இயற்கை மருத்துவம்  கணினி மையமாகுமா?

இயற்கை மருத்துவம்  கணினி மையமாகுமா?

ப.கனகவள்ளி

முனைவர் பட்ட பகுதி நேர ஆய்வாளர், அன்னை தொரசா மகளிர் பல்கலைக்கழகம்,

கொடைக்கானல், தமிழ்நாடு, இந்தியா.

முனைவர் தே. ராஜசீலி

நெறியாளர் மற்றும் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரி, பெரியக்குளம், தேனி,

முன்னுரை

கணினி வளர்ச்சி என்பது எண்ணி அடங்காது, இருக்கும் இடத்தில் இருந்து உலகை நாம் அருகில் கொண்டு வருவவை. அவற்றை அளத்து சொல்ல முடியாத அதி வேக வளர்ச்சி பெற்றுள்ளன. அதில் சொல் அடங்கதா பல அதிசய செயல்களை செய்ய வல்ல பண்புகளாக இருக்கின்றன. கணினி தொழில்நுட்பம் எவ்வாறு மருத்துவத்தில் பயன்zஉள்ளதாக இருக்கின்றன என்பதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

மருத்துவத்தில் கணினி

கணினி வளர்ச்சியடைத்த அளவில் நாட்டு மருத்துவமும் வளர்ச்சி அடையவேண்டும். என்றால், அதற்கு ஏற்ப நாட்டுமருத்துவர்களும் தங்களது மருந்து கள் பற்றி எடுத்துக்கூற முன்வர வேண்டும். மருத்துவர்கள்  கைப்பேசியில் (Phono), காணொளி (Video) யில் மூலமாக தங்களது மருந்து பற்றியும் மருந்துத் தயரிக்கும் முறைக்கும் பற்றி அம்மருந்துக்கள் உண்டாகும் நன்மை பற்றியும் நோய் குணமாகும் விதத்தைப் பற்றியும் காணொளி வழியாக எடுத்துக் கூறுவது  இன்றையத் தொழில்நுட்பத்தில் எளிதாக இருக்கின்றது.

இயற்கை மருந்துவ முறைகளை உள்ளப்படி கணினி வழி எடுத்துச் செல்ல காணோலிகள், திறன்பேசிகள் போன்ற எளிய சாதனங்களை கணினி மருத்துவத்துறையாக நாட்டு மாறுவதற்கும் தங்களுடைய பாராம்பரியத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் ஏற்ற வழியாக அமைகிறது.

கருது கோள்

இந்த ஆராய்ச்சியில் கொடுக்கப்படும் விவரங்களை அடிப்படையாக் கொண்டு நாட்டு மருத்துவக் கலையை அழிவிலிருந்து  பாதுகாக்கவும் நாட்டு மருத்துவ தரவுகளை சேகரிக்கவும் மருத்துவர்களுக்கு எளிமையான கணினிப் பயிற்ச்சியைக் கொடுக்க  ஆய்வு மாணவர்கள் மேற்கொண்டு செய்தால்   அடிப்படை கணினி அறிவை நாட்டு மருத்துவர்களுக்கு எடுத்துச் செல்லாம்.  அவ்வாறு ஒரு களப்பணியை மேற்கொள்ளும் மாணவர்கள் கணினி அறிவைப் பற்றிய  அனுபவ அறிவை நேரடியாகப் பெற்று தங்களுடைய வேலை வாய்ப்பை  பெருக்கிக்  கொள்ள முடியும்.  நாட்டு மருந்து பற்றிய  ஆராய்ச்சிக்குத் தேவையான தரவுகளை உருவாக்க இயலும்  நாட்டு மருத்துவத்தில் பயன் படுத்தப்படும் மருந்துகளைப் பேணிக்காக்கவும் அரிய மூலிகைகளை பாதுகாத்து வளர்க்கவும் உதவியாக இருக்கும்

கீழே அட்டவணையில் சில நாட்டு மருத்துவர்களும் அவர்களின் மருத்துவ முறைகளும் விளக்கப்பட்டுள்ளது. இவ்விவரங்களை காணோளியாக்குவதோ, வைத்திய முறையைகளைத் தரவுப் படுத்துவதோ கடினமன்று. எளிதாக நாட்டு மருத்துவம் பற்றியும், நாட்டுமருத்துவர்களைப்பற்றியும்  இணையத்திலும் கணினியிலும் ஏற்றலாம். முக்கியமாக  எத்தனை வகை மூலிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டும் என்ற விவரத்தையும் அறியலாம். இவ்வட்டவணை, இயற்கை மருத்துவதைப் பற்றிய தரவுகளின் ஒரு  மிகச்சிறிய
உதாரணம் ஆகும்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம், நடுப்பட்டி கிராமத்தில் உள்ள மாலைமேடு என்ற இடத்தில் வசிக்கும் கை வைத்தியர் மாரியம்மாள் என்பவர் குழந்தை இல்லாமல் வாருந்தும் இளம் தம்பதியர்களுக்கு இறைவன் அருள் மூலமாக குழந்தை பாக்கியம் பெறும் தகுதியை உண்டாக்கி வருகின்றார். இவர் கைப்பேசி பயன்படுத்திகின்றர் ஆனால் அவர் செய்யும் சேவை செயல் பற்றி காணொளி வழியாக பயன்படுத்தினால் மருத்துவம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்று இயற்கை வைத்திய முறைகள் அழியாமல் நின்று நிலைத்திருக்கும்.

தொக்கம் எடுக்கும் முறை

தேனி, திண்டுக்கல் அதனை சுற்றியுள்ள உத்தமபாளையம், மல்லிகாபுரம், திண்டுக்கல், பஞ்சம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மருந்துவர்கள் தொக்கம் எடுக்கின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள மல்லிகாபுரத்தில் வசிக்கும் முருகேஸ்வரி பெண். திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கலில் வசிக்கும் முருகேஸ்வரி பெண் மருந்துவh; திண்டுக்கல் மாவட்டத்தில் குறைந்தது 85 வருடங்களாக தொக்கம் எடுக்கும் மருந்துவம் செய்து வந்துள்ளனர். தொக்கம் எடுப்பதில் இவர்கள் செய்யும் மருந்துவ முறைகள் ஒரு புதிய வகையில் பிறர் அறியாவண்ணம் காதில் மருந்து ஊற்றுதல் ஆகும். இம் மருத்துவமுறையில்; பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுவதுவில்லை. நல்ல பலனை அளிக்கிறது. முழுமையான இயற்கை மருத்துவமாகும் இம்முறையில் பலர் பயன்பெற்றுள்ளனர் என்பதை கணினி மூலமாக மக்களுக்கு வெளிப்படுத்தவதன் வழி பல எவ்வித விளைவுகள் இன்றி மக்கள் பயன் பெறுவர்கள்.

இயற்கை கண் சொட்டு முருத்துவம்

சின்னாளபட்டி அருகில் உள்ள காந்திக்கிராமம் என்ற இடத்தில் முதன் முதலில் அருணச்சலம், ராகேஸ்வரி என்றவர் நாட்டு வைத்திய முறை செய்துள்ளார். அவருக்குப் பிறகு அவருடைய மகன் சௌடைய ஐயா,  ருக்மணி, என்பவருடைய மகன் அ.சு. வெங்கடேஸ்வரரும் அவருடைய குடும்பத்தினரும் மருத்துவ முறைகளைவச் சிறப்பாக இன்று வரையும் பிறருக்கு உதவும் சேவை மனதுடன்  செய்துவருகின்றனர்.

இவர்கள் நன்கு படித்தவர் கணினி மற்றும் கைபேசியும் பயன்படுத்துகின்றர். கணினி பயன்படுத்தி தன்னுடைய மருத்துவ முறைகளை வெளியிடாமல் மருத்துவ முறைகனள தனது தலைமுறைக்கு மட்டும் எடுத்துக்கூறி மருத்துவம் செய்கின்றனர்

எலும்பு முறிவு வைத்தியம்

நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் ஆகும். இதன் அடிப்படையில் அமைந்தது எலும்பு முறிவு வைத்தியம். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள பூசாரி கவுண்டன்பட்டியில் 45 வருடங்களாக கி.சுருளியப்பன் என்பவர் எலும்பு முறிவு வைத்தியம் என்ற கை வைத்தியம் செய்து வந்தார். அவர் 2020 யில் இறந்துவிட்டார்.

கி.சுருளியப்பன் ஐயா அவர்கள் பிறகு அவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி எலும்பு முறிவு வைத்தியத்தை சிறப்பாக செய்து வருகிறார். எங்கள் பகுதியிலுள்ள மக்கள் மட்டுமின்றி மலைப்பகுதியில் கேரளாவில் இருந்து வந்து கட்டுப்போட்டு செல்கின்றனர்.

இனி எலும்பு முறிவு வைத்தியம் என்றால் பூசாரி கவுண்டன்பட்டி என்பது தான் நினைவுக்கு வரும் இம்முறையை கணினி வழியாக எடுத்துக் கூறும்போது இன்னும் பல மடங்கு இயற்கை மருத்துவம் வளர்ச்சி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தை மருத்துவம்

மேலைசிந்தலைச்சேரியில் தை முதல் நாள் அன்று தோல் சார்ந்த நோய்களுக்கு மூலிகை மருந்தினைப் பல காலமாகக் கொடுத்து வருகின்றனர் அரிப்புஇ பொடுகு, படை சொரியாசிஸ் போன்ற நோய்களுக்கு ஏற்ற மருந்தாகவும் உள்ளது. அம்மருந்து மூலிகைகள் 131 வகையான மூலிகைகள் மூலனாக உருவாக்கப்பட்டு 501 வகையான நோய்களைப் போக்கக்கூடிய மருந்தாகவும் இருக்கின்றது.

அரிப்பு,  பொடுகு, படை சொரியாசிஸ் மருத்துவம்

கீழேலைசிந்தலைச்சேரியில் முதலில் தொட்டக்கவுண்டர், சுருளியண்டிக் கவுண்டர், சுஜா கவுண்டர், இலட்சுமனைக் கவுண்டர் என்பவர்கள் வைத்தியம் செய்துள்ளார். அவருக்குப் பிறகு தொட்டக்கவுண்டர் அவருடைய மகன் சுருளிப்பன், வாசகர், தங்கராஜ் உடன் சுருளியண்டிக் கவுண்டர் அவருடைய மகன் சுருளிராஜ், செல்வக்குமார், சுவி இவர்களுடன் சேர்த்து சுஜா கவுண்டர் மகன்களும் இணைத்து தங்கராஜ், ஆண்டவர், முருகேஸ்சன் என அவர்களுடைய குடும்பத்தினர் என இன்று வரை இம்மருத்துவ முறைகளை சீரும், சிறப்பாக இவர்கள் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இப்போது அனைவரையும் ஒன்றுச்சேர்த்து ஈஸ்வரன் என்பவர் தை முதல் நாள் 14.01.2022 அன்று தைத் திருநாள் மருந்துவ மூலிகை நீர் கொடுத்தார்.

 

ஓற்றைத்தலைவலி

நவீன மருத்துவத்தில் நிவாரண இருந்தாலும் அது தற்காலிகமானதும், பக்கவிளைவுகள் விளைவிக்கக்கூடியதும் ஆகும். இவ்வழி முறையில் தேனி மாவட்டம் கொடைரோடு, மு.கருப்பையா அவர்கள் ஒற்றைத்தலைவலி மருத்துக்கொடுக்கின்றர். கணொளி பயன்படுத்துகின்றனர் ஆனால் கை மருத்துவ முறைகளை கணொளி வழியாக வெளிப்படுத்தினால் வரும் தலைமுறையினருக்கு பக்கவிளைவுகள் இன்றி பயன்படுத்து முறைகளை எடுத்துக் கூறினால் நமது மக்களுக்கு பழமையை உயிர் பெற செய்ய ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கும்.

நாடித்துடிப்பு

நாடித்துடிப்பு என்றால் நாம் சாதாரணமாக எண்ணுதல் கூடாது. இன்றைய உலகில் எது எடுத்தாலும் அறுவைச் சிகிச்சைதான் உள்ளது. அந்த சிகிச்சை முறையை அளிப்பதுதான் நாடித்துடிப்பு மருத்துவம் ஆகும். எந்தவிதமான விளைவுகள் இன்றி உடலில் என்ன நோய் இருக்கின்றன என்னும் தகவல்களை அறிய நாடித்துடிப்பு வைத்தியம் உதவுகின்றன என தேவாரத்தில் வசிக்கும் மருத்துவர் பழனிச்சாமி அவர்கள் கூறுகின்றர் இச்செய்தியை கணினியில் வெளியிடும்போது நோயற்ற உலகமாக உருவாக்க முடியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மஞ்சள் காமாலை

நம் உடலில் அவ்வப்போது ஏதாவது நோய் வந்து சென்று கொண்டிருக்கின்றன. மஞ்சள் காமாலை என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. ஒரு அறிகுறி நம் உடலில் உள்ள மிகச்சிறந்த ஒரு உறுப்பான கல்லீரலில் சுரக்கின்ற பித்தநீரின் அளவு ரத்தத்தில் அதிகமாகி பித்தப்பை  பாதிக்கப்படுவதைத்தான் மஞ்சள் காமாலை உருவாகின்றன என கோம்பையில் வசிக்கும் வைத்தியர் எஸ். வி. கண்ணன் அவர்களும் அவர் குடும்பத்தரும் சீறும் சிறப்பாக மருத்துவம் செய்கின்றர்.

கணினி பயன்பாட்டின் முக்கியத்துவம் (இயற்கை மருத்துவம்)

இயற்கை மருத்துவ முறைகள் கணினி பயன்படு அதிகமாக உள்ளன, எனினும் பழமையான மருத்துவத்தில் உள்ள பல அற்புதமான மருத்துவ முறைகள் இன்னும் வெளிப்படமால் அளித்து வருகின்றன. அவற்றை முழுமையாக அறிந்து கணினியில் பதிவுச்செய்வதன் மூலமாக மருத்துவத்தில் உள்ள சிறப்பான உண்னதமான மூலிகைகளின்சிறப்புகளை அளியமால் பாதுகாத்து நோயின்றி வாழிவகை செய்யும்.

முடிவுரை

கணினி மூலமாக மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறுவதன்  போது பழமையான மருத்துவ முறைகளை மீண்டும் உயிர் பெற செய்யவும் அவை கணிமயமாகவும் வழிவகைச் செய்கிறது. இயற்கை மருத்துவத்தைப் பேணிப் பாதுகாப்பது,ம் கணினி வழி  தரவு படுத்துதலும்  இயற்கைச்சூழலை  பாதுகாக்கும் ஒரு எளிய வழி.

error: Content is protected !!