முதல் புரிதல் ஒரு படைப்பின் ஆதாரத்தளமாகப் பயன்படுத்தபப்டும் வளங்கள் முறையாக அடையாளப்படுத்த வேண்டும். படைப்புக்களின் வகை கொண்டு
ஒவ்வோருக் கருத்தும் கற்பனா சக்தியும் வேறுபட்டு இருந்தாலும், ஒரு அக்கருத்துக்கள் ஒத்துப் போவதற்கும், முரண்பட்டு இருப்பதற்கும் வாய்ப்புக்கள் அதிகம். அப்படி கருத்துக்களைச் சேகரித்து, ஒரு கட்டுரையாளர் தங்கள் கட்டுரையில் இணைத்துத் தங்கள் கருத்துக்களை வலுவூட்டுவது மிக முக்கியமாகும். இவ்வகைச் செயல்பாடு ஒரு கட்டுரையின் ஆராய்ச்சித் தன்மையை அளவிடும் கோலாக இருக்கின்றது. ஒரு படைப்பாக்கத்தில் இன்னுமொரு படைப்பஐ எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அப்படியே செருகும்போது தான் அது கருத்துத் திருட்டு எனப்படுகின்றது. எனவே கட்டுரையாளர் குறிப்பிடும் கருத்துக்களுக்கு ஆதாரங்களைக் கட்டுரைகளுக்குள்ளும் இறுதியிலும் இட வேண்டும்.அப்படி சரியானக் குறிப்புகள் காட்டப்படாதபோது அது கருத்துத் திருட்டு எனக் கூறப்படுகின்றது.
துணைப்பட்டியலில் உள்ள நூல்களிலிருந்து எந்தக் கருத்து, கட்டுரையில் காட்டப்பட்டிருக்கின்றது, அதனால் கட்டுரையாளர்கள், அதை ஏன் கட்டுரைகளிலும் மற்றப் பொருண்மைகளிலும் பயன் படுத்துகின்றோம் என்பது துல்லியமாகத் தெரிந்து அதன்படி விவரங்களை இட வேண்டும்.
சான்றுரைக் கொடுப்பது என்பதைப் பற்றி அமெரிக்க தேசத்தில் இண்டியான மாகாணத்தில் உள்ள பிரிடுயு பல்கலைக்கலழக ஆங்கிலத் துறையின் இணைய தளம் சிறப்பான விளக்கத்தை எளிய ஆங்கிலத்தில் கொடுக்கின்றது. https://owl.purdue.edu/owl/research_and_citation/resources.html
இத்தளம் அனைத்துத் தர எழுத்தாளர்களுக்கும் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். இத்தளத்தின் கூற்றுப்படி, ஒரு துறைக்கு ஒரு வகையென ஐந்து முக்கியவகையில் சான்றுரைகள் உள்ளன APA style(American Psychological Association Style), MLA style (Modern Language Association)CMS(Chicago Manual of Style)IEEE (Institute of Electrical and Electronics Engineers), AMA(American Medical Association) என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கின்றது. அனைத்து சான்றுரைப் பாணிகளும் அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்டு புதியப்பதிப்புகளாக வெளியிடபடுகின்றது.
முதலாம் வகையான, APA style(American Psychological Association Style) மனதத்துவ சாஸ்திரங்கள், சமூக அறிவியல், மானுடவியல் போன்றப் பிரிவுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. கல்வியியல்த் தொழில்நுட்பக் கட்டுரைகள் மானுடவியல், சமூகவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் ஆகையால் அவற்றிற்கு APA style பாங்கைப் பின்பற்ற வேண்டும், இரண்டாம் வகையான MLA(Modern Language Association) அதன் பெயரைப் போல மொழி சார்ந்த ஆராய்ச்சிகள் கட்டுரைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. மூன்றாவது சான்றுரைப் பாங்கு இப்போது தமிழர்களிடம் பரவலாகப் பயன்படுத்தப்படுவது ஆகும். அடிக்குறிப்புகள், துணைநூல் பட்டியல் கொண்டு ஆதாரங்களைத் தரக்கூடியது தான் CMS(Chicago Manual of Style)இறுதியிலிருக்கும் இரண்டும் பொறியியல், மருத்துவம் ஆகியவற்றின் சான்றுரைப் பாங்குகளாகவும் இருக்கின்றது.
ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைக்குத் துணைசெய்த வளங்களை வழங்கும்போது, கட்டுரையின் உள்ளே மேற்கோள் காட்டிச் சொல்லப்படும் கருத்துக்களுக்கு அருகிலேயே உரையுள் சான்றுரை(in text citation) வழங்க வேண்டும். அவ்வாறு உரையுள் சான்றுரை வழங்கும்போது ஒவ்வோரு பாங்கிற்கும் ஏற்றவாறு அமைக்க வேண்டும். APA styleல் ஆசிரியரின் பெயர், வெளிவந்த ஆண்டு இரண்டையும் கொடுத்தால் வேண்டும். மொழிக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஆசிரியரின் பெயர், கருத்துள்ளப் பக்க எண் என்றுக் குறிப்பிட வேண்டும். CMS வகைக் கட்டுரைகளில் ஆசிரியர், தேதி என்றுக் உரையுள் சான்றுரை வழங்கல் வேண்டும்.
பேராசிரியர்கள் பிடிக்கும் கட்டுரைகளில் எத்தகைய சான்றாவணங்கள், பயன்படுத்தப்பட்டுள்ளன, அவை கொடுக்கப்பட்ட வகை இலக்கியத்திற்குப் பொருத்தமாக இருக்கின்றதா என்பதே ஒரு பெரிய ஆராய்ச்சித் திடல்
சான்றுரை வழங்க உதவும் தொழில் நுட்பங்கள். என்று பார்க்கும்போது இப்போது பயன்பாட்டில் அதிகமாக இருக்கும் மைரோசாப்ட் சொற்செயலி (வேர்ட்) முன்னணியில் உள்ளது. இது இலவசமாக இத்தொழில்நுட்பம் சொற்செயலுக்குள் ஒளிந்து இருக்கின்றது. அதேபோலத் திறவூற்றுத் தொழில்நுட்பமான லிப்ரே ஆஃபிஸ் எழுதியிலும் இத்தொழில்நுட்பம் உள்ளது.
கட்டுரையாளர்கள், இவ்விருத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சான்றுரைகள் தயாரிப்பது மிகவும் எளிது என்பதோடு, நூலில் இடும் சான்றாவணங்களின் பட்டியலை, தரவுகளாகவும் சேமிக்க முடியும்.
இவை இரண்டு தவிர
https://www.citationmachine.net/
https://www.scribbr.com/citation/generator/
போன்றத் தொழில்நுட்பங்கலும் பயன்பாட்டிற்குக் கிடைக்கின்றன. இத்தொழில்நுட்பங்களை மாணவர்கள் பயன்படுத்தி அவற்றின் செயல் முறைகளை விளக்கிக் கட்டுரைகள் படைக்கலாம்.