முனைவர் இரா. அருணா
மொழியியல் ஆய்வாளர்,
8/1, காந்திபுரம் ரோடு,
கள்ளிப்பட்டி,
கோபிசெட்டிபாளையம் – 638452
Research Summary
Learning takes place using general concepts for thinking in general. Thinking is an internal process. We denote general ideas by words. Therefore, thinking can be done better only when the meaning of the words is well understood. Learning takes place through the use of symbols, models, plans, etc. along with language during thinking. This article explores the use of memes to facilitate learning in Tamil grammar. Using memes to teach grammar is explained here.
Reference words
Students, Thinking, Inner Pentacles, Psychology, Memes, Internet, Learning, Teaching.
முன்னுரை
மாணவர்கள் தங்களின் தினசரி வாழ்நாளில் கிடைக்கப்படும் அனுபவத்தின் மூலம் அவர்களின் அறிவுநிலையில் ஏற்படும் மாற்றத்தினையும் விதிவருமுறை இலக்கண விதியினைக் கற்பிக்கும் போது கொடுக்கப்படும் எடுத்துக்காட்டுகளுக்கு தொடர்புடைய மாணவர்கள் அறிந்த திரைப்படத்திலிருந்து உருவாக்கிய மீம்ஸ் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு கற்பிப்பதால் நன்கு கற்க முடிகிறது. அகத்திணைகளையும் புறத்திணைகளையும் விளக்குவதற்கு கணினி வழியாக (பனுவல்கள்(PPT), Word file, PDF) மீம்ஸ் எடுத்துக்காட்டுகளைக் கொண்டு கற்பிக்கும் முறையினை இவ்வாய்வுக் கட்டுரை மூலம் கீழே விளக்கப்படுவதை இனி காண்போம்.
கற்பனைத் திறன் வளர்த்தலில் மீம்ஸ் வழி கற்றலின் பங்கு
நாம் முன்னர் அனுபவித்த ஒரு நிகழ்ச்சியை மீண்டும் மனக் கண் முன் நிறுத்தி, அதனை உணர்தல் ஒருவகைக் கற்பனையாகும். இதனை நினைவு என்பர். “பழைய புலன்காட்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றின் சாயல்களையும் அவற்றினின்றும் பெறப்படும் எண்ணங்களையும் புதிய முறையில் அமைத்தலே கற்பனையாகும்”. இப்புதிய முறையில் எண்ணங்களை அமைப்பதற்கு இங்கு மீம்ஸ்களை பயன்படுத்துகிறோம். எனவே, தமிழ் இலக்கணம் கற்பதில் மாணவர்கள் ஆர்வமுடன் கற்க ஏதுவாக அமைகிறது. இதற்குக் காரணம் மீம்ஸ்களின் வழி கற்கும் போது அக கற்பனைக் காட்சிகள் பிம்பம் போல் தோன்றுவது ஆகும். ஆதலால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்க முடிகிறது.
(நற்றமிழ் கற்பிக்கும் முறைகள் – பேராசிரியர் வி. கணபதி – முதல் பதிப்பு–ஏப்ரல்2002 – சாந்தா பப்ளிஷர்ஸ், முத்துவிழா இல்லம், 13(5)ஸ்ரீபுரம் 2வது தெரு, இராயப்பேட்டை, சென்னை-6000014 – ப-9)
தமிழ் இலக்கணம் கற்பித்தலில் மீம்ஸ்கள் பயன்படுதுவதின் உளவியல் காரணிகள்
மாணவனின் நுண்ணறிவு, ஊக்கம், மனப்பான்மை, மனவெழுச்சி, அக்கறை, பற்று என்பன ஆளுமை வளர்ச்சிக்குக் காரணங்களாக அமைகின்றன. மாணவர்களுள் மெல்லக் கற்பவர்களும் இவ்வுலகில் பிறந்து வாழ்கின்றனர். ஆனால் அவர்களுடைய ஆளுமையில் தோன்றும் வேறுபாட்டிற்குக் காரணம் நுண்ணறிவேயாகும். அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டவர்கள் விரைவில் வெற்றியும், குறைந்த அளவில் ஊக்குவிக்கப்பட்டவர்கள் குறைவான வெற்றியும், பெறுகிறார்கள். அவர்களின் ஆளுமை வேறு பாட்டிற்குக் காரணம் குறைந்த அளவு ஊக்கமே ஆகும். எனவே மாணவர்களின் நுண்ணறிவைத் தூண்டும் வகையில் கணினியில் தமிழ் இலக்கணம் கற்றலின் பாடத்திட்டம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும் போது மாணவர்களுக்கு தமிழ் இலக்கணத்தின் மீது ஆர்வத்தை உண்டாக்குகிறது.
கணினியில் தமிழ் இலக்கணம் கற்பதில் ஏற்படும் சிக்கல்களை அதாவது தமிழ் இலக்கணத்தைக் கற்பதில் ஆர்வமின்மை, கடினம், மனனம் செய்வதில் சிக்கல்களை தவிர்க்கவே மீம்ஸ்கள் எடுத்துக்காட்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் கற்பதில் மாற்றம் ஏற்பட்டு கற்கும் மாணவர்களிடையே மனமகிழ்வு, புதுமை, சிந்தனைத்திறன் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் இலக்கண அறிவை எளிமையாக பெறமுடிகிறது. தமிழ் இலக்கண அறிவைப்பெறுவதால் பிழையின்றி பேசவும் எழுதவும் முடிகிறது.
மீம்ஸ் என்பது அறிவின் தன்மைக் கொண்டு மெய்பாடுக்ள மூலம் சிந்தித்தலே ஆகும்.
மீம்ஸ்கள் உருவாக்கும் வழிமுறைகள்
மீம்ஸ்களை உருவாக்க பயன்படுவதில் முக்கியப்பங்கு வகிப்பது செல்பேசி ஆகும். செல்பேசியில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் இடத்திற்குச் சென்று, மீம்ஸ் உருவாக்கும் செயலிகள் என்று பதிவிட்டால் மீம்ஸ் உருவாக்கும் செயலிகளை காண இயலும். இதிலிருந்து தேவையான செயலிகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.
படி – 1
- மீம்ஸ் உருவாக்குவதற்கு முதலில் அதற்கான Google play store – ல் meme creator app – என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
- அதன் பின் வரிசையாக வரும் செயலிகளில் தமிழ் இலக்கணம் மீம்ஸ்கள் உருவாக்க தேவைப்படும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
படி – 2
- Meme Templates, Meme Generator – என்ற இரண்டு செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
படி – 3
- முதலில் இலக்கண மீம்ஸ்களை உருவாக்க Meme Templates என்ற செயலியினுள் செல்ல வேண்டும்.
- பாடத்திற்கு தேவையான மீம்ஸ் படங்களை தேர்வு செய்ய வேண்டும்.
படி – 4
- Meme Generator – செயலியினுள் சென்று custom meme – என்ற பொத்தானை அழுத்தி Meme Templates – என்ற செயலி மூலம் சேகரித்து வைத்துள்ள படங்களை பாடத்திற்கு ஏற்ப இங்கு உள்ளீடு செய்ய வேண்டும்.
படி – 5
- Meme Generator – ல் உள்ளீடு செய்த Meme Templates – ன் படங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது போல் காணமுடியும்.
- நமக்குத் தேவையான பாடத்தலைப்பைத் தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்ய வேண்டும்.
- தட்டச்சு செய்த பாடத்தலைப்பிற்கு ஏற்ற எழுத்தின் வடிவம், அளவு, வண்ணம் மாற்றிக் கொள்ள முடியும்.
மீம்ஸ்கள் மூலம் ஐந்திணைகளின் விளக்கம்
ஐந்திணைகளை கணினியில் கற்பிக்க மிகவும் எளிய வழி மீம்ஸ்களை பயன்படுத்துவது ஆகும். ஐவகை நிலங்களை கற்பிக்க முன்பு அந்நிலத்தின் படங்களை உபயோகித்து கற்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீம்ஸ்கள் வழி எளிமையான வழியில் கற்பித்தல் பற்றி இங்கு காண்போம்.
- குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடம்
- முல்லை – காடும் காடு சார்ந்த இடம்
- மருதம் – வயலும் வயல் சார்ந்த இடம்
- நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடம்
- பாலை – மணலும் மணல் சார்ந்த இடம்
இவ்வாறு மீம்ஸ்கள் மூலம் கற்பிக்கும் போது எளிமையாக மாணவர்கள் கற்க இயலும் என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் உணர்த்துகிறது.
முடிவுரை
தமிழ் இலக்கணம் கற்பித்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கணினி வழியாக அகத்திணை இலக்கணம் கற்பித்தல் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் உளவியலுக்கு ஏற்ப தமிழ் இலக்கணம் எளிய முறையில் கணினி வழியாக மீம்ஸ் மூலம் கற்பித்தல் பற்றி இவ்வாய்வுக் கட்டுரையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு பயன்படுத்திய நூல்கள்
- உளவியல் நோக்கில் கற்றலும் மனித மேம்பாடும் – பேராசிரியர் கி. நாகராஜன், தேவ. சீத்தாராமன் – முதல் பதிப்பு- செப்டம்பர்,2013 – ஸ்ரீராம் பதிப்பகம், 74B/1, விவேகானந்தர் தெரு, காந்தி நகர், சாலிகிராமம், சென்னை – 600093.
- சுப்பிரமணியன் ச.வே. – தொல்காப்பியம் முழுவதும் விளக்கவுரை, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்-608001 – சூன் 2008.
- பொதுத் தமிழ் கற்பித்தல் – டாக்டர் இ.பா.வேணுகோபால், க. சாந்தகுமாரி – முதல் பதிப்பு-செம்டம்பர்2013 – சாரதா பதிப்பகம், சென்னை-600014.
- நற்றமிழ் கற்பிக்கும் முறைகள் – பேராசிரியர் வி. கணபதி – முதல் பதிப்பு-ஏப்ரல்2002 – சாந்தா பப்ளிஷர்ஸ், முத்துவிழா இல்லம், 13(5)ஸ்ரீபுரம் 2வது தெரு, இராயப்பேட்டை, சென்னை-6000014.
- தமிழ்-இலக்கியம் இலக்கணம் – பதிப்பாசிரியர்கள்- ஆ. விஜயராகவன், எ. பச்சையப்பன், டாக்டர்.கு.கண்ணன் – முதல் பதிப்பு-ஆகஸ்ட்2014 – பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014.
- தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம் – முனைவர். தேவிரா(இரா. இராசேந்திரன்), பதிப்பாசிரியர்- முனைவர். திருமதி ச. கனலட்சுமி – முதல் பதிப்பு-2007 – நந்தினி பதிப்பகம்,38/16, முதல் தெரு, வெல்கம் காலனி, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், சென்னை-101.
- தொல்காப்பிய ஆய்வுத் தெளிவுகள் – பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு – முதல் பதிப்பு-ஆகஸ்ட்,2016 – மணிவாசகர் பதிப்பகம், 31,சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600108.
ஆய்வுக்கு பயன்படுத்திய செயலிகள்
- Meme Creator&Templates
- Meme Maker&Creator by Memeto
- Meme Generato