க.ராஜாமணி,
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),
சேலம்-636007
ஆய்வுச்சுருக்கம்
பரபரப்பான இன்றைய கணினி யுகத்தில் நூலகம் சென்று படிப்பதற்கான நேரமும் காலமும் சரிவர அமைவதில்லை என்றுதான் கூற வேண்டும். அந்நிலையை மாற்றும் விதமாக கணினியின் வாயிலாக எளிய முறையில் நூல்களையும் அன்றாட நிகழ்வினை கூறும் இதழ்களும் படிப்பதற்கான வசதிகள் இணையத்தின் மூலம் பெறப்படுகிறது என்பன நாம் அறிந்த ஒன்றாகும். அதுமட்டுமின்றி தமிழில் அச்சு நூல்களைப் போன்று அவற்றை விட ஆழம்படுத்தப்பட்ட வசதிகளுடனும் இணையவழியில் மின் நூல்கள் வெளியாகி வருகிறது. அச்சு வடிவில் வெளிவந்த நூல்கள் மின் நூலகம் ஒவ்வொருவரின் இல்லத்திற்கே செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் படிப்பவரின் நேரமும் அதிகரிக்கிறது. மேலும் இன்றைய காலகட்டத்தில் பல மின்னியல் நூலகங்கள் உருவாக்கிக் கொண்டு இருப்பதை கண்கூடாக காண முடிகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக 22 மொழிகள் உள்ளது என்பது நாம் அறிந்த ஒன்று அவற்றில் தமிழ் மொழி சார்ந்த நூல்களே அதிகமாக மின் பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாக சங்க கால முதல் நவீன காலம் வரையிலான நூல்கள் எண்ணிம நூலகம் மதுரை திட்டம் போன்ற மின் நூலகமும் தமிழ் இணைய கல்வி கழக மின் நூலகத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு பின்னர் மின் நூல்களாகவும் மற்றும் ஓலைச்சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வெளிவருகிறது இவ்வமைப்பு தமிழ் மொழி வளர்ச்சிக்கு இணையத்தின் வாயிலாக பல்வேறு பணியினை செய்து வருகிறது .
முன்னுரை
தமிழ் மொழி காலம் தோறும் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்ட பொழுதும் ,தொடர்ந்து பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது . அதன் விளைவாக தமிழ் மொழியின் இலக்கிய இலக்கண நூல்களைக் கணினியில் சேமித்து வைக்கும் வேலையை அரசும் அரசு சார்புடைய அமைப்பும் மற்றும் தனியார் நிறுவனங்களும் தமிழ் ஆர்வலர்களும் தமிழ் மொழியின் சிறப்பினை எதிர்கால மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடைமுறைச் செயல்களை செய்து வருகிறார்கள். மேலும் மைசூரை தலைமை இடமாகக் கொண்டுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் சென்னையில் தமிழ் மொழிக்கென மிக சிறப்பாக இயங்கி வரும் தமிழ் இணையக் கல்வி கழகமும் இணைந்து தமிழ் நூல்களைக் இணையத்தை சேமிக்கும் வேலையை அதிவேகமாகவும் மிகவும் எளிய முறையிலும் அனைவருக்கும் பயன்படும் வகையிலும் செய்து வருகின்றன இன்றைய காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பல அரிய வகை நூல்களை முன்னோர்களின் வழியே மரபு மாறாமல் இணையத்தில் ஏற்றம் பெறசெய்து அதனை அவரவர் இருக்கும் இடத்திற்கே மின் நூலகத்தின் வாயிலாக படித்துக் கொள்ளவும் தேவைப்படும்போது பதிவிறக்கம் செய்து கொள்ளவும் உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை மேலும் இணையத்தில் உள்ள தமிழ் மின் நூலகத்தில் தகவல்களும் அதில் இடம்பெறும் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களும் மற்றும் சங்க இலக்கியம் காப்பியங்கள் சமய இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் உரைநடை நூல்கள் நாட்டுப்புற இலக்கியங்கள் அகராதிகள் கலைச்சொற்கள் என்ற பல்வேறு வகையான நூல்கள் மின் நூலகத்தில் இடம்பெற்றுள்ளன என்பதை விரிவாக இக்கட்டுரையின் மூலம் விவரிக்கப்படுகிறது .
மின் நூலகம்
21 ஆம் நூற்றாண்டின் மனிதன் கண்டுபிடிப்பில் இணையற்ற அறிவியல் சாதனமாக விளங்க கூடியது கணினியாகும். கணினியில் நூல்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் பணியை உலகில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொழியியல் அறிஞர்கள், ஆர்வலர்கள் முன்னெடுத்து செய்து வந்தனர். இணைய வழி கல்வியில் முக்கியமான இடத்தை பெற்றது மின் நூலகமாகும். மேலும் கணினியின் பயன்பாட்டில் செயல்படும் அனைத்து நூலகங்களும் மின் நூலகத்தை உருவாக்கி அதனை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன இப்பணியை செய்து வரும் வரலாற்றுப் புகழ் நிறைந்த நூலகங்களே! இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய மேற்கு வங்கத்தின் தலைநகராக இருக்கும் கொல்கத்தாவில் இயங்கி வரும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தினால் ( Indian Institute of science Learning) ,1999 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நளந்தா மின்னூலகம் தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய மின் நூலகம் ஆகும். அதுமட்டுமின்றி பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனமாக (Indian Institute of science ),அமைந்திருக்கும் மின் நூலகமும் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் முக்கியமான 21 நிறுவனங்களும் ஒன்றிணைந்து இந்த மின் நூலகத்தில் தமிழ்நாட்டின் பண்பாட்டு பாரம்பரியத்தின் எண்ணிலடங்கா பெருமைகளை உலக மக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக பழமை வாய்ந்த இலக்கிய, இலக்கணம் மற்றும் ஓலைச்சுவடிகளை பாதுகாத்தும் அவற்றை நூல் வடிவம் கொடுப்பதற்கான பணியை Tamil Heritage Foundation என்ற அமைப்பை உருவாக்கியவர் அறிவியல் அறிஞரும் பேராசிரியருமான என். பாலகிருஷ்ணன் ஆவார் .மேலும் இந்தியர்கள் அதிகமாக வாழும் நாடான சிங்கப்பூர், இலங்கை ,மலேசியா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் முதலிய நாடுகளில் கிடைக்கும் தமிழ் பாரம்பரிய மிக்க நூல்களும் பல்வேறு செயல்பாடுகளும் நிறைந்த நிகழ்வுகளைச் சேகரித்துப் பாதுகாத்து வரும் பணியை இம்மின் நூலகம் செய்து வரும் பணி தமிழ் மொழி வளர்ச்சிக்கு கிடைத்த வரமாகும்.
மின் நூலகத்தின் தோற்றம்
இல்லினாயி பல்கலைக்கழகத்தில் ( University of Illinois) ,பணியாற்றி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் எஸ். ஹார்ட் Michael S.Hart என்ற ஆய்வு திட்டத்தின் கீழ் ஆவணங்களும் பண்பாட்டு பாரம்பரியம் தொடர்பான நூல்களை சேகரித்து பாதுகாத்து உருவாக்கியதே முதல் மின் நூலகமாகும் என்பர். மேலும் வல்லரசு நாடான அமெரிக்காவில் உள்ள டப்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Tufts) , பழைய கிரேக்க இலக்கியங்களையும் அதன் தொடர்பான முக்கிய செய்திகளையும் பெர்சியஸ் ஆய்வுத் திட்டத்தில் பெர்சியஸ் மின் நூலகம் என்று ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1995 ஆம் ஆண்டில் உலகளாவிய நிலையிலும் செயல்பட்டு வரும் இணையதளமான www. World wide web ,வெளியிட்டார் இச்செய்திகள் பேராசிரியர் ,டாக்டர். ம.செ.இரபிசிங் உருவாக்கிய தமிழ் இணையம் தமிழ் வலைதளங்கள் என்ற நூலின் மூலமாக அறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணிம நூலகம்
எண்ணிம நூலகம் என்பது எண்ணிம அல்லது மின்னியல் முறையில் நூல்கள், படங்கள் ,மற்றும் ஆவணங்கள் போன்ற தகவல் தொகுப்புகளை சேகரித்து பாதுகாத்து வைக்கும் கணினி வழியாக அணுகக் கூடிய மின் நூலகம் ஆகும் .அதுமட்டுமின்றி எண்ணிம உள்ளடக்கங்களை Digital Content ,கணினி இணையம் மூலமாக தொலைவிலிருந்தே அணுகிப் பெற்றுகொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது. மேலும் எண்ணிம நூலகம் என்பது ஒரு தகவல் மீட்டெடுப்பு ஒருங்கியம் ( Information Retrieval System),ஆகும். எண்ணிம நூலகத்தின் இரு வேறு பெயர்களை கொன்டது ஒன்று மின் நூலகம் மற்றொன்று மெய் நிகர் நூலகம் ஆகும். மேலும் எண்ணிம நூலகத்தில் உள்ளடக்கங்களைச் சேகரித்தும் அதனை மேலாண்மை செய்து பாதுகாத்தும் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களும்,பயன்பெறும் வகையில் நூலாக தொகுத்து வெளியிடுவதே இந் நூலகத்தின் முக்கிய பணி ஆகும் என்று கூறியவர் டெலோஸ் மின் நூலக (Delos Digital Library Reference ),உச்சத்துணை முன்மாதிரி அமைவுகளாக விளங்குகிறது.
எண்ணிம நூலகத்தின் முன்னோடிகள் :
என்னிமை நூலகத்தின் முன்னோடிகளாக பல்வேறு பல்கலைக்கழகங்களும் திட்ட அமைப்புகளும் முக்கிய புள்ளியாக உள்ளது அவற்றை பின்வருமாறு காண்போம்,
- குட்டென்பர்க் திட்டம்
- கூகுள் புத்தகத் தேடி
- இணைய ஆவணம்
- கார்னெல் பல்கலைக்கழகம் காங்கிரஸ் நூலகத்தின் உலக மின்னூலகம்
- மிச்சிகன் பல்கலைக்கழக மின்நூலகம்.
மேற்கண்ட அனைத்து நூலகமும் எண்ணிம நூலகம் துவங்குவதற்கான முன்னோடி நூலகமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் எண்ணிம நூலகங்களில் அதிக அளவிலான நூல்களும், தகவல்களும் அதிகம் சேமித்து வைக்க முடியும். அது மட்டுமின்றி பல்வேறு ஒளி ஒலி தகவல்களையும் எளிய முறையில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கண் பார்வை அற்றவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந் நூலகத்தின் வாயிலாக ஒலி ஒளி வடிவங்கள் மூலம் தானே தன் செவியால் கேட்கும் போது ஒரு நூலில் உள்ள கருத்துக்களையும் ஆசிரியர் கூற வரும் கருத்தையும் புரிந்தும் உணர்ந்து கொள்ளவும் முடிகிறது இந் நூலகத்தின் சிறப்பாகும். மேலும் ஒரே நேரத்தில் ஒரே நூலைப் பல பேர் படிக்கும் வசதிகளும் இந்நூலகத்தில் உள்ளது .தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த நூல்களையும், ஆவண படங்களையும் ,குறிப்பேடுகளையும் ,பாதுகாத்து அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே நூலகத்தின் முக்கிய நோக்கமாகும்.
உலக மின்னியல் நூலகம்
உலக மின்னியல் நூலகம் என்பது யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் இணைந்து வழிநடத்தும் அனைத்து உலக மின்னியல் நூலகம் ஆகும். இம்மின்னிய நூலகத்திற்கு உலகளாவிய அளவில் 30க்கும் மேற்பட்ட தேசிய நூலகங்களோடும், கல்வி நூலகங்களோடும் ,ஒப்பந்த இணைப்பம் உள்ளன. இம்மின்னியல் நூலகம் வலைதள வகைகளில் பன்னாட்டு கல்வி அமைப்பு முறையாகும். இதன் உரிமையாளர் உலக அளவில் வளர்ந்த நாடான அமெரிக்க நாடாளுமன்றத்தில் காங்கிரசின் நூலகர் முனைவர் .ஜேம்சு எச்.மில்லிங்டன் ஆவார். இந்நூலகம் பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிஸில் உள்ள யுனெஸ்கோ நிறுவனத்தின் தலைமையகத்தில் ஏப்ரல் 21 2000-ல் ஆரம்பித்தது. தற்பொழுது ஆன்லைனில் மட்டுமே செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்நூலகத்தில் நம் நாட்டில் அருங்காட்சியகத்தில் உள்ள தகவல்களையும் பல உள்ளடக்கங்களையும் இலவசமாக அணுகி பெறக்கூடிய வகையிலும் புதிய வடிவில் எளிதில் உலக அளவில் உள்ள தமிழ் வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் தகுந்த வகையில் மின் நூலகம் செயல்படுகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து தொடங்கப்பட்டு செயல்படுத்தபட்டு வருகிறார்கள். இந்நூலகத்திற்கு உதவிகரமாக முதல் பங்குதாரராக 2005 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் சேர்ந்து இந்நூலகத்திற்கு 30 லட்சம் டாலர்களை வழங்கியுள்ளது. இந்நூலகம் ஆரம்பிக்கும் போது பல்வேறு வகையான காட்சிப்படுத்தல்களும் சேகரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில பின்வருமாறு “உலகில் முதல்முறையாக தோன்றிய புதினம் செஞ்சியின் கதையாகும்” 11-ஆம் நூற்றாண்டின் ஜப்பானின் கதை ஆகிய குழந்தை இயேசுவின் முதல் அசுடென் குறிப்புகள் ஆகும். அதுமட்டுமின்றி உலகில் முதல்முறையாக அச்சிடப்பட்ட நூலான “இசுபானிய மற்றும் டாகாலாக் மொழி புத்தகமும்” இந்நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இந் நூலகத்தில் பங்குதாரர்களாக பல்வேறு தனி நூலகங்களும் பல்கலைக்கழகங்களும் தேசிய நூலகங்களும் இணைந்து பல்வேறு வகையான அரிய நூல்களை உலகில் உள்ள நூல் பிரியர்களுக்கு தேவைப்படும் வகையில் செயல்பட்டு வருகிறது .
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின் நூலகம்
இணையத்தின் வருகை கணிப்பொறி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் உலக தமிழர்கள் இணைப்பதில் மாபெரும் பங்களிப்பிட்டும் வளம் வந்து கொண்டிருக்கிறது. முத்தமிழ் சுவைக்கண்ட தமிழைக் கணினியில் பயன்படுத்த வழிகண்ட தமிழ் வல்லுநர்கள் பலரும் தமிழ் இணையதளங்களை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்ட அழகே தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆகும் .மேலும் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டும் சென்னையில் 17. 02. 2001 அன்று முதல் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தோற்றம் பெற்றது. இந்த பல்கலைக்கழகத்தின் மின் நூலகத்தின் பணிகள் எண்ணிலடங்கா சிறப்பினை பெற்றுள்ளது.
“தமிழ் வெள்ளத்தால் போகாது
வெந்தணலால் வேகாது
கடல்கோளால் கொள்ள முடியாது“-
என்ற வரிகள் மின் நூலக முகப்பில் உள்ள வாசகமாகும். தொகுப்பாற்றப்படை என்னும் உள்ளடக்கத்தின் கீழ் மின்நூலகம் இணைந்து செயல்பட்டு வருகிறது .தமிழ் இணையக் கல்வி கழகத்தின் மின் நூலகம் பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில்வோர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மற்றும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது மின் உலகத்தின் முப்பெரும் பிரிவுகள் உள்ளன ஒன்று நூல்கள், அகராதிகள், பிறவகை நூல்களாகும். மேலும் சங்க காலம் முதற்கொண்டு இக்காலம் வரையிலான உருவாக்கப்பட்ட இலக்கண இலக்கிய நூல்கள் சங்க கால நூல்கள் ,சங்க மருவிய கால இலக்கண இலக்கிய நூல்கள் உரையுடன் மிக எளிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இலக்கண நூல்களாக தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை ,யாப்பெருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், நன்னூல், தொன்னூல் விளக்கம், வீரசோழியம், முத்துவீரியம், நம்பியகப்பொருள் உள்ளிட்ட அனைத்து நூல்களும் உரையுடன் காணப்படுகிறது. இலக்கிய நூல்களாக சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு ,ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பெருங்கதை, புராண நூல்கள், கம்பராமாயணம், வில்லிபாரதம் ஆகிய நூல்கள் கிடைக்கபெறுகின்றன. மேலும் சைவம், வைணவம், கிறிஸ்தவம், இஸ்லாமிய போன்ற சமய இலக்கிய நூல்கள் இடம்பெற்றுள்ளன . மேலும் சித்தர் இலக்கியங்கள், நெறி நூல்கள் ,சிற்றிலக்கியங்கள் ,வரலாறுகள் இலக்கிய, வரலாறு, மொழி வரலாறுகள், 21ம் நூற்றாண்டில் சிறப்பு மிக்க நூல்களும் விருதுகள் பெற்ற நூல்களும் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது மற்றும் ஓலைச்சுவடிகளும் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ் இணைய கல்விக்கழக நூலகத்தில் உள்ள நூல்களை உலகில் எவரும் எங்கிருந்தும் எப்பொழுதும் இணைய வழியாக படித்து இன்புறும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழ் இணைய பல்கலைக்கழக மின் நூலகத்தில் இலக்கண இலக்கிய நூல்களுக்கு நூல்களுக்குகென பல்வேறு அகராதிகள் உள்ளது அவை சென்னை பல்கலைக்கழக தமிழ் பேரகராதி, சென்னை பல்கலைக்கழக ஆங்கிலம் -தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி ,மு சண்முகம் பிள்ளையின் தமிழ் -அகர முதலி ஆகிய நான்கு அகராதிகளும் இடம் பெற்றுள்ளன மேலும் கலைச்சொற்களாக தகவல் தொழில்நுட்பவியலிலும்,அறிவியல் ,சமுதாயவியல், மானிடவியல், வேளாண்மை, உயிரிய தொழில்நுட்பவியல் ,போன்ற துறைகளில் கலைச்சொற்கள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. அண்மை காலத்தில் இப்பல்கலைக்கழகம் “தமிழ் மின் நிகண்டு” என்ற செயலியை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் இணைய பல்கலைக்கழக மின்நூலகம் தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்றும் தனது முழு பணியினையும் , கடமைகளையும் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
முதல் மின் நூலகம்
“சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும் !….
என்ற மகாகவி பாரதியாரின் கூற்றுக்கினங்க தமிழ் மொழி தெருவெல்லாம் மட்டுமின்றி ஒவ்வொருவரின் வீட்டின் கணினியிலும், கைபேசியிலும், இணையத்தின் வாயிலாக தமிழ் மொழியின் இனிமைகளும் பல்வேறு வகையான அரிய நூல்களும் மின் நூலகத்தின் மூலம் சென்றடைகிறது. அதில் உலக முதல் மின் நூலகம் சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் கணினி வல்லுநரான கே.கல்யாணசுந்தரம் என்பவரின் முயற்சியால்
Tamil Electronic Library என்ற மின் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் இலக்கணம், இலக்கியம், கலைகள், பண்பாடு, பாரம்பரியம் பற்றியும் தமிழ் எழுத்துரு ,தமிழ் மென்பொருள்கள், கணினி தொடர்பான கலைச்சொற்கள், அகராதிகள் ,மற்றும் தமிழ் ஆய்வு மையங்கள் பற்றி பல்வேறு தகவல்களையும் தமிழ் மொழியின் சிறப்புக்களையும் உலகறியச் செய்வதே நூலின் நோக்கமாகும். மேலும் இந்நூலகத்தில் பல்வேறு பிரிவுகள் அமைந்துள்ளன. தமிழ் எழுத்துக்கள் எதுவாயினும் பயன்படுத்தி படித்துப் பார்க்கும் வசதிகளும் உள்ளது அவற்றிற்கான குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது அப்படி படித்து அறிந்து கொள்ள முடியாவிட்டால் அதற்கு பதிலாக kalyan@geocities என்ற இணையதளத்தையும் kumar@Vt.edu என்ற மின் அஞ்சல்களோடு தொடர்பு படுத்திக் கொண்டு அனைத்து நாட்டினாலும் எளிய முறையில் படித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந் நூலகத்தில் பல்வேறு ஆசிரியர்களின் அரிய பல நூல்களையும் பதிவேற்றம் செய்து பாதுகாத்து வருகிறார்கள் .நூலகம் சென்று படிக்க முடியாத வாசகர்களுக்கும் நூல் வாங்குவதற்கான வசதிகள் இல்லாதவர்களும் இந்நூல் இணையதளத்தில் வாயிலாக பல்வேறு நூல்களைப் பதிவிறக்கம் செய்து கொண்டு படித்துக் கொள்ளவும் முடியும்.
தமிழ்த் தேசம் மின் நூலகம் :
“எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழ் அணங்கே”!….என்ற பேராசிரியர்.சுந்தரம்பிள்ளை அவர்களின் வரிகளுக்குகினங்க எட்டு திசையும் தமிழ்த்தேசம் வளம்வர துவங்கி வளம் வந்துக்கொண்டேயிருக்கிறது.தமிழ் மொழி சம்பந்தமான பல்வேறு தகவல்களும், தரவுகளையும், வழங்கக்கூடிய ஒரு இணையதளம் ஆகும். www.tamilnation.org என்ற இணையதளத்தை தமிழ்த்தேசம் மின் நூலகம் என்று அழைக்கப்படுகிறது. இதன் முகப்பு பக்கத்தில்
“கற்றது கை மண்ணளவு
கல்லாதது உலகளவு “…..
என்ற வரிகள் இன்றைய தினத்தின் அடையாளத்தை காட்டுகிறது. மேலும் விண்ணுலகத்தில் நூல்களை படிக்க முடியும் தரவுகளை திரட்டிக்கொள்ளலாம். பார்த்துக் கொள்ளலாம் ஆனால் மற்ற நூல்களைப் போல பதிவிறக்கம் செய்து கொள்ள முடியாது. நூலாக பெற வேண்டும் என்றால் www.Amazon.com என்ற இணையத்தளத்தில் நூலாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த மின் நூலகத்தில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நூலாக இருந்தாலும் அதற்கான மதிப்பீடுகளை நாம் யாரு வேண்டுமானாலும் செய்து கொள்ளும் வசதிகளும் உண்டு பல்வேறு நாடுகளைக் கடந்தும் கடல் கடந்தும் சென்ற தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாகவும் அதுமட்டுமின்றி அவர்களின் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிகளுக்குகென எழுதும் பல்வேறு நூல்களையும் இத்தளத்தில் வாயிலாக படித்து வரும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டிற்கான தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்கள் பற்றியும் அறிந்து கொள்ளும் வசதிகளும் உண்டு. இதனை இனிவரும் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்களும் படித்தும் நம் முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இந்நூலகம் அமைக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பாகும் .மேலும் மின்நூலகத்தின் வழியாக ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள தேசிய பல்கலைக்கழக ஆய்வுகளின் விளக்கங்களை பற்றி அறிந்து கொள்ள மானிட்டர் வழி தமிழ் மொழிக்காக இந்த இணையதளத்தில் அவரவர்கள் கூறும் கருத்துக்களை அறிந்து கொள்ளவும் முடிகிறது தமிழ் மொழியை எவ்வாறு வளர்க்கலாம் அதனை மென்மேலும் எவ்வாறு மெருகேற்றுவது என்றும் அதற்கான வழிமுறைகளையும் பல்வேறு தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் தங்களின் கருத்துக்களை இந்த நூலகத்தில் தானே முன்வந்து கூறுவதற்கு ஏதுவாக அமைகிறது.
மதுரை திட்டம்
மதுரை திட்டம் முகப்பு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை அடையாளமாகவும் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் என்ற வாசகத்தோடு மதுரை திட்டம் மின்நூலகம் அமைப்பு உள்ளது. இத்திட்டத்தின் பக்கங்களை தேட யூனிகோட் தமிழிலும் அல்லது ஆங்கிலத்திலும் தேடும் வசதிகளும் உள்ளது. மேலும் தமிழர்களின் மரபு வழி வந்த பல்வேறு அரிய நூல்களை பாதுகாப்பதேதிட்டத்தின் முக்கிய பணியாக உள்ளது பணியை இலக்கிய இலக்கண நூல்களை மின்னணு மதிப்புகளாக இணையதளத்தில் பாதுகாத்து வைக்கும் வேலையும் கல்வியியல் மற்றும் அறிவார்ந்த செய்திகளையும் உள்ளடக்கத்தையும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் அன்றைய பலன்களை ஒருங்கிணைத்து தமிழர்கள் மட்டும் இன்றி தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்டவர்களும் பயன்பெறும் வகையில் மின் நூலகம் செயல்படுகிறது. மேலும் ஒரு சமூகத்திற்கு இலக்கியங்கள் தான் கலாச்சாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக இருக்கிறது பொதுவாக திட்டங்களை ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கம் எடுத்து நடத்தும் ஆனால் மதுரை திட்டம் தனியார் உதவியின்றியும் ,அரசாங்க உதவியின்றியும், மற்றும் வியாபார நோக்கம் இல்லாத ,ஒரு இல்லாத தமிழர்களின் தன்னார்வ முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முதன் முதலில் 1998 ஆம் ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் விழா அன்று முதல் உருவாக்கப்பட்டது. இன்று பல்வேறு வளர்ச்சி அடைந்து வருவதை நம்மால் கண்கூடாக காண முடிகிறது அது மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அவர்களின் கணினியிலும் கைபேசியிலும் தமிழ் மொழியில் உள்ள இலக்கிய இலக்கண பிழைகளைத் திருப்பி மதிப்புகளாக தயாரிக்கும் பணிகளை செய்வினை செய்து வருகின்றனர். மதுரை திட்டத்தின் முன் பதிப்புகளாக ஆரம்ப காலத்தில் “இணைமதி” மயிலை என்ற தமிழ் எழுத்துருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை ப்ராஜெக்ட் என்பது பண்டைய தமிழ் இலக்கிய கிளாசிக்ஸின் இலவச மின்னணு பதிப்புகளை சேகரித்து வெளியிடுவதற்கான சிறந்த தன்னார்வ முயற்சியாக உள்ளது. என்பதை இத்தளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் 1999 ஆம் ஆண்டிலிருந்து இணையம் வழியாக தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான தீர்மானிக்கப்பட்ட மின் பதிப்புகளை தமிழ் வடிவம் கொண்டு தயாரித்த நூல்களை தமிழ் பங்குதாரர்கள் 2003 ஆம் ஆண்டிலிருந்து பன்மொழி ஒருங்குக் குறியீடு முறையை உருவாக்கி மின் பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. என்ற கருத்தை இணையமும் இலக்கியமும் என்ற நூலின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது .மேலும் இத்திட்டத்தில் நூல்களை அட்டவணை வடிவில் விளக்குகின்றன அவைகளின் முறைகளை எண், தலைப்பு, ஆசிரியர் ,அகரவரிசை முறை, pdf ,unicord போன்றவை கொண்ட அட்டவணை விளக்கப்படுகிறது. மேலும் இத்தளம் அரிய பல தமிழ் நூல்களையும், ஓலைச்சுவடிகளையும், படங்களையும், மற்றும் மொழிப்பதிவுகளையும் பல்வேறு தலைப்புகளையும், தமிழ் மரபு செல்வங்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்துள்ளது பக்தி இலக்கியமான சைவம் மற்றும் வைணவ சமயத்தை சேர்ந்த நூல்களும் இடம்பெற்றுள்ளன .மேலும் சுவிட்சர்லாந்தில் வாழும் கணினியியல் வல்லுநரான முனைவர். கே.கல்யாணசுந்தரம் அவர்களை தலைவராகவும் ,அமெரிக்காவில் வாழும் கணினியில் வல்லுநர் முனைவர் ,குமார்மல்லிகார்ஜுனன் அவர்களை துணைத் தலைவராகவும் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது மேலும் அமெரிக்கா ,ஐரோப்பா, ஜப்பான், கனடா ,சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழர்களையும் கணினியில் பயிற்சி பெற்ற பலரையும் உறுப்பினர்களாகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
காந்தக மின் நூலகம்
காந்தளகம் மின் நூலகத்தின் முகப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட உங்கள் தமிழ் நூல் அங்காடி என்ற வாசகத்துடன் தொடங்குகிறது .இந்த உலகத்தில் மற்ற நூல்களைப் போல் அனைத்து வகையான நூல்களும் இடம் பெறுவதில்லை பெரும்பாலும் பக்தி இலக்கிய நூல்களே அதிகம் இடம் பெறுகின்றன .நூலங்களில் உள்ள பாடல்கள் வரிகளுடன் அதன் உரைகளையும் இசையோடு கேட்டு மகிழும் வண்ணம் உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக பன்னிரு திருமுறைகளும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் எளிதில் செவி வழியாக கேட்கும் பொழுது இறைவனையே தன் கண் முன்னாலே கொண்டு வரும் ஆற்றல் இசைக்கு உண்டு என்பதை அனைவரும் அறிந்த ஒன்றாகும் மேலும் பக்தி பாடல்கள் வரிசை மாறாமலும் எளிய முறையில் கேட்கும் வசதிகளும் உண்டு அதுமட்டுமின்றி நூல்களின் வாயிலாக நேரடியாக பக்தி பாடல்களைப் படிக்கும் பொழுது மகிழ்ச்சியை விட காதால் கேட்டு இன்புறும்பொழுது அதன் வளர்ச்சி பெரிதாகிறது. இந்நூலகத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் இசை தொகுப்புகளாக உள்ளது இந்நூலகத்தின் சிறப்பாகும்.
தமிழ் நூல் புத்தக அங்காடி
தமிழ் புத்தகங்களின் பழம்பெரும் அங்காடி நூலகமாகும் வணிக நோக்கில் மின்னூல்களை வெளியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது அனைத்து வகையான புத்தகங்களும் இத்தளத்தில் வாங்கும் வசதிகளும் உள்ளது. 80க்கும் மேற்பட்ட பாட நூல் வகைகளும் ஆயிரக்கணக்கான நூல்களும் தேடுதல் வசதியும் உள்ளது. wwwmtamilnool@tamilnool.com இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இத்தளத்தில் தேடுதல் குறிப்புகள் பல உண்டு அவற்றில் தனித்தனியாகவும் தேவாரப் பாடல்கள், திருவாசகப் பாடல்கள் ,சேக்கிழாரின் பெரியபுராணம், திருக்குறள் போன்ற நூல்களும் மற்றுமின்றி போட்டித் தேர்வுக்கான நூல்களும் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நூலக மென்மம்
டாக்டர்.இராதா செல்லப்பன் அவர்கள் கூறும்போது கணினி வழியாக நூலகப்பணிகளை தமிழ்நாட்டில் முதன்முதலாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்பணியில் ஆய்வு மாணவர்களான எம்ஃபில், பிஎச்டி மாணவர்களின் ஆய்வேடுகளையும் அட்டவணைப்படுத்தி ஆண்டு வாரியாகவும் முழுமையாக கணினியில் பதிவேற்றி வைத்துள்ளார்கள் அவைகள் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் துறைத்தலைவராக பணியாற்றிய போது 2006 ஆம் ஆண்டில் தமிழியல் துறை நூலகத்திற்கு தானியங்கு மென்மம் (Tamil Library Automationsystem) , ஒன்றை உருவாக்கினால்கள் இதில் தமிழ்மொழியிலும் ஆங்கில மொழியிலும் நூலின் தலைப்புகளை பதிவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் இத்தளத்தில் சங்க இலக்கிய நூல்களை உரையுடனும் தெளிவாகவும் பதிவேற்றம் செய்யப்படுள்ளது நூல்கள் தனித்தனி வகைகளாக பிரித்து எளியமுறையில் வைக்கப்பட்டுள்ளது. .எந்ததெந்த நூல்கள் எங்கு உள்ளது என்பதை அறிந்துகொள்ள இந்ந நூலக மென்மம் வலைத்தளத்தை பயன்படுத்தி கொள்ளும் வசதியும் உண்டு. LG நிறுவனம் தான் முதன் முதலில் தமிழ்மொழியை அலைபேசியில் உள்ளீடுசெய்துள்ளது” என்ற தகவலை “தமிழும் கணிஎன்ற தகவலையும்” என்ற நூலின் மூலம் அறியப்படுகிறது. இந்த நூலகம் மென்மம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் உருதுணையாக உள்ளது .
முடிவுரை:
தமிழ்மொழி வளர்ச்சிக்கு மின் நூலகங்கள் எவ்வாறு துணைப்பெறுகின்றன என்பதையும் ஒவ்வொரு மின் நூலகமும் எவ்வகையான நூல்களை வெளியிடுகின்றன என்பதையும் இக்கட்டுரையின் மூலம் அறியப்படுகிறது. மின் நூலகங்கள் கொண்டு அடுத்த தலைமுறைகளுக்கு நம் முன்னோர்களின் பாரம்பரியம் மாறாமலும் மரபு மாறாமலும் அதனை கொண்டு செல்வதே இம் மின்நூலகத்தின் முக்கிய பணிகளாக உள்ளது என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு மின் நூலக வலைத்தளத்தை பயன்படுத்தினால் எவ்வாறு நூல்களைபெற முடியும் என்பதும் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் பல்வேறு மின் நூலகங்கள் அதிக அளவில் வெளியாகி கொண்டே வருகிறது. நாம் தமிழர்களாகிய அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெருந்துணையாக மின்னூலகம் உள்ளது என்பதை பற்றி இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது .
துணைநின்றவை
- “தமிழ் இணையம்/ தமிழ் வலைதளங்கள் பங்களிப்பும் பயன்பாடுகளும்” நூலின்
ஆசிரியர் பேராசிரியர் டாக்டர் ம.செ இரபிசிங்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்,
10,நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை -600017.
- “தமிழும் இணையமும்”
நூலின் ஆசிரியர்- டாக்டர்.இராதா செல்லப்பன், பேராசிரியர்
(ஓய்வு) பாரதிதாசன் பல்கலைக்கழகம் .
பதிப்பகம் : கவிதை அமுதம் வெளியீடு 8A, மகாலட்சுமி நகர், கே.கே நகர், திருச்சி – 620021