க.சத்தியகலா,
முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு,
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்Y}ரி, சிவகாசி.
Abstract
In today’s computer world many technologies won’t work without internet. From Wikipedia to Google Classroom for all these aspects internet is mandatory. This article is about learning through offline teaching tools such as talking books and pens. And also a note about Mantra Lingua providing these offline teaching tools.
குறிச்சொற்கள்
மொழி கற்பிக்கும் கருவிகள், இருமொழி புத்தகங்கள், PENpal
முன்னுரை
மொழி கல்விக்கு வாசிப்பும் எழுத்தும் முக்கியமாகும். நம்மிடையே இன்று வாசிப்பு பழக்கமும் அருகி வருகிறது. குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும்போது இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் படிக்கும் புத்தகமும் எழுதும் பேனாவும் அவர்களுடன் பேசினால் பாடம் கற்கும் முறை எளிதாகிவிடும். இந்த இரண்டு மொழி கற்பிக்கும் கருவிகளையும் அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்தும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
மொழி கற்பிக்கும் கருவிகளும் பயன்களும்
மொழி கற்பிக்கும் கருவிகளுள் குறிப்பிடத்தக்கவை பேசும் பேனாக்கள் (Talking Pens) மற்றும் (Talking books) ஆகும். இந்தியாவில் ஆதர்ஷ் நிறுவனமும்(Aadarsh Technosoft Pvt Ltd) இலண்டனில் மந்த்ரா லிங்குவா நிறுவனமும் (Mantra Lingua) இவற்றை வழங்குகின்றன. MPR எனப்படும் Multimedia Print Reader-ஐ ஆதர்ஷ் நிறுவனமும் PENpal-ஐ மந்த்ரா லிங்குவா நிறுவனமும் வழங்குகின்றன. இந்த வகை கருவிகளை பயன்படுத்தும்பொழுது கணினியிலோ பிற சாதனங்களிலோ நேரம் செலவிடுவதைத் தவிர்க்க முடிகிறது. நாமே கற்றுக் கொள்ளும் திறன்(Self learning) வளர்கிறது.
பேசும் பேனாக்களும் புத்தகங்களும்
கணினியில் மட்டும்தான் ஒலிப்பதிவு செய்து கேட்க முடியும் என்பதைக் கடந்து புத்தகத்திலும் ஒலிப்பதிவு செய்து கேட்க முடியும் என்பதை இந்நிறுவனங்கள் நிரூபனம் செய்கிறது. இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் புத்தகங்கள் அனைத்துமே மூன்று முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கானதாகும். மேலும் குழந்தகளுக்கானது என்பதால் அதிக அளவில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
PEN pal செயல்படும் முறை
PENpal எனும் பேசும் பேனாவை ஒலிப்பதிவு செய்யப்பட்ட புத்தகத்தின் மேல் வைத்தால் புத்தகத்தில் உள்ள தொடர்களை வாசிக்கும். இது இருமொழி புத்தகம் என்பதால் ஆங்கிலத்திலும் பதிவு செய்யப்பட்ட அறுபதிற்கும் மேற்பட்ட மொழிகளையும் வாசிக்கும்.
PENpal எவ்வாறு செயல்படுகிறது என்றால் பார்கோட் ரீடரின்(Barcode Reader) செயலை போன்றதாகும். ஒவ்வொரு புத்தகத்தின் பக்கங்களிலும் Micro Barcodes அமைப்பு இருக்கும். PENpal-ஐ அதன்மீது வைக்கும்பொழுது அந்த பக்கத்திற்குரிய பார்கோடை அது கண்டறிந்ததும் முன்னமே பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவை ஒலிக்கச் செய்யும். மற்றுமொரு சிறப்பம்சம் எனில் இது ஒரு ஒலிவாங்கியும்( Microphone) ஆகும். 16GB நினைவகம் கொண்ட PENpalல் நாமே ஒலிப்பதிவு செய்தும் கொள்ளலாம்.
PEN pal-ன் நன்மைகள்
- வாசித்தலில் சிரமம் இருக்கும் ( Dyslexia) குழந்தைகளுக்கும்,
- பார்வைத்திறன் குறைவுற்றவர்களுக்கும் ( Visually Impaired)
- கற்றலில் சிரமப்படும் குழந்தைகளுக்கும் Special Educational Needs and Disability (SEN),
- Modern Foreign Languages(MFL) தற்போது பேசப்படும் ஸ்பானிஷ் , ஜெர்மன் போன்ற மொழிகள் பேசுபவர்களுக்கும்,
- ஆங்கிலத்தை முதல் மொழியாக கொள்ளாதவர்களுக்கும் English as an Addtional Language(EAL),
இந்த இருமொழி புத்தகங்களும், PENpal கருவியும் வழியாக சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்க முடியும்.
இருமொழி புத்தகங்கள்
இருமொழி புத்தகம் (Bilingual or Dual language Book) என்பது இரண்டு மொழிகளில் எழுதப்பெற்றிருக்கும். புத்தகத்தின் ஒரு பக்கத்தில் ஒரு மொழியிலும் அடுத்த பக்கத்தில் மற்றொரு மொழியிலும் மொழிபெயர்த்து கொடுக்கப்பற்றிருக்கும். மந்த்ரா லிங்குவா நிறுவனம் ஆங்கில மொழியை அடிப்படையாக வைத்து கீழே குறிப்பிட்டுள்ள மொழிகளில் இருமொழி புத்தகங்களையும் தயாரித்து வெளியிடுகிறது.
Albanian | Chinese Mandarin | Fasi | Hungarian | Lithuanian | Pashto | Shona | Thai |
Arabic | Cholitho Bhasha | French | Irish | Malay | Patios | Slovakian | Tigrinian |
Armenian | Croatian | French only | Italian | Malayalam | Polish | Somali | Tigrinya |
Bengali | Czech | German | Japanese | Mandarin | Polish & Nepali | Spanish | Turkish |
Bosnian | Danish | Greek | Kalderash | Mexican Spanish | Portuguese | Swahili | Ukrainian |
Brazilian Portuguese | Dari | Gujarati | Karen(Sgaw) | Nepali | Romanian | Swedish | Urdu |
Bulgarian | Dutch | Haitian Creole | Korean | Norwegian | Russian | Sylheti | Vietnamese |
Burmese | English | Hebrew | Kurdish | Orcadian | Scottish Gaelic | Tagalog | Welsh |
Cantonese | English only | Hindi | Kurdish Kurmanji | Oromo | Sgaw Karen | Tamil | Yiddish |
Cherokee | Farsi | Hmong | Latvian | Panjabi | Shilluk | Telugu | Yoruba |
படைப்பாளர்களை வரவேற்கும் தளம்
மந்த்ரா லிங்குவா நிறுவனம் தங்களின் புத்தகங்களுக்கு பல்வேறு பின்னணியில் உள்ள எழுத்தாளர்களை வரவேற்கிறார்கள். படைப்புகள் அன்றாட வாழ்வியலை எடுத்துரைக்க வேண்டும் என்றில்லை. கற்பனை படைப்பாக அமைதல் நன்று. இருபத்து நான்கு பக்க படப்புத்தகங்களுக்கு ஏற்றவாறு படைப்புகளை அவர்களின் info@mantralingua.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முடிவுரை
தமிழ்மொழியை உலகிலுள்ள அனைத்து வகுப்பறைகளுக்கும் எடுத்துச்செல்ல இருமொழி பதிப்பமகமான மந்த்ரா லிங்குவா நிறுவனம் உதவியாக இருப்பதையும் அவர்களின் பயிற்று முறையில் இருக்கும் பேசும் பேனாக்கள் வழி மொழியை எளிதில் புரிந்துகொள்ளும் தன்மையையும் அறிந்துகொள்ள முடிந்தது.