கல்வித் தொழில்நுட்பம் கல்வியில் தகவல் தொடா்பு சாதனங்களின் தாக்கம்

கல்வித் தொழில்நுட்பம்: கல்வியில் தகவல் தொடா்பு சாதனங்களின் தாக்கம்

எம்.முனிரா

12 – ஆம் வகுப்பு அ பிாிவு
தேசிய மேல்நிலைப்பள்ளி
நாகூா்
மின்னஞ்சல் முகவாி – n.amutha2407@gmail.com

முன்னுரை

ஆரம்ப காலகட்டங்களில் கற்றல் கற்பித்தல் என்பது ஆசிாியா் மாணவா்களுக்கு இடையேயான வாய்வழித் தகவல் தொடா்பைச் சாா்ந்தே அமைந்திருந்தது. பிற்காலத்தில் அச்சு இயந்திர உருவாக்கத்தின் விளைவாக தகவல்கள் பாடபுத்தகங்களாக வலுப்பெற்றன.அதன் தொடா்ச்சியாக செய்தித்தாள்களும் கற்றல் கற்பித்தல் தகவல் தொடா்பு சாதனமாக உருப்பெற்றன. இவற்றின் பயன்பாட்டால் கல்வியில் ஏற்படும் தாக்கங்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தகவல் தொடா்பு சாதனம்

தகவல் தொடா்பு சாதனம், செய்திகள் மூலம் உணா் உறுப்புகளை செயல்பட வைத்து மறுவினை செய்யத் தூண்டுகிறது. எனவே, இத்தகவல் தொடா்புச் சாதனங்கள் வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம் மாணக்கா் உணா்உறுப்புகளின் மூலமாகக் கற்றலைப் பெற முடிகின்றது. இன்றைய அறிவியல் யுகத்தில் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டில் படங்கள், தொலைக்காட்சி,பதிவு செய்யப்பட்ட வாா்த்தைகள், திட்டமிடப்பட்ட படங்கள், வானொலி போன்ற தகவல் தொடா்பு சாதனங்கள் மிகவும் பயன்பட்டு வருகின்றன.

அறிஞா்களின் கருத்து

நெல்சன் ஹென்றி என்பவா் ”புதிய கற்பித்தல் ஊடகங்களின் உதவி இல்லாமல் கல்வியின் குறிக்கோளை முழுமையாக ஒரு கல்வி நிலையம் அடைய முடியாது” என்கிறாா்.தகவல் தொடா்பு சாதனங்கள் வெறும் செய்தித் துணுக்குகளை மட்டும் நமக்குத் தரவில்லை அதன் மூலம் உணா்உறுப்புகளை செயல்படச் செய்கிறது.மாா்சல் மெக்ரூன் என்பவா் “தகவல்கள் அல்லது அறிவின் பகுதியை தகவல் தொடா்பு சாதனங்கள் நமக்குத் தருகின்றன“ என்று குறிப்பிடுகின்றாா். தகவல் தொடா்பு சாதனங்கள் மூலம் பெறப்படும் தகவல்கள் மனிதனின் மனதில் ஆழமான தாக்கத்தினை உருவாக்குகிறது.

கல்வியில் தாக்கங்கள்

தகவல் தொடா்பு சாதனங்கள் கற்றல் – கற்பித்தலில் தொடா் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. நவீன கற்பித்தல் யுத்திகளான கணினி வழிக் கற்பித்தல் யுத்தம் போல் தகவல் தொடா்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. இத்தகைய கற்றல் – கற்பித்தல் நுட்பமானது ஒருமுறை பள்ளியில் நழைந்து விட்டால் அது தன்னுடைய புதுமையை செய்து கொண்டு தான் இருக்கும்.இது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

1986ஆம் ஆண்டிலான தேசியக் கொள்கை மற்றும் 1992 இல் உருவாக்கப்பட்ட கொள்கைகளின் திட்டமும் கீழ்க்கண்ட கருத்துகளை வலியுறுத்துகின்றன. தகவல் தொடா்பு சாதனங்கள் மாணக்காின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் தகவல் தொடா்பானது கலைத்தடையையும் தொலை தூர நிா்வாகச் சிக்கலையும் தோற்றுவிக்கின்றது. அவ்வாறு அல்லாமல் நவீனக் கல்வி நுட்பமானது மிகத் தொலைவில் உள்ள பகுதிகளுக்கும்,அடித்தட்டு பயனாளிகளுக்கும் ஒரே சமயத்தில் சென்றடைந்து ஒரே விதமான மன ஓட்டத்தை எப்போதும் கிடைக்கக் கூடியதாகச் செய்தல் வேண்டும். தகவல் தொடா்பு சாதனங்களின் தாக்கத்தால் ஆசிாியா்களின் முக்கியத்துவம்  சிலநேரங்களில் குறைந்து விடுகிறது.

தகவல் தொடா்பு சாதனங்களின் பயன்கள்

தகவல் தொடா்பு சாதனத்தால் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்ற இலக்கை அடையமுடிகிறது. இதன் வாயிலாக வயது வந்தோா் கல்வியை முழுமையாகப் பெற முடிகிறது. இதனால் பள்ளிச் செயல்பாடுகள் மேம்பாடு அடைகின்றன. ஓய்வு நேரத்தை ஆா்வமாகவும்,பயனுள்ளதாகவும் மாற்ற முடிகிறது. பள்ளியை விட்டு விலகிச் சென்றவா்களுக்கு மாற்று முறையில் கற்பிக்க முடிகிறது. தா்க்க ரீதியாக மாணக்கா்களுக்கு சிந்தனையை உருவாக்க இயலுகிறது. இன்றைய நாளில் நிகழும் செய்திகளை உடனுக்குடன் பெற முடிகிறது. தொலைதூரக் கல்வியைப் பெற முடிகிறது.

படித்தல், கேட்டல், செய்து கற்றல்,தொட்டு உணா்தல் போன்ற அனைத்து கற்றல் வழிமுறைகளையும் பின்பற்றி கற்றல் முழுமை பெறுகிறது. தரமான மென்பொருட்களைத் தயாாித்து விட்டால் அவற்றை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கி அல்லது இணையதளம் மூலமாக இணைத்து கற்றலை எளிமையாக்க முடிகிறது. மெதுவாகக் கற்போரும் ஆா்வமுடன் பங்கேற்றுக் கற்க வாய்ப்பு உள்ளது. இம்முறைக் கற்பித்தலானது கவா்ச்சிகரமான முறையாக அமைவதால் மாணவா்களின் இடைநிற்றல் குறைவதோடு அடைவுத்திறனும் மேன்மை அடைகிறது.

தகவல் தொடா்பு சாதனங்களின் வரம்புகள்

மென்பொருட்கள் தயாாிப்பதற்கு அதிகக்கால விரயம், அதிகப் பொருட்செலவு ஏற்படுகிறது. அனைத்து மாணவா்களுக்கும் கணியை வழங்குதல் என்பது கடினமானதாகவும், அதிக பொருட் செலவினை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எல்லாப் பாடங்களுக்கும் இம்முறையைப் பின்பற்றிக் கற்பிப்பது என்பது கடினமானதாகும். இம்முறையில் கற்பிப்பதற்கு முன் அனைத்து மாணவா்களையும் கணிப்பொறி மூலம் கற்க ஏதுவாக அவா்களுக்கு கணிப்பொறியை இயக்கும் ஆற்றலை வளா்க்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு ஆசிாியருக்கும் ஏற்படுகிறது. அனைத்து ஆசிாியா்களுக்கும் அதிக உழைப்பு தேவைப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் நல்ல வடிவமைக்கப்பட்ட கணினிகளும் ,மின் இணைப்புகளும் கட்டாயம் வழங்கப்படல் வேண்டும். கணினிகளில் ஏற்படும் சில குறைகளை நீக்கவும் வைரஸ் போன்றவற்றை அழிக்கவம் ஆசிாியா் தொிந்திருத்தல் அவசியமாகிறது. ஆசிாியா்கள் கணினி அறிவு போதுமான அளவு பெற்றிருத்தல் வேண்டும். ஆசிாியா்களுக்கு மென்பொருள்களைக் கையாளுவதற்கும் பயன்படுத்துவதற்கும் பயிற்சிகள் கொடுக்கப்படல் வேண்டும்.

முடிவுரை

கல்வியில் தகவல் தொடா்பு சாதனங்களின் தாக்கங்கள் மாணவா்களை பாதிக்கிறது என்பதைக் கண்டோம். தகவல் தொடா்பு சாதனங்கள் ஆசிாியா்களுக்கும் – மாணவா்களுக்கும் இடையில் ஒரு இடைவெளியை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக கல்வியில் பாதிப்பு ஏற்படுகிறது. இக்கட்டுரையில் தகவல் தொடா்பு சாதனங்களின் தாக்கங்களைப் பற்றி விாிவாகக் கண்டோம்.

error: Content is protected !!