இன்று கணினியைப் பயன்படுத்தும் அனைவருக்குமே தமிழில் பேசுவதன் மூலம் நம் கையிலிருக்கும் இயந்திரமேத் தட்டச்சு செய்ய உதவும் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கின்றனர். தமிழ் தட்டச்சு எழுத்துருக்களைப் பற்றிய விவரங்களை அறியாதவர்கள் தங்கள் கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சு செய்ய முதலில் பயன்படுத்தியத் தொழில்நுட்பம் அது. Gboard என்று அழைக்கப் படும் ஒரு சிறு குறுஞ்செயலி தான் அது. இக்குறுஞ்செயலியைப் பற்றிக் கோவை, பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை இணைப் பேராசிரியர், முனைவர் இரா.குணசீலன் அவர்கள் பல பயிலரங்குகளை நடத்தியும் இருக்கின்றார். காணொலிகளும் இட்டுள்ளார். குரல்வழி தமிழில் தட்டச்சு செய்வதை திருச்சி வானதிப் பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் முனைவர் மணிகண்டன் அவர்கள் காணொலிகள் படைத்துள்ளார். பெருதொற்றுக் காலத்திற்குப் பின் செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் ஆங்கில மொழிக்கென மிக விரைவாக வளர்ந்துள்ளது.
எழுத்து சார், பேச்சு சார், தொழில்நுட்பங்கள் பல மொழிக் கருத்துக்களை மொழி தெரியாதவர்கள் பயன் படுத்த எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டாலும் இன்று பல வகைகளில் அவை கையாளப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (sri)முதலில் பேச்சுத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியது. ஆனாலும் இன்று வரை தமிழுக்கானப் பேச்சுத் தொழில்நுட்பத்தில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தவில்லை.
ஒரு சிறு காணொலியைப் பார்த்தால் இதன் பயன்பாடு தமிழில் புரியும்.
இக்காணொலியில் தமிழில் சொல்லும் கட்டளைகளுக்குச் சிரி ஆங்கிலத்தில் பதில் சொல்கின்றது. கூர்ந்து கவனித்தால், பேசுபவரும் பல சொற்களை ஆங்கிலத்திலேயே பேசுவதைக் காணலாம்.
அதன் பின் கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் பலராலும் பயன்படுத்தப்பட்டது.(google assitenat) கூகுள் தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ் உள்பட பல மொழிகளுக்குப் பேச்சுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது, கூகுள் ஒரு தேடுபொறி நிறுவனமேயானாலும், தரவுகளைச் சேகரிக்கும் பொருட்டு இத்தகையத் தொழில்நுட்பத்தைப் பொது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது. கூகுள் தொழில்நுட்பம் வந்தவுடன் தமிழ் கணினிக்கான எழுத்து சார், பேச்சு சார், தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. என்றாலும் தற்போது கூகுள் உதவியாளர் அலைபேசிகளில் பத்து இந்திய மொழிகளை வாசித்துக் காட்டுவதாகத் தெரிகிறது.தமிழில் உள்ள ஆவணங்களைக் கூகுள் உரை ஒருவர் தொகுத்து மாற்றியமைக்க வசதியுடைய உரை ஆவணமாக மாற்றித் தருகின்றது.
தமிழ் உரைநடைகளை வாசிக்கவும், நாம் கூறுவதைத் தட்டச்சு செய்யவும் இன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய உலாவியும், அலுவலக மென்பொருள் தொகுப்பும் சிறப்பாக வேலை செய்கின்றன,
மாதிரிக் காணொலி
திறவூற்று மென்பொருட்களும் இன்று தமிழுக்கான செயற்கை அறிவுத் திறனில் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.
பயர்பாக்ஸ் உலாவியின் தமிழ் மொழி ஆராய்சிக்கான தரவுத் திரட்டலில் நாமும் பங்கு கொள்ளலாம். மின்னூல்களுக்கான ஒரு கட்டற்ற அமைப்பைக் கொண்டு என்ற அமைப்புக் சில விதிமுறைகளையும், சில இலவசமென்பொருட்களையும் புழக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இதைக் கணினி மாணவர்கள் கண்டிப்பாகப் பார்த்துத் தங்கள் சோதனைக் கூடங்களில் ஆராய்ச்சி செய்யலாம்.
The DAISY Consortium என்ற அமைப்பு மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான பல விதிகளையும் உருவாக்கி அவர்களுக்கான தொழிநுட்பங்களையும் அதற்கான மென் பொருட்கள் சிலவற்றையும் இலவசமாகத் தன்னுடைய இணைய தளத்தில் தருகின்றது. இத்தளம் ஒன்றே ஒரு சில ஆராய்ச்சிகளுக்கு வழி வகுக்கும்.
டோபி என்று அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பம் தமிழ் நூல்களை ஒலி வடிவில் ஒரு கணினி வாசித்துக் கொடுக்க உதவியாக இருக்கும். தமிழ் மொழியில் எழுத்துசார், உரைசார் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி கல்வித்துறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். இத்தொழில்நுட்பத்தைப் பற்றியும் கணினி மாணவ மணிகள் ஆராய்சி செய்யலாம்.
உரை சார் இன்றைய தொழில்நுட்பங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்ற மாதிரியை இங்குக் காணலாம்.
முகநூல் அமேசான் மைக்ரோசாப்ட் கூகுள் ஆகிய நிறுவனங்களின் இணையதளங்களைச் சென்று செயற்கை அறிவுத்திறன்பற்றியும் ஆராய்ச்சி செய்யலாம்.