கல்வியியல் மாநாடு II 2021 – பொருண்மை
கல்வியில் இணையத்தின் ஆளுமை

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” - திருக்குறள் (392)
இன்றைய நவீனச் சூழலில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் தொழில்நுட்பத்திற்குப் பழக்கப்படுத்துவதோடு புதுமையான அறிவியல் பூர்வமான கற்றலுக்கும் கணினி தயார் செய்கிறது. கற்பித்தலுக்கான கலைத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், கல்வியியலில் ஆய்வு செய்வதற்கும், கல்விசார் கணக்கெடுப்பைச் செய்வதற்கும், கணினிவழிக் கற்றல் – கற்பித்தல் பயன்பட்டு வருவதை வெளிப்படுத்தும் விதமாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், மொழியியல் துறை, தஞ்சாவூர், தி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (த), தமிழ்த்துறை, சிவகாசி, பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, திண்டுக்கல், ஜி.டி.என். கலைக்கல்லூரி (த), கணித்தமிழ்ப் பேரவை, (தமிழ்த்துறை & கணினிப் பயன்பாட்டுத்துறை), திண்டுக்கல்,
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை & கணினிப் பயன்பாட்டியல் துறை, கோயம்புத்தூர், சைவபானு சத்திரிய கல்லூரி, தமிழ்த்துறை, அருப்புக்கோட்டை, ஓயிஸ்கா, தமிழ்நாடு கிளை (இந்தியா), தமிழ் அநிதம் (அமெரிக்கா), தமிழ்த் திறவூற்று மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா), பாரதி தமிழ்ச்சங்கம் (பஃகரைன்), முத்துக்கமலம் மின்னிதழ், வல்லமை மின்னிதழ், தமிழ் அநிதம் அறக்கட்டளை (இந்தியா), நாகூர் தமிழ்ச்சங்கம் ஆகியோர் இணைந்து எதிர்வரும் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் “கல்வியியலில் இணையத்தின் ஆளுமை” என்ற மாநாட்டுப் பொருண்மையில் பதிவுக்கட்டணம் இன்றி, இணையவழியாகப் பன்னாட்டு மாநாட்டினை நடத்த உள்ளன. உலக நாடுகளிலிருந்து பல்வேறு துறைப் பேராசிரியர்கள், கணினியியலாளர்கள், மொழியியலாளர்கள், கல்வியியலாளர்கள், தமிழ்க் கணினி ஆர்வலர்கள் அனைவரும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாநாட்டுக்குழு அன்புடன் அழைக்கின்றது. மாநாட்டு இதழ் Kalvīyīyal Mānāṭṭu Ayvukkōvai (Print) ISSN 2767-0597 அச்சு இதழாகவும், Kalvīyīyal Mānāṭṭu Ayvukkōvai (Online) ISSN 2767-0600) இணைய இதழாகவும் வெளியிடப்படும். தமிழ் மொழிக்கான கல்வித் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் விதமாக கட்டுரைகள் இருத்தல் நலம்.
ஆய்வுச்சுருக்கத்தின் மாதிரி
கல்வியியல் மாநாட்டின் ஆய்வுச் சுருக்கத்தின் மாதிரி இங்கே pdf ஆவணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வுச்சுருக்கத்தின் வார்ப்புரு
ஆய்வுச்சுருக்கத்திற்கான வார்ப்புரு சொற்செயலி ஆவணம் இங்கே கொடுக்கப்படுள்ளது.
Send Abstractகல்வியியல் மாநாட்டுக்குழு 2021