இணைய வழிக் கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும்
முனைவர் ஹ.அல்தாஜ் பேகம்
உதவிப்பேராசிரியர்¸ தமிழ்த்துறை
ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி
குற்றாலம்.
“கணினி உலகம்
கால்குலேட்டர் மூளை
இணையக் கல்வி”
என்ற சூழலில் இன்று நாம் வாழ்ந்து வருகிறோம்
“செல் இல்லாதவன் செல்லாதவன்”
“புலனம் இல்லாதவன் (ஜம்)புலனற்றவன்”
“கொடிது¸ கொடிது¸ செல்லின்றி இருப்பது கொடிது
அதனினும் கொடிது இணையமின்றி இருப்பது”
இவையெல்லாம் இணையத்தின் இன்றியமையாமை உணர்த்தும் வரிகளாகும்.
இணைய வழிக்கற்றல் கற்பித்தலுக்கு முதல் தேவை செல்பேசியும் கணிணியும் ஆகும் அதோடு கொஞ்சம் அறிவு. அவ்வளவே. ஆனால் ஆசிரியரின் பங்கை குறைத்து இணையத்தின் இன்றியமையாமையையே அதிகம் உணர்த்தும் இக்கல்விமுறை சற்று வருத்தம் அளித்தாலும் இ;ச்சூழலில் இதைத்தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது எனலாம். கிராமப்புறம்¸ நகர்ப்புறம்¸ ஆண்கள்¸பெண்கள்¸ வசதி படைத்தவர்¸ ஏழைகள்¸ அறிந்தோர்¸ அறியாதோர் என 21-ம் நூற்றாண்டின்¸ இணைய உலகத்தில் கட்டமைப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை கோவிட்-19¸ நோய்தொற்று தீவிரமாக்கியுள்ளது என்றே கூறலாம்.
இணைய வழிக்கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கல்கள்:
இணையவழி வகுப்புகளுக்கான உள்கட்டமைப்புகள் அற்ற சூழலில் ஆசிரியர்களும் மாணவர்களும் இதுவரை சந்திக்காத சவால்களை சந்திக்கிற சூழல் உருவாகியுள்ளது. இணையவழிக்கற்றலுக்கு மின்சாரம்¸ இணையம்¸ கணினி¸ அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) போன்றவை தேவை. இந்தியாவில் பிரதமரின் ‘சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா’ திட்டம் மின்சாரம் வழங்கினாலும்¸ அது தடையற்ற மின்சாரத்தை வழங்குகிறதா? என்பது ஐயமே! தேசிய ஆய்வு மாதிரி அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) 2017-18-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கிராமப்புறங்களில் 4.4 சதவீத வீடுகளிலும்¸ நகர்ப்புறங்களில் 23.4 சதவீத வீடுகளிலும் கணினிகள் உள்ளன. இணைய வசதி கிராமப்புறங்களில் 14.9 சதவீத வீடுகளிலும்¸ நகர்ப்புறங்களில் 42 சதவீத வீடுகளிலும் உள்ளது. இணைய வசதி நகர்ப்புறங்களிலேயே சரியாக கிடைக்காத போது கிராமங்களைப்பற்றிக் கூறவே வேண்டியதில்லை எனலாம். நம் நாட்டில் 24 சதவீதத்தினரிடம் அறிதிறன்பேசிகள் உள்ளன.11 சதவீதத்தினரிடம் கணினி¸மடிக்கணினி¸ இணைய வசதிகள் உள்ளன. இதிலும் தமிழ் நாட்டின் நிலைமையோ கேட்கவே வேண்டாம். இணையத்துடன் இணைந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ‘நிம்ஹான்ஸ்’ (பெங்களுர் மனநல ஆராய்ச்சி மையம்) ஆராயத்தொடங்கி உள்ளது.
1.சமூகச் சிக்கல்கள் :
1. வறுமை 2. பணி 3.பாலின வேறுபாடு 4.கவனக்குறைவு (அ) அக்கறையின்மை.
2.இணையச் சிக்கல்கள்:
1. புறநகர்பகுதியில் ஏற்;படும் இணையக் குறைபாடு 2.குறைந்த அளவு இணைய வசதி (டேட்டா) 3.அறிவின்மை 4.கற்றல் குறைபாடு. 5. ஆசிரியரின் திறமை குறைபாடு.
- நேர்வழிக்கற்றல்¸ இணைய வழிக்கற்றலுக்குள்ள வேறுபாடுகள்.
சமூகச் சிக்கல்கள் :
அ. வறுமை: இது ஏழைகளுக்குரிய சொத்தாக வறுமை நீடிக்கிறது.
“இருட்டை விரட்ட வந்த கறுப்புச் சூரியன்” என்பது போல் வறுமை சில தலைமுறைகளில் நிரந்தரமாகவே தங்கி விட்டது போன்ற ஓர் நிலைமை நம் நாட்டின் சில சமூகங்களில் காணப்படுகிறது. சிலர் பரம்பரை பரம்பரையாக கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். அவருகளிடமும் இல்லை அவர்களின் பிள்ளைகளிடமும் இல்லை. சில பெற்றோரிடம் உரிய வேலையை செய்ய பொத்தான் செல்பேசி மட்டுமே உள்ளது. அப்படியெனில் அக்குழந்தைககளின் கல்வி அதிலும் இந்நெருக்கடியான கரோனா சூழலில் மாணவர்களின் பெற்றோர் வயிற்றுப் பிழைப்பிற்கே அல்லாடும் போது தங்கள் பிள்ளைகளை எங்ஙனம் இணையத்தில் படிக்க வைக்க முடியும். ஆம்மாணவர்களுக்கு செல்பேசி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
ஆ. பணி: சில மாணவர்கள் குடும்ப பொருளாதாரச்சூழல் காரணமாக பணிக்குச் செல்வதால் இணைய வகுப்புகளில் கலந்து கொள்ள முடிவதில்லை. இதனால் அவர்களின் கல்வி கேள்விக்குரியாகின்றது.
இ.பாலின வேறுபாடு: சில வீடுகளில் பெண்குழந்தைகள் என்றாN;ல படிக்க வைப்பதில்லை. சிலர் விரைவில் திருமணம் முடித்து விடுகின்றனர். அப்படியே படித்திருந்தாலும் சில பெற்றோர் மாணவிகளுக்கு செல்பேசி வாங்கித் தருவதில்லை. இவ்வாறன பிற காரணங்களால் பெண்கள் கல்வி தொடர முடியாத சூழல் ஏற்படுகிறது.
ஈ. கவனக்குறைவு (அ) அக்கறையின்மை: சில பணக்கார மாணவர்கள் செல்பேசியில் கணினியில் இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவதால் அவர்கள் இணையத்தில் படிக்க அக்கரை காட்டுவதில்லை.
2.இணையச் சிக்கல்கள்:
அ. புறநகர்பகுதி¸ கிராமங்கள்¸ மலைப்பகுதிகளில் ஏற்;படும் இணையக் குறைபாடு:
புறநகர்பகுதியில் இணையம் இன்மையால் ஏற்;படும் இணையக் குறைபாடு. மலைவாழ் கிராமங்களில் கல்வி எனும் சாதரண வசதி கூட இல்லாமல் இயல்பாக வாழ்ந்து வருகின்றனர் அம்மலை வாழ் மக்கள். “உலகத்திலுள்ள 370 மில்லியன் பழங்குடி மக்களில் இந்தியாவில் 645 வகை பழங்குடியினரும்¸ தமிழகத்தில் 36 வகை பழங்குடியினரும் வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. (தினத்தந்தி ஜீன்-9.2020) அதிக பழங்குடிகள் வாழும் நாடுகளில் உலகில் இந்தியா 2ம் இடம் பெற்றுள்ளது என்றால் யோசித்துப் பாருங்கள். கல்வியைப் புகுத்துவதே சவால். அதிலும் இணையக்கல்வி பெரும் சவாலே. 14 சதவீதத்திற்கும் குறைவாகவே அவர்கள் கல்வி அறிவு பெறுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.” 2009ல் உருவாக்கப்பட்ட கல்வி உரிமை சட்டத்திற்கு பிறகு அம்மக்களின் நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்படுகின்றது என்றே கூறலாம். எனினும் அது போதாது.
கிராமப்பகுதிகளில் இணைய தொழில்நுட்ப வசதிகள் முறையாக இல்லை. இதனால் அங்குள்ள மாணவர்கள் இணையவழிக்கல்வியில் இணைய முடியாமல் வருந்துகின்றனர்.
ஆ.குறைந்த அளவு இணைய வசதி (டேட்டா)
சில நடுத்தர வசதியுள்ள வீடுகளில் வருமானம் கருதி குறைவான டேட்டா அளவை பயன்படுத்துவதால் டேட்டா திடீரெனக்
குறைந்து படிக்க இயலாத சூழல் ஏற்படுகின்றது.
இ.அறியாமை:
செல்பேசி¸ கணினி¸ மடிக்கணினி எப்படி பயன்படுத்துவது டேட்டாவை முறையாக எப்படி பயன்படுத்துவது¸ டேட்டா முடிந்ததும் எப்படி ரீசார்ஜ் செய்வது என்பதைக் கூட அறியாமல் சிலரும் இது பற்றி மறந்து சிலரும் வாழ்ந்து வருகின்றனர்.
ஈ.கற்றல் குறைபாடு;:
மாணவர்களில் பலர் இணையத்தில் கற்றுக்கொடுப்பதை சரியாகப் புர்pந்து கொள்ள இயலாத கற்றல் குறைபாட்டில் உள்ளனர்.
உ. ஆசிரியர் திறன் குறைபாடு:
கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களிலும் சிலர் கற்றல் குறைபாட்டுடன் இருப்பதால் மாணவர்களுக்கு முறையாக கல்வி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது எனலாம்.
- நேர்வழிக்கற்றல்¸ இணைய வழிக்கற்றலுக்குள்ள வேறுபாடுகள்:
நேர்வழிக்கற்றல்: அ.ஆசிரியர் நேரிடையாக மாணவர்களின் பிரச்சினைகளை தீர்வு காணலாம்.
ஓவ்வொருவரையும் படிக்க வைக்கலாம்.கண்காணிக்கலாம். மாணவர்கள் நூலகத்திற்குச் சென்று படித்து ஐயந்திரிபறக் கற்கலாம். மாணவாகளை பலபோட்டிகளில் கலந்து கொள்ள வைக்கலாம். மாணவர்களின் உள்ளஉணர்வுகளையும் உளவியல் தன்மைகளையும் அறிந்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வெற்றி பெறச் செய்ய இந்த நேரடி முறை ஏதுவாகின்றது.
இணைய வழிக்கற்றல்:
மாணவர்கள் இணையத்தில் இணைந்துள்ளனரா? என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனெனில் மாணவர்கள் வீடியோவை நிறுத்தி விட்டு பப்ஜி¸ பிரீ பேர் விளையாடுகின்றனர். இவ்வாறு இணைந்தே இருப்பதால் உடல்¸ மனரீதியாக பற்பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இதனால் சிலரின் எதிர்காலம் கேள்விக் குறியாகின்றது. இணையத்தை தவறான வழியிலும் சிலர் பயன்படுத்துகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” ( குறள் – 1) எழுத்துக்கள் எல ;லாம் அகரத்தை முதலாகக் கொண்டுள்ளதைப் போல் இந்த உலகம் ஆதி பகவனை முதலாகக் கொண்டுள்ளது. பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி எழுத்துக்களை சரியாக உச்சரித்தால் தான் பொருள் விளங்கும். எனவே எவ்வாறு எழுத்துக்கள் உச்சரிக்கப்படுகின்றது (phonology) என்பதையும் தமிழுக்குரிய தளங்களையும் அறிமுகப்படுத்துவதில் ஐ.சி.டி யின் பங்கு எவ்வகையில் மாணவர்கள் தங்கள் கல்வித் திறனை வளர்த்துக் கொள்வதற்குப் பெரும்பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றியும் விளக்குவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். தமிழ் மொழி: உலகமொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்குவதால் இது செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுள்ளது. உலகின் பழமையான மொழிகளுள் இதுவும் ஒன்று. தமிழ் ஒரு தொன்மையான திராவிட மொழியாகும். தமிழ்மொழி இந்தியாவில் தமிழ்நாடு¸ புதுச்சேரியிலும் இந்தியாவில் ஸ்ரீலங்கா¸ மலேசியா¸ சிங்கப்பூரிலும் அதிக மக்களால் பேசப்படுகிறது. இந்தியாவின் சிறந்த வரையறுக்கப்பட்ட 22 மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. தமிழ் எழுத்துக்கள்: தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை அவை எவ்வாறு அமைகின்றன என்பதை பின்வருமாறு காணலாம்.
“ எழுத்தெனப்படுவ அகர முதல னகர இறுவாய் முப்பதென்ப” (தொல்.¸எழுத்து :1) என்பார் தொல்காப்பியர். “உயிரும் உடம்புமாம் முப்பது முதலே” (நன்னூல் : 59) என்ற நன்னூலாரின் கூற்றுப்படி உயிர்மெய் எழுத்துக்கள் முப்பது ஆகும். தமிழ் எழுத்துக்களில்
உயிர் எழுத்துக்கள் – 12 மெய் எழுத்துக்கள் – 18 ஆய்த எழுத்து – 1
உயிர் மெய் எழுத்துக்கள் – 12 ஓ 18 – 216 (உழஅடிiநென டநவவநசள) மொத்தம் – 247 இவை போன்ற இலக்கண வகுபபுகளையும் வலையொலி மூலமும் மாணவர்களுக்கு உணர்த்தலாம்.
தீர்வுகள்:
- ஏழை மாணவர்களும் எளிமையாக படிக்க நம்அரசு அனைவருக்கும் இலவச இணையத்திட்டம் கொண்டு வர வேண்டும். (ஆ) குறைந்த கட்டணத்தையாவது பெற்றுக் கொண்டு மாணவர்களுக்கு இணைய வசதி வழங்கப்படவேண்டும்.
- பெண் என்ற பாகுபாடு காட்டாத சமூதாயமாய் பெண் குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டும்.
- சிந்தனையை ஒருமுகப்படுத்தி மாணவர்கள் அக்கரையுடன் கவனிக்க வேண்டும்.
- கிராமம்¸ நகரம் அனைத்திடங்களிலும் இணைய வசதி வழங்கப்படவேண்டும்.
- இணைய பயன்பாடுகள் குறித்த அறிவை ஒவ்வொருவரும் (இணையத்தின் அறிவை) பெற்றிருப்பது மிக அவசியம்.
- இணையக்கல்வி அறிவைப் பரப்புதலை விட அறிவை ஆளுதலையே வலியுறுத்துகின்றது. கற்றல் கற்பித்தல் கட்டமைத்தலையே உணர்த்துகிறது.
- பகுத்தல்¸ தொகுத்;தல்¸ மதிப்பிடல் போன்ற முறைகளை எளிதில் அறிந்து பயன்படுத்தலாம்.
- வலைப்பதிவு (ப்ளாக்)¸விக்கி¸ பல்லூடகம் (மல்டிமீடியா)உரையாடல் (கான்பரன்ஸ்)¸ திரைப்பகிர்வு (ஸ்கிரீன் சேரிங்) சேர்ந்தியங்கு கருவிகள் (கொல்லாபிரேசன் டூல்ஸ்) வலைச்செயலிகள்¸ வெப் அப்ளிகேசன்ஸ்) எனப்பலவகைகளில் உலகிலுள்ள யாரும் யாருக்கும் தகவல்களைப் பகிரலாம்.நேரடியாக ஊடாடவும்¸பலபேர் பலஇடங்களிலிருந்து சேர்ந்தியங்கவும் (டிஸ்டிபியுடட் கொல்லாபரேசன்) முடியும்.
- (www.Tamilvu.org) என்ற தமிழ் இணையப்பல்கலைக்கழகத்துடன் தமிழ்க் கல்வியைப் பெறலாம். மேலும் பல அறிவுசார் தளங்கள் உள்ளன.
- அதன் இருப்பிட முகவரி தமிழ் இணையப்பல்கலைக்கழகம்¸ எல்நெட் மென்பொருள் நகரம்¸ நான்காம் தளம்¸தரமணி சென்னை-13.
- தமிழ் இணையப்பல்கலைக்கழகம் நடத்தும் பாடத்திட்டங்களை துவக்கக்கல்வி ஆசிரியர்கள் அறிந்து தம் மாணவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
- கற்பிக்கும் உபகரணங்கள்¸ ஆடியோ¸ வீடியோ கருவிகள். மென்பொருள் பொருள்கள்¸ ஊடகம்¸ கல்வி குறித்த இணைய தளம் ஆகிய இந்த கற்றலுக்குரிய தொழில் நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும்.
- பார்வையற்றோருக்கும்¸ ஒன்றும் தெரியாதவர்களுக்கும் வானொலி¸ தொலைகாட்சி மூலமும் பாடங்களை கற்பிக்கலாம்.
; (www.Tamilvu.org) என்ற இணையதளத்தின் வழி அறியலாம். 2.செந்தமிழ ;ச் சொற ;பிறப்பியல் பேரகரமுதலி மூலம் தமிழ்ச்சொற ;களை அறியலாம;;. 3. https://en.wikipedia.org/wikitamil _literature 4.www.valaitamil.com 5. http://www.tamilnation.com 6. http://www.karkanirka.org 8 7.http://www.tamilmozhikoodam.com 8. http://www.apptamil.com 9. http://www.illakkium.com 10. http://www.kalapam.com 11. http://www.lexilogos.com/english/tamil_dictionary.html
தமிழ் உச்சரிப்பு :
ழ ¸ள¸ ல¸ ண¸ன¸ர , இதில்
தமிழ் உச்சரிப்பு தவறானவை தமிழ் உச்சரிப்பு சரியானவை எவைஎன அறிய வேண்டும். பளம் புழம் தமிளன் தமிழன் புளி புலி ஊறல் ஊரல் பூணை பூனை மளை மலை கூட்டெழுத்து: தமிழ் உச்சரிப்பு தவறானவை தமிழ் உச்சரிப்பு சரியானவை தென்ட்றல் தென்றல் நன்ட்றி நன்றி கட்றோர் கற்றோர் பட்றி பற்றி ஆள்பாதி ஆடைபாதி¸ என்பது பழமொழி. எழுத்து பாதி சொல்வது மீதி என்பது புதுமொழி. ஏனெனில் எழுத்துக்கள் சரியாக உச்சரிக்கப்படவில்லை எனில் அதன் கருத;து கேட்பவர்களை முழுமையாகச் சென்றடையாது. எனவே¸ எவ்வாறு எழுத்துக்கள் உச்சரிக்கப்படுகின்றது (phonology) என்பதையும் உணரலாம்.
- இணைய தளப்பயன்பாட்டால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அறிவு தரம் உயாத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
முடிவுரை:
இணைய வழிக்கற்றல் ஒருபோதும் வகுப்புகளில் கற்கும் அனுபவத்தை அளிக்க முடியாது. இந்நெருக்கடியான சூழலில் ஒரு மாற்று முயற்சியாக கருதலாமே ஒழிய அது என்றென்றும் வழக்கமான கற்பித்தல் முறைக்கு ஈடாகா. இணையக் கல்வியில் அனைவரும் இணைய ஒரே வழி நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய¸ மாநில அரசுகள் அதிகரித்தால் இணையக்கல்வியில் ஏழை மக்களும் இணையலாம் உலக அரங்கில் இந்தியா உயர் தரம் பெறலாம்.