்த்தைகள்:- வலையொளி, பயனுறுதி, ஆசிரியர்பயிற்சி பட்டயப்படிப்பு.

முன்னுரை

கணிதம் என்பது எண், இடம் ஆகிய கருத்துக்களை உள்ளடக்கிய பகுத்தறி முடிவுகளைக் கொண்ட ஒரு கருத்துருவைதரும் அறிவியல் எனப் புதிய ஆங்கில அகராதி குறிப்பிடுகிறது. பெர்ட்ராண்ட்ரஸல் என்பவர், “சரியாகக் சிந்தித்து நோக்கின், கணித்தில் உண்மை மட்டுமின்றி, மிகசிறந்த அழகும் உள்ளது” என்று கூறினார். கவுஸ் என்பவர் “அறிவியலின் அரசி கணிதம்” என்று கூறியுள்ளார். பேக்கள், “கணிதம் எல்லா அறிவியல் துறைக்கும் நுழைவாயிலும், திறவு கோலானது” என்கிறார். இவ்வளவு சிறப்புமிக்க கணிதம் இன்று மாணவர்கள் மத்தியில் எட்டிக்காயாக கசக்கிறது. இதற்கு காரணம் ஆர்வமில்லா மாணவர்களா அல்லது சிறப்பாக கற்பிக்காத ஆசிரியர்களா என்றால் சில வேலைகளில் இருவரும் காரணமாகிறார்கள். ஆனால் ஆர்வமில்லாத மாணவனையும் ஆர்வமூட்டி கணித்தை கற்கண்டாக்க வேண்டியது ஆசிரியரின் தலையாய கடமை ஆகும். எனவே தான் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க பயிற்சிபெறும் மாணவ ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளை திறம்பட புரிந்து சிறந்த ஆசிரியர்களை உருவாக்க இந்த ஆய்வில் வலையொளி வாயிலாக கணிதம் கற்பித்தலை மேற்கொண்டு அவர்களின் கற்றல் அடைவை கண்டறிந்து அறிவிப்பதன் மூலம் இவ்வாய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

வலையொளி

வலையொளி என்பது ஒரு அமெரிக்க நாட்டு நிகழ்நிலை காணொளி பகிர்வு மற்றும் சமூக ஊடகதளமாகும். இது சாட்ஹர்லி ஸ்டீவ்சென் மற்றும் ஜவேத்கரீம் ஆகியோரால் பிப்ரவரி-2005 இல் தொடங்கப்பட்டது. இது ஒரு செயல்படும் மென்பொருள் கருவியாகும். ஆய்வாளர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பட்டயபயிற்சி கற்பிக்கும் அரசு நிறுவனத்தில் கணித விரிவுரையாளர் எனவே, தான் கற்பிக்க வேண்டிய பாடப்பொருளை பேசி பதிவுசெய்து அதனை கேள்விகருவியாக மாற்றி வலையொளியில் புதிவுசெய்து மாணவரை  கேட்கசெய்துள்ளார். மேலும் வலையொளியில் காணப்படும் கணிதம் கற்பித்தலுக்கான கேள்வி-காட்சி மூலம் காணப்படும் பதிவுகளையும் இனங்கண்டு அவற்றை மாணவர்களிடம் கொண்டு சென்றுள்ளார். இவற்றின் தொகுப்பை வலையொளிக் கருவியாககொண்டு ஆய்வாளரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு தலைப்பு

கணித்தை கற்கண்டாக்குவது ஆசிரியர் கற்பிப்பு முறையாகும். எனவே இந்த கற்பிப்பு முறையை முழுமையாக கற்றுதெளிவுபெற தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வலையொளி மூலம் கற்றல் கற்பித்தலில் ஈடுபடும் போது அதன் விளைவை காணும் பொருட்டு கீழ்கண்ட தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. “ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான கணிதம் கற்பித்தல் முறைகளை வலையொளி வாயிலாக கற்றலால் ஏற்படும் பயனுறுதி”.

ஆய்வின் நோக்கம்

  1. ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான கணிதம் கற்பித்தல் பாடத்தை வலையொளி மூலம் கற்பித்தலால் ஏற்படும் கற்றல் அடைவின் பயனுறுதியை அறிதல்.
  2. ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான கணிதம் கற்பித்தல் என்ற பாடத்தில் மாணவர்களின் பின்தேர்வு அடைவின் சராசரி வேறுபாட்டின் முக்கியத்துவத்தை மாணவர்களின் பாலினம், இருப்பிடம், குடும்பநிலை, பெற்றோர்களின் கல்வித்தகுதி மற்றும் பெற்றோர் தொழில் போன்ற மாறிகளின் அடிப்படையில் கண்டறிதல்.

ஆய்வின் கருதுகோள்கள்

  1. ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான கணிதம் கற்பித்தல் பாடத்தை வலையொளி மூலம் கற்பித்தலால் ஏற்படும் கற்றல் அடைவின் சராசரி வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்தாக இல்லை.
  2. ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் பின்தேர்வு அடைவு மதிப்பின் சராசரி வேறுபாடு அவர்களின் பாலினம், இருப்பிடம் மற்றும் குடும்பநிலை வேறுபாட்டால் முக்கியத்துவம் வாய்ந்தாக இல்லை.
  3. ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் பின்தேர்வு அடைவு மதிப்பின் சராசரி வேறுபாடு அவர்களின் பெற்றோர்களின் கல்வித்தகுதி மற்றும் பெற்றோர்களின் தொழில் வேறுபாட்டால் முக்கியத்துவம் வாய்ந்தாக இல்லை.

ஆய்வின் மாதிரிக்கூறு

கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும்  மற்றும் சுயநிதி ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு பயிலும் ஐம்பது ஆசிரியர் மாணவர்கள் மட்டும் சமவாய்ப்பு முறையில் தெரிவு செய்யப்பட்டார்கள்.

ஆய்வு முறை

இவ்வாய்வு ஒற்றைகுழு பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. அதாவது முன்சோதனை – பயிற்சி – பின்சோதனை என்ற முறையில் மேற்கொள்ளப்பட்டது.

 

ஆய்வு கருவி

“கணிதம் கற்பித்தல் முறையின் கற்றல் அடைவுச் சோதனைத்தாள்” இவ்வாய்வுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த அடைவுச் சோதனை தாளில் கணிதம் கற்பித்தல் முறைகள் என்ற பாடப்பகுதியில் ஐம்பது பலவுள் தெரிவு உருபடிகள் உருவாக்கப்பட்டு தரப்படுத்தி பயன்படுத்தப்பட்டது.

ஆய்வுக்கு பயன்படுத்திய புள்ளியியல் நுட்பங்கள்

சராசரி, திட்டவிலக்கம், இரு மாறிகளுக்கு ‘t’-சோதனையும் இரண்டிற்கு மேற்பட்டவைக்கு ‘F’- சோதனையும் பயன்படுத்தப்பட்டது.

ுள்ளியியல் பகுப்பாய்வும் கருதுகோள்களை சோதித்தலும்

கருதுகோள் எண்-1

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான கணிதம் கற்பித்தல் பாடத்தை வலையொளி மூலம் கற்பித்தலால் ஏற்படும் கற்றல் அடைவின் சராசரி வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்தாக இல்லை.

இக்கருதுகோளானது ‘t’-சோதனை மூலம் சோதித்தறிப்பட்டது.

மாறிகள் எண்ணிக்கை சராசரி திட்டவிலக்கம் திட்டபிழை ‘t’-மதிப்பு
முன்தேர்வு 50 50.04 13.24 1.3408 19.2572
பின்தேர்வு 50 76.00 6.85

மேற்கண்ட அட்டவணையில் இருந்து கண்டறிந்த ‘t’-மதிப்பானது (19.2572) அட்டவணை மதிப்பைவிட 0.01 நிலையில் அதிகமாக உள்ளது. எனவே, இரு சராசரிகளின் வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முன்தேர்வு கற்றல் அடைவைவிட பின்தேர்வு கற்றல் அடைவு அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் கணிதம் கற்பித்தல் முறைகளை வலையொளி மூலம் கற்றல் ஆகும்.

 

 

 

கருதுகோள் எண்-2

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் பின்தேர்வு அடைவு மதிப்பின் சராசரி வேறுபாடு அவர்களின் பாலினம், இருப்பிடம் மற்றும் குடும்பநிலை வேறுபாட்டால் முக்கியத்துவம் வாய்ந்தாக இல்லை.

இக்கருதுகோளனது ‘t’-சோதனை மூலம் சோதிக்கப்பட்டது.

 

 

மாறிகள் N சராசரி திட்டவிலக்கம் திட்டப்பிழை ‘t’-மதிப்பு
பாலினம் ஆண் 25 75.92 6.85 1.1133 0.1600
பெண் 25 76.08
குடும்ப

நிலை

தனிக் குடும்பம் 32 75.2857 6.85 0.2626 1.7110
கூட்டுக்குடும்பம் 18 76.2727
இருப்பிடம் கிராமம் 28 76.2857 6.85 1.9583 0.5040
நகரம் 22 75.8364

மேற்கண்ட அட்டவணையில் கண்டறிந்த ‘t’-ன் மதிப்புகள் முறையே 0.1600, 1.7110 மற்றும் 0.5040 அவைகள் அட்டவணை மதிப்பைவிட 0.01 நிலையில் குறைவாக உள்ளது. எனவே இரு சராசரிகளின் வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை இன்மை கருதுகோள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

 

கருதுகோள் எண்-3

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் பின்தேர்வு அடைவு மதிப்பின் சராசரி வேறுபாடு அவர்களின் பெற்றோர்களின் கல்வித்தகுதி மற்றும் பெற்றோர்களின் தொழில் வேறுபாட்டால் முக்கியத்துவம் வாய்ந்தாக இல்லை.

இக்கருதுகோளனது F-சோதனை மூலம் சோதிக்கப்பட்டது.

மாறிகள் மாறுபாட்டின் ஆதாரம் வர்க்கங்களின்

கூடுதல்

பாகை சராசரியின்

வர்க்கம்

F-மதிப்பு
பெற்றோர் கல்வித்தகுதி மாதிரிக்கு

இடையில்

52.4230 3 17.4740 0.3610
மாதிரிக்குள் 2225.6570 46 48.3840
பெற்றோர்

தொழில்

மாதிரிக்கு

இடையில்

136.9040 4 34.2260 0.719
மாதிரிக்குள் 2141.1760 45 47.5820

மேற்கண்ட அட்டவணையில் இருந்து கண்டறிந்த F-மதிப்பானது 0.3610 மற்றும் 0.7190 அட்டவணை மதிப்பைவிட குறைவாக உள்ளது. எனவே, சராசரிகளுக்கு இடையேயான வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. எனவே, இன்மைக்கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதிலிருந்து மாணவர்களின் பெற்றோர்களின் கல்வித்தகுதி மற்றும் தொழில் கற்றல் அடைவில் எவ்விதமான மாறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை எனத் தெரியவருகிறது.

ஆய்வின் முடிவுகள்:

  1. ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான கணிதம் கற்பித்தல் பாடத்தை வலையொளி மூலம் கற்பித்தலால் கற்றல் அடைவு அதிகரிக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
  2. ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் கணிதம் கற்பித்தல் கற்றல் அடைவில் அவர்களின் பாலினம், இருப்பிடம், குடும்பநிலை, பெற்றோர்களின் கல்வித்தகுதி மற்றும் தொழில் போன்ற மாறிகளினால் எவ்விதமான மாறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.

ஆய்வின் பரிந்துரைகள்

  1. அட்டவணை எண்-1 ன்படி கண்டறிந்த ‘t’-மதிப்பானது (19.2572) அட்டவணை மதிப்பைவிட அதிகமாக உள்ளது. எனவே முன்தேர்வைவிட பின்தேர்வின் சராசரி அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் வலையொளி மூலம் கற்பதனால் ஏற்பட்டதாகும். எனவே, ஆசிரியர்களுக்கு வலையொளி வழி கற்பிக்கும் முறையின் பயிற்சியை அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களின் வாயிலாக அளிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

முடிவுரை

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான கணிதம் கற்பித்தல் முறைகளை வலையொளி வழியாக கற்றல் கற்பித்தலில் ஈடுபடும்போது கற்றல் அடைவு அதிகரிக்கிறது. எனவே இதுபோல பிற பகுதிகளுக்கும் வலையொளி வாயிலாக கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டால் கற்றல் அடைவு அதிகரிக்கும்.

மேற்கோள் நூல்கள்:

  1. தமிழ்நாடு பாடநூல் கழகம், (2009), கணிதம் கற்பித்தல், பாடப் புத்தகம், சென்னை-6. தமிழ்நாடு பாடநூல் கழக வெளியீடு, கல்லூரி சாலை.
  2. முத்தையன், இரா. (2009). கலைத்திட்ட மதிப்பீடு, தஞ்சாவூர்-7, அகரம், மனை எண்-1, நிர்மலா நகர்.
  3. Aggarwal, Y.P. (2002). Statistical methods: Concepts, Application and Computation. New Deli, Sterling publication, Private Limited.
  4. Best, W. John (1975). Research in Education. New Delhi: Prentice Hall of India private limited.
error: Content is protected !!