இதுவரை அமெரிக்க தமிழ் அநிதமும், தமிழ் அநிதம் அறக்கட்டளை, இந்தியாவும் இணைந்து தமிழ் கணிமை சார்ந்த பல பயிலரங்கங்களை நடத்தியுள்ளது.முக்கியமாக இதுவரை மூன்று பன்னாட்டு கல்விக்கானத் தொழில்நுட்ப மாநாடுகளையும் நடத்தியுள்ளது. இரு மாநாடுகள் இணையத்திலும் ஒன்று நேரடியாகவும், இணைய வழியாகவும் திண்டுக்கல் பார்வதீஸ் கலைக் கல்லூரியிலும் நடத்தியுள்ளது, வரும் தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி) சிவகாசியில்
நான்காவது பன்னாட்டு கல்வியியல் மாநாடு – 2023
“தமிழ்மொழி வளா்ச்சியில் கணினிசார் தொழில்நுட்பமும் கல்வி வளங்களுக்கான காப்புரிமையும்”
(Fourth International Educational Conference – 2023
Computer Technology for Tamil Language Development & Copyright for Educational Resources)
என்றத் தலைப்பில், 2023 திசம்பர் 19, 20 களில் நேரடியாகவும், இணையம் வழியாகவும் நடக்க உள்ளது. முதல் நாள் மாநாடும், இரண்டாம் நாள் பயிலரங்கமும் நடைபெற உள்ளது.
முதல் இரு மாநாடுகளின் மூலம், பேராசிரியர்கள் இணையம் வழி பயிலரங்கங்களைப் பற்றிய அனுபவத்தைத் தெரிந்து கொண்டனர். மூன்றாம் ஆண்டு முதன் முதலாக நேரடியாக மாநாடு நடத்தபட்டு இணையம் வழி சந்தித்தவர்கள், நேரிலும் சந்தித்துக் கொண்டனர். நான்காம் ஆண்டின் மாநாட்டை இன்னும் சிறப்பாக நடத்தும் வகையில்
தமிழ் அநிதம் அமெரிக்கா, தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி) சிவகாசி, ஓயிஸ்கா நிறுவனம், தமிழ் நாடு இந்தியா, உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் அமெரிக்கா, மொழியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், சைவபானு சத்திரிய கல்லூரி, அருப்புக்கோட்டை, பார்வதீஸ் கலைஅறிவியல் கல்லூரி, திண்டுக்கல், ஜி.டி.என் கலைக்கல்லூரி, (தன்னாட்சி) திண்டுக்கல், ஸ்ரீஎஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி(தன்னாட்சி), சாத்தூா், பாரதித் தமிழ்ச்சங்கம், பகரைன், நாகூர் தமிழ்ச் சங்கம், நாகூர், வல்லமை (மின்னிதழ்), முத்துக்கமலம் (மின்னிதழ்), தமிழ் அநிதம் அறக்கட்டளை, இந்தியா ஆகிய நிறுவனங்கள் மீண்டும் கைக்கோர்த்துள்ளன.
மாநாட்டுத் தலைப்புக்கள், பின் வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழும் அறிவியலும் இணைந்து செயலாற்ற வேண்டிய களங்கள்
தமிழ்மொழி வளா்ச்சிக்கு உருவாக்கப்பட வேண்டிய மென்பொருட்கள்
கணினியில் பயன்படுத்தப்படும் எழுத்துசார் தொழில்நுட்பம்
கணினியில் பயன்படுத்தப்படும் பேச்சுசார் தொழில்நுட்பம்
பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர், இரா. குணசீலன் வழங்கும் காப்புரிமையைப் பற்றியப் பொது தகவல்கள்
இணைய நூலகங்கள் 1
இத்தலைப்புகள் தமிழ்க் கணிமையில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி என்ற நோக்கில் கொடுக்கபட்டுள்ளன.தமிழ் பயனளார்களில் முதன்மை வகிப்பது தமிழ்ப் பேராசிரியர்களே! அவர்களின் பங்கு தமிழ் கணிமையில் மிக அத்தியாவசியமானது. கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுப்பதால் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ் கணிமைப் பயன்பாட்டிற்கும் பேராசிரியர்களின் கட்டுரைகள் ஒரு சிறந்த வளமாக அமையும். தமிழ்க் கணிமை பயனாளர்கள் இருந்தால் மட்டுமே தமிழ் மொழியில் பணி வாய்ப்புகளும் சுயத் தொழிலும் அதிகரிக்கும். தற்சார்புத் தமிழ்க் கணிமை தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அடுத்த தலைமுறைத் தமிழுக்கும் தேவையான ஒன்று.