தமிழ்மொழி வளா்ச்சிக்கு உருவாக்கப்பட வேண்டிய மென்பொருட்கள்

தமிழ் வளர்ச்சி

தமிழ் மொழிக்கென ஒருத் தனித்துவம் உள்ளது. அத்தனித்துவத்தை மொழிக்கலப்பினால் நாம் சிறிது சிறிதாக இழந்து கொண்டு இருக்கின்றோம்.

கணினித்  தொழில்நுட்பம் என்பது பயனாளார்களின் வசதிக்கும் அவர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதற்காகவுமே முதலில் உருவானது. கைபேசித் தொழில்நுட்பம், ஒரு அன்றாட வசதியாக மாறியபின், செயற்கை அறிவுத் திறன், வளர்ச்சியும் வேகவேகமாக வளர்ந்து, இன்று புழக்கத்திலும் வந்து விட்டன. இப்பயனர் தொழில்நுட்பங்களை உருவாக்கும்  நிறுவனங்கள் பல அமெரிக்காவில் இருப்பதால், இத்தொழில்நுட்பமும்  ஆங்கில மொழி சார்ந்ததாகவே உள்ளது. ஆனாலும் அடிப்படைப் பயனாளருக்கானத் தமிழ்  மொழி அமைப்பான  எழுதுதல்  அனைத்துக் கருவிகளிலும் கிடைக்கின்றன. இக்கருவிகளில் கிடைக்கும் தமிழ்த் தொழில்நுட்பங்கள் ஒரு இத்தொழில்நுட்பமும்தமிழ் பேராசிரியரின், தமிழ் மாணவமணிகளின் அடிப்படைத் தேவையைக் கண்டிப்பாகப் பூர்த்தி செய்கின்றன.

இவ்வாறு  பிறர் உருவாக்கியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில்  தமிழ் கல்வி நிலையங்களுக்குப் பல சிக்கல்கள் எழுகின்றன. அவர்களின் அன்றாடத் தொழில்நுட்பத் தேவையை நிறைவேற்றிக் கொடுக்க அவர்கள் ஒரு தொழில்நுட்பவிற்பனரை நாட வேண்டியிருக்கின்றது. இதனால் ஒரு ஆசிரியரும் மாணவரும் செய்த வேலைகளைக் கணினி மயப்படுத்துவதிலவர்களின் நேரம் கழிகின்றது. ஒரே வேலையை இருவர் செய்வது போல ஆகின்றது. அப்படிப் பணியில்  இருக்கும்  கணினி வித்தகர்,  பணி மாறிவிட்டால் வேலைகள் அங்கேயேத்  தொங்கி விடுகின்றன,

இந்த நிலையில் கணினியில்  தமிழைத் தட்டச்சு செய்தால் மட்டும் போதுமா? அல்லது தமிழை  வலைப்பூக்களிலும் youtubeலும் இட்டுவிட்டால் மட்டும் போதுமா?

மேலும் இத்தகையத் தரவுகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. எங்கே சேமித்து வைக்கப்படுகின்றன. தமிழ்தரவுகள்   இருப்பதன் சாதக பாதகங்களைச் பொதுமக்களுக்குத் தமிழில் எடுத்துச் சொல்ல வேண்டியக் கடமை  தமிழ்த் துறை பேராசிரியர்களை வந்து சேர்கின்றது.  அது மட்டுமல்ல அடிப்படைத் தேவைகளை மட்டுமே செய்து கொடுக்கும் ஒரு தொழில்நுட்பம் தமிழ் வளர்ச்சிக்கு என்ன உதவி செய்ய முடியும்?

தமிழல்லாது பன்னாட்டு நிறுவனங்கள் செய்து கொடுக்கும் பிற மொழித் தொழில்நுட்பங்களை நாம் சார்ந்து இருப்பதில் உள்ள நன்மைத் தீமைகள் என்ன என்ற விவரமானத் தரவுகள் அரசு அதிகாரத்தில் இருப்பவர்களிடம் சென்று சேர வேண்டுமென்றால் இத்தகைய ஆராய்ச்சிகள் அவசியம். தன்னார்வத் தொண்டு செய்யும் கணினியாளர்களுக்கும் இத்தகைய  ஆராய்ச்சித் தரவுகள்  முக்கியம்.

ஒவ்வொரு ஆசிரிய, மாணவர்களின்  தேவைகள்  ஒரு பொது மனிதத் தேவையைவிட மாறுபட்டு இருக்கின்றன. தமிழகத்தின் ஒரு கல்வி நிலையத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்   இன்னோரு நிறுவனத்திற்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். எனவே ஒவ்வோரு ஆசிரியர், மாணவர்  நிர்வாகிகள் ஆகியோரின் தனித்தனித் தேவையைக் குறித்து ஆராய்ச்சி செய்து அதை விளக்கும் ஆராய்ச்சிகள் கட்டுரைகள் தேவையாகின்றது ஒரு கல்வி நிலையத்தில் இருக்கும் ஒவ்வோரு துறைக்குமே கற்றல் கற்பித்தலில் வேறுபாடுகள் இருக்கும்.அதைக் கூட ஆராய்ச்சி செய்து அதுபற்றிக் கட்டுரைகளையும் ஆய்வுகளையும், செய்யலாம்.

 இன்று தமிழக அரசின் பல  கணினிசார் பணிகள், திறவூற்று மென்பொருட்களை ஆதரிக்கும் வகையில் இருப்பதால் தமிழுக்கான ஒரு தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவது மிக எளிது  இது கல்விக்கான செலவைக் குறைக்கும் ஒரு வழியாகும்.ஆனால் ஒரு வகுப்பின் தனித் தேவைப் பற்றிய விரிவானத் தரவுகள் கிடைத்தாலே   தமிழ்க் கணினியாளர்களாலும் தமிழக அரசினாலும் மிகச் சிறப்பாகப் பணி செய்ய முடியும்.

  தமிழ் மொழிக்கானத் தனித் தொழில்நுட்பம் என்பது, தென் தமிழக மாணவர்களுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தரும். தமிழகத்தை விட்டு அவர்கள் பணிக்காக  வேறு எங்கும் செல்லத் தேவையில்லை. தங்கள் பரம்பரைத் தொழிலேயே, தங்கள்த் தேவைக்கேற்ப  தாங்களேத் தங்களுக்குத் தேவையானத் தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொள்ள இயலும்.

நாம் அந்நிய நாட்டுக் கணினிக் கருவிகளைப் பயன்படுத்தும்போது கணினியை உற்பத்தி செய்யத் தேவையான இயற்கை வளங்கள் வேகமாகச் சூறையாடப்படுகின்றன, உலக மக்கள் முழுவதற்கும்  தேவையான கணினித் தேவையைப் பூர்த்தி செய்வது என்பது எளிதல்ல. உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது அங்குள்ள வளங்களையே மறுசுழற்சி செய்ய வாய்ப்புக்கள் அதிகமாகின்றன. இந்தத் தொலைநோக்குப் பார்வையை மனதில் கொண்டு தமிழ்ப் பேராசிரியர்கள் தங்கள் ஆய்வுகளைச் செய்யலாம். இத்தகைய ஆய்வுகள் வலைப்பூக்கள்  வலைக் காணொலிகள் இவை இரண்டையும்  தாண்டி இன்னும் பலவிதமானக் கல்வி வளங்களைப் பயன்படுத்த  உதவியாக இருக்கின்றன.

Leave a Reply

error: Content is protected !!