ஊடகங்களின் வழி கல்வி கற்றல்
நா.ரெங்கலட்சுமி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
ஸ்ரீ.எஸ்.இராமசாமிநாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி,
சாத்தூர்.
மின்னஞ்சல்: rengaveeru@gmail.com
ஆய்வுச்சுருக்கம்:
இன்றைய காலக்கட்டத்தில் ஊடகத்தின் பங்கு இன்றியமையாதது. ஊடகங்களால் பல தீ;மைகள் உண்டு என்றாலும் அவற்றில் சில நன்மைகளும் உண்டு. தற்போது ஊடகங்களின் உதவியால் நாம் கல்வியை எளிதாக கற்க முடிகிறது. வகுப்பறையின் மூலம் கற்று வந்த கல்வியை இன்று ஊடகங்களின் வழியாக கற்பதற்கு ஏற்றவாறு நம் நாடு கணினி மற்றும் இணைய வளர்ச்சியில் முன்னேறிவிட்டது. அச்சு வழி ஊடகங்கள், மின்வழி ஊடகங்கள், மின்னணு ஊடகங்களின் வழியாக மாணவர்கள் கல்வியினை விரும்பியும் எளிமையாகவும் கற்கின்றனர்.அச்சு வழி ஊடகமான செய்திதாள்களும், பத்திரிகைகளும் மாணவர்களின் கல்விக்கு பெரிதும் உதவுகிறது. செய்திதாள்களில் அரசுத் தேர்வுகளுக்கான வினாவிடை, வங்கித் தேர்வு, பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்விற்கான வினாவிடையும் வெளியிடப்படுகிறது.
மின் வழி ஊடகங்களான வானொலியும், தொலைக்காட்சியும் மாணவர்கள் கல்வி கற்பதற்கு வானொலியின் மூலம் கல்வி கற்றல் என்பது கேட்கும் திறனுடையது. அன்றைய காலக்கட்டத்தில் வானொலி நாட்டின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளது. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைவருக்கும் பயன்தரும் வகையில் கல்வி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. வானொலியைப் போன்று தொலைக்காட்சியிலும் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. கொரோனா காலக் கட்டத்திலும் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்றவாறு தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி என்னும் சேனலை உருவாக்கியுள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஆரம்பப் பள்ளி முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக உள்ளது.
மின்னனு ஊடகங்களான கணினி, இணையம், அலைபேசி ஆகியவையும் கல்வி கற்பதற்கு பெரும் துணையாக இருக்கின்றன. இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒன்று கணினி. கல்வித்துறையில் கணினியின் பங்கை யாரும் மறுக்க இயலாது. பல பள்ளிகளில் கணினி வழி கல்வியே பின்பற்றப்படுகிறது. இணையத்தின் உதவியால் மாணவர்கள் கல்வியினை எளிமையாக கற்கின்றனர். வலைத்தளங்கள், வலைப்பூக்கள், வலைப்பதிவுகள் போன்றவற்றின் மூலமும் கற்கின்றனர்.
இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை ஆய்வு கட்டுரைகள் இடம்பெறுகிறது. இக்கட்டுரைகள் ஆய்வு மாணவர்களுக்கும், முனைவர் பட்ட ஆய்வாளர்க்கும் உதவியாக இருக்கிறது. இணைய நூலகங்கள் பல இணையதளத்தில் செயல்படுகின்றன. சென்னை நூலகம், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகம், மதுரைத் திட்டம், தமிழ் மின்னூலகம் போன்ற இணைய நூலகங்கள் வழியாக பல்வேறு புத்தகங்களை இலவசமாக படிக்கவும் தரவிறக்கம் செய்யவும் உதவுகிறது.
அச்சு வழி ஊடகங்கள், மின்வழி ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களால் மக்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதனை கேட்பதோடு மட்டுமில்லாமல் அதனோடு தொடர்புடைய இன்னும் அரிய தகவல்களை பெறுவதற்கு இவ்வூடகங்கள் பெரிதும் துணைபுரிகின்றன என்பதனை விளக்கும் விதமாக ஆய்வுக் கட்டுரை அமைகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் ஊடகத்தின் பங்கு இன்றியமையாதது. உலகம் முழுவதும் ஊடகங்களால் சூழப்பட்டுள்ளது. ஊடகங்களால் மக்களுக்கு சில தீமைகள் உண்டு என்றாலும் பல நன்மைகளும் உண்டு. உலகில் நடக்கும் செய்திகள் அனைத்தும் வெகுவிரைவில் ஊடகங்கள் நமக்கு தந்துவிடுகின்றன. ஊடகத்தின் உதவியால் பல வி~யங்களை நாம் கற்றுக் கொண்டாலும் தற்போது கல்வியையும் ஊடகம் மூலமாகவும் கற்கமுடிகிறது.
“கரும்பலகையின் வழி கல்வி கற்றல் என்பது பழைய முறை
ஊடகங்கள் வழி கல்வி கற்றல் என்பது புதிய முறை”
வகுப்பறையின் மூலம் கற்று வந்த கல்வியை இன்று ஊடகங்களின் வழியாகவும் கற்கமுடிகிறது. கல்வியை கணினி மற்றும் இணையம் வழி கற்கும் நிலைக்கு நம் நாடு முன்னேறிவிட்டது. அச்சு வழி ஊடகங்கள், மின்வழி ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் போன்ற ஊடகங்களின் வழியாக மாணவர்கள் கல்வியை எளிமையாக கற்கமுடிகிறது. இன்றைய கொரானோ காலக்கட்டத்திலும் மாணவர்கள் ஊடகங்களின் வழியாக கல்வியை கற்று வருகின்றனர். ஊடகங்களின் வழி கல்வி கற்றல் முறைமையினை எடுத்துரைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
அச்சு வழி ஊடகங்களின் வழி கல்வி கற்றல்
அறிவியல் வளர்ச்சி நாளும் புதுமைகளைத் தோற்றுவிக்கின்றது. அச்சு வழி ஊடகமான செய்திதாள்களும், பத்திரிகைகளும் மாணவர்களின் கல்விக்கு பெரிதும் உதவுகிறது. அவ்வகையில் செய்திதாள்களும் பல வளர்ச்சிகளை கொண்டு இயங்குகிறது. செய்திதாள்களில் அரசுத் தேர்வுகளுக்கான வினாவிடை, வங்கித்தேர்வு, பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்விற்கான வினாவிடையும் வெளியிடப்படுகிறது. இதன் மூலமும் மாணவர்கள் கல்வியைக் கற்கின்றனர்.
தேர்விற்கான வினாவிடை மட்டுமில்லாதது வரலாற்றுச் செய்திகளையும், கோயிலின் தலவரலாற்றையும் அக்கோயிலின் சிறப்பம்சங்களையும் செய்திதாள்கள் வெளியிடுகிறது. இதன் மூலம் பொது அறிவையும் பெறுகின்றனர். உதாரணமாக கல்வி மலர், ஆன்மிக மலர், சிறப்பு மலர், தொழில் மலர்.
செய்திதாள்களோடு இதழ்களும் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிகிறது. இதழ்களிலும் கல்வித் துறை மட்டுமில்லாமல் மருத்துவம், சோதிடம், சட்டம், வணிகம், கிராமநலம், அறிவியல் போன்ற துறை சார்ந்த இதழ்களும் வெளிவருகின்றன. கல்விக்கென்று தமிழ்க் கல்வி பத்திரிகை, பாலர் கல்வி, முதியோர் கல்வி கல்விக் கதிர், புத்தக நண்பன், கல்வி, ஆசிரியர் குரல்: நூல் போன்ற இதழ்கள் உள்ளது.
மின்வழி ஊடகங்கள் வழி கல்வி கற்றல்
மின் வழி ஊடகங்களான வானொலியும், தொலைக்காட்சியும் மாணவர்கள் கல்வி கற்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில் வானொலி நாட்டின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளது. அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்புகள் பாடம் தொடர்பான பாடங்களில் திறமையடையவும் அறிவுக் கூர்மையினை பெறவும் வானொலி பள்ளிக் கல்வி ஒலிபரப்புகள் துணைபுரிகின்றன. கல்வி ஒலிபரப்புகள் பள்ளி பருவ காலங்களில் வாரத்தில் ஐந்து நாட்கள் ஒலிபரப்பாகின்றன. கல்வி ஒலிபரப்பிற்கான பாடங்களை அகில இந்திய வானொலியும் மாநிலக் கல்வித்துறையும் இணைந்து தயாரிக்கின்றன. தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான மாணவர்களுக்கான ஒவ்வொரு துறை பாடத்திலும் வல்லுநர்களால் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு அவை ஒலிபரப்பாகி வந்தது. சென்னை வானொலி நிலையம், ஞானவாணி வானொலி போன்ற வானொலி நிலையங்கள் கல்வியை ஒளிபரப்பி வந்தது. ஆனால் தற்போது இணையத்திலும் வானொலிகள் ஒலிபரப்பி வருகின்றன. இணையத்தில் ஒலிபரப்பாகும் வானொலிகள்
கல்வித் தொடர்பான செய்திகள் மட்டுமில்லாமல் வேளாண்மை, மருத்துவம், சோதிடம், சமையல், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளையும் வானொலி ஒலிபரப்புகிறது.
வானொலியைப் போன்று தொலைக்காட்சியிலும் கல்வி நிகழ்சிசிகள் ஒலிபரப்பபடுகின்றன. கொரானா காலக்கட்டத்திலும் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்றவாறு தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி எனும் சேனலை உருவாக்கியுள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஆரம்பப் பள்ளி முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக உள்ளது. பாட அறிவு மட்டுமில்லால் தொலைக்காட்சிகளில் ஒரு சில நிகழ்ச்சிகள் பொதுஅறிவையும் வளர்க்கும் விதமாக ஒலிபரப்பப்படுகின்றன.
மின்னணு ஊடகங்கள் வழி கல்வி கற்றல்
செய்திதாள்கள், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவைகள் மட்டுமில்லால் மின்னணு ஊடகங்களான கணினி, இணையம், அலைபேசி ஆகியவையும் கல்வி கற்பதற்கு பெரிதும் துணையாக இருக்கின்றன.
இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்ட ஒன்று கணினி, கல்வித் துறையில் கணினியின் பங்கை யாரும் மறுக்க இயலாது. பல பள்ளிகளில் கணினி வழி கல்வியே பின்பற்றப்படுகிறது. இணையத்தின் உதவியால் மாணவர்கள் கல்வியினை எளிமையாகக் கற்கின்றனர். பாடப் பொருளை கற்கும் மாணவர்கள் விரும்பிக் கேட்பதற்கு காணொலிக் காட்சி என்று அழைக்கப்படுகின்ற POWER POINT பெரிதும் பயன்படுகிறது. கணினியில் PPT மூலமாகவும் படக் காட்சிகள் மூலமாகவும் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க அதன் மூலம் மாணவர்கள் பாடங்களை சுலபமாக புரிந்துக்கொள்கின்றனர்.
இணையம் வழி கற்றல்
தகவல்களை தேடுவதற்கு மட்டும் இணையம் பயன்படவில்லை. அதன் மூலம் நிறைய கற்றுக் கொள்வதற்கும் இணையம் பயன்படுகிறது. பல கல்வி நிறுவனங்களும் அனுபவம் வாய்ந்த பல ஆசிரியர்களும் இணையம் வழியாக பல கருத்தரங்களையும், பயிலரங்களையும் நடத்தி வருகின்றது. உதாரணமாக உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம், தமிழ் இணையக்கழகம் போன்ற நிறுவனங்கள் பல கருத்தரங்குகளையும், இணையச் சொற்பொழிவையும் நடத்தி வருகின்றன. நிறுவனங்கள் மட்டுமில்லாமல் கல்லூரிகளும் இணைய வழி திறனறிவுத் தேர்வு, கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றது. இணையத்தில் இதழ்கள், நூலகங்கள் இருக்கிறது. இவை மூலமும் நமக்குத் தேவையான தகவல்களை பெறமுடிகிறது.
இணையதளங்கள் வழி கற்றல்
இணையம் மட்டுமில்லாமல் இணையதளங்களும் கல்வி கற்பதற்கு உதவுகிறது. இணையதளங்களும் மாணவர்கள் கல்வி கற்பதற்கு பயனள்ளதாக இருக்கிறது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள உதவுகிறது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் சொன்னதை விட அந்த பாடங்களை பற்றி நிறைய தெரிந்து கொள்கின்றனர். உதாரணமாக
இது போன்ற இணையதளங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.
இணைய இதழ்கள்
இணைய இதழ்கள் செய்திகள், கட்டுரைகள் மற்றும் பிறத் தகவல்களை படிக்கவும் உதவுகிறது. இணையத்தின் வளர்ச்சியால் தமிழ் இதழ்கள் இணையத்தின் வாயிலாக படிக்க வழிவகை செய்துள்ளன. தினமலர், தினகரன், புதிய தலைமுறை, தினதந்தி, விகடன் போன்ற நாளிதழ்களை இணையத்ததின் வாயிலாகவும் படிக்கலாம். இணையத்தில் மட்டும் இயங்குகின்ற தமிழ் இதழ்களும் அதிகளவில் உள்ளன. அவை தமிழ் மணம், தமிழ்.காம், முத்தமிழ், திண்ணை, தமிழ்க்கூடல், முத்துக்கமலம் போன்றவை இணைய இதழ்களாகும். இந்த இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெறுகிறது. இக்கட்டுரைகள் ஆய்வு மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறது.
இணைய நூலகங்கள்
நூலகம் என்பது மக்களின் அறிவு வளர்ச்சிக்கு புதிய சிந்தனைகளை உருவாக்கக் கூடிய பல்வேறு துறைச் சார்ந்த நூல்களை ஒரே இடத்தில் இருந்தவாறு வாசிக்கவும் பயன்படுகிறது. அதே போன்று இணையத்தில் நமக்குத் தேவையான செய்திகள், நூல்களை அதற்குரிய தலைப்பைத் தேர்வு செய்து இணையதளத்தில் செல்லும் போது தகவல்கள் அமுதசுரபி போன்று பெறமுடியும். சுpல செய்திகள் அல்லது நூல்களை வாசிக்கவும் பிரதி எடுத்துக் கொள்ளவும் முடியும். சில நூல்களை இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து செய்து கொள்ளலாம். இணையவழி கற்றல் கற்பித்தலுக்கு இணைய நூலகம் அதிகளவில் பயன்படுகிறது. இணைய நூலகங்கள் பல உள்ளன. சென்னை நூலகம், தமிழ் இணையக்கல்வி கழக நூலகம், விக்கிபீடியா, தமிழ் மின்னூலகம் போன்ற இணைய நூலகங்கள் இலவசமாக மக்களுக்கு கிடைக்கின்றன.
அலைப்பேசியின் மூலம் கற்றல்
இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். ஸ்மார்ட் போன் மூலம் மாணவர்கள் நிறைய தெரிந்துக் கொள்கின்றனர். google play store இல் படிப்பதற்கு நிறைய செயலிகள் உள்ளது. சிறு குழந்தைகளுக்கான பாடம் முதல் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற பாடங்கள் வரை அனைத்தும் இருக்கிறது. மேலும் ஒரு சொல்லின் பொருளை அறிவதற்கு அகராதிகள், இலக்கணங்கள், புத்தகங்கள், சிறுகதைகள், நாவல், இலக்கியம், பொது அறிவு போன்றவைகளை போனில் தரவிறக்கம் செய்து கொண்டு மாணவர்கள் நேரம் கிடைக்கும் போது படிப்பதற்கும் உதவுகிறது.
மேலும் IAS, TNPSC, VAO, NET EXAM, BANK EXAM, SET EXAM , NEET போன்ற தேர்வுகளுக்கான செயலிகளும் இருக்கிறது. இந்த செயலிகளால் அந்த தேர்விற்குரிய வகுப்பிற்கு செல்லாமலும் எந்தவிதமான கட்டணம் செலுத்தாமலும் வீட்டிலிருந்தே கற்கின்றனர்.
நமது சமுதாய மக்கள் ஊடகங்களால் சூழப்பட்டுள்ளனர்.. அச்சு வழி ஊடகங்கள், மின் வழி ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் என ஊடகங்களால் மக்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். இந்த ஊடகங்களால் மாணவர்கள் கல்வி கற்பதில் தொடங்கி பலவிதமான தகவல்களைப் பெறவதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதனை கேட்பதோடு மட்டுமில்லாமல் அதனோடு தொடர்புடைய இன்னும் அரிய தகவல்களை பெறுவதற்கு இவ்வூடகங்கள் பெரிதும் துணைபுரிகின்றன என்பதனை விளக்கும் விதமாக ஆய்வுக் கட்டுரை அமைகிறது.