கி ராஜ்குமார்,
அன்னை இந்திரா குடியிருப்பு,
அளவா கோட்டை,
சிவகங்கை மாவட்டம்.
முன்னுரை:
வலைத்தளக் கட்சி ஊடகங்கள் மக்களிடம் இன்று பெற்றிருக்கும் செல்வாக்கும் மொழி கற்பித்தலில் அதன் அணுகுமுறைகளும் பாராட்டுக்குரியது. குழந்தைகள் முதல் பொதுமக்கள் வரை வயது வேறுபாடு இன்றி அவர்களிடத்தில் மொழிக் கூறுகளை வரையறை ஏதுமின்றி கட்டுப்பாடுகள், திட்டங்கள் ,வடிவமைப்புகள் ஏதும் இன்றி கொண்டு சேர்க்கின்றன. மொழி அறிமுகம்- தாலாட்டு பாடல்கள் குழந்தை பாடல்கள் -கதை பாடல்கள்- கதை சொல்லுதல்- கதை சொல்லுதலின் வளர்ச்சி- தேர்வு நோக்கில் கற்பித்தல்- தமிழ் இலக்கிய வரலாறு கற்பித்தல் முயற்சிகள்- சொற்பொழிவுகள்- அறிவியல் தமிழ் முயற்சிகள் -உலக அரசியல் என அதன் பங்கும் பணிகளும் நீண்டு கொண்டே செல்கின்றன. வலைத்தளக் காட்சி ஊடகத்தில்(Youtube) முறைசாரா வழியில் தமிழ் கற்பித்தல் முயற்சிகளும் அதன் தாக்கங்களும் குறித்து சுருக்கமாக ஆராய்ந்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குழந்தைப் பாடல்கள்:
குழந்தைகளுக்கு மொழி கற்பித்தல் தாயிடம் இருந்தே தொடங்குகிறது.
‘பைய நாவை அசைத்த பழந்தமிழ்’
என்று கவிஞர் முடியரசனின் பாடல் வரிகளில் உள்ளதைப் போல சிறு குழந்தைகளுக்கு மொழியைக் கற்பிக்கும் முதல் முயற்சிகள் தாலாட்டு பாடல்களே ஆகும். தமிழில் தொடர்கள் தோன்றிய பின் தனிச்சொற்கள் தோற்றம் பெற்றன .தாலாட்டு பாடல்கள் பாடி தமிழைக் கற்பிக்க தாய்மார்களுக்குப் போதிய நேரமின்மை காரணமாகவும் பெருகி உள்ள வலைத்தளங்களே (Youtube)தாலாட்டுப் பாடல்கள் பாடிக் குழந்தைகளுக்கு மொழியைக் கற்பிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. அவ்வகையில் சான்றாக
- 1 மாமன் அடிச்சானோ- தாலாட்டு பாட்டு -129M பார்வைகள்/ 447 K விருப்பங்கள்
- ஆராரோ ஆரிராரோ- குழந்தை தாலாட்டு பாட்டு-92M பார்வைகள்/296 K விருப்பங்கள்
- அம்மா பாடல்கள்-47M பார்வைகள்/138K விருப்பங்கள்
கதை பாடல்கள்:
மக்களிடத்தில் எழுந்த அனுபவங்களை அழகியலாகக் குழைத்துச் சொல்லப்பட்டவையே கதைப்பாடல்கள் ஆகும் குழந்தைகளிடத்து நீதிகளை புகட்டவும் மொழியைக் கற்பிக்கவும் மொழி வளத்தைப் பெருக்கவும் இக்கதை பாடல்கள் பெரிதும் உதவுகின்றன. இன்று தமிழ்நாட்டு அங்கன்வாடிகளில் பாட்டி வடை சுட்ட கதை , பாடல் வழியில் குழந்தைகளிடம் கற்பிக்கப்படுகிறது.
“பாட்டி அம்மா கடையிலே
பருப்பு வடை சுடையிலே
காகம் வந்தது இடையிலே
கவ்விச் சென்றது வாயிலே
நரி அண்ணே வந்தாங்க
பாட்டுப்பாட சொன்னாங்க
கா…..கா….. கா….
வடையும் கீழே விழுந்தது
நரியும் எடுத்துச் சென்றது
ஏமாந்த காகம் ஏமாந்தே போனது”.
இப்பாடலைப் பார்க்கிறபோது கதையாக இருந்த ஒன்றே தமிழில் குழந்தைகளுக்கு என எளிமையான வகையில் பாடல்களாக மாற்றம் பெற்றிருக்கக்கூடும் சான்றாக அமைகிறது. குழந்தைகளுக்கு மொழி கதைப்பாடல்களாக வலைத்தளக்காட்சி(Youtube) ஊடகத்தில் கற்பிக்கப்படுகிறது.
- 1 தோசையம்மா தோசை -373 M பார்வைகள்/ 1.3 K விருப்பங்கள்
- நிலா நிலா ஓடி வா-235M பார்வைகள்/820K விருப்பங்கள்
- குரங்கு மாமா-122M பார்வைகள்/332K
- கரடி மாமா பாடல்-103M பார்வைகள்/283 K விருப்பங்கள்
கதை சொல்லுதல்:
வீடுகளில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு கதைகளின் வழியே நீதி கருத்துக்களை புகட்டி வந்தனர் சமூக உணர்வைப் பெறவும் விட்டுக் கொடுத்தல் பெரியவர்களுக்கு மரியாதை வழங்குதல் நீதியின் படி நடத்தல் போன்ற உணர்வுகள் பிற்காலத்தில் எழுந்து நல் மனிதனாக வாழ இக்கதைகளும் கதைகளில் பொதிந்திருக்கும் உட்கருத்துகளும் உதவியாக அமைந்தது.
பொருள் மைய வாத சமூகத்தில் பொருளாதாரச் சூழல் பெரியவர்கள் தங்களோடு இருப்பது செலவு வைப்பதாகச் சமூகத்தில் ஏற்பட்ட தவறான கருத்தினால் குடும்பத்தில் பெரியவர்கள் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவதிலிருந்து குறைக்கப்பட்டு தனித்து வாழும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பெரியவர்கள் கதைகள் சொல்லிக் கற்பித்து வந்த நிகழ்வு மெல்ல மெல்ல காட்சி கேள்வி ஊடகங்களை நோக்கி நகரத் தொடங்கியது.
கதைகள் நேரடியாக முகம் பார்த்துச் சொல்லி வந்த நிகழ்வு படிப்படியாகக் குறைந்து காட்சிக் கேள்வி ஊடகங்கள் அந்த இடத்தைப் பிடித்தன.
சான்றாக
- சிங்கம் மற்றும் முயல் தமிழ் கதை-27M பார்வைகள்/123K விருப்பங்கள்/
- பேய் மற்றும் கை பம்பு- 16M பார்வைகள்/67 K விருப்பங்கள்
- .கர்ப்பிணி குரங்கு-12M பார்வைகள்/72K விருப்பங்கள்/1.6K கருத்துரைகள்
- நாக்கு கடிக்கும் பேய்-11M பார்வைகள்/54K விருப்பங்கள்/754 கருத்துரைகள்
- காட்டில் மழை புயல்-10M பார்வைகள்/57K விருப்பங்கள்/422 கருத்துரைகள்
கதை சொல்லுதலின் வளர்ச்சி:
சிறுகதைகள் நாவல்கள் எனச் சொல்லப்பட்டு வந்த கதைகள் பிறகு ஒளி சித்திரங்கள் திரைப்படம், நாடகம் இவற்றின் கதை சுருக்கங்களாக வளரத் தொடங்கி அது மொழிக் கற்பிக்கவும் இன்று பயன்படுகிறது. இலக்கியப் பழமை மிகுந்த தமிழ் மொழியின் இலக்கியங்களில் வழங்கப்படும் கதைகள் இன்று உள்ள இளைய தலைமுறையினர் விரும்பிக் கேட்க முயல்கின்றனர். அதனை ஈடு செய்ய வலைத்தளக் கட்சி ஊடகங்கள்(Youtube) உதவுகிறது.
சான்றாக
- மணிமேகலைக் கதை-2.8 பார்வைகள்/45 K விருப்பங்கள்/2.5K கருத்துரைகள்
- சீவக சிந்தாமணி கதை-1.1M பார்வைகள்/19K விருப்பங்கள்/1K கருத்துரைகள்
- கண்ணகி-856K பார்வைகள்/12K விருப்பங்கள்/329 கருத்துரைகள்
- வளையாபதி கதை-472K பார்வைகள்/9.1K விருப்பங்கள்/570 கருத்துரைகள்
- யசோதர காவியம்-341K பார்வைகள்/6.6K விருப்பங்கள்/ 506 கருத்துரைகள்
- சிலப்பதிகாரம் தோன்றிய கதை-219K பார்வைகள்/ 5.7K விருப்பங்கள்/515 கருத்துரைகள்
- 7.ஆய் அண்டிரன்-155K பார்வைகள்/ 4.7K விருப்பங்கள்/ 710 கருத்துரைகள்
- சிலப்பதிகாரம்/ ஐம்பெருங்காப்பிய கதைகள்-228 K பார்வைகள்/4.1K விருப்பங்கள்/93 கருத்துரைகள்
தேர்வு நோக்கில் கற்பித்தல்:
தமிழ்நாடு அரசால் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு மற்றும் அரசு வேலை வாய்ப்பு தேர்வுகளில் தமிழ் பாடங்கள் பெற்றுள்ள முக்கியத்துவம் காரணமாகத் தேர்வு நோக்கில் பரவலாகத் தமிழ் கற்பிக்கப்படுகிறது.
வலைதளக் கட்சி ஊடகத்தில் பொதுவாகத் தேர்வு நோக்கில் தமிழ் கற்பித்தல் என்பதானது பொதுத் தமிழ் என்பதாக அமைகிறது. அதாவது பள்ளியில் உள்ள தமிழ் பாடத்திட்டத்தினை உள்ளடக்கியது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் , தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வு பெற வேண்டுமென்ற தேர்வர்களின் விருப்பத்தை நிறைவு செய்ய இவ்வகை வலைத்தளக் காட்சி ஊடகங்கள் முதன்மையான பங்கினை வகிக்கின்றன.
சான்றாக
- 1.TNPSC இயல் 1, 6 ஆம் வகுப்பு-1.1M பார்வைகள்/25K விருப்பங்கள்/267 கருத்துரைகள்
- உன்னால் முடியும் சங்க இலக்கியம்-459K பார்வைகள்/ 8.5K விருப்பங்கள்/407 கருத்துரைகள்
- 3.TNPSC- தினம் ஒரு தமிழ் அறிஞர் சுப்பிரமணிய பாரதியார்-204K பார்வைகள்/6.3 K விருப்பங்கள்/284 கருத்துரைகள்
தமிழ் இலக்கிய வரலாறு கற்பித்தல்:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வுகள், இந்திய ஒன்றிய அரசால் நடத்தப்படும் உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதி தேர்வு (பாடம்: தமிழ்), தமிழ்நாடு அரசால் (தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்மூலம்) நடத்தப்படும் உதவி பேராசிரியர் தகுதி தேர்வு (பாடம் :தமிழ் )போன்ற தமிழ் மொழி பாடத்தின் உயரிய தேர்வுகளுக்கு வலைதளக் காட்சி ஊடகங்கள்(Youtube) கற்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.
சான்றாக
- தமிழ் மொழி வரலாறு-85K பார்வைகள்/1.4K விருப்பங்கள்/147 கருத்துரைகள்
- சோழர் காலத் தமிழ்-25K பார்வைகள்/410 விருப்பங்கள்/63 கருத்துரைகள்
- வடமொழி திராவிட மொழி வேறுபாடுகள்-24K பார்வைகள்/348 விருப்பங்கள்/47 கருத்துரைகள்
- இலக்கிய திறனாய்வியல்-18 K பார்வைகள்/320 விருப்பங்கள்/32 கருத்துரைகள்
- தமிழ் இலக்கண நூல்கள் முழுமையான விளக்கம்-11K பார்வைகள்/246 விருப்பங்கள்/57 கருத்துரைகள்
அறிவியல் தமிழ்:
வளர்ந்து வரும் தமிழ்ப்பரப்பு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகளின் நீட்சியாக ஆறாம் திணையாகப் பனியும் பனி சூழ்ந்த நிலத்தைக் குறித்தது போலத் தமிழில் முத்தமிழ் என்று அழைக்கப்படும் இயல், இசை, நாடகத்துடன் அறிவியல் தமிழும் வளர்ந்து வருகிறது. நம் தமிழ் மொழி அறிவியல் தன்மை பெறுவது இன்றியமையாத ஒன்று. அதன் தேவைகளை உணர்ந்து வலைத்தளக் கட்சி(Youtube)
ஊடகங்கள் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
சான்றாக
- 1.E=MC² எளிமையான விளக்கம்-1.7 M பார்வைகள்/57K விருப்பங்கள்/2.3 கருத்துரைகள்
- மங்கள்யான் – உண்மையில் நடந்தது என்ன?-428 பார்வைகள்/9.8K விருப்பங்கள்/1K கருத்துரைகள்
- ஒளியின் வேகம்-126K பார்வைகள்/5.7K விருப்பங்கள்/776 கருத்துரைகள்
- ஒளி எப்படி வளையும்-161K பார்வைகள்/7.7K விருப்பங்கள்/242 கருத்துரைகள்
- பிரபஞ்சம் ஒன்று மட்டும் இல்லை-105 K பார்வைகள்/ 3.3K விருப்பங்கள்/425 கருத்துரைகள்
- குவாண்டம் பின்னல் ஐன்ஸ்டீன் கோட்பாடுகள்Ep 13-23K பார்வைகள்/788 விருப்பங்கள்/79 கருத்துரைகள்
தாக்கங்கள்:
- வகுப்பறை கட்டுப்பாடு ஏதுமின்றி விரிவடைந்துள்ளது.
- தமிழ் மொழிகுறித்த செய்திகள் பரவலாக மக்களிடம் சென்றடைந்துள்ளது.
- மொழிக்கல்வி தமிழ், மொழியின் பண்பாட்டு விழுமியங்கள்குறித்த அறிதல் ஏற்பட்டுள்ளது.
- தேவைப்படும்பொழுது மீண்டும் காணும் வாய்ப்பு வலைத்தளக் கட்சி ஊடகத்தில் உள்ளது.
- முறைசாரா வழி வயது வந்தோர்க்கு மொழிக்கல்வி சென்றடைகிறது.
- பண்டிதர்களின் மொழிநடையிலிருந்து விடுபட்டு இலக்கண இலக்கியங்கள் மக்கள் மொழிநடையிலேயே விளக்கப்படுகிறது.
- இவ்வகை வலைத்தளங்கள் பெருவாரியான வரவேற்பைப் பெற்றுள்ளதோடு வலைத்தளங்களில் கற்பிப்பவர்கள் மக்களால் ஆதரிக்கப்படுகிறார்கள்.
முடிவுரை:
வலைதளக்காட்சி(youtube) ஊடகங்கள் வயது வந்தோருக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் அவர்களின் விருப்ப நேரத்தில் மொழியைக் கற்றுக்கொள்ள உதவியாக உள்ளது . புதிய விளக்கப் படங்களுடன் கற்பித்தல் துணைக்கருவிகளையும் புதிய புதிய உத்திகளையும் பார்வையாளர்களுக்கு விருந்தினைப் போல வழங்கித் தமிழ் மொழிக் கல்வியை மக்களிடம் பரவலாக்குவதிலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவதிலும் மற்ற ஊடகங்களைக் காட்டிலும் முன் நிற்கிறது என்பது திண்ணம்.
பார்வை:
- (வலைத்தளங்கள் (Youtube) நாள்:23/11/2023)
- 1.Chutty kannamma
- 2.Melody Animation
- 3.செல்லமே செல்லம்
- 4.Chu chu TV Tamil
- 5.CHOTI TV TAMIL
- 6.Scary Town Tamil
- 7.Tamil Bed Time Dreams
- 8.APPLE BOX By Sabari
- 9.Tamil Philosophy
- 10.Top up
- 11.SAIS ACADEMY
- 12.TAF IAS ACADEMY
- 13.தமிழ்ச் சோலை – Tamil solai
- 14.சிவனடியவள் தமிழம்மா
- 15.Visaipalagai
- 16.Mr.GK
- 17.Vaanaviyal Arputhangal
- 18.Behind Earth
- 19………..
- குறியீட்டு விளக்கம்
- M- 10000
- K-1000