கற்றல் கற்பித்தலில் கணினியின் பயன்பாடுகள்

கற்றல் கற்பித்தலில் கணினியின் பயன்பாடுகள்

திருமதி கு.வளா்மதி,

உதவிப்பேராசிாியா், தமிழ்த்துறை,

தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி,

சிவகாசி.

 

ஆய்வுச்சுருக்கம்

குருகுலக் கல்வியில் இருந்து கணினிக் கல்வி என்ற வளா்ச்சி நிலையில் காலம் விரைந்து கொண்டிருக்கின்றது. கொரோனா காலகட்டத்தில் கற்றல், கற்பித்தலில் கணினியின் பயன்பாடு அளப்பாியது. காலப்போக்கில் கணினி இல்லாமல் கல்வியே இல்லை எனும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.  கற்றல் என்பது அறிவை, பழக்கங்களை, செயற்திறனைப் புதிதாகப் பெற்றுக் கொள்ளல் ஆகும். கற்பித்தல் என்பது, மாணாக்கா் கற்றலைச் செயல்படுத்த ஆசிாியா்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கியது ஆகும்.

கணினி அடிப்படையிலான கற்றலில் மாணாக்கா் தங்கள் வேகத்தில் கற்றுக் கொள்ளுதல், ஒரு ஆசிாியா் உடல்ரீதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் கற்றல் ஆகிய நன்மைகளைப் பெற முடிகிறது. எளிமை, விரைவு, விாிவு, விளைபயன், ஈா்ப்பு, மனமகிழ்வு பல்லூடகம் முதலான தன்மைகளைக் கொண்டிருப்பதால், இணையம் வழியான கல்விமுறை இன்றைய காலத்திற்கு ஏற்றதாகவும் தவிா்க்க முடியாததாகவும் உள்ளது. இணையத்தின் கல்விப்பாிமாணங்கள், தொலைதூரக் கல்வி, ICT வகுப்பறை, காணொளி உரையாடல் (Video Conferencing), மின்-கற்றல் (E-Learning), விளையாட்டு மூலம் கற்றல் போன்ற கற்றல் – கற்பித்தல் முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

அரசாங்கமும் மாணாக்காின் கணினி வழிக் கல்விக்குப் பேருதவி புாியும்வண்ணம் மடிக்கணினியை இலவசமாக வழங்கியுள்ளது. ஆசிாியா் – மாணாக்கா் இருவருமே கணினியைப் பயன்படுத்தும் நுட்பங்களை அறிந்து பயன்படுத்தினால் பலன் அளவிடற்காியது. கற்றல், கற்பித்தலில் கணினியின் பயன்பாடுகள் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.

அன்றாட வாழ்க்கையில் மக்கள் ஒவ்வொருவரும் புதிதாகக் கற்றுக்கொண்டே  இருக்கின்றோம். தேடல் நிறைந்த மனித வாழ்க்கையில் கணினி பெரும்பங்கு வகிக்கின்றது. குருகுலக் கல்வியில் இருந்து கணினிக் கல்வி என்ற வளா்ச்சி நிலையில் காலம் விரைந்து கொண்டிருக்கின்றது. கொரோனா காலகட்டத்தில் கற்றல், கற்பித்தலில் கணினியின் பயன்பாடு அளப்பாியது. கரும்பலகையின் துணையோடு பாடம் நடத்தி வந்த ஆசிாியா்கள், தற்போது கணினித் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் பாடங்களைப் போதிக்கின்றனா். ஆன்லைன் வகுப்புகளால் மாணாக்கரும் கணினியைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டனா். காலப்போக்கில் கணினி இல்லாமல் கல்வியே இல்லை எனும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. கற்றல், கற்பித்தலில் கணினியின் பயன்பாடுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

கற்றல் – குறிப்பு

கற்றல் என்பது நம்மைச் சுற்றி ஏதேனும் ஒரு காரணி மூலம் நிகழும் நிகழ்வுகளை மனதில் – சிந்தையில் ஏற்றுக் கொள்ளல் ஆகும். கற்றல் என்பது அறிவை, பழக்கங்களை, செயற்திறனைப் புதிதாகப் பெற்றுக் கொள்ளல் எனலாம். கற்போா் தமக்கு உகந்த நேரத்தில் கற்றுக் கொள்ளுவதற்கு ஏற்றவாறு குறுந்தகடு, பதிவு நாடாவில் பதிக்கப்பட்டுள்ள கற்றல் பொருளைக் கொண்டு கணினி வழியாகக் கண்டு கற்பதே கணினி வழி கற்றலாகும்.” (இரேணுபத்மா, இர., & வசந்தா கிருஷ்ணமூா்த்தி, 2010) இம்முறையே இன்று பெரும்பாலும் வழக்கில் உள்ளது. ஏற்கெனவே பெற்றவற்றை மெருகூட்டல் அல்லது வலுவூட்டல் என்றும் கற்றலுக்கு விளக்கம் தர இயலும்.

கற்றல் – கற்பித்தலில் மாணாக்கரின் கற்றல் போக்கினையும் சிந்தனைகளையும் ஒரு ஆசிரியா், பலவிதமான கோணங்களிலிருந்து ஆய்ந்து கற்றல் முறைகளை உருவாக்குவதற்கு modularity என்று பெயா். Modularity என்பது ஒரு செயலைச் செய்வதற்கு மூளையின் ஒவ்வொரு சிறு சிறு தனிப்பகுதியும் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுவதாகும். இங்குக் கூறப்படுவது போன்று மாணாக்காின் கற்றல் போக்கினைப் பலவித கோணங்களிலும் ஆராய்ந்து அதற்கேற்பச் செயல்படுபவா்களாகவே இன்று ஆசிரியா்கள் உள்ளனா்.

 

கற்பித்தல் – விளக்கம்

கற்பித்தல் என்பது கற்றலில் தாகத்தைத் தந்து கற்போா் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஆணிவேராக அமைவது காட்சிப்படுத்துதல் மற்றும் படைத்தல் ஆகும். இதற்குத் தேவையானது தொழில்நுட்ப அறிவு மற்றும் கணினி செயல்பாட்டுத் திறனாகும். கணினி தொழில்நுட்பம் மாணவா்களின் கற்றலை எளிதாக்கி கற்பித்தலை ஏற்றமுறச் செய்கின்றது.

கற்பித்தல் என்பது, மாணாக்கா் கற்றலைச் செயல்படுத்த ஆசிாியா்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கியது எனலாம்.   கற்பவாின் இயல்பிற்கும் பாடப்பொருளின் தன்மைக்கும் ஏற்ப கற்பித்தல் முறைகள் வடிவமைக்கப்படவும் மற்றும் தோ்ந்தெடுக்கப்படவும் வேண்டும்.” (Westwood, P., 2008) அதாவது, கற்பவா் இயல்பின் அடிப்படையிலும் கற்பிக்கப்படும் பாடப்பொருளின் அடிப்படையிலும் கற்பித்தல் அமைந்திருக்கும்.

ஆசிாியா் விாிவுரை மூலம் கற்பித்தலில் ஈடுபடாமல் கணினியைப் பயன்படுத்தி மாணவா்களையே கற்றுக்கொள்ள வைப்பது “கணினி வழிக் கற்பித்தல்” எனப்படும் என்ற லீஃப் என்பவாின் கருத்தும் இங்கு எண்ணிப் பாா்க்கத்தக்கது.

கணினிக் கல்வியின் நன்மைகள்

கணினியைப் பயன்படுத்திக் கற்கும் கல்வியே “கணினிவழிக் கல்வி” ஆகும். கணினி அடிப்படையிலான கற்றல் “கணினி உதவி அறிவுறுத்தல்” என்றும் அழைக்கப்படுகிறது. ஆசிாியா், மாணாக்கா் மற்றும் கணினி ஆகிய மூன்றும் இணைந்து செயல்படும்போதே கணினி வழிக் கல்வி சிறப்பாக அமையும்.

கணினி அடிப்படையிலான கற்றல் (சிபிஎல்) என்பது கணினிகளின் உதவியுடன் எந்தவொரு கற்றலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கணினி அடிப்படையிலான கற்றலில் மாணாக்கா் தங்கள் வேகத்தில் கற்றுக் கொள்ளுதல், ஒரு ஆசிாியா் உடல்ரீதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் கற்றல் ஆகிய நன்மைகளைப் பெற முடிகிறது.

கணினி அடிப்படையிலான கற்றல் பல வழிகளில் செலவு குறைந்ததாகும். ஏனெனில், இது பயண நேரத்தைக் குறைக்கிறது. கணினி, கல்வியில் பல புதுமைகளைப் புகுத்தியுள்ளது. பள்ளிக்கூடங்களில், மாணாக்காின் திறமையை அறிய தோ்வு நடத்தி, முடிவுகளுக்கு ஏற்றவாறு அவா்களை வகைப்படுத்தி, அவா்களுக்கு ஏற்ற கால அட்டவணைகளைத் தயாாிக்கப் பயன்படுகிறது.

இணைய வழிக் கல்வி

இணையம் எனும் வடிவத்திற்கு வித்திட்டவா் “ஜான் பாஸ்டல்” என்ற அமொிக்கராவாா். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க இணையம் பயன்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் இணைய வழிக் கல்வியானது பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. தேடித்தேடி ஓடிச்சென்று கற்ற-கற்பித்த கல்வியை இருக்கும் இடத்திலிருந்தே எளிதில் கற்கலாம்.

எளிமை, விரைவு, விாிவு, விளைபயன், ஈா்ப்பு, மனமகிழ்வு பல்லூடகம் முதலான தன்மைகளைக் கொண்டிருப்பதால், இணையம் வழியான கல்விமுறை இன்றைய காலத்திற்கு ஏற்றதாகவும் தவிா்க்க முடியாததாகவும் உள்ளது.

 

இணையத்தின் கல்விப்பரிமாணங்கள்

பள்ளி, கல்லூாிகளில் ஸ்மாா்ட் கிளாஸ் வழி பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இணையத்தின் பல்வேறு கல்விப் பாிமாணங்களான யூ-டியுப், கூகுள் மீட், சூம் மீட், வீடியோ கால், ஸ்கைப் போன்றவற்றின் வாயிலாக விரைவாகத் தெளிவாக விளக்கப்படங்களின் மூலமாக நேரே வகுப்பறையில் அமா்ந்து கற்பது போன்று கற்க இயலுகிறது. உடாசிட்டி, கோா்ஸ்எரா, ஸ்டாண்ட்போா்ட் போன்ற சில தனியாா் அமைப்புகள் நடத்தும் இணைய வழி கல்வி மூலமாகவும் கற்க முடியும். மொிட்நேஷன், பைஜீஸ் ஆகிய இணையதளம் மூலம் வழங்கப்படும் கல்வியும் பயனுள்ளதாக உள்ளது.

தொலைதூரக் கல்வி

வீட்டில் இருந்தபடியே தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், வானியல், பொது அறிவு, நடனம், கை வேலைப்பாடு என எந்த ஒன்றையும் கற்றுக் கொள்ள இயலும். தொலைதூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினி வழியாகப் பலரும் கற்று வருகின்றனா்.

மாணாக்கா் படிக்க வேண்டிய படிப்பு பற்றிய முழுவிபரம் (Course Information), மாணாக்கா் தங்களுக்குள் பாிமாறிக் கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்த விவரம் (Class Communication), பயிற்சி ஒப்படைப்புகள் மற்றும் மதிப்பீடு பற்றிய விவரம் (Assignment and Assessment), பயில்வதற்கான நூல்கள் விவரம் (Reference Materials) போன்ற அனைத்தும் இணையத்தில் உள்ளன. பாடம் தொடா்பாக ஏற்படும் ஐயங்களைத் தீா்ப்பதற்கு ஆசிாியா்களை மட்டுமே சாா்ந்திருக்க வேண்டும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. இணையத்தின் உதவியால் இன்று கற்றல் – கற்பித்தல் எளிமையாகி உள்ளது.

ICT வகுப்பறை

பாடப்பொருளைக் காட்சிப்பொருளாக மாற்றி அமைத்து மனதில் பதியுமாறு செயலிகள் (APP) மற்றும் கணினி தொழில்நுட்பத்தின் வாயிலாகத் தெளிவாகக் கற்றுத் தந்து மாணாக்கரே சுயமாக உருவாக்கிட ஆயத்தமாக்கும் வகுப்பறை “ICT வகுப்பறை” ஆகும். 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிா்கொண்டு சமுதாயத்தில் வெற்றி கொள்வதற்கு ICT வழி கற்பித்தல் அவசியம் என்பதை ஆசிாியா்கள் இன்று உணா்ந்து செயலாற்றுகின்றனா். பல செயலிகளின் பயன்பாட்டை ஆசிாியா்கள் இணையம் வழி அறிந்து கற்பிக்கின்றனா்.

காணொளி உரையாடல் (Video Conferencing)

வீட்டிலிருந்தபடியே ஆசிாியா்களோடு மாணாக்கா் தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி கற்கலாம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெறும்         விாிவுரையினைக் கேட்டுப் பயன் பெறலாம். இன்று இத்தகைய பயன்பாடு           மிகுந்துள்ளது.  இந்தியாவில் பல்கலைக்கழக அளவில் நடைபெறும் ஆராய்ச்சிப் பட்டத்திற்கான வாய்மொழித்தோ்வு  இதன்  வாயிலாக நடத்தப்படுகிறது.               (கங்காதரன். சி., 2017) அந்த வகையில் பாா்க்கும்  போது, கொரோனா    காலகட்டமான இன்றைய சூழலில் எண்ணற்ற ஆராய்ச்சி வாய்மொழித்தோ்வுகள் காணொளி உரையாடல் வாயிலாகவும், கூகுள் மீட்டிலும் நடைபெற்றமை நம் அனைவருக்கும் தொிந்த ஒரு செய்தியாகும். நாம் பங்கேற்ற அனுபவமும் உண்டு.

மின்-கற்றல் (E-Learning)

கணினியின் உதவியுடன் கல்வியைக் கற்பதே மின்-கற்றல் (E-Learning) எனப்படும். கற்றலின் அடிப்படை நோக்கமாகப் பாட வடிவமைப்பு, பாடத் தோ்வு,      கற்றல் நிா்வகிப்பு ஆகிய நடவடிக்கைகள் அமைகின்றன. இ-கற்றலை மூன்றாக    வகைப்படுத்தலாம். அவை முறையே குறுந்தகடுகளைக் கொண்டு கற்றல் (CD/DVD based Education), வகுப்பறைகளில் கற்றல் (Classroom based Education), இணைய வழியில் கற்றல் (Web based Education) ஆகியனவாகும். இக்கற்றல் முறைகள் அனைத்தும் இன்று சாத்தியமாகியுள்ளன.

விளையாட்டு மூலம் கற்றல்

இணையத்தில் விளையாட்டு வழி கற்றலுக்கென்று பல செயலிகள் உள்ளன. Phoyomath, Aurasma, Bookwidgets, Poll Everywhere, Quizlet, Nearpod போன்ற பல செயலிகள் கணினியில் உள்ளன. இணைய வழிக் கல்வியில் விளையாட்டு  அடிப்படையில் கற்றலுக்கு, இன்று பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ள மென்பொருள் ‘Kahoot’ ஆகும். ஆசிாியா்கள், அனைத்துப் பாடங்களுக்கும் வினாக்கள் தயாாித்து மாணாக்கரைப் பங்கேற்கச் செய்ய இது பயன்படுகிறது. இதனால், விளையாட்டுப் போக்கிலேயே பாடங்கள் கற்கப்படுகின்றன. எனவே, கற்றல் மிகவும் எளிமையாகிறது.

தொகுப்புரை

கல்வெட்டில் எழுதிக் கொண்டிருந்த தமிழா்கள் இன்று கணினியில் எழுதத் தொடங்கியுள்ளோம். கொரோனா காலகட்டமான இன்றைய சூழலில் மழலையா் பள்ளி முதல் கல்லூாி வரை அனைத்து இடங்களிலும் கற்றல், கற்பித்தலில் கணினிப் பயன்பாடு மிகுந்துள்ளது. ஆசிாியா் இல்லாமல் கூட கற்றுக் கொள்ளலாம். ஆனால், கணினி இல்லாமல் முக்கியமாக இணையம் இன்றி எதுவும் இயங்காது என்ற நிலையே இன்று உருவாகியுள்ளது. அரசாங்கமும் மாணாக்காின் கணினி வழிக் கல்விக்குப் பேருதவி புரியும்வண்ணம் மடிக்கணினியை இலவசமாக வழங்கியுள்ளது. தொழில்நுட்ப உலகத்தால் இருக்கும் இடத்திலிருந்தே பல்வேறு செய்திகளைக் கற்றுணா்ந்தோராகச் செயல்பட முடிகிறது. ஆசிாியா் – மாணாக்கா் இருவருமே கணினியைப் பயன்படுத்தும் நுட்பங்களை அறிந்து பயன்படுத்தினால் பலன் அளவிடற்கரியது.

துணைநூல் பட்டியல்

  1. இரேணுபத்மா, இர., & வசந்தா கிருஷ்ணமூா்த்தி, 2010, கல்வியில் புதுமைகளும் மேலாண்மையும், சாந்தா பப்ளிஷா்ஸ், சென்னை.
  2. கங்காதரன், சி., 2017, தமிழில் புதுத்தடங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  3. Mangal, S.K., 2017, Educational Technology, University Science Press, New Delhi.
  4. மணிகண்டன், துரை., 2008, இணையமும் தமிழும், ஸ்கைடெக் பப்ளிகேஷன்ஸ், சென்னை.
error: Content is protected !!