தமிழ் இலக்கியங்களுக்கான கணினி வளங்கள்
திருமதி ச.சுதா
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்
ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
மேட்டமலை, சாத்தூா்.
sudha15mt09@gmail.com
கணினி மனித வாழ்கையில் இருந்து பிரிக்க முடியாத பொருளாக மாறிவிட்டது. கையெழுத்து பிரதிகள் என்ற நிலை மாறி அனைத்து துறைகளிலும் எல்லா செயல்பாடுகளுக்கும் கணினி இன்றிமையாததாக பயன்பட்டு வருகின்றது. இணையத்தின் செயல்பாடுகள் அனைத்திற்கும் கணினி ஆதாரமாக இருக்கின்றது. அவ்வகையில் தமிழ் இலக்கியங்களுக்கான கணினி வளங்கள் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
மின் தமிழ் அறிமுகம்
கணினியின் செயல்பாடுகள் அனைத்தும் ஆரம்ப காலத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. படித்தவா்களை தவிர கணினியை உபயோகிக்க முடியாத நிலை இருந்தது. ஆரம்பத்தில் கணிணியில் தமிழை உள்ளீடு செய்வதற்கு வசதி இல்லை. தமிழ் எழுத்துருக்களுக்கான விசைப் பலகைகளும் இல்லை. தமிழ் எழுத்துகளுக்கான ”ஆத்மி” என்ற மென்பொருள் முதலில் உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து மைக்ரோசாப்வோ் வோர்டு (Microsoftware Word) போன்ற பல மென்பொருட்களில் தமிழைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது. தற்போது ”ஒருங்குறிக் குறியேற்றம்” (Unicode Encoting) பல நாடுகளில் உள்ள கணினி நிறுவனங்களின் முயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது1. (இந்துதமிழ்.இன் – கணினித்தமிழ் வளர்ச்சி)
இவ்வாறு கணினியில் தமிழின் வளா்ச்சி படிப்படியாக உயா்ந்தது.
தமிழ் இலக்கியங்களுக்கான வலைதளங்கள்
தமிழ் இலக்கியங்களுக்கென பல வலைதளங்கள் இணையத்தில் உள்ளது. இலக்கிய தரவுகளுக்கு நூல்களை தேடி பார்த்து படித்து குறிப்புகள் எடுத்த காலம் சென்றுவிட்டது. தற்போது கணினியில் இணையதளம் வழி தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை இணையம் வழி பார்த்து பயன் பெற பல தமிழ் வலைதளங்கள் உள்ளது. சான்றாக, தமிழ் விக்கிபீடியா (Tamil wikipedia), தமிழ் விச்சுவல் (Tamil Virtual), பிளாக்ஸ்பாட் (Blogspot), தமிழ்சுரங்கம்.காம், தமிழ் இலக்கிய விமா்சனக் கலை களஞ்சியம், சிறகு.காம், இலக்கியம்.காம் என்ற பல வலைதளங்கள் உள்ளது.
தமிழ் மின் நூலகங்கள்
ஓலைச்சுவடிகளில் இருந்த இலக்கியங்கள் அச்சுகளில் நூலாக தொகுக்கப்பட்டது. நூல்களுக்கென்று பல நூலங்களும் செயல்பட்டு வருகின்றது. தற்காலத்தில் கணிணியில் இணையம் வழியாக எங்கிருந்தாலும் தேவையான நூல்களை பார்த்து பயன்பெறும் வகையில் மின் நூலகங்கள் உள்ளது. மின் நூலகற்கள் வழி தமிழ் இலக்கியங்களை உலகெங்கிலும் உள்ள தமிழா்களுக்கும், தமிழ் ஆர்வலரா்களுக்கும் பயன் உள்ளதாக அமைகின்றது. மேலும் நூல்களை தேடி அலையும் வேலையும் குறைந்துள்ளது. தமிழ் இலக்கியங்களுக்கான மின் நூலகங்கள், எண்ணிம மின் நூலகம் (Electronic Library), மெய்நிகா் நூலகம் (Virtual Library), தமிழிணையம் மின் நூலகம், சென்னை மின் நூலகம், நூலகம்.நெட் போன்ற மின் நூலகங்கள் இணையத்தில் உள்ளது இதை கணினி உதவியுடன் பார்த்து பயன்பெற இயலும்
தமிழ் மின் இதழ்கள்
தமிழ் இலக்கியங்களை பொருண்மைகளாக கொண்டு எழுதப்படும் இலக்கிய கட்டுரைகள் புத்தமாக தொகுக்கப்பட்டது. கல்லூரிகள், பல்கலைகழங்கள் வழி கருத்தரங்கம் நடத்தபட்டு ஆய்வு கோவை, கருத்தரங்க கட்டுரை தொகுப்பு என நூலாக்கப்பட்டது. தற்போது கணினி உதவியுடன் இணைய வழியில் இருந்த இடத்தில் ஆய்வுக்கட்டுரைகளை பதிவேற்றம் செய்ய பல மின்னிதழ்கள் உள்ளது. மின்னிதழ்களில் பதிவு செய்யப்படும் கட்டுரைகள் தமிழ் மாணவா்கள், ஆய்வாளா்கள், மற்றும் உலகமெங்கிலும் உள்ள தமிழ் படிக்கும் ஆய்வாளா்களுக்கும் பயன் உள்ளதாக அமைகின்றது. தமிழ் இலக்கியங்களுக்கான மன்னிதழ்கள், முத்துகமலம் (தமிழ் ஆய்வு இதழ்), வார்ப்பு, வரலாறு.காம், நிலாச்சாரல், பதிவுகள், தமிழோவியம், ஆய்வுச்சுடா் (பன்னாட்டு பன்முகத்தமிழ் ஆய்விதழ்), உலகத்தமிழ் பன்னாட்டு ஆய்வு மின்னிதழ் (உலக தமிழ் சங்கம் மதுரை) போன்ற பல மின்னிதழ்கள் உள்ளது.
தமிழ் மின் செயலிகள்
செயிலிகள் (App) தற்காலத்தில் பல துறைகளுக்கும் உதவியாக உள்ளது. செயலிகள் திறன் பேசி வழி செயல்பாட்டில் இருந்தாலும், அவற்றிக்கான உருவாக்கமம் கணினி வழியில் தான் செய்யப்படுகின்றது. விளையாட்டு, சினிமா, சமூக ஊடங்கள் மட்டுமல்லாது தமிழ் இலக்கியங்களுக்கான பல செயலிகள் உள்ளது. சான்றாக, தமிழ் இலக்கியங்களுக்கான செயிலிகள் சங்க இலக்கியம், இலக்கியம் – பதிணென் கீழ் கணக்கு, தமிழ் இலக்கணம், தமிழ் களஞ்சியம், அந்தமிழ் புக்ஸ் (Andhamil Books), பாரதியார் கவிதைகள், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் மொழி வரலாறு என பல செயலிகள் செயல்படுகின்றது.
தமிழ் மின் நூல்கள்
மின் நூலகங்கள் தவிர பல தமிழ் இலக்கிய நூல்கள் கையடக்க ஆவண வடிவமைப்பு (PDF) வடிவில் தற்காலத்தில் கணினியில் இணையம் வழி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ”கையடக்க ஆவண வடிவமைப்பு என்பது ஆவண பரிமாற்றத்துக்காக 1993 இல் அடோப் சிஸ்டம்ஸ் உருவாக்கிய ஒரு கோப்பு வடிவமைப்பு (File) ஆகும்”2. ( தமிழ் விக்கிப்பீடியா – கையடக்க ஆவண வடிவமைப்பு (PDF))
தற்காலத்தில் இணைய வழியிலான வகுப்பு என்ற நடைமுறைக்கு மின் நூல்கள் பேருதவியாக இருந்தது. இணைய வழியிலான வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த சூழலில் மாணவா்களுக்கு பாட சம்பந்தமான பல நூல்கள் கையடக்க ஆவண வடிவமைப்பு முறையிலேயே வழங்கப்பட்டது. தமிழ் மாணவா்கள், ஆய்வாளா்கள், தமிழ் ஆராய்ச்சியாளா்கள் மற்றும் தமிழ் .இலக்கிய நூல்களை கற்க விரும்பும் உலகமெங்கும் உள்ள அனைவருக்கும் இருந்த இடத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளவும் உதவியாக உள்ளது.
தொகுப்புரை
தமிழும் தமிழ் இலக்கியங்களும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். செவ்வியல் பண்புகள் கொண்ட தமிழ் .இலக்கியங்கள் கணினி வளங்களினாலும் உச்சத்தை அடைந்துள்ளது. கணினி என்றாலே ஆங்கிலம் என்ற நிலைமாறி தமிழ் மொழிக்கும் உரியதாக தற்காலத்தில் உயா்ந்துள்ளது. தமிழ் இலக்கியங்களுக்கான கணினி வளங்களாக மின் தமிழ் அறிமுகம், தமிழ் இலக்கியங்களுக்கான வலைதளங்கள், தமிழ் மின் நூலகங்கள், தமிழ் மின் இதழ்கள், தமிழ் மின் செயலிகள், தமிழ் மின் நூல்கள், இவற்றின் வழியிலும் பயன்பெறும் வகையில் உள்ளது. என்பதனை புலப்படுத்துவாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
சான்றெண் விளக்கம்
- இந்துதமிழ்.இன் – கணினித்தமிழ் வளர்ச்சி
தமிழ் விக்கிப்பீடியா – கையடக்க ஆவண வடிவமைப்பு (PDF)