கணினித்தமிழ் தொகுப்பியல் பார்வை

கணினித்தமிழ் தொகுப்பியல் பார்வை

பெ.வீரம்மாள், M.A.,M.Phil., B.Ed., (P.hd)

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்>

பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி>

திண்டுக்கல்.

pveerammal1983@gmail.com

முன்னுரை:

    கணினித்தமிழ் பற்றிக்கூறும் போது “கணிப்பொறிக் கல்வி”  இன்று அனைத்துத்துறை வளர்ச்சிகளுக்கும் அடிப்படையானதாக உள்ளது. எந்தப் பாடத்தைக் கற்பவராயினும் கணினி அறிவியலையும் கற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயத் தேவையாகிவிட்டது. எனவே அனைவரும் கணினிப் பயிற்சியைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதன் காரணமாக கணினிக் கல்வியைத் தமது தாய்மொழியில் கற்கவேண்டிய ஆர்வமும்>தேவையும் அதிகரித்துள்ளது”1  என்று கூறுகின்றனர்.

கணினிவழி தமிழ்க்கற்றல் கற்பித்தல்:

    கணினிவழி தமிழ்க்கற்றல் கற்பித்தல் கூறும் போது கணினி தகவல் தொடர்பு ஊடகங்களின் வளர்ச்சி காரணமாகத் தமிழ்க் கற்கும்> கற்பிக்கும் முயற்;சிகள் இன்று பெருகியுள்ளன.  இதனை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1.          கணினித் துணையுடன் கற்பித்தல்

2.          கணினி மேலாண்மையில் கற்பித்தல்;

3.          கணினி ஊடகக் கற்பித்தல்

        கணினி ஊடகங்களின் வழி கற்பதில் நிறைகளுடன் குறைகளும் உள்ளன. கணினியால் ஒரு போதும் ஆசிரியருக்கு இணையாகச் செயல்பட முடியாது. ஆயினும் கணினியில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் தம் தேவைக்கேற்பக் கற்க முடியும். திரையில் உள்ள காட்சிகளை வண்ண வேறுபாடுகளோடு காணமுடியும். இதற்கு ஒளி அமைப்பு உண்டு.

  தொடக்கக்   கல்வி  முதல்  உயர்க்கல்வி  வரை கணினி வாயிலாகவே கற்க முடியும். தொடக்கநிலைப் பாடங்கள் மிகுதியாகத் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை இணையத்திலும் குறுவட்டுகளிலும் இடம்பெற்றுள்ளன.

பின்வரும் திறன்களை வளர்க்கும் பொருட்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன.

1.          கேட்டல்

2.          எழுதுதல் திறன்

3.          பேசும் திறன்

4.          புரிந்து கொள்ளும் திறன்

  இவற்றைக் கற்பிக்க பல்வேறு பயிற்சிகளும் மல்டிமீடியா தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.”2   என்று விவரிக்கப்படுகின்றன.

  •                 www.tamilnet/learntamil
  •                   www.saupenr.edu
  •                        www.tamilvu.org

இணையவழி பாடத்திட்ட வடிவமைப்பு:

     இது தமிழ்மொழிப் பாட ஆசிரியர்களும்> கணினி வல்லுநர்களும் இணைந்து செயல்படும் வடிவமைப்பைக் கொண்டது. இதன் படிநிலைகள் பின்வருமாறு>

           பாடத்திட்டத்தை மாணவர்களின் தரத்திற்கேற்ப பிரித்தல்.

           பிரித்த பாடங்களைத் தலைப்பின் அடிப்படையில் சிறுசிறு பாடப்பகுதிகளாக்கிப் பின்னர்த் தொகுத்தல்.

           பாடத்திட்டத்தில் படங்கள்> உயிரோட்டமுள்ள படங்கள்> வீடியோ> படக்காட்சிகள்> ஒலி வகைகளை சேர்த்தல்.

           மாணவர்கள் உதவியுடன் பாடத்திட்டத்தின் தரத்தை அதிகரிக்கக் கூடுதல் தகவல்களைச் சேர்த்தல்.

           பாடத்திட்டத்தை இறுதியாக சரிபார்த்தல்.

கணினி வழி தமிழ்க்கல்வி :

   கணினி வழி தமிழ்க்கல்வியை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  1.  இணையத்தைப் பயன்படுத்தும் கல்வி  (Online Education)
  • குறுவட்டுகள் மூலம் பெறும் கல்வி (CD  Education)

 வியாபார ரீதியாக இப்போது குறுவட்டுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை;

1.     குழந்தைகளுக்கான பாடல்கள் மற்றும் கதைகள்       (அனிமேஷனுடன்) உள்ள வட்டுகள்.

  2.        மொழித்திறன்களை உருவாக்கும் வட்டுகள்.

  3.        இலக்கிய பனுவல்களைக் கொண்ட வட்டுகள்.

     ஸ்டார் டாட்ஸ்டார்> சாப்ட்வியூ> குயில்> கோலாலம்பூர் வைகறை> வனிதா பதிப்பகம் போன்ற நிறுவனங்கள் தமிழில் குறுவட்டுகளை வெளியிட்டுள்ளன. திருக்குறள்> ஆத்திச்சூடி போன்றவற்றை பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இப்போது சங்க இலக்கியம்> கம்பராமாயணம்> புதுமைப்பித்தன் படைப்புக்கள் போன்றவனவும் குறுவட்டுகளில் கிடைக்கின்றன”3 என்று சுட்டப்படுகின்றன.

எழில் எனும் கணினி நிரல்மொழி – ஒரு அறிமுகம் :

    ஆங்கிலத்தில் ஏராளமான கணினி மொழிகள் உள்ளன. உலகெங்கும் லட்சக்கணக்கானோர் இதனைப் பயன்படுத்தி கணினிக்கு கட்டளை இடுகிறார்கள். கணினியும் அதன்படி செயல்பட்டு நமக்கு தேவையான பயனை வழங்குகின்றது. இப்போது ஆங்கிலம் அறியாதவர்களும் கணினி நிரல் எழுதக் கற்க வேண்டும் என்ற எண்ணத்துடன்> தமிழில் எழில் என்ற கணினிமொழி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது நம் தாய்மொழியான தமிழிலே கணினி மென்பொருள்  நிரல் (COMPUTER SOFTWARE PROGRAM)  எழுதக் கற்றுக்கொண்டு தமிழிலேயே நிரல்தொடர் குறிமுறை வரிகளை எழுதவேண்டும். இதனுடைய இணையதள முகவரி ezhillang.org/   என்பதாகும்.

   இதனை உருவாக்கியவர் திரு.முத்தையா அண்ணாமலை. இவர் சென்னையில் பிறந்து பாஸ்டனில் வசிக்கும் கணினி;பொறியாளர்” 4 ஆவார்.

எழில் மொழியைக் கொண்டு நாம் பின்வரும் செயல்களை செய்து பயன்பெறலாம்.

1.          நாம் விரும்பும் செய்திகளைத் திரையில் அச்சிடலாம்.

2.          ஏளிய சிக்கலான கணக்குகளைப் போடலாம்.

3.   தர்க்க அடிப்படையிலான (Logical) தீர்மானங்களில் விரைவாக                            முடிவெடுக்கலாம்.

4.          படம் வரையலாம்.

5.          ஒரே செயலை பல்வேறு முறை திரும்பத் திரும்பச் செய்யலாம்.

    இந்த எழில் என்பது தமிழில் உருவாக்கப்பட்ட கணினி நிரல் மொழியாகும். திறமூல (Open source)   அடிப்படையில் வெளியிடப்படுவதாகும்.” 5

மறைக்கப்பட்ட வரலாறு :

    உலக வரலாற்றில் நமக்கு தெரியாமல் பல்வேறு விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளது. கணினித்துறையில் மறைக்கப்பட்ட உண்மை> உலகின் முதல் கணினி ப்ரோகிராமை கண்டறிந்தவர் ஒரு பெண். 1821 ஆம் ஆண்டு டிபரென்ஸ் என்ஜின் என்ற பெயர் கொண்ட கருவிதான் உலகின் முதல் கணினி என அழைக்கப்படுகின்றது.

    அனாலட்டிக்கல் என்ஜின் உலகின் முதல் ஜெனரல் பர்ப்பஸ் கம்ப்யூட்டர் என்ற பெருமையை 1834 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ‘அனாலட்டிக்கல் என்ஜின்’ கணினி பெற்றுள்ளது.

    கம்ப்யூட்டர் ப்ரோகிராம் உலகின் முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராமரான ‘அடாலோவலெஸ்’ வகுத்த சில கோட்பாடுகள் உலகின் முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் என அழைக்கப்படுகின்றது.”

கணினியைப் பற்றி முழுமையாக அறிய ஸ்பீசி

  புதிதாக வாங்கிய கணினியில் நாம் வாங்கும் போது குறிப்பிட்ட வன்பொருட்களின் அளவுகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? அல்லது நமது கணினியில் புதிய  மென்பொருள் ஒன்றை நிறுவமுயலும் போது அந்த மென்பொருளை நிறுவத் தேவையான திறன் நம்முடைய கணினியில் இருக்கிறதா? என்பதைக் கணினித் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் மட்டும் இன்றி> கணினி பயன்படுத்துபவர்கள் அனைவரும் மிக எளிமையாக அறிந்துகொள்ள ஸ்பீசி (Speccy) எனும் இலவச மென்பொருள் ஒன்று உதவுகிறது. 

     இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் 4.9 எம்பி அளவு கொண்ட இந்த மென்பொருளைத் தரவிறக்கம் (Download) செய்து நம் கணினியில் நிறுவிக்; (Install)  கொண்டால் நம் கணினியில் இருக்கும் அனைத்து வன்பொருட்களை (Hardware)  குறித்த முழுமையான தகவல்களையும் எளிதாகத் தெரிந்துகொள்ளமுடியும்.” 7

      இந்த மென்பொருளை நிறுவிய பின்பு> இந்த மென்பொருளுக்கான குறுக்குவிசைக் குறியீட்டில் இருமுறை சொடுக்கினால்> தோன்றும் பெட்டியில் இடதுபுறம் சுருக்கம்  (Summary)>  இயங்குதளம் (Operating system) மையச் செயலகம் (CPU), நேரடி அணுகு நினைவகம் (RAM),  தாய் பலகை (Mother board) வரைகலை (Graphicsl),  சேமிப்பகம் (Storage),  ஒளியியல் இயக்கிகள் ;(Optical Drivers), ஒலி (Audio),  கணினியின் புறப்பாகங்;கள்;(Peripherads), வலைபின்னல் (Network) போன்ற குறிப்புச் சொற்கள் கிடைக்கின்றன.

     வலதுபுறம் நம் கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் வன்பொருட்கள் குறித்த சுருக்கமான தகவல்கள் பார்வைக்குக் கிடைக்கின்றன.” 8              

மானிட்டரில் காண்பதை வீடியோவாக மாற்ற :

    மானிட்டரில் காண்பதை வீடியோவாக மாற்றும் முறை பற்றிக் கூறும் போது> நம்முடைய கணினித்திரையில் படம்> காணொளி காட்சி ஆகிய எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதனை படக்காட்சியாக படப்பிடிப்பு செய்த பின்னர் அதனை நம்முடைய குடும்ப உறுப்பினர்களிடமும்> நண்பர்களிடமும்> உடன்பணிபுரிவோரிடமும் பகிர்ந்து கொள்ள இந்த Jing எனும் பயன்பாட்டு கருவியானது பேருதவியாக உள்ளது. நாம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்ற செயல்முறைகள்; Jing Tutorinals  என்ற பொத்தனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் திரையில் தோன்றிடும் விவரங்களை பார்த்து அறிந்துகொள்ளலாம்” என்று விவரிக்கப்படுகின்றது.”

கணினிப்பொறி வழித்தரவு செயலாக்கத்தின் நன்மைகள்:

1.          தகவல் கூறுகளைச் சேகரித்து கணிப்பொறியில் ஒருமுறை கொடுத்து முடித்துவிட்டால் பிறகு தரவுகளைத் திருத்துதல்> மாற்றுதல்> நீக்குதல் போன்ற பல செயற்பாடுகளை மிகுந்த அலுப்பு இன்றி செய்து முடிக்கலாம். இதனால் நம் உழைப்பும் நேரமும் வீணாவது இல்லை.

2.          கணிப்பொறி  வழியாகத் தரவுகளை செயல்படுத்தம் போது தவறுகள் ஏற்;படும் வாய்ப்புகள் மிகக்குறைவு.

3.          கணிப்பொறியில் ஏராளமான தரவுகளையும்> தகவல்களையும் மிகச் சிறிய தேக்குப்பகுதியில் தேக்கு வைக்கமுடியும். எனவே ஏராளமான தாட்கள்> கோப்புகள்>பதிவேடுகள் இவற்றை பெருங்குவியலாகச் சேர்த்து வைக்க தேவையில்லை. 

4.          கணிப்பொறித் தரவுத்தளங்களில்> தகவல்களைத் தேடுதல்> வகைப்படுத்தல்> கோப்புகளைச் சேர்த்தல் போன்ற பல தரவுச் செயல்பாடுகளை மிகவும் திறம்படச் செய்ய முடிகின்றது”10  என்று விவரிக்கப்படுகின்றன. 

கணிப்பொறி வகைகள்: 

    சொந்தக் கணிப்பொறியான மேசைக்கணிப்பொறி (Desktop)> மடிக்கணிப்பொறி (Laptop),    கையேட்டுக் கணிப்பொறி (Note book)>  உள்ளங்கை கணிப்பொறி (Palmtop)>  எனப் பல்வேறு வடிவங்களிலும் வளர்ச்சி பெற்றுள்ளது.  இன்றைக்கு கைப்பேசியே (Cellphone) கணிப்பொறியாகவும் செயல்படுகிறது. செல்லுமிடங்களுக்கெல்லாம்; கணிப்பொறியைச் சட்டைப்பையில் வைத்து எடுத்துச்செல்ல முடிகிறது.

முடிவுரை:

    கணிப்பொறிக் கல்வி இன்று அனைத்துத்துறை வளர்ச்சிகளுக்கும் அடிப்படையானதாக உள்ளது என்பதை அறியலாம். கணினி வழி தமிழ்க்கற்றல் தகவல் தொடர்பு ஊடகங்களின் வளர்ச்சி காரணமாகத் தமிழ் கற்கும்> கற்பிக்கும் முயற்சிகள் இன்று பெருகியுள்ளதை அறியமுடிகின்றது. கணிப்பொறியின் மூலம் மாணவர்கள் எளிமையாக பாடங்களை கற்று வருகின்றனர் என்பதை உணரலாம்.  

துணை நூற்பட்டியல்:

  1. கலைச்செல்வி. வெ   –     கல்வியியல் சிறப்புத்தமிழ்

                                இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை

                                அரசு கல்வியியல் கல்லூரி

                                குமாரபாளையம் – 638 183

                            சஞ்ஜிவ் வெளியீடு.

  • சொக்கன். என்        –      கம்யூட்டர்  கையேடு

                                  Kizhakku pathippagam

                                                             177 133, First Floor,

                                                             Amal’s Building Lioyds Road,

                                                             Rayapattan, channai- 600 014.

  • இதழ்கள்            –      தமிழ் கம்யூட்டர்

                                                                 ஜனவரி 16-31> 2014 ஆண்டு : 20

                                 இதழ் : 06

  • இதழ்கள்            –     தமிழ் கம்யூட்டர்

                             பிப்ரவரி 16-28>  2014 ஆண்டு : 20

                                இதழ் : 08

  • இதழ்கள்            –     தமிழ் கம்யூட்டர்         

                                                                மார்ச் 1-15>  2014>  ஆண்டு : 20

                                இதழ்: 08

error: Content is protected !!