மொழி என்பதே ஒரு அறிவியல் என்பதையொட்டியேமொழியியல்துறை ஒன்று தமிழ் மொழிக்கென உருவாகி செயல்பாட்டில் தமிழகமெங்கும் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளில் பணி செய்யவும் மொழியியல் பேராசிரியர்கள் இருக்கின்றனர். மொழியியல் துறையில் சிறந்து விளங்கும் பலரும் அயல்நாட்டு நிறுவனத்தில் பணிபுரியவும் செய்கின்றனர். ஆனால் இன்று கணினியில் தமிழின் இயற்கை மொழிப் பகுப்பாய்வை மிகக் குறைவான சிலரே முன்னெடுத்துச் செய்கின்றனர். மொழியியல் துறைப் பேராசிரியர்கள் தான் இன்றைய தமிழுக்கான இயற்கை மொழிப் பகுப்பாய்வைக் கொண்டுசெல்ல ஆர்வம் காட்டுகின்றனர், எனவே மொழியை அறிவியலாகக் காட்டும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
படைப்புத் திறனுக்கு மொழியும் கற்பனா சக்தியும் அடிப்படை என்ற காரணத்தால் மொழி என்பது கலைத் துறை என்று மட்டுமேப் பார்க்கப்படுகின்றது. அதுவும், ஆங்கில மொழி தவிர மற்ற மொழிகளை அறிவியல் சார்ந்தது என்றுஏற்றுக் கொள்ளப் பெரும்பாலான அறிஞர்களும் சான்றோர்களும் தயக்கம் காட்டுகின்றனர். மொழியும் ஓர் அறிவியல் என்பதைத் தாண்டி மொழிக்கும் அறிவியலுக்கும் உள்ளஆழமானத் தொடர்பிற்கு எடுத்துக்காட்டாகச் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் தொழில்நுட்பங்களும் அறிவியலும் உள்ளன. இவ்வாறானக் குறிப்புகள், இன்று இலக்கியத்தோடும், தமிழ் வரலாற்றோடும் மட்டுமே பொருந்திப் பார்க்கப்படுகின்றன. இத்தகைய அறிவியல் நுட்பங்களைத் தற்காலப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர இன்றைய மொழித் தொழில்நுட்பம் மிகவும் இன்றியமையாதது. எனவே இத்தலைப்பில் சங்ககாலத் தொழில்நுட்பத்தை இக்காலத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியங்களை எடுத்துக் காட்டோடுக் கூறி, எந்த மாதிரியான தொழில்நுட்பங்களைப் பேராசிரியர்கள் இன்று தங்கள் வகுப்பறையில் பயன் படுத்துகின்றனர், அவ்வாறு பயன்படுத்துவதில் அவர்களுக்கு உள்ளச் சிக்கல்கள் யாவை? கற்றுக் கொள்ள மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் யாவை? இச்சிக்கல்களுக்கு எவ்வாறு கணினித் தொழில்நுட்பம் ஒரு தீர்வாக அமைகிறது என்றும் எழுதலாம்.
கணினியில் வரையப்படும் படங்கள் அனைத்தும் வடிவியலை அடிப்படையாகக் கொண்டது தான். கணினிகள் எவ்வாறு படம் வரைகின்றன என்பதை வடிவியலின் அடிப்படையில் ஆராய்ந்து பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி எழுதலாம்.
சங்கப்பாடகள் வர்ணிக்கின்ற தாவரங்கள் விலங்குகள் வகைகளைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி இன்றைய அறிவியலின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்ய வேண்டியத் தேவை உள்ளது.
கணினிகள் எதையும் புதியதாகச் செய்யவில்லை, நாம் ஏற்கனவேத் திறம்பட செய்து வந்ததைத் தான் இயந்திரமயப்படுத்தியுள்ளனர்.
இன்றைய அறிவியல், மருத்துவம், சட்டம் பற்றியக் கல்வியில் பெரும்பாலும் ஆங்கில உரைநூல்களே தற்போது அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன. இதனால் இத்துறைகளில் ஏற்படும் புது மாற்றங்கள் தமிழை வந்தடையக் கால தாமதமாகின்றது. ஆனால் இன்றைய தேடுபொறித் தொழில்நுட்பங்களின் முதன்மையான சாட் ஜீபீடி மூலம் கணினிகள் உடனுக்குடன், மொழிபெயர்ப்பு செய்து இடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்றும், முக்கியமாகச் சாட் ஜீபிடித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிவிரைவில் ஒரு நூலை எழுதி மின்னூலாக்கி விற்பனைக்குக் கொண்டுவரும் உக்தியைப் பலர் கையாள ஆரம்பித்துள்ளதாக, தமிழ் மென்பொருள் குடும்பத்தின் தலைவர் நிறுவனர் திரு டேவிட் இராஜாமணி அவர்கள் கூறுகின்றார். அதுபோல அமைந்தால் எவ்வாறு இருக்கும்? என்று ஆய்வு செய்து கூடக் கட்டுரைகள் எழுதலாம்.
இன்றைய அறிவியல் என்பது இயற்பியல் வேதியியல் உயிரியல் கட்டுமானம் ஆகியவற்றைத் தாண்டி மிக மிக நுணுக்கமானப் பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. இன்று பல்கிப் பெருகி பயன்பாட்டில் இருக்கும் பல்வகை சிறப்பு மருத்துவர்களே இத்தகையப் பிரிவுகளின்ஒரு சிறு உதாரணம். எவ்வாறு தமிழ் மொழிக்கு, இவ்வாறான அறிவியலின் உட்ப்பொருட்களை கொண்டு வர வேண்டும்அமைக்கப் பேராசிரியர்கள் என்பதைப் பற்றியும் கொண்டுவர வேண்டியதின் அவசியத்தைப் பற்றியும் ஆய்வுகள் அமையலாம். இம்மாதிக் கட்டுரைகளை அமைக்கப் பேராசிரியர்கள் தங்கள் துறை தாண்டி அறிவியல் துறையிலும் தங்கள் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.பேராசிர்யர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் இத்தகைய எதிர்பார்ப்பு எனொஅது ஒரு விதக் கற்பனையே ஆனாலும் இக்கற்பனை நிதர்சனமாகாவிட்டால், வருங்காலத் தமிழ் பேராசிரியர்கள் கணினியாக இருக்கலாமே!
இன்று சாட் ஜீபிடி ஒரு எழுத்தாளராகப் பரிமளிப்பது போல அதிவிரைவில் ஒரு பேராசிரியராக மாறினால் எப்படி இருக்கும்?
அல்லது மாணவர்களுக்குப் பதில் வீட்டுப் பாடங்களைச் செய்தால் எப்படி இருக்கும்?
இப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை முறியடிக்க, ஒரு தமிழ் வகுப்பறை எவ்வாறு அமையலாம்?
தமிழும் அறிவியலும் இணைந்து செயலாற்ற வேண்டிய களங்கமெப்படிப்பட்டவையாக இருந்தால் ஒரு வகுப்பறையும், தமிழ் மொழிக்கான வேலைவாய்ப்பும் அமையும் என்ற நோக்கத்தோடு யோசித்தால் பலவகையான ஆய்வுகளைத் தமிழ் பேராசிரியர்களால் செய்ய இயலும், செய்யவும் துணிவார்கள்.