தினசரி பாடத்திட்டத்தில் கணினி ஒரு துணைக்கருவி – ஒரு பார்வை
முனைவர் கா. செல்வகுமார்
தலைவர், அரசியல் அறிவியல் துறை,
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
வல்லம், தஞ்சாவூர் – 613 403.
தகவல்களை சேமித்து வைத்தல், மீட்டெடுத்தல், செயல்முறைககு உட்படுத்துதல் முதலிய பணிகளைச் செய்யும் நிகழ்நிரல் எந்திரம். கணினி பிரதான நினைவகம், ஒரு கட்டுப்பாட்டு அலகு, கணித தர்க்க முறைமை அலகு ஆகியவற்றை கொண்டிருக்கும். ஒரு முப்பரிமாண உருவம் கணினி மொழிக்கு மாற்றப்படும்போது கணினி நகர்ந்து செல்லும் அல்லது வெற்றிடத்தில் சுழலும் படி தோற்றம் தரக்கூடிய உருவங்களை உருவாக்க முடியும். ஆகையால் கணினி அசைவாக்கம் மருத்துவத்தில் அல்லது அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு சிக்கலான சலனங்களைக் கூட மாதிரி படமாக காட்ட முடிகிறது. மேலும் திரைப்படங்கள் உருவாக்கத்தில் பயன்படுகிறது.1 1970க்கு பின் நுண் கணிப்பொறி வந்தபின் கணினிகளின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலும் பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும் முன்னர் உள்ள சில வகுப்பு திட்டங்களிலும் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. பயிற்றுவிக்கும் கணினிகள் தகவல்களைத் தருதல் நல்லது கற்பித்தல் பணியை செய்கின்றனர். இன்றைய கணினிகள் மாணவர்களுக்கு தங்கள் மேதமையை வெளிப்படுத்தவும் அவர்களுக்கு உகந்த வேகத்தில் புது பொருட்களைப் பற்றி அறியவும் விரைவாக உதவுகிறது.2 கோவிட் 19 நோய் தொற்று காலத்தில் சவாலை எதிர் நோக்கும் வகையில் உலகம் இந்த சூழ்நிலையில் முன்னெப்போதும் இருந்ததைவிட தன் வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாக தொழில்நுட்பம் தினசரி பாடத்திட்டத்தில் கணினி ஒரு துணைக் கருவியாக உள்ளது என்பதை அறியலாம்.
இன்றைய காலகட்டம் கற்பித்தல் கற்றல் முறைகள் ஆகியவை அடியோடு மாறிவிட்டது. கோடிக்கணக்கான மாணவர்கள் அலைபேசியின் மூலம் கல்வி கற்கும் காலமாக மாறியுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து கற்பித்தலும் கற்றல் செயல்பாட்டிலும் தொடர்ச்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான மாற்று வழிகளை காண கற்பித்தல் சமூகத்தை தொற்றுநோய் கட்டாயப்படுத்தி உள்ளது. கல்வியை வழங்குவதற்கான புதுமையான வழிகளை நாம் கொண்டுவர வழிவகை செய்துள்ளது. நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியர்கள் இன்று பாடம் நடத்தி வருகின்றனர். இனிவரும் காலங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடவும், தங்களுக்குள்ளாக கலந்தாய்வு செய்யவும் இந்த புதிய முறை தான் பயன்படப் போகிறது. மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாட உள்ளடக்கங்கள் மற்றும் கற்பித்தல் கருவிகளை பயன்படுத்தி பாடங்களை மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்க்க இணையதளம் தான் மிக முக்கியமான சக்தியாகும். இணையதள சேவை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இணையவழிக் கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான நீடிக்கத்தக்க ஒத்துழைப்பு ஆகியவை இணைய வழி கல்விக்கு மிகவும் அவசியமாகும். இவை இருந்தால் மட்டும்தான் உயர் வரையறை தன்மைகொண்ட காட்சிப் பதிவுகளாக மாற்றி மாணவர்களுக்கு அனுப்ப முடியும்.3 இதுதான் கற்றல் அனுபவத்தை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றும். கல்வித்துறையில் புதிய மாற்றங்களை உருவாக்கக் கூடிய மற்ற வாய்ப்புகளை தேடுவதற்கான நேரமாக இக்காலம் உள்ளது.
இன்றைய கல்வி தேவைக்கும் இணையதளம்தான் மிகவும் பயனுள்ள தொழில்நுட்பமாகத் திகழ்கிறது. கல்வித்துறையில் இணையதளத்தின் முக்கியத்துவத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மாணவர்களின் சந்தேகங்களுக்கு தங்கள் வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட அல்லது விவாதிக்கப்பட்ட பாடங்களை மீண்டும் படித்து அறிந்து தெரிந்து கொள்ளும் வகையிலும் இணையதளம் மிகச் சிறந்த கணினி சார்ந்த அமைப்பாக இருந்தது. இணையதளம் வழியாக வழங்கப்படும் தகவல்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள மாணவர்களை தயார்படுத்த வேண்டிய அவசியமாகிறது. இதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனையும் சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தும் வகையில் உள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்ட புள்ளியியல் ஆராய்ச்சித்துறை அறிக்கையின்படி உலகிலேயே இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியா ஆகும்.4
மாணவர்கள் பயிலும் புத்தகங்களுக்கு பதிலாக டிஜிட்டல் உள்ளடக்கமும், மின்னணுப் புத்தகங்களும் பயன்படுத்தப்படும் காலம் தருவதை மறுக்க முடியாது. ஆன்லைனில் பாடம் நடத்துவது தொடக்க கல்வி, மேல்நிலைக்கல்வி, உயர்நிலைக் கல்வி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களும் இணைத்துக் கொண்டு மிகச் சிறப்பாக செயல்படுவதையும் அத்தகைய காலகட்டத்தில் கல்வி நிறுவனங்கள் எதிர்கால கற்றல் முறையை டிஜிட்டல் நவீன தன்மைக்கு மாற்றங்கள் தொழில் முனைவோருக்கு மிக அதிகமாக வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். இத்தகைய சூழலில் இனி வரும் காலங்கள் திறந்த நிலைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அஞ்சல் வழி நிறுவனங்கள் மற்றும் புதிய கல்வி நிறுவனங்களுக்கும் மிகச் சாதகமாக அமையும். எதிர்காலக் கல்விச் சவால்கள், புதிய வாய்ப்புகள், கண்டுபிடிப்புகள், கலை, அறிவியல் மேலாண்மை, பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற துறைகளில் நவீன தொழில்நுட்பத்துடன் பல்வேறு பயன்தரக்கூடிய ஆன்லைன் வகுப்புகள் எதிர்கால செயல்திட்டம் குறித்து மத்திய மனித வளர்ச்சியின் கீழ் பல்வேறு தொழில் நுட்பத்தை கையால் வழிவகை செய்துள்ளது.5 புதிய ஊடக கலவையான கற்றல் முறை அமைப்பு: செயலி பயன்பாடு கைபேசி வழி கற்றல் ஆகியவற்றை அனைத்து கல்வி நிறுவனங்களும் மிகச் சிறப்பான பணியை மேற்கொள்கின்றன. மாணவர்களிடம் மதிப்பீடு செய்தல், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கூர்ந்து கவனித்தல், வருகைப் பதிவு செய்தல், கேள்விகள் கேட்க தூண்டுதல் போன்ற பல்வகை வழிமுறைகளை மிக நேர்த்தியாக கையாளுகின்றன. நல்ல ஆசிரியர் அல்லாத கல்வி நிறுவனமும் நீர் இல்லாத மீனை போல அல்லது ஆன்மா உடலை போல. நீங்கள் அனைவரும் உங்கள் பாடங்களில் போதுமான அறிவு கொண்டிருப்பீர்கள் என தெரியும். மிகச் சிறந்தவர்கள் ஆகும் பொருட்டு ஒரு நல்ல ஆசிரியருக்கு தேவைப்படும் சில மக்கள் தொடர்பு குணாம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. கல்வி கற்று கொடுக்கும் திறன், படைப்பாற்றலை உருவாக்கும், பாடத்தை ஆர்வமாக கேட்கும் வகையிலும் அறிவை மற்றும் சந்தேகத்தை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் நெருக்கடியை சமாளிக்கும் திறன்களை மிகவும் கவனமாக ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டும். வகுப்பறைப் பாடம் கற்பித்தலுக்கு பின்னால் ஆசிரியர் சிறந்த பங்கு பணி ஆற்ற முடிகிறது. இன்றைய ஆன்லைன் வகுப்புகளில் வகுப்பறைக்கு வெளியே பாடத்திட்டம் பிற துறை செயல்பாடுகள் பாடத்திட்டத்துடன் இணைந்த செயல்பாடுகளில் கல்வி நிறுவனத்திற்கும் உதவுதல் போன்ற பல்வேறு பொறுப்புமிக்க செயல்பாடுகளையும் செயல்களையும் ஆசிரியர் ஒருவரால் மட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுத்த முடியும் இன்றைய காலகட்டத்தில் நேர நிர்வாகம், பாட அறிவுத்திறன், கற்றுக்கொடுக்கும் நுட்பம், நவீன இணைய வழி தொழில்நுட்ப முறை, ஊக்குவிக்கும் திட்டம், புத்தாக்கத் திறன், மதிப்பிடுவதில் நேர்மை தன்மையால் மாணவர்களின் கல்வித்திறனை அறிய முடிகிறது.
சமூக வளர்ச்சியானது பழைய தலைமுறையின் தேவையான அனுபவங்களை புதிய தலைமுறைக்கு சரியாக தருவதில் தான் உள்ளது. தனிநபர்களின் செயற்கைதான் சமூகம். எனவே சமூக வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் தனி நபர்களின் தேவைகளைப் (Individual Needs) பூர்த்தி செய்யுமாறு கல்வி அமைத்திட இக்காலகட்டத்தில் கட்டாயமாகும். மாணவர்களின் சிந்தனை, செயல்திறன், ஈடுபாடுகள் முதலியன இன்று பரந்து விரிந்து காணப்படுகிறது. இத்தகைய தேவைகளை நிறைவு செய்யும் போது தான் தொழில்நுட்பம் இன்று நமக்கு உதவுகிறது. அத்தகைய தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தும் போது தான் கல்வியை வளர்க்கும் வகையில் மாற்றிக்கொள்ளும் வகையில் மிகச் சிறந்த சாதனமாக உள்ளது. கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆராய்ச்சிகள் தீவிரமாக விரிவடைந்துள்ளது. அறிவார்ந்த இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப் போன்று செயல்பட செய்வதே செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிகளின் நோக்கமாக ஐபோன், ஏ.ஐ. மாடல்கள், வாய்ஸ் ஆப் கூகுள், அமேசானின் அலெக்ஸா போன்ற மென்பொருட்கள் செயற்கை நுண்ணறிவுப் படைப்புகளின் உதாரணமாக இன்றும் உள்ளன.
ஹைதராபாத்திலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) நிகழ் ஆண்டில் (2019-20) செயற்கை நுண்ணறிவு தளத்தை முழுமையான தொழில்நுட்ப பொறியாளர் படிப்பைத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் தளத்தின் கோட்பாடு பயிற்சி ஆகியவற்றை முழுமையான அடிப்படையில் புரிதலைக் கொண்ட மாணவர்களை உருவாக்குவதே இந்த பாடப்பிரிவின் முக்கியத்துவம் ஆகும். இன்றைய காலகட்டத்தில் அலைபேசியில் உள்ள இணையம் வழியாக கருத்தரங்கம், பயிற்சி பட்டறை, திறன்களை வளர்க்கும் போட்டித் தேர்வுகள், சிறப்பு உரைகள் போன்றவை வலையொளி இணைப்பு வழியாக நடத்தப்படுகிறது. அதன் மூலம் பின்னூட்டப்படிவம் நிரப்பப்படுகிறது. இந்நிகழ்வுகள் Zoom (செயலிவழி) வலையொளி (YouTube) மூலம் நடைபெறுகிறது. இந்நிகழ்வின் இணைப்பு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் புலனக் குழுவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்படுகிறது. இத்தகைய இணைய வளர்ச்சியில் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியில் கல்வித் துறை மிக உயர்ந்த நிலையை நோக்கிய வளர்ச்சியை எட்டியுள்ளது.7
தினசரி பாடத்திட்டத்தில் கணினி ஒரு துணைக் கருவியாக கொண்டு பாடத் திட்டங்களை செம்மையாக நடத்தப்படுகிறது. உளவியல் அடிப்படையில் மாணவர்களை அணுகுதல், தனித் திறன்களை வளர்க்கும் சூழ்நிலையை உருவாக்குதல், மாணவர்களின் குருவாக இல்லாமல் அறிவைத் தூண்டுவதற்கான காரணியாக இருக்க முடிகிறது. அரசும் இக்காலகட்டத்தை நுண் தேர்வு மற்றும் மதிப்பீடு குறித்த இணையவழிப் பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்து ஆசிரியர் பணிக்கு ஏற்ற வகையில் உதவுகிறது. எனவே இத்தொற்று காலத்தில் தவிர்க்க முடியாத கணினியின் பங்கு பல்வேறு பரிமாணங்களாகவும் ஏனைய துணைக் கருவியாகவும் எதிர்கால தேவைகளை எதிர்கொள்வதற்கான ஆசிரியர் மாணவர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுகள் இணைந்து கல்விக்கான ஆற்றலைப் பெறுவதற்கான மாபெரும் வாய்ப்புகள் இன்று உள்ளன என்பதை அறிய முடிகிறது. உண்மையான கல்வி ஒரு மனிதனை மேன்மையாக்கும் என்பதை நோக்கமாக இன்றைய பாடத்திட்டத்தில் கணினி ஒரு துணைக் கருவியாக செயல்படுவதில் ஐயமில்லை என்பதை இக்கட்டுரை மூலம் அறிய முடிகிறது.
துணை நூல்கள்:
1. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம், தொகுதி 1, என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா (இந்தியா) பிரைவேட் லிமிடெட், விகடன் பிரசுரம்.
2. முத்தையன், மணிமுருகன், கற்றல் கற்பித்தல், நதி பப்ளிகேஷன்ஸ் 2016.
3. ஜெயந்தி கோஷ், பரவசமூட்டும் எதிர்கால வேலை வாய்ப்புகள், மனோரமா இயர் புக் 2020 (ப) 655.
4. பிரசாத், பானு பிரதாப் சிங் ஆன்லைன் கற்றல், திட்டம், ஜுன் 2020, ப 22-33.
5. தமிழ்ச்செல்வன் நாளை உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவு, தினமணி மாணவர் மலர் 2019, ப 30-34.
6. ரூபால் ஜெயின், நல்ல ஆசிரியராக இருப்பது எப்படி, புஸ்தக் மகால், புதுடெல்லி, 2015. ப 7, 12.
7. பிரசாத் பானுபிரசாய், ஆன்லைன் கற்றல், திட்டம், ஜுன் 2020, ப 22-33.