கட்டுரையாளர்கள் கவனத்திற்கு

 • தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கட்டுரைகள் வழங்கலாம்.
 • இரு மொழிகளிலும் குறிச்சொற்கள் இருக்க வேண்டும்.
 • கட்டுரையின் தலைப்புக்குக் கீழ் கட்டுரையாளரின் முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் இருத்தல் வேண்டும்.
 • கட்டுரையில் உள்ள கருத்துக்கள், படங்கள், கருத்துத் திருட்டுச் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
 • நூலாக்கம் கருதிக் கட்டுரையைச் சுருக்கவும், திருத்தவும் பதிப்புக்குழுவிற்கு உரிமை உண்டு.
 • ஆய்வுக் கட்டுரைகள் உரிய மேற்கோளுடன், துணைநூற்பட்டியலுடன் APA Style – இல் இருத்தல் வேண்டும்.
 • கட்டுரையில் பிற நூலாசிரியர்களின் மேற்கோள்களைப் பயன்படுத்தும் போது, APA Style -ஐப் பயன்படுத்தி மேற்கோள் காட்ட வேண்டும்.
 • ஆய்வு மாணவர்கள் தங்களின் நெறியாளரின் ஒப்புதலுடன் அவரது கையொப்பத்தினைப் பெற்று ஆய்வுச்சுருக்கத்தினைத் தமிழிலும் ,ஆங்கிலத்திலும்    அனுப்ப வேண்டும்.
 • ஆய்வுக் கட்டுரையை A4 தாளில் 5 வரி இடைவெளியுடன் ‘மருதம்’ / ஒருங்குறி (unicode) எழுத்துருவில்மட்டும் 12 புள்ளி அளவில், ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.
 • பாமினி எழுத்துருவில் அனுப்பப் படும் கட்டுரைகள் ஏற்கப்படாது.
 • தேர்வு செய்யப் பெற்ற ஆய்வுச்சுருக்கத்தின் முழுக்கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : 2/12/2021
 • கட்டுரைகள் ஆய்வு வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப்பெற்று மாநாட்டு இதழ் Kalvīyīyal Mānāṭṭu Ayvukkōvai (Print) ISSN 2767-0597 கொண்ட அச்சு இதழாகவும் Kalvīyīyal Mānāṭṭu Ayvukkōvai (Online) ISSN 2767-0600 கொண்ட இணைய இதழாகவும் வெளியிடப்படும்.
 • அச்சு இதழ் நகல் விரும்புவோர் அதற்கான அச்சீட்டுத் தொகையையும், அனுப்புவதற்கான அஞ்சல் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 • மாநாட்டுக்கட்டுரைகள் Tamil computing journal என்ற  இணையதளத்தில் வெளியாகும்.

ஒருங்குறி எழுத்துருக்களை தரவிறக்கம் செய்ய

ஆய்வுக்கட்டுரைகள், ஒருங்குறியில் கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருப்பதால் தமிழ் இணையகக்ழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான தமிழ் எழுத்துருக்களை இச்சுட்டியில் தரவிறக்கம் செய்து கட்டுரையாளர்கள் தங்கள் கணினியில் நிறுவிக் கொள்வது நலம்.

error: Content is protected !!