முனைவர் சு. செல்வநாயகி
துறைத்தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோவைப்புதூர் கோயமுத்தூர்.
முன்னுரை
இணையம் என்பது மனிதர்களோடு வாழும் ஒரு சக உயிரினமாக மாறி உள்ளது எனலாம். ஒவ்வொரு மொழியும் இணையத்துக்குள் தனது ஆட்சியை செலுத்தி கொண்டுள்ளது. தமிழ்மொழி இணையத்தில் பெரும் வளர்ச்சி கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் இலக்கியங்களை; இணையம் பல்வேறு தரப்பட்ட இலக்கிய ஆர்வலர்களிடம் இடம் சென்று செலுத்திக் கொண்டிருக்கும் பாங்கு இணையத்தமிழ் வளர்ச்சியினால் சாத்தியமாகியுள்ளது. அவ்வகையில் இணையத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி இவ்வாய்வு அமைகிறது.
இணையத்தில் நவீன இலக்கியங்கள்
ஊடகங்கள் சார்ந்து நவீன இலக்கியங்களின் போக்கை ஆராய்ந்தால் நவீன இலக்கியங்களை கதை, கவிதை, நாவல் வகைகள் வெளிப்பாடும் இருப்பும் வளர்ச்சியும் இந்த தொழில்நுட்ப கலாச்சாரத்தில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது எனலாம். குறிப்பாக 1970களில் அடித்தளம் இடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து இப்பொழுது வரை 50 வருடங்களாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் சமூக வலைத்தளங்கள் வரை இலக்கியம் பரிணமித்திருக்கிறது. ஒவ்வொரு இலக்கிய ஆர்வலரையும் கணித்தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களின் சூழலை மாற்றி உள்ளது. ஒரு இலக்கிய எழுத்தர் ஒவ்வொரு கதையும் எழுதி அதை இங்கு இரண்டு பேரிடம் சரிபார்த்து பொதுமக்கள் வாசிக்கும் இதழில் பிரசுரிக்க காலம் மிக அதிகமாக தேவைப்பட்டது. தற்போது இணைய வளர்ச்சியில் இந்த சூழல் மாறி இருக்கிறது.
இணையத்தில் எண்ணிம இலக்கியம் மற்றும் இலத்திரனியல் இலக்கியம்
புதிய தொழில் நுட்பத்தை அறிந்து இணையத்தை கையாளத் தெரிந்தவர்கள் அனைவரும் தமது சிந்தனைகளை எழுத்துக்களாக மாற்றி மக்கள் முன்வைக்க தொடங்கியுள்ளனர். மிகப்பெரிய வெற்றியும் கண்டுள்ளனர். இணைய தொழில்நுட்பம் எண்ணங்களை பரிமாறுவதற்கு ஒரு ஊடகம் என்பதற்கு அப்பால் இது மனிதனும் மனிதருடன் வாழும் ஒரு உயிரினம் ஆகவே மாறியுள்ளது. மனிதன் எல்லா சுகங்களையும் அதனுடன் வழங்கியுள்ளான் என்று கூறலாம்.
இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் களம்
இணையவழி இலக்கிய வலைத்தளங்கள் பல சிறப்பாக செயல்படுகின்றன. இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களின் இலக்கிய அறிவிற்கு களம் அமைத்துக் கொடுக்கின்றன. பல நாடுகளில் ஏற்கனவே இருக்கும் பலர் இதற்கென தளங்களை உருவாக்கி தமக்கென தனிக்களத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இணையதளங்களையும் வலைப்பூக்களையும் முகப்பு புத்தகங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களின் தளங்கள் பலரும் வாசிக்கும் புத்தகங்களாகப் பயன்பட்டு வருகின்றது
கால சேமிப்பு
இலக்கிய ஆர்வலர்கள் ஒரே நேரத்தில் அனைத்து செயல்பாடுகளையும் செயல்படுத்துகின்றனர். இந்த செயல்பாடு மிக அற்புதமான முறை. இது நேர விரயத்தை தவிர்க்கப் பயன்படுகிறது எனலாம். இணையத்தில் எழுத்து வெளியீடு, வாசிப்பு, விமர்சனம், பின்னூட்டம் அனைத்தும் ஒரே நேரத்தில் செயல்படுகிறது. ஒரு கவிதையை எழுதிய நேரத்தில் அடுத்த பத்தாவது நிமிடம் அதற்கான பின்னூட்டம் வரை அனைத்து வேலைகளையும் முடித்து வைக்கிறது. இப்போதைய இணையக் கலாச்சார சூழல் அல்லது இந்த இணைய வழி இணையதளங்கள் செலவு குறைந்தது. சுதந்திரமானது. இம்முறை அபரிதமான ஆக்கங்களை தமிழ் இலக்கிய உலகிற்கு தந்து கொண்டிருக்கிறது எனலாம். இந்த புதிய இணைய சூழல் புதிய ஒளியை கொடுத்துள்ளது எனலாம். தமிழ்மொழிக்கு இவ்வாறு பல இணையதளங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் பதிவுகள் எனும் இலக்கிய இதழ் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
பதிவுகள் இலக்கிய இதழ்
தமிழ் இலக்கிய இதழாக சாதாரணமாக வெளிவந்த பதிவுகள் ஆரம்பம் 2000 வருடம் தான். ஆரம்ப இலக்கிய இதழ்களில் மகாகவியின் கவிதைகளாக கவிதைகளைப் படிக்க ஆரம்பித்த பின்பு தமிழக அரசியல் கட்டுரைகள், தமிழ் விமர்சனம் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இன்று பலரின் கவனத்தை ஈர்த்து சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், குறுநாவல், நிகழ்வுகள், விவாதங்கள், நூல் விமர்சனம், இணையத்தள அறிமுகம் என பல வகையில் தன் தளத்தை விரிவு படுத்திக் கொண்டே சென்றது. ஜெயமோகன் முதல் புதிய இளம் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் வரை 500க்கும் மேற்பட்டோர் இத்தளத்தில் எழுதி தன் படைப்புகளை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற படைப்பாளி முதல் புதிய படைப்பாளிகள் வரை எல்லோரும் பதிவுகள் இலக்கிய இதழில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். சிறப்பான பின்னோட்டம் பெற்றுள்ளனர். அவ் வகையில் தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழின் நல்லதொரு பதிவுகள் திண்ணை, மரத்தடி, நிலாச்சாரல், தமிழோவியம், ஆறாம்திணை போன்ற தமிழ்மொழி இலக்கிய இதழ்கள், இணைய இதழ்கள் தமிழ் மொழியின் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் சேவை புரிந்து வருவதை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்
முடிவுரை
கணித்தமிழ் என்பது இலக்கிய உலகின் மிகச்சிறந்த பரிணாம வளர்ச்சி எனலாம். தொழில்நுட்ப வளர்ச்சி ஊடக வளர்ச்சியை உருவாக்கி வருகிறது. அவ்வகையில் இணையத்தமிழ் இலக்கிய வலைதளங்கள் உலகில் மாபெரும் புரட்சியை சத்தமின்றி நிகழ்த்தி வருகின்றது என்பது பெருமையுடன் நாம் நினைவு கொள்ளத்தக்கது.
பின் சான்று
- நேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடு
- by நடேசன் On November 08, 2021
- நடேசன் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண் எழுத்தாளராகவும் தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவராகவும் அறியப்பட்டவர். புலம்பெயர்ந்த தனது புற, அக அனுபவங்களையும், மற்றவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கி எழுதுபவர். அவரது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இங்கிலாந்து வாழ்வுடன், அங்குள்ள தமிழர்கள் , தமிழர்கள் அல்லாதவர்களது, கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, அவற்றைத் தனது கதைகளில் வெளிக்கொணர்ந்துள்ளார். மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் செல்லும் திசையை அறிய அவரது எழுத்துகள், திசைக்கருவியாக எமக்கு உதவும்.
- இரக்கம் ” குறும்படம் வெளியீடு
- சுப்ரபாரதிமணியன் சிறுகதையை மையமாகக் கொண்ட குறும்படம் வெளியீடு
- இயக்குனர்; எஸ் எல் . முருசேஷ், கோவை. வருக
- மக்கள் மாமன்ற நூலகம்,
- டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர்
- வருக –
- திருப்பூர் மக்கள் மாமன்றம்
- அழகியசிங்கரின் மூன்று கவிதைகள் 40 வது சார்ஜா புத்தகக்கண்காட்ச\
- என் பயணத்தின் முடிவு
- படைப்பும் பொறுப்பேற்பும்
- சுமை
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- 40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி
- முகங்கள்… (இரயில் பயணங்களில்)
- சிறை கழட்டல்..
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ்
- மௌனம்