விளையாட்டுகள் அன்றும் இன்றும் ஏற்படுத்திய தாக்கங்கள்

 

 

M.REVATHI,

Director of Physical Education,

Parvathy’s Arts and Science College,

Dindigul.

 

 

 

முன்னுரை:

ஓடி விளையாடு பாப்பா– நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

மாலை முழுவதும் விளையாட்டு என்று

வழக்கப்படுத்திக் கொள்ளுப் பாப்பா

என்ற பாரதியின் பாடல் வரிகளைப் பாடாத குழந்தைகள் இத்தமிழுலகில் யாரும் இல்லை என்று சொல்லும் அளவு விளையாட்டு அனைவரிடத்திலும் இன்றியமையாததாக அமைந்துள்ளது. ஆம் விளையாட்டு அனைவருடைய பொழுதுபோக்கிலும் ஒரு முக்கிய அம்சமாக விளங்கி வருகிறது. இவ்வாய்வுக் கட்டுரை நம் பாரம்பரிய விளையாட்டுக்களை அறிமுகம் செய்தும் அதன் பயன்களை; மொழிவதோடு சமகாலத்தில் இணையத்தில் உள்ள விளையாட்டுக்களால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களையும் ஆராய்கிறது.

பாரம்பரிய விளையாட்டுகள்

உடலைக்காக்கும் விளையாட்டுகள் நம்பாரம்பர்ய விளையாட்டுகள் எனப் பெருமையாக சொல்லலாம். குழந்தைக்கு  கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.மூளைத்திறன்இகவனத்திறன்இ பார்வைத்திறன்இ வர்மபுள்ளிகள் தூண்டப்படுவது அக்குபுள்ளிகள் இயக்கம் பெறுவது என ஒவ்வொரு விளையாட்டும் பல்வேறு மருத்துவ பலன்களைத் தருகின்றன.அப்படி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரும் விளையாட்டுகளைப் பற்றி பார்க்கலாம்.

தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு கோடைக்காலத்தில் நாம் விளையாடிய  விளையாட்டுகள்இன்று கனவாகி போகிவிட்டது. அந்த காலங்களில் விடுமுறை நாட்களில் பெரியவர்கள் வீட்டின் திண்ணையில் விளையாடும் விளையாட்டுகள் இன்று நம்கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டது. தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மாறி இன்று தெருக்களும் வெறச்சோடி கிடைக்கிறது. அப்படி நாம்  மறந்ததமிழ்பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்.

நாம் சிறுவயதில் விளையாடி மகிழ்ந்த மற்றும் நம் அடுத்த தலைமுறையினருக்கு  கடத்த மறந்த இப்பொழுது அழிவின் விளிம்பில் இருக்கும் விளையாட்டுக்கள் அனைத்தும் இப்பொழுது இல்லை என்றேசொல்ல வேண்டும். ஆனால் சிற்றூர்களில் இந்த விளையாட்டுக்களை விளையாடுவார் என நம்புகிறேன்.நாம் நவீனகாலத்து விளையாடும்விளையாட்டுக்கள் அனைத்தும் நம்மொழியை அழித்தது  நாம்  பெறும்பயனையும்  குறைத்தது எனலாம். குறிப்பாக சோம்பேறியாக்கியது எனலாம்.

உடல் வலுசேர்க்கும் சில விளையாட்டுகள்;

பச்சக்குதிரை ஒருநபரை கீழேகுனிய வைத்து மற்றொருவர் தனது இருகைகளையும்  குனிந்தவரின் முதுகில் வைத்து தாண்டி ஆடும் ஆட்டம். கைகால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும்.கை கால்கள் நன்கு ஸ்ட்ரெச்ஆகும்.

வளைவுத்தன்மை கிடைக்கிறது.  பலமுடன் மற்றொருவரை தாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

பலம்தரும்    விளையாட்டு பயன்

 

குதிதிறன்  வளரும்.

உடல்வலு பெறும்.

உடற்கழிவுகள்  வெளியேறும்.

எச்சரிக்கை  மனப்பான்மை  வளரும்.

பரமபதம்

ஏணி பாம்பு என இரண்டு படங்கள் வைத்து 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும். தாயக்கட்டையில் விழும் எண்களை வைத்துகாயை கர்த்த  வேண்டும். இந்தவிளையாட்டால் கணிப்புதிறன் கணிததிறன்  கிடைக்கும்.வெற்றி தோல்வி ஏற்றம்இ இறக்கம் பற்றிய அறிவு கிடைக்கும்.

 

பல்லாங்குழி

பெரும்பாலும் வயது வந்த பெண்கள் தங்களது தோழிகளுடன் வீட்டினுள்அமர்ந்து பல்லாங்குழிஆடுவது வழக்கம். வட்டமாக குழி உள்ள பலகையில் புளியாங்கோட்டை அல்லது சோழி அல்லதுமுத்துகளை சேர்த்து ஆடுவார்கள். கடைசி மணிதீரும் வரை ஆட்டம் நீடிக்கும். இதனால் விரலுக்கு பயிற்சியும் கணக்கு பயிற்சியும் பெறமுடியும் என நம்பினர். இன்றைய காலத்தில் சதுரங்க பலகையே நமதுபலரின் வீட்டில் இல்லாத நிலையல் பல்லாங்குழி பலகை எங்கே இருக்கும்.

12 குழிகளில் புளியங்கொட்டை போட்டு வரிசையாக எடுத்து விளையாடும் விளையாட்டு. எண்களை சொல்லிக்கொண்டே விளையாடவாய்ப்பாகும். சிந்தனைத்திறன் மேலோங்கும். கைவிரல்களுக்கு நிறைய வேலை கிடைக்கும்.குழந்தைகளின் மோட்டார்ஸ்கில்ஸ் நன்கு செயல்படஉதவும்.

பயன்

கணிததிறன் கூடும்.

வணிகநுட்பம் வளரும்.

சேமிப்பின் தேவை புரியும்.

விடாமுயற்சி தன்னம்பிக்கை கூடும்.

பாண்டிஆட்டம்

சிறுமிகள் தெருக்களில் விளையாடும் விளையாட்டு இது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் எட்டு தொடர் பெட்டியை தரையில் வரைந்துகொள்ள வேண்டும். போட்டியாளர்கள் முதல் பெட்டியில் கல்லைபோட்டு அந்தபெட்டியையும் கோடுகளையும் தொடாமல் நொண்டி அடித்து கடைசி பெட்டிவரை சென்று திரும்பவர வேண்டும்.பெரும்பாலும் அனைத்து சிறுமிகளும் விளையாடும் மிகபிரபலமான விளையாட்டு இது. ஆனால் தற்போதைய சூழலில் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்புவதே ஆபத்தாக அமைகிறது.செவ்வகம் வரைந்து அதில் கட்டங்கள் வரைந்து ஒரு காலை மடக்கி இன்னொரு காலால் நொண்டி அடிப்பது போல் நடந்து கொண்டு விளையாடும் ஆட்டம்.கால்களின் தசை நரம்புகளுக்கு சீரான இயக்கம் கிடைக்கிறது.கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கிறது.உடல் சமநிலை சீராகிறது.

பம்பரம்

தெருக்களில் மட்டுமல்ல அன்றைய படங்களில் கூட பம்பர விளையாட்டு காட்சிகள் அதிகமாக இடம்பெறும். பம்பரக்கட்டை மட்டும் சட்டையை கொண்டு இந்த விளையாட்டை துவங்க வேண்டும். இருவர் அல்லது பலர் இணைந்து இந்த விளையாட்டை விளையாடலாம். முதலில் கீழே ஓர் வட்டத்தை இட வேண்டும் பின் சிறுவர்கள் பம்பரத்தை சுழற்றி ஒரே நேரத்தில் கீழேவிட்டு சுழற்றி விட வேண்டும். அதன்பின் சுழன்று கொண்டு இருக்கும் பம்பரத்தை கையில் எடுத்து வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை அடித்து வெளியில் எடுக்க வேண்டும்.

சில சமயங்களில் பம்பரம் உடைந்து விடும்.அதனால் சிறுவர்கள் பம்பரங்களை நேர்த்தியாக தேர்வு செய்வார்கள். சிலருக்கு இது பொக்கிஷம் போன்றது. தமிழகத்தை தாண்டி பல மாநிலங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படும்.ஒரு வட்டத்தில் 3 பம்பரங்கள் வைக்கப்படும். வட்டத்துக்குள் உள்ள 3 பம்பரத்தை   தன் பம்பரத்தால் சுற்றிஇ விளையாடி பம்பரத்தை வெளியே வர செய்ய வேண்டும். பார்வைத்திறன் கவனத்திறன் மேலோங்கும்.

பயன்:

  1. குறித்திறன் அதிகரிக்கும்.
  2. பொறிநுட்பம் விளங்கும்.
  3. எதிராளியின் திட்டம் பிடிபடும்.
  4. பொருமையின் தேவை புரியும்.

கோலிக்குண்டு

விடுமுறை நாட்களில் சிறுவர்கள் தெருவில் பளிங்கு போன்ற கோலிக்குண்டுகளை வைத்து விளையாடுவார்கள். ஒரு போட்டியாளரின் கோலியை மற்றொருவர் தனது கோலியைகொண்டு அடிக்க வேண்டும். இலக்கை நோக்கி சரியாக அடித்துவிட்டால் வெற்றி பெற்றவர் தோற்றவர் கோலிக்குண்டுகளை எடுத்துச் செல்லலாம்.இது அன்றைய சிறுவர்களுக்கிடைய மிகபிரபலமான விளையாட்டாகும். இதே கோலிக்குண்டுகளைகொண்டு மற்றொரு பலகை விளையாட்டும் உண்டு.கோலியை ஒரு முனையில் ஒருவர் வைத்துக்கொள்ளஇ மற்றொருவர் தன்னுடைய கோலி குண்டை தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு குறிப்பார்த்து அடிக்க வேண்டும். குழந்தைகளின் பார்வை திறன் மேலோங்கும். கவனிப்பு திறன் அதிகரிக்கும். கைகளில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும்.

கண்ணாமூச்சி

இந்த ஒரு விளையாட்டுதான் தற்பொழுதும் சில குழந்தைகள் இன்றைய காலத்திலும் விளையாடும்விளையாட்டாகும். ஒருவர் கண்ணை மூடிக் கொள்ளமற்றகுழந்தைகள்வீட்டிற்குள்ஒளிந்துக்கொள்ளவேண்டும்.பின்னரே

கண்ணை மூடியவர் ஒளிந்திருப்பவரை கண்டுபிடிப்பதுதான் விளையாட்டாகும்.

இது ஒரு முதன்மையான விளையாட்டாகும். இந்தியர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் குழந்தைகள் விளையாடும் ஓர் விளையாட்டு.இங்கு நாம் பட்டியல் இட்டது ஒரு சிலவிளையாட்டுகள் தான் காலத்தால் மறைந்த பச்சைக்குதிரை புளியங்கொட்டைஇ கள்ளன்போலீஸ்இ குலைகுலையாமுந்திரிக்காய் போன்ற பலவிளையாட்டுகள் உள்ளது. ஆனால் தற்பொழுதும் தேசியஅளவிலும்இ சில கிராமங்களில் விளையாடப்படும் கபடிஇ கோகோஇ உரியடி போன் விளையாட்டுகள் அழியாமல் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.நாமும் நம் வருங்கால சந்ததியனருக்கு நம்பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்து அழியாமல் பார்த்துக் கொள்வோம். விளையாடி அனுபவிக்கும் சுவாரசியம் புத்தகத்தில் படித்து ஸ்மார்ட்போனில் தெரிந்துக் கொள்ளுவதில் நிச்சயம் கிடைக்காது.

கிட்டிபுள் (கில்லியாட்டம்)

ஒரு சின்ன கட்டையை தரையில் வைத்துஇ அந்த கட்டையை பெரிதான கட்டையைக் கொண்டு அடித்துஇ எறிந்து விளையாடுவது கில்லி விளையாட்டாகும்.உடல் இயக்கங்கள் சீராக நடைப்பெறும்.வெள்ளைக்காரன் கிட்டிபுள் பார்த்துதான் துடுப்பாட்ட போட்டியை (கிரிக்கெட்)உருவாக்கினார்கள் என்று சொல்வதுண்டு.

கறிறாட்டம் எழுகல் எறிபந்து. ஊதித்தள்ளு. உந்திப்பற தாயம்.

கறிறாட்டம் எழுகல் எறிபந்து. ஊதித்தள்ளு. உந்திப்பற தாயம் ஆகிய பிற விளையாட்டுக்களும் கிராமப்புறங்களில் உண்டு. அவற்றின் உடல் உள்ள நலப்பயன்கள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயன்கள்

  1. மூச்சுமண்டலம்தூய்மையடையும்.
  2. உடல்பிணிகள்நீங்கும்.
  3. உடற்கழிவுகள்வெளியேறும்.
  4. கருப்பைவலுவாகிகருநிலைக்கும்.
  5. கட்டைக்கால்
  6. கைகள்வலுப்பெறும்.
  7. கால்கள்நெகிழ்வுத்தன்மைபெறும்.
  8. முழுஉடலும்ஒருங்கேசெயல்படும்.
  9. கழுத்துவலுப்பெறும்.
  10. குறித்திறன்அதிகரிக்கும்.
  11. அளவீட்டுகணிதமுறைவிளங்கும்.
  12. இடர்காலங்களில்கைகொடுக்கும்.
  13. கைகள்வலுப்பெறும்.
  14. மூச்சுமண்டலம்வலுப்பெறும்
  15. செரிமானசிக்கல்குறையும்.
  16. சிக்கலைகையாளும்மதிகூடும்.
  17. பொறுப்பும்புரிந்துணர்வுகூடும்.
  18. மூச்சு மண்டலம் வலுப்பெறும்.
  19. செரிமான சிக்கல் குறையும்.
  20. சிக்கலை கையாளும் மதி கூடும்.
  21. பொறுப்பும் புரிந்துணர்வு கூடும்
  22. பொறுமைஇ விடாமுயற்சி கூடும்.
  23. குழு ஒற்றுமை வளரும்.
  24. உடல் கழிவுகள் வெளியேறும்.
  25. குறித்திறன் வலுப்பெறும்
  26. வாழ்வின் அடிப்படை விளங்கும்.
  27. கணித திறன் கூடும்.
  28. இயற்கையின் விதிகள் புரியும்.
  29. மிகச்சிறந்த மனிதனை உருவாக்கும்
  30. கை எலும்புகள் நீட்சியடையும்.
  31. கால்கள் துரித செயல்திறன் பெறும்.
  32. மூச்சு மண்டலம் தூய்மையடையும்.
  33. மாய பயம் விலகும்.

இணைய வழி விளையாட்டுகள்

 

இரவு பகல் என்று பாராமல் பேருந்துகளிலும் ரயில்களிலும் அவ்வளவு ஏன் சாப்பிடும் போது கூட சிலர் வீடியோ கேம் விளையாகிக் கொண்டே இருப்பதை காண முடிகிறது. இதெல்லாம் எங்க உருப்பட போகுது என்ற திட்டுகள் ஒருபக்கம் இருக்க இதனால் என்ன என்ன விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நீங்கள் அறிந்தால் உங்கள் வீடோ கேம் போதை சற்று குறையலாம்.

கொஞ்சம் ஓவரா தான் போறோமோ..? சரி போய்தான் பாப்போம்..!” என அளவுக்கு அதிகமாக வீடியோ கேம்கள் விளையாடினால் என்ன என்ன விபரீதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை பற்றிய கட்டை விரல்

விடாமல் வீடியோ கேம் பட்டனை போட்டு அழுத்திக் கொண்டே இருந்தால் உங்கள் கட்டை விரல் இப்படி ஆகிவிடுமாம். தொடர்ச்சியாக கேம் விளையாடிக் கொண்டே இருந்தால் முழங்கைகளில் பாதிப்புகள் ஏற்படுமாம்.!

அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள் நிறுவனம்.! காரணம் என்ன?

கட்டுப்பாடு

உடலை கட்டுப்படுத்தும் மூளையானது கட்டுப்பாட்டை இழந்து விடுமாம். இது மிகவும் அரிதான ஒரு பாதிப்பாகும். எல்லை மீறி எந்நேரமும் வீடியோ கேம் விளையாடி கொண்டே போனால் நிச்சயம் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகமாம்..!

கோபக்காரர்

வீடியோ கேம் மன அழுத்தம் மற்றும் எரிச்சலை அதிகமாய் உண்டாகுமாம். வன்முறை மிக்க வீடியோ கேம்களை விளையாடும் குழந்தைகள் கோபக்காரர்களாக வளர்வார்களாம்.!

கனவுகளில்

அதாவது நீண்ட நேரம் ஒரே வீடியோ கேமை விளையாடிஇ பின் விளையாடி முடித்த பின்பும் நீங்கள் காணும் காட்சிகளில் அல்லது கனவுகளில் மீண்டும் மீண்டும் கேம் காட்சிகள் தோன்றிக் கொண்டே இருக்கும்..!

மணிக்கட்டு

மிகவும் உற்று நோக்க வைப்பதால் நிச்சயம் வீடியோ கேம்கள் கண் பார்வைக் கோளாறுகாளை ஏற்படுத்த வல்லது மற்றும் மணிக்கட்டு கைக்கு நடுவில் ஏற்படும் வலி மற்றும் பாதிப்புகள்..!

மரணம்

அதிகப்படியான ‘பல்ஸ்’ காரணமாக தூங்காமல் இடைவிடாது பைத்தியம் போல வீடியோ கேம் விளையாடினால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புகள் உண்டாம். விதவிதமான ஸ்மார்ட்போன்கள் வருகையால் உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. தற்கால மனிதர்களின் சிறந்த நண்பனாக விளங்குவது செல்போன் தான். அதனுடன் மனிதன் செலவிடும் நேரம் முன்பைவிட பன்மடங்கு அதிகரித்து விட்டது. படுக்கையில் கூட செல்போன் பக்கத்திலேயே இருக்கிறது. தூங்குவதும் துயில் எழுவதும் செல்போனை பார்த்துவிட்டு தான்  நடக்கிறது. அந்த அளவுக்கு செல்போன்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகின்றன.

முடிவுரை

இவ்வாறாக நாம் பாரம்பரிய விளையாட்டுகள் உடலோடு உள்ளத்தையும் சேர்த்து வளரச்செய்தது ஆனால் இன்று இணையம் நம்மை இறுக்குவதோடு மட்டுமல்லாது தாழ்நிலையை நோக்கி நம்மை இட்டுச்செல்கிறது என்பதே நிதர்சனம் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

error: Content is protected !!