காப்புரிமைச் சிக்கல்கள்

அருண்குமார்.ச

     இளங்கலைத்தமிழ் மூன்றாமாண்டு

     ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர்

ஆய்வு நோக்கம்

    காப்புரிமை என்பது ஒரு வகையான அறிவு சார்ந்த சொத்து என்று அறியப்படுகிறது.  மேலும் ஒரு கண்டுபிடிப்புக்கு வழங்கப்படும் பிரத்யேக உரிமையாகக் கூறப்படுகிறது.  மனிதனுடைய படைப்பின் அறிவுத்திறனைப் பாதுகாக்க உதவும் ஒரு வகையான IPR அதாவது Intellectual Property Right பாதுகாப்பு ஆகும்.  இந்தக் காப்புரிமைச் சட்டத்தினை ஒருவர் பயன்படுத்த எண்ணும்போது அவருக்கு நேரும் சிக்கல்கள் என்ன?  அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்த செய்திகளை இந்த ஆய்வின் மூலம் அறியலாம்.

காப்பரிமை – வரையறை

     காப்புரிமை என்பது ஒரு கண்டுபிடிப்புக்கு வழங்கப்படுகின்ற பிரத்யேக உரிமை ஆகும்.  இது சர்வதேச ரீதியாக மற்றும் தேசிய ரீதியாக என்ற அடிப்படையில் பெற முடியும்.

முதன்மையான காப்புரிமைகள்

1.         தாவர காப்புரிமை

2.         வடிவமைப்பு காப்புரிமை

3.         பயன்பாட்டு காப்புரிமை

4.         மென்பொருள் காப்புரிமை

என்று வகைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

காப்புரிமை பெறுதல்

            காப்புரிமை அலுவலகம் மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றது. காப்புரிமை அலுவலகத்தின் தலைமையகம் கல்கத்தாவிலும் கிளை அலுவலகங்கள் புதுடெல்லி, மும்பை மற்றும் சென்னையில் உள்ளன. ஒரு பொருளுக்கு 20 ஆண்டுகளுக்கு காப்புரிமை வழங்கப்படும்.

            இந்தியாவில் காப்புரிமை செய்தால் அது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும்.  உங்களுடைய தயாரிப்பைப்போல் மற்றவர்கள் காப்பி செய்து விற்க முடியாது.  வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய விரும்பி காப்புரிமை பெற விரும்பினால் இந்தியாவில் பதிவு செய்த ஓராண்டுக்குள் எந்த நாட்டில் காப்புரிமை பெற விரும்புகிறோமோ அந்த நாட்டில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

            சர்வதேச அளவில் காப்புரிமம் பெற்றுக்கொள்ள சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள International Bureau of the World Intellectual Property Organization (WIPO)–க்கு விண்ணப்பிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

காப்புரிமை ஏன் பெற வேண்டும்?

            நம்முடைய தயாரிப்புகளை நாமே தயாரித்து விற்பனை செய்யலாம்.  நமது பொருளுக்கு அதிக கிராக்கி நிலவும் போது அதை மற்றவரும் காப்பி செய்து தயாரிக்கலாம்.  இதனால் நம்முடைய உழைப்பு வீணாகும்.  லாபமும் குறையும்.  இதைத் தவிர்க்கத்தான் காப்புரிமை பெறுவது அவசியம்.  பொருளுக்கு மட்டுமின்றி வடிவமைப்புக்கும் (Design) காப்புரிமை பெறலாம்.

            புதியதாக எந்த ஒரு தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கும் காப்புரிமை வழங்கப்படும்.  ஏற்கனவே தயார் செய்யப்பட்ட பொருள்களில் புதிய மாற்றங்கள் செய்யபப்டும்போது அதற்கும் காப்புரிமை வழங்கப்டுகிறது.  கண்டுபிடித்த ஓராண்டுக்குள் அதற்கு காப்புரிமை பெற வேண்டியது கட்டாயமாகும்.

இலக்கியத்திற்கு காப்புரிமை

            எழுத்துகளைப் பதித்தல் என்பது கி.மு. 3500-இல் சுமேரிய நாகரிகத்தில் தொடங்குவதாக அறிய முடிகிறது. ஏழாம் நூற்றாண்டில் சீனர்கள் தாளைக் கண்டுபிடித்தனர். அதன்பின்,எழுத்து எளிமையானது.  15-ம் நூற்றாண்டில் ஜான் குட்டன்பெர்க் என்ற ஜெர்மானியர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.  ஏராளமான எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகளை புத்தகத்தில் வடிக்கத் தொடங்கினர்.  இந்தப் புத்தகங்கள் ஆசிரியரின் உரிமையில்லாமல் பதிக்கப்பட்டு திருட்டுத்தனமாக வெளியிடப்படும் நிலைமை எற்படும் போது காப்புரிமையின் அவசியத்தை உணர முடிகிறது.

     1710-ல்முதன் முறையாக பிரிட்டனில் பதிப்புரிமைச் சட்டம் ஏற்படத்தப்பட்டது.  இதன்படி மூல மொழியில் எழுதிய புத்தகங்களுக்கு மட்டும் காப்புரிமை தரப்பட்டது.  அந்தப் புத்தகங்களின் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு காப்புரிமை தரப்படவில்லை.

     இப்படியே தொடரும்பொழுது நாளடைவில், மொழிபெயர்ப்புகளுக்கு மட்டுமின்றி, நாடகம் உள்ளிட்ட இதர விஷயங்களுக்கும் காப்புரிமை தரப்பட்டது.

            புத்தக படைப்புகள் மற்றும் கலை நுட்ப படைப்புகளுக்கு சர்வதேச அளவில் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியறுத்துவதாக நடத்தப்பட்டது.  இதன்படி புகைப்படம், திரைப்படம் தவிர இதர படைப்புகளுக்கு படைப்பாளியின் இறப்பிற்குப்பின் 50 ஆண்டுகள் காப்புரிமை வழங்க முடிவெடுக்கப்பட்டது.  வெளியிடப்படாத புத்தகங்களுக்கும் கூட காப்புரிமை உண்டு என்று அந்த மாநாடு அறுதியிட்டது.

            இத்தகைய பெர்ன் உடன்படிக்கையை 1887-ல் பிரிட்டன் ஏற்றுக்கொண்டது.  அப்போது பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் 1914-ல் காப்புரிமைச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டுவந்தது.  இது வரை 179 நாடுகள் பெர்ன் உடன்படிக்கையை ஏற்றுள்ளன.  அதில் நம் இந்தியாவும் ஒன்று. சுதந்திர இந்தியாவில் 1957-ல் காப்புரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.  தற்போதைய நடைமுறைக்குத் தகுந்தாற்போல் இச்சட்டம் 2012 வரை 12 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

காப்புரிமைச் சிக்கல்கள்

            இணையத்தில் பதிவு செய்யும் பிறிதொரு கருத்துகளையும் கண்டுபிடிப்புகளையும் எளிதில் தனதாக்கிக் கொள்ள இந்தக் கணினி யுகத்தில் வாய்ப்பிருக்கிறது.  ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் பத்திரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.  எனவே காப்புரிமைச சட்டம் மட்டுமல்லாது கணினி மூலம் ஏற்படும் உரிமை மீறல்களைத் தவிர்க்க ‘தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000’ இயற்றப்பட்டு சைபர் பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

            மேற்கூறிய செய்திகளை “படைப்பாளி உரிமை காக்கும் காப்புரிமை” என்ற தலைப்பில் முனைவர். டி.ஏ. பிரபாகர் அவர்கள் தினமணி நாளிதழுக்கு அளித்த கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

            தற்போதைய சூழலில் வரைபடங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், இசை, திரைப்படம், கணினி மென்பொருள், அறிவியல் கண்டுபிடிப்புகள், வடிவமைப்புகள் உள்ளிட்ட படைப்புகளுக்கும் காப்புரிமை தரப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.  இவ்வாறு காப்புரிமை பெற்ற தயாரிப்பைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் காப்புரிமை பெற்றவர்களுக்கு கௌரவத்தொகை (ராயல்டி) வழங்குவர்.

            உதாரணமாக, எழுத்தாளர் ஒருவர் தான் எழுதிய படைப்பை பதிப்பகத்திற்கு கொண்டு செல்லும்போது, பதிப்பகத்தார் அந்த எழுத்தாளருக்கு குறிப்பிட்ட தொகையை ராயல்டி-யாக கொடுத்துவிடுகின்றனர்.

            பின்னர் அந்த பதிப்பகத்தில் அந்த புத்தகத்திற்கு தாங்கள் பெயரில் காப்புரிமையைப் பெற்று விடுகின்றனர்.  அதன்பிறகு அந்த எழுத்தாளர் அந்த நூலிற்கு உரிமை கோர முடியாது.

            காப்புரிமை ஒரு படைப்பாளியின் இரண்டு விதமான உரிமைகளைப் பாதுகாக்கிறது.  முதலாவது, படைப்பாளியின் படைப்பு மூலம் கிடைக்கும் பொருளாதார ரீதியான உரிமையை நிலைநிறுத்துகிறது.  நம் நாட்டில் காப்புரிமை ஒரு படைப்பை உருவாக்கிய படைப்பாளியின் வாழ்நாள் முழுவதும், மேலும், அதைத் தொடர்ந்து 60 வருடங்கள் வழங்கப்படுகிறது.  இதன்மூலம் படைப்பாளியின் வாரிசுகளுக்கும் இதன் பயன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காப்புரிமைச் சிக்கல்களின் தீர்வுகள்:

            படைப்பாளர் தனது எந்தவொரு படைப்பாக இருந்தாலும் முதலில் பதிப்புரிமையையும், காப்புரிமையையும் பெறுவது நல்லது.  இதனால் படைப்பாளரின் மதிப்பு அங்கீகரிக்கப்படுகிறது.  தனது படைப்பிற்கான விலை நிர்ணயத்தை தானே நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

            படைப்பாளர் புதிய புதிய சட்டத்திருத்தங்களைக் கையாண்டு காப்புரிமை பெறுவது சிறப்பிற்குரியது.  மேலும் பதிப்புரிமையை பதிப்பகத்தார்க்கு மட்டுமே வழங்காமல் தன்னிடம் அவ்வுரிமையை வைத்திருப்பது நல்லதாகும்.

             காப்புரிமை மூலம் படைப்பாளி தனது படைப்பினை மறுபதிப்பு செய்யவும் அதனை நகலிடவும் மொழிபெயர்த்து வெளியிடவமான உரிமையைத் தனதாக்கிக் கொள்கிறார்.  இதன் மூலம் தனது படைப்பினை தன் அனுமதியின்றி பிறர் பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாகத் தடுக்க படைப்பாளிக்கு உரிமை உண்டு.  அவ்வாறு மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டு வரை சிறைத் தண்டனையும் இரண்டு இலட்சம் வரை அபராதமும் வழங்கிட காப்புரிமைச் சட்டம் வகை செய்கிறது.

            ஆனால், ஒருவரது படைப்பினை இன்னொருவர் தனது ஆய்வுக்காகவும் தனது சொந்த உபயோகத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  அந்தப் படைப்பினை விமர்சிப்பபதும், மீளாய்வு செய்வதும் காப்புரிமைச் சட்டத்தின் விதிவிலக்காகும்.  ஒரு படைப்பினை காப்புரிமைச் சட்டப்படி பதிவு செய்ய வேண்டியது கட்டாயமில்லை.  ஒரு படைப்பு முழுமையடைந்தவுடன் அதற்கு இயல்பாகவே பெர்ன் உடன்படிக்கையின்படி காப்புரிமை கிடைத்து விடுகிறது.

            138கோடி மக்கள் வாழும் நம் பாரத தேசத்தில், வருடத்தில் சுமார் 12000 படைப்புகள் மட்டுமே காப்புரிமை பெற்றுள்ளன.  இந்தியாவில் விண்ணப்பிக்கப்படும் 80% காப்புரிமை விண்ணப்பங்கள் வெளிநாட்டினருடையதாகவே இருக்கிறது.

            இந்தநிலை மாற வேண்டும். காப்புரிமை காலத்தின் கட்டாயம் என்பதை படைப்பாளிகள் அனைவரும் உணர வேண்டும். என்பதை முனைவர். டி.பி. பிரபாகர் அவர்களின் கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது.

முடிவுரை

     இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற உலகில் மனிதன் தன்னுடைய எந்தவொரு அறிவுசார்ந்த சொத்தாக இருந்தாலும் அதைத் தன்னுடைமையாக்கிக் கொள்ள வேண்டும்.  இதற்கு காப்புரிமை பெறுவது மிகவும் அவசியமாகிறது.  காப்புரிமையின் சிக்கல்கள் அதன் தீர்வுகள் பற்றி இந்த ஆய்வின் மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

துணை நூற் பட்டியல்:

  1. Patents:  https://www_wipo_int. translate.goog/patents/en/?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc
  2. Patent:   https://en_m_wikipedia_ org _translate.goog/wiki/Patent?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc
error: Content is protected !!