ச.தமீம் அன்சாரி,
முனைவா் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்),
அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613 010,
Abstract
In today’s scientific era, humans create new technology according to their convenience. The technology has evolved over time and is useful for humans. In this way, it is also given in this study that if computer technology crosses many fields and is created to think automatically with artificial intelligence, it will provide useful and sophisticated information to humans if given input to converse with humans. Artificial intelligence such as SatGBT, Bart, Llama-2 are expanding their platforms and taking people to advanced development. This research paper is an introduction to artificial intelligence.
முன்னுரை
நவீன உலகில் அனைத்தும் புதுப்புது பரிணாம வளர்ச்சி அடைகிறது. அதன் வகையில் கணினி பல தலைமுறைகள் வளா்ச்சியடைந்து செயற்கை நுண்ணறிவில் தடம் பதித்து இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மனிதர்களுக்கு எவ்வகையில் உதவிபுரிகின்றன, மனிதனுக்கு தகவல்கள் மற்றும் தரவுகள் நுட்பமாகக் கிடைப்பதற்கு தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்திறனும் அவற்றின் பயன்பாடுகளும் இன்றியமையாததாகும்.
கணினியின் தலைமுறைகள்
கணினியில் பயன்படுத்தப்பட்ட மையச் செயலக உறுப்பின் அடிப்படையில் கணினியின் வளர்ச்சிப் போக்கு ஐந்து தலைமுறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வ.எண் | தலைமுறைகள் | காலம் |
முதல் தலைமுறை (வெற்றிடக்குழாய்கள்) | 1940-1956 | |
இரண்டாம் தலைமுறை (டிரான்ஸ்சிஸ்டர்) | 1956-1963 | |
மூன்றாம் தலைமுறை (ஒருங்கமைவுச் சுற்றுகள்) | 1964-1941 | |
நான்காம் தலைமுறை (நுண்செயலி) | 1971-1981 | |
ஐந்தாம் தலைமுறை (செயற்கை நுண்ணறிவு) | 1981-1990 |
செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தானாகச் சிந்தித்து செயல்படும் வல்லமைக் கொண்டது. இவை நுணுக்கமாக தகவல்களை கொடுக்கும் முறையில் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு : (Artificial Intaligence)
செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சியைக் காட்டும் உச்சநிலையாகும். இவை நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப் போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம். கொடுக்கப்படும் உள்ளீட்டிற்கு ஏற்றவாறு தானாகச் சிந்தித்து செயல்படுவது செயற்கை நுண்ணறிவு.
சாட் ஜீபிடி :
1. சாட் ஜீபிடி என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இது மனிதன் கணினியிடம் உரையாடுவதும் கணினி மனிதனைப் போன்று உரையாடவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. சாட் ஜீபிடி செயற்கை நுண்ணறிவு தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளில் இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தி தேவையான பதில்களைக் கொடுக்கிறது.
3. “BARD” செயற்கை நுண்ணறிவு கூகுளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதைப் போன்று, மெட்டா நிறுவனம் “லாமா-2” செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியுள்ளது.
4. மைக்ரோசாஃப்ட் (Microsoft) உடன் கூட்டுச் சேர்ந்து ஆராய்ச்சி மற்றும் வணிகம். இலங்கை பயன்பாட்டிற்காக இலவசமாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளது.
5. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாம் கொடுக்கும் உள்ளீட்டை புரிந்து கொண்டு இயற்கை மொழியில் (Natural languags) பதிலளிக்கிறது. இத்தொழில்நுட்பம் டிரான்ஸ்ஃபார்மர் அல்காரிதத்தைப் (TRANSFORMER ALGARITHM – கணினிமொழி மாற்று வழிமுறை) பயன்படுத்தி உள்ளனர். டிரான்ஸ்ஃபார்மர் அல்காரிதம் தரவுகள் (Data), வரிவடிவங்கள்ளப் பகுத்தாய்ந்து புரிந்து கொண்டு மனிதர்கள் பேசுவதைப் போன்று ஜீபிடியில் உரையாடலை நிகழ்த்துகின்றன.
CHAT gpt யின் வளர்ச்சி
CHAT gpt என்பது சான்பிரான்சிஸ்கோளர் சேர்ந்த “ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய ஒரு இயங்குதளம். இந்த CHAT gpt “BING” என்று சொல்லக்கூடிய கணினிப்பொறி. இயங்குத் தளமாகச் செயல்பட்டும் அதனுடன் ஒருங்கிணைத்தும் செய்யப்பட்டுள்ளது. CHAT gpt இரண்டே மாதத்தில் பத்துக்கோடி பயனாளர்களைப் பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள்
கூகுளின் “BARD” பன்னாட்டு நிறுவனம் (G௦௦GLE) உருவாக்கப்படுகிறது. “BARD” செயற்கை நுண்ணறிவு சோதனை முயற்சியில் இருக்கிறது CHATgpt போன்றே துல்லியமான, நேர்த்தியான தவல்களை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீபிடி (CGPT-GENERATIVE PRE-TRAINED TRANSFORMER)
- ஜீபிடி -1, 2018- இல் OPENAI நிறுவனம் வெளியிடப்பட்டது. சில கேள்விகளுக்குப் பதில் கொடுக்கப்பட்டது, பலரிடம் பிரபலமானது.
- ஜீபிடி-2, 2019- இல் OPENAI நிறுவனம் வெளியிடப்பட்டது. இவற்றில் சில தகவல்கள், தரவுகள் மேம்பட்டு பதில்களும் கிடைக்கப் பெற்றன.
- ஜீபிடி-3, 2020 -இல் OPENAI நிறுவனம் வெளியிடப்பட்டது. இவை பல தரவுகள், தகவல்கள் நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் கிடைக்கப் பெற்றது. இவை மேம்பட்ட பதிப்பாகம்.
- ஜீபிடி-3.5 அறிமுகப்படுத்தப்பட்டு இணையத்தில் அனைவரும் இலவசமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவையும் துல்லியமான, தகவல்களை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது.
- மேம்பட்ட பதிப்பு செய்து, வளர்ச்சிக் கொண்ட ஜீபிடி-4 இணையத்தில் சந்தாக்கள் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. (முனைவர் துரை.மணிகண்டன், தமிழ் இணையம்- 2023, 61)
தமிழ் CHATgpt பயன்கள்:
- இது பல மொழிகளின் உள்ளீடுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப பதிலளிக்கும் திறன்.
- தன்னைத் தானே முன்னேற்றப்படுத்திக் கொள்ளும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன்.
- மேம்படுத்தப்பட்ட விளக்கம் அளிக்கும் திறன் .
- கூகுள் தேடுபொறிக்கு சிறந்த மாற்றாக உள்ளது.
- சிறந்த கட்டுரைகள், கவிதைகள், உரைகள், மொழிபெயர்ப்பு என எண்ணற்ற தகவல்கள் நுணிக்கமாக, நேர்த்தியாக வழங்கும் திறன்.
- சிறந்த விர்ஜீவல் உதவியாளாராக செயல்படும் திறன்.
முடிவுரை
அறிவியல் வளர்ந்த நிலையில் அதற்கேற்ப கணினியும் தன்னிகரில்லா வளர்ச்சி பெற்று, பல தலைமுறைகளைக் கடந்து, புதுப்புது பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது செயற்கை நுண்ணறிவு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனிதன் செய்யும் எல்லா வேலைகளையும் ஒரு தொழில்நுட்பம் நிறைவேற்றிக் கொடுக்கிறது என்றால் நாம் புதிய வளர்ச்சியை எட்டியுள்ளோம்.
துணை நூற்பட்டியல்
1. முனைவர் துரை, மணிகண்டன் – தமிழ் இணையம்-2023,
தமிழ் இணையக்கழகம்,
2023.