மு.விஜயலட்சுமி,
முனைவா் பட்ட ஆய்வாளர்,
தி ஸ்டாண்டா்டு ஃபயர்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி – 626 123
முனைவா் ப.மீனாட்சி,
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்,
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
தி ஸ்டாண்டா்டு ஃபயர்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி – 626 123.
Abstract
To take our mother tongue Tamil language to the next level of development, they invented a keyboard for typing in Tamil on the computer. Like English, typing in Tamil has also become possible. As a next step, there is no need to type in Tamil. A photo written on paper is enough. In the next second, you can easily convert it into a line with the help of the computer. You can download the specially created shortcodes on the computer and format the Tamil photo. This thesis examines how the Tamil image can be brought into line design.
முன்னுரை
கணினி இல்லையென்றால் எதுவும் இல்லை என்கிற அளவிற்கு பல துறைகளில் கணினி பயன்படுத்தப்பட்டு வருகிறது. காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் மொழியே செம்மாந்து நிற்கிறது. காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளா மொழிகள் அழிந்து போகின்றன. சில மொழியிலுள்ள எழுத்துக்களின் வரிவடிவம் கணினிக்கு ஏற்ற வகையில் இல்லாததால் அவ்வெழுத்துக்களின் வரிவடித்தினையே மாற்றி கணினியில் பயன்படுத்துவதற்கான வேலைப்பாடுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. தாளில் எழுதியதைப் பார்த்து தட்டச்சு செய்த காலம் போய் தாளினை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்தால் உடனே நாம் எழுதியவை தமிழ் யுனிகோடு எழுத்துருவில் மாற்றமடைகிறது. தமிழ் புகைப்படத்தினை வரிவடிவாக்கம் செய்வதில் கணினியின் முக்கியத்துவத்தை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
புகைப்படத்தை வரிவடிவாக்கம் செய்யும் முறை
கணினியில் google ல் goole drive என்பதை தட்டச்சு செய்யவும்.
personal cloud storage & file sharing platform என்பதை கிளிக் செய்யவும். இதை கிளிக் செய்தால் கீழுள்ள அட்டவணை தோன்றும். அதில் go to drive என்பதை கிளிக் செய்யவும். உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அளித்தவுடன் goole drive open ஆகும். அதில் new வை கிளிக் செய்யவும். file upload என்பதை கிளிக் செய்து டைப்பிங்காக மாற்ற வேண்டிய இமேஜை தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த இமேஜ் google drive ல் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
அதனை கிளிக் செய்து open with ல் google document ஜை கிளிக் செய்யவும்.
நாம் கொடுத்த இமேஜில் உள்ள தமிழ் எழுத்துக்கள் கீழே தட்டச்சு செய்யப்பட்டிருக்கும். தட்டச்சு செய்யப்பட்டதை தோ்வு செய்து வோ்டில் (word) ஒட்டவும் (paste). பிறகு நமக்குத் தேவையான எழுத்துரு அளவில் வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் ocr குறுஞ்செயலி
pdfscannerocr என்னும் குறுஞ்செயலியை நம் கணினியில் பதிவேற்றம் செய்து அதில் நமக்குத் தேவையான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து தட்டச்சு வடிவில் மாற்றிக் கொள்ளலாம். தட்டச்சு வடிவில் கிடைத்தவுடன் அதனை நகல் எடுத்து வேர்டில் (word) ஒட்டவும்.இதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் tamiltyping.in என்ற முகவரிக்குள் சென்று தமிழ் என்னும் விசைப்பலகையை தேர்ந்தேடுத்து தமிழிலில் தட்டச்சு செய்து அதனை நகலெடுத்து வேர்டில் (word) ஒட்டவும்.
புகைப்படத்தினை தட்டச்சாக மாற்றும் முறையினால் ஏற்படும் நிறைகள்
- ஒரு படைப்பை உருவாக்க எண்ணினால் முதலில் அதனை ஒரு தாளில் எழுதுவோம். பிறகு அதனைப் பார்த்துத் தட்டச்சு செய்வோம். கணினியின் உதவி கொண்டு இமேஜினை தட்டச்சு வடிவில் மாற்ற இயலும். இவ்வாறு செய்வதால் நேரம், காலம் விரயமாகாது. வேலையும் எளிமையாக முடியும்.
- தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாதவர்களும் இம்முறையின் மூலம் பயனடைவார்கள்.
- தட்டச்சு செய்வதற்காகவென்று பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.
முடிவுரை
பேச்சு வரிவடிவ எழுத்தாக்கத்தைப் (speech to text) போல புகைப்பட வரிவடிவ எழுத்தாக்கமும் (image to text) கணினியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாக விளங்குகிறது. கல்லூரிகளில் தமிழ் படிக்கும் மாணவா்களுக்கும் ஆய்வாளா்களுக்கும் தமிழ் எழுத்தாளா்களுக்கும் தமிழ்ப் பேராசிரியா்களுக்கும் இப்புகைப்பட வரிவடிவ எழுத்தாக்கம் மிகுந்த பயனை அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.