கல்வியில் கூட்டுத் தொழில்நுட்பங்கள்

கல்வியில் கூட்டுத் தொழில்நுட்பங்கள்

நெறியாளர் . முனைவர் இரா. ராஜசீலி

இரா. மஞ்சுளாதேவி

முனைவர் பட்ட ஆய்வாளர்

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

கொடைக்கானல்

 

ஆய்வுச்சுருக்கம்

தொழில்நுட்பம் வளர வளர கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் மிகவும் எளிமையாகின்றது. கல்லூரியில் கற்பித்தல் நிகழ்வுகளில் தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்கள் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. இத்தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்கள் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பங்களின் வாயிலாக கல்வி என்பது இன்றைய சூழலுக்கு ஏற்றார்ப்போல் ஆர்வமுடையதாகவும்ää இனிமைää எளிமை உடையதாகவும் கற்றலை நன்றாகää தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் அமைகிறது.

தொழில்நுட்பம்

21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் என்பது நம்மிடையே தவிர்க்க முடியாத ஒன்றாக வளம் வருகின்றது. இவற்றில் இணையம் ஒரு ஜாம்பாவானாக துணைபுரிகின்றன. இவற்றின் வாயிலாக கல்வியின் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பம் உதவுகின்றது. இவற்றினால் ஒலி வடிவிலும்ää காணொளி வடிவிலும் படங்களாகவும்ää டிஜிட்டல் முறையில் பாடம் சார்ந்த வீடியோக்களில் பயன்படுகிறது.

தகவல் தொழில்நுட்பங்கள்

பலதரப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தகவல்களை மின்னணு தொடர்பு மூலம் மற்றும் இணையம் மூலம் பிறருக்கு அனுப்புதல்ää சேமித்தல்ää புதியதாக உருவாக்குதல்ää வெளிப்படுத்தல் இயே தொடர்புநுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பத்தின் வாயிலாக வானொலிää தொலைக்காட்சிää படக்காட்சிää டிவிää தொலைபேசிää கைபேசிää செயற்கைக்கோள்ää கணினி மற்றும் அதனைச் சார்ந்த மென்பொருட்கள் மூலம் பயன்பாடு மற்றும் இ-மெயில் போன்ற சேவைகளும் இவற்றின் வாயிலாக நவீன தொழில்நுட்பத்தின் கூட்டு பயன்பாட்டின்மூலம் கல்விக்கு பேருதவியாக அமைகின்றது. மேலும்ää கல்வியில் தொழில்நுட்பம் சார்ந்து எவ்வாறெல்லாம் பயனுடையதாக அமைகின்றது என்பது பற்றியே இவ்வாய்வில் முழுமையாக அறியப்பெறலாம்.

முன்னுரை

தொழில்நுட்பம் வளர வளர கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் மிகவும் எளிமையாகின்றன. கல்வியில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளில் தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்கள் மிகவும் உருதுணையாக இருக்கின்றது. இந்த தொழல்நுட்பங்களின் வாயிலாக கல்வி என்பது இன்றைய சூழலுக்கு ஏற்றாற்போல் ஆர்வமுடையதாகவும், இனிமை, எளிமை உடையதாகவும் செம்மையாக, தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் கல்வி அமைகின்றது. இத்தகைய தொழில்நுட்பங்கள் (சாதனங்கள்), அறிவியல் பெரிதும் இடம்பிடிக்கின்றது. அத்தகைய தொழில்நுட்பங்கள் குறித்து இக்கட்டுரைகள் காண்போம்.

கல்வி

கல்வி என்பது கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும். கற்றல் என்ற சொல் பள்ளியில் பாடம் கற்பதை மட்டம் குறிப்பிடாமல் பரந்த பொருளில் மனிதன் அவன் வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்து செயல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு பயின்று அல்லது அறிவைப் பெறுவதைக் குறிக்கும். இது திறன்கள், தொழில்கள் என்பவற்றோடு, அறிவு, நல்லொழுக்கம், மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச் செய்யும் அமைப்பு ஆகும்.1

கற்றல் என்பது அனைத்து உயிரினங்களிடம் காணப்படும் தனித்திறன், வாழ்க்கையில் ஏற்படும் தூண்டலுக்குத் தகுந்த துலங்கலை உண்டாக்குவதற்குத் தரப்படும் பயிற்சியே கற்றல் எனவும்1, பயிற்றுவிப்பதே கற்பித்தல் எனவும் அழைக்கப்படுகின்றது.

தொழில்நுட்பம்

20ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் என்பது நம்மிடையே தவிர்க்க முடியாத ஒன்றாக வளம் வருகின்றது.2 பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்யப் பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பே தொழில்நுட்பம். தொழில்நுட்பம் என்பது ஒரு சிக்கலைத் தீர்க்க வடிவகை;கப்பட்ட கருவிகள், முறைகள் மற்றும் நுட்பங்களின் தொகுப்பால் ஆன ஒரு தயாரிப்பு அல்லது தீர்வு. ஆக சமூகத்தில் மனிதனின் வாழ்க்கையை எளிதாக்கியும் எந்தவொரு தனிப்பட்ட அல்லது கூட்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய அனுமதித்து ஒரு குறிப்பிட்ட நேரத்தின் தேவைகளுக்கு ஏற்ப சரிசெயப்படுகிறது.

 

கல்வியில் தொழல்நுட்பம்

கல்வியில் பயன்படுத்தப்படுவது கற்றல் கற்பித்தல் தொகுப்புடையதாக செயல்படுகின்றது. கல்வி செயல்பாட்டில் மொழி ஆய்வகங்கள், நிகழ்வுகள், படங்கள் மற்றும் கருவிகள் மூலம் விளக்கப்பட்டால் கற்றல் கற்பித்தல் எளிதாகவும் விரைவாகவும் ஆர்வமுடையதாகவும், இனிமையானதாகவும் அமைகின்றன. உதாரணமாக, ப்ரொஜெக்டர்கள், கணினிகள், மொபைல் போன்களின் பயன்பாடுகள் இவற்றோடு மின்னணு சாதனங்கள் பயன்பாடுகள். இவற்றோடு மின்னணு சாதனங்கள் கல்வியில் கூட்டு தொழில்நுட்பமாக விளங்குகிறது.

 

கல்வி நுட்பவியல் சாதனங்கள்3

  1. நழுவ வீழ்த்தி தலைக்கு மேல் படவீழ்த்தி
  2. ஒலிநாடாப் பதிவான்
  3. வானொலிப்பெட்டி
  4. தொலைக்காட்சிப்பெட்டி
  5. ஒளிநாடாப் பதிவான்
  6. புகைப்படக்கருவி
  7. கணினி

போன்றவைகள் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும், தற்கால சூழலுக்கு ஏற்றவகையிலும் உள்ளன.

நழுவ வீழ்த்தி

நழுவ வீழ்த்தி எளிதில் கையாளக்கூடிய ஒரு மின் சாதனமாகும். இதன் மூலம் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள நழுவங்களிலிருந்து படம் அல்லது படத்துடன் கூடிய செய்திகளைத் திரையில் வீழ்த்தி உருப்பெருக்கம் செய்யப்பட்ட பிம்பங்களைக் காணலாம்.

தலைக்கு மேல் பட வீழ்த்தி

தலைக்கு மேல் பட வீழ்த்தியில் (ழுர்P) மின்விளக்கு, பிம்பத்தை சரிசெய்து குறிப்பிட்ட தொலைவில் படத்தைத் தெளிவுடன் வீழ்த்தப் பயன்படும் குவிலென்சு மற்றும் சாய்த்தல் உள்ள ஆடி. நரி ஊடுருவும் தாள் வைக்கும் மேடை ஆகியவை முக்கியமான பாகங்களாகும்.

வானொலிப்பெட்டி;

இதில் முக்கியமாக இணைப்பான், வானொலி நிலையத்தைத் தேர்ந்தெடுக்கும் சாதனம் ஒளிச் செறிவைக் கூட்ட அல்லது குறைக்கப் பயன்படும் வகை திருகு ஆகியவை உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைத் தேவைப்பட்ட ஒலி அளவில் கேட்க இயலும்.

தொலைக்காட்சிப்பெட்டி

தொலைக்காட்சிகள் ஒளியோடு, ஒளியும் சேர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. இன்று இவை ஒரு கல்வி இதற்கும் சாதனமாகியும், பொழுதுபோக்கு சாதனமாகவும் விளங்குகிறது.

ஒலிநாடாப்பதிவான்

ஒலியைப் பதிவு செய்வதற்கு ஒலிநாடா பயன்படுத்தப்படுகிறது.  ஒலிப்பதிவானில் மின்னோட்டத்தை அளித்து சாதனத்தை இயக்கும் நிறுத்தப் பொத்தான் ஒலிநாடாவைச் சுழலவிட்டு ஒலியை வெளிக்கொணரும் பொத்தான் ஆகியன இணைக்கப்பட்டிருக்கும். இதில் வெளிப்புற ஒலி வாங்கியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புகைப்படப்பெட்டி

காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றியமைக்கப் புகைப்படப் பெட்டி பயன்படுகிறது. இந்தப் படச்சுருளில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளைப் படங்களை அய்வகத்தில் மாற்றலாம். ஒலிபுகும் படத்தாள் தயாரிக்கவும், நழுவங்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.

கணினி

கணிப்பொறியின் மூலமே இன்று எதனையும் சாதிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வானில் ஏவப்பெற்றுள்ள விண்கலன்களுக்குக் கணிப்பொறி கணிப்பொறியின் வாயிலாக மருத்துவம், விஞ்ஞானம், கல்விசார் செயல்பாடுகள் மேலும் பல்துறைகளின் செயல்பாடுகளுக்கு பெரிதும் உறுதுணையாகின்றன.

இணையம்

இன்டர்நெட் எனப்பெறும் இணையம் பல்வேறு துறைகளின் பல்நோக்கு வளர்ச்சிக்குப் பயன்படுவதைப்போல் இலக்கியத்திற்குப் பயன்படுகிறது. இன்று தகவல் தொடர்பு என்பது பன்முக நோக்குக் கொண்டதாக உள்ளது. அவற்றுள் கல்வியும் (கற்றல், கற்பித்தல்) கல்வி சார்ந்த இலக்கியங்களும் வளையும் தட்டு, சி.டி. ரோம் போன்றவற்றில் பதிவு செய்யப்பெற்று எல்லோரும் பயன்படுத்த வசதி செய்யப்பெற்றுள்ளது.

கைபேசி

கைபேசிச் சாதனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல் மிக மிக எளிமையாயிற்று. கைபேசி வழிக் கற்றல் தொழில்நுட்பங்களில் கையடக்கக் கணினிகள், எம்பி3, பிளேயர்கள், அலைபேசிகள் மற்றும் பலகைக் கணிப்பொறி ஆகியன அடங்கும். இவற்றின் வாயிலாக கற்றல் கற்பித்தல் தொடர்பு மிக மிக சுலபமாகிறது. இவற்றில் பாடம் சார்ந்த பகிர்வுகள் கல்வி குறிப்புகள் எளிதில் பதிவிறக்கம் செய்யப்பெறுகின்றது. இவற்றில் இணையம் பெரிய ஜாம்பாவானாக செயல்படுகின்றன. இன்றைய சூழலில் தொலைதூர கல்விசார் வகுப்புகளுக்கு பெரும் உறுதுணையாக இருக்கின்றன. நம் கையின் ஆறாம் விரலாகவும் மாறிவிட்டது கைபேசி. இவற்றில் இ-மெயில், பதிவு செய்தல் போன்ற பல்வகை அம்சங்கள் ஒவ்வொரு விதத்திலும் கற்றல் கற்பித்தலுக்கு துணைபுரிகின்றது.

முடிவுரை

இக்கட்டுரையில் மேற்கண்ட தொழில்நுட்பங்கள் கூட்டு செயல்பாட்டினால் கல்விமுறை இன்று எளிமையாகவும், சிறப்புற்றும் இருக்கின்றது என்பதனை நம் அனைவரும் அறியப்பெறுகிறோம். மேலும் இத்தகைய தொழில்நுட்பங்கள் கல்வி சார் செயல்பாடுகளில் கூட்டுமுறையால் திறம்படச் செயல்படுத்தி ஏற்றம் பெறுவோமாக.

அடிக்குறிப்பு:

  1. ப. 28 – Technical education published july 2005 vani printers P. உதயகுமார்
  2. ப. 60 – கல்வி நுட்பவியல் வளநூல், சவிதா பதிப்பகம் 1995.
  3. பக்.366 – தமிழ் இலக்கிய வரலாறு, ச. சுபாஷ் சந்திரபோஸ், பாவை பப்ளிகேஷன்ஸ் 2008.
error: Content is protected !!