கூகுள் சர்ச் கன்சோலும் அதன் பயன்பாடும்

கூகுள் சர்ச் கன்சோலும் அதன் பயன்பாடும்

(Google Search Console and it’s uses)

ஆர்லின் ராஜ் அ / Aarlin Raj A

மாணவர்,ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

அலைபேசி:7539938939

ஆய்வுச் சுருக்கம் (Abstract):

நமது தமிழ்ச் சமுதாயத்தில் இன்றைய காலகட்டத்தில் தமிழில் நாம் உருவாக்கிய வலைத்தளங்களை / வலைப்பூக்களை  எவ்வாறு கூகுளின் தேடு பொறியில் கொண்டு சேர்ப்பது? என்கிற புரிதல் மிகவும் குறைவாகவே உள்ளது. அனைத்துத் தமிழ் மக்களும் எளிதில் கூகுள் சர்ச் கன்சோலின் முழு அறிவையும் பெற்று அவர்களது எழுத்துக்களை உலகறியச் செய்ய வழிவகை செய்யவேண்டும். இதனைப் பற்றி பல்வேறு குறிப்புகள் இணையத்தில் கிடைக்கப்பெற்றாலும் அவற்றுள் இருக்கும் உண்மைத் தகவலைப்பெற தமிழ்ச் சமூகம் பெரிதும் போராட வேண்டி உள்ளது. ஆகையால், அதனை  எவ்வாறு பயன்படுத்தி கூகுளின் தேடு பொறியில் வலைப்பூக்களைக் கொண்டுச் சேர்ப்பது என்பதை இந்தக் கட்டுரை பேசுகிறது.

தற்காலப் புரிதல்:

இன்றைய             தொழில்நுட்பக் காலக்கட்டத்தில்   இணையதளங்களை உருவாக்கினால் அதற்கு மிக செலவாகும். ஆனால் கூகுளோ நமக்கு இலவசமாக  இணையதளங்களைப் போன்ற வலைப் பூக்களை (Blogspot)  அளிக்கிறது. அத்தகைய வலைப்பூக்களை உருவாக்கினால் போதுமானது. அதுவே கூகுள் தேடு பொறியில்  காண்பிக்கப்பட்டு விடும் என்னும் கருத்து தமிழ் வலைப்பதிவர்களிடம் பெரிதும் வலம் வருகிறது.

கூகுள் சர்ச் கன்சோல் அறிமுகம் :

எந்த ஒரு வலைப்பூவாக இருந்தாலும் அதனைக் கூகுள் சர்ச் கன்சோலோடு இணைத்தால் மட்டுமே கூகுள் தேடுபொறியில் காண்பிக்கப்படும். இணைக்காமல் வலைப்பூ தேடப்பட்டால் அது கண்பிக்காது. இந்த ஒரு சேவையைக் கூகுள் இலவசமாகவே தருகின்றது. இதை நமது வலைப்பூவோடு இணைப்பதால் நமது வலைப்பூவை இந்த உலகில் எவர் எந்த மூலையிலிருந்து தேடினாலும் அவர்களுக்குக் கூகுள் தேடுபொறியில் கிடைக்கும்.

வலைப்பூவைக் கூகுள் சர்ச் கன்சோலோடு இணைப்பது எப்படி ?

இதற்குமுன் உங்கள்  மின்னஞ்சல் முகவரி நீங்கள் உங்கள் வலைப்பூவை உருவாக்கிய முகவரியா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

IMG-20200829-WA0006.jpgவலைப்பூவைக் கூகுள் சர்ச் கன்சோலோடு இணைப்பதற்கு நாம் கூகுள் சர்ச் கன்சோலில் ஒரு கணக்கை உருவாக்குதல் அவசியமானது. அதை எளிமையாக எவ்வாறு உருவாக்குவது என்பதை காண்போம். இங்கு குறிக்கப் பெற்று இருப்பது போன்று படிப்படியாக செய்தால் எளிதில் வலைப்பூவை கூகுள் IMG-20200829-WA0011.jpgசர்ச் கன்சோலோடு இணைத்துவிடலாம்.

1.கணக்கு உருவாக்கம்:

IMG-20200829-WA0012.jpgமுதலில் Google search console என்னும் வார்த்தையைக் கூகுள் தேடுபொறியில் தேடவும். பக்கத்தில் வரும் கூகுள் சர்ச்  கன்சோலின் முதல் இணையதளத்தில் உள் நுழையவும். உள்நுழைந்து Start now பொத்தானை அழுத்தவும். பின் படங்களில் காண்பபிக்கபடுவது போல் Url Prefix ஐ அழுத்தவும். பின் தங்களது வலைப்பூவின் முழு  சுட்டியை (https:// யிலிருந்து) கீழே கொடுக்கப்பெற்று இருக்கும் இடத்தில் உள்ளிடவும். பின் Continue ஐ அழுத்தவும்.

பின் திரையில் காண்பிக்கப்படும் Go to property ஐ அழுத்தவும்.

இது கூகுள் சர்ச் கன்சோல் கணக்கை உருவாக்கும் முதல் படி. 2.உரிமையாளர் சரிபார்ப்பு (Ownership Verification):

பின் முதன்மை பட்டியலுக்கு (Main Menu : இடதுபுறம் மேலுள்ள மூன்று கோடுகள்) செல்லவும். அந்தப் பட்டியலில் கீழ் இருக்கும் அமைப்புகளுக்கு (Settings) செல்லவும். அங்கு உள்ள You’re a Verified Owner என்ற செவ்வகப் பெட்டியை அழுத்தவும். சொடுக்கிய பின் காண்பிக்கப்படும் பக்கத்தில் கீழ் இருக்கும் Html tag பொத்தானை அழுத்தவும். அங்கு காட்டப்படும் Copy ஐ அழுத்தவும்.

பின் தங்களது வலைப்பூவின் முதன்மை பெட்டிக்குச் (Main Menu) சென்று Theme  அழுத்தவும். பின் வழிதல் பொத்தானைச் (Over Flow button) சொடுக்கி Edit Html ஐ அழுத்தவும். பின் காண்பிக்கப்படும் நிரல்கள் பக்கத்தில் <head> இற்கு கீழ் நகலெடுத்து இருந்த அந்தக் குறியீட்டை (coding ) ஒட்டவும். பின் மேல் இருக்கும் overflow பொத்தானைச் சொடுக்கி Save Changes ஐ அழுத்தவும். பின் கூகுள் சர்ச் கன்சோல் பக்கத்திற்குச் சென்று Verify ஐ அழுத்தவும்.

இப்படி செய்வதால் கூகுள் சர்ச் கன்சோல் கணக்கின் வலைப்பூவின் ஒரே உரிமையாளர் நீங்கள் தான் என்பதை நீங்கள் உணர்த்துகிறீர்கள் .

3.சைட்மேப் சமர்ப்பித்தல் (Sitemap Submission):

உங்களது வலைப்பூவில் எந்த இடத்தில் எந்த இடத்தில் எந்தப் பதிவு உள்ளது என்பதை உணர்த்த நீங்கள் சைட்மேப்பை கூகுள் சர்ச் கன்சோலோடு இணைக்கவும். இதை ஒரு வரைபடம் போன்று கூகுளுக்குக் கொடுக்கப்படும் என்று நீங்கள் எடுத்துக் IMG-20200829-WA0009.jpgகொள்ளலாம்.

கூகுள் சர்ச் கன்சோல் பக்கத்தின் முதன்மை பட்டியலுக்குச் (Main Menu) சென்று Sitemap ஐ அழுத்தவும். பின் காட்டப்படும் பக்கத்தில் Enter Sitemap என்னும் இடத்தில் sitemap.xml என்னும் வார்த்தையை உள்ளிடவும். பின் submit ஐ அழுத்தவும்.

IMG-20200829-WA0005.jpgபி.கு: வலைப்பூவில் ஒரு நான்கு ஐந்து பதிவுகளை இட்ட பின்தான் சைட்மேப் சமர்ப்பித்தல் வேண்டும்.

4.வலைப்பூச் சுட்டி சமர்ப்பித்தல் (Url Inspection):

கூகுள் சர்ச் கன்சோலின் முதன்மை பக்கத்தில் Url Inspection ஐ அழுத்தவும். மேலே காண்பிக்கப்படும் பெட்டியில் உங்களது தளத்தின் முழு சுட்டியையும் உள்ளிட்டு உள்ளீடு செய்யவும். அங்கு URL is not on Google என்று வருகிறதா? என்பதைச் சரிபார்த்து Request Indexing ஐ அழுத்தவும். ஓரிரண்டு நிமிடங்கள் அந்தச் சமர்ப்பிக்கும் செயல்பாடு நடக்கும். பொறுத்து இருங்கள்.

5.மின்னஞ்சல் பெறுதல் ( Receiving Email):

இவை அனைத்தையும் சரியாகச் செய்திருந்தால் உங்களுக்குக் கட்டாயம் கூகுள் சர்ச் கன்சோலிடம் இருந்து மின்னஞ்சல் வந்திருக்கும். இனி உலகில் எந்த மூலையிருந்து யார் உங்கள் வலைப்பூ சார்ந்த தகவல்களையோ அல்லது உங்கள் வலைப்பூவைத் தேடினாலும் அவர்களுக்குக் கூகுள் தேடுபொறியில் உங்கள் தளம் கிட்டும்.

பின் குறிப்பு: உங்கள் தளத்திற்குத் தனித்துவமான பெயரை வையுங்கள். அப்போது உங்கள் பக்கம் விரைவில் அங்கீகரிக்கப்படும்.

கூகுள் சர்ச் கன்சோலின் பயன்கள்:

 அதிக பார்வையாளர்கள்:

கூகுள் சர்ச் கன்சோலோடு நமது வலைப்பூவை நாம் இணைப்பதால் நமக்குக் கிடைக்கும் பயங்களில் முக்கியமானது அதிக பார்வையாளர்களின் வருகை. நமது வலைப்பூவைச் சர்ச் கன்சோலோடு இணைப்பதால் உலக அளவில் கூகுளின் தேடு பொறியில் தேடப்பட்டால் விரைவில் பார்வையாளர்களுக்கு கிட்டும்.

தளத்தின் தரம்:

கூகுள் சர்ச் கான்சோலோடு நாம் நமது தளத்தை இணைப்பதால் நமது தளத்தின் உலகளாவிய தரம் மற்றும் பயனர்கள் நமது தளத்தின் இடுகை சார்ந்த பதிவுகள் அல்லது முகப்பின் சுட்டி போன்றவற்றைத் தேடு பொறியில் காணும்போது அதை அவர்கள் சொடுக்கும் விகிதத்தை அறிந்து கொள்ளலாம்.

தள மேலாண்மை:

நமது வலைப்பூ வாசகரின் திரைக்குத் தெரியப்படத்தப்படும் நேரம் (Loading Time) அதிகபட்சம் 5 வினாடிகள். அதற்கு மேல் இருத்தல் கூடாது. அவ்வாறு இருந்தால் வாசகர் சலிப்படைந்து நமது தளத்தை விட்டு செல்ல நேரலாம். இதனை அறிந்து கொள்ள நமக்குச் சர்ச் கன்சோல் Core Web vitals என்னும் கருவியை நமக்கு வழங்குகிறது. அதை வைத்து நாம் திரையின் விரைவு விகிதத்தை அறியலாம்.

சிறந்த முடிவு:

நமது பக்கம் சரியாக வடிவமைக்கப் பெறாமல் இருந்தாலோ அல்லது நமது பக்கத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை நமக்குத் தெரிவித்து, அதற்கு ஒரு சிறந்த முடிவையும் அளிக்கிறது.

செயலாக்கம் மற்றும் மேலோட்டம் (Performance and overview):

நமது தளத்தின் செயலாக்கம் மற்றும் எத்தனை பயனர்கள் நமது பக்கத்தைக் கூகுள் தேடு பொறியில் தேடி உள்ளனர் என்பதை வார்த்தைகளிலும் படங்கள் வடிவிலும் நமக்குத் தருகின்றது.

கூகுள் கான்சோல் உதவி:

மேலும் இதைச் சார்ந்த கேள்விகள் ஏதேனும் நமக்கு இருந்தால் கூகுள் சர்ச் கன்சோல் உதவியில் அந்தக் கேள்விகளைத் தேடி அதற்கான விடைகளைப் பெற்றுத் தெளிவு பெறலாம். விடைகள் கிடைக்காத போது நாமே நேரடியாகக் கேள்வி கேட்கலாம்.

துணை நின்றவை:

error: Content is protected !!