வலைப்பதிவின்தேவையும்அமைப்பும்

“Need and Structure of Blog”

 திருமதி இர.கிருஷ்ணவேணி,

                                                                                            உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

                       தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம்  மகளிர் கல்லூரி,

சிவகாசி.

Abstract :

            As a unique service of the website, the internet service that is being praised and developed by many people today is the blog or website called BLOGS. There is no material cost for blogging. This service is provided free of charge on the Internet. You can create your own works in Tamil using Unicode notation. Eliminates the creator-reader distinction. The blog is also free of charge. The development of this blog is the foundation of the current you tube service

மொழியின் தோற்றம் :

                 மொழி என்பது கேட்கப்படுவதும் ,பேசப்படுவதும் ஆகும் . படிக்கப்படுவதும் எழுதப்படுவதும் மொழியின் அடுத்த வளர்ச்சி நிலை எனலாம் . மக்களின் வாழ்வில் அறிவுடன் உணர்ச்சியும் இடம்பெறுவது போல மொழியிலும் இவ்விரு கூறுகளும் இடம் பெறுசின்றன. சைகை மொழியிலிருந்து மொழி  உருவாகியது எனலாம்.  சைகைமொழி மக்களிடம்  மட்டுமே  காணப்படும்.  கருத்துக்களை வெளிப்படுத்த சுட்டிக்காட்டுதல் போன்ற எளிய சைகள் விலங்களிடத்தில் காண இயலாது , மனிதனிடத்தில் மட்டுமே சைகளாலும் ,ஒலியாலும் கருத்துக்களை வெளிப்படுத்த இயலும்.

             தகவல் தொழில்நுட்பத்தின் அதிநவீன ஊடகமாக  கணினி மற்றும் இணையம் விளங்குகின்றன. இணையம் வழங்கும் மின் அஞ்சல் , இணைய அரட்டை, இணைய வணிகம், கோப்புகள் பரிமாற்றம் (F.T.P.) போன்ற  உலகளாவிய  வலைத்தளச் சேவை WWW (world wide web) என்றழைக்கப்படும். வலைத்தளத்தின் தனியொரு சேவையாக இன்று பலராலும் புகழப்பட்டும் வளர்க்கப்பட்டும்  வரும்  இணைய சேவை தான்  BLOGS எனப்படும் வலைப்பதிவு அல்லது வலைப்பூ .

வலைப்பதிவு விளக்கம் :

வலைப்பதிவு  அல்லது வலைப்பூ (Blog) என்பது, அடிக்கடி    இற்றைப்படுத்துவதற்கும்(uptodate), கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட  வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக  வடிவமைக்கப்பட்டிருக்கும்.வலைப்பதிவின் சிறப்பு அம்சங்களாக  அடிக்கடி இற்றைப்படுத்தல் , வாசகர் ஊராடுவதற்கான வசதியினைப் பெற்றிருப்பது என்ற இரண்டினைக் கூறலாம்.குறுக்க வடிவமான blog  என்ற சொல்லை Peter Merholz என்பவரே முதன் முதலில் பயன்படுத்தினார். 1999-  WebLog  என்ற சொல் இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்றவாறு காண்பிக்கப்பட்டிருந்தது.

வலைப்பதிவு செய்ய தேவையானவை :

ஒருவர் தம் படைப்புகளை தாமே உருவாக்கி இணையத்தில் பதிப்பிக்கும் வசதியே வலைப்பதிவு. இதனை ,ஆங்சிலத்தில் blogging என்பர்.          தம் பெயரில் ஒரு  வலைப்பதிவினை உருவாக்க தேவைப்படுவன, குறைந்த பட்ச கணினி  தொழில்நுட்ப அறிவு மற்றும்  இணையத்தொடர்புள்ள கணினி இவை இரண்டு மட்டுமே . ஓரே சொல்லில் சொல்வதனால் ,எஸ்.பி.கே.கருணா  “வலைப்பதிவனை முதிரா எழுத்துக்கான பயிற்சிக்களம்” என்பர்.        வலைப்பதிவிற்கு பொருள் செலவு  என எதுவும் கிடையாது. இணையத்தில் இச்சேவை இலவசமாக வழங்கப்படுகின்றது. யுனிகோட் குறிமுறையைப் பயன்படுத்தி தமிழிலே தம்முடைய படைப்புகளைப் படைக்கலாம்.

வலைப்பதிவின் செயல்முறை :

            ஒவ்வொரு வலைப்பதிவும் வாசகர்களை மையமிட்டே எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வலைப்பதிவிற்குமென தனியொரு வாசகர் வட்டம் அமைந்து விடுவதும் உண்டு. பதிவுகளை படித்து வாசகர்கள் , அதற்கான  தன்னுடைய  சுய  கருத்தக்களை  (feed back) வெளியிடுவதற்கான  வாய்ப்புகளும் வசதிகளும் இவ் வலைப்பதிவு முறையில் காணப்படுகின்றன. இவ் வகையான கருத்துக்களை பிற வாசகர்களும் பார்ப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.

            பல்வேறு வகையான தகவல் ஊடகங்களையும்  இம்முறையில் புகுத்தலாம். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்டதொரு தகவலினைத்தரும் போது , அதனோடு தொடர்புடைய படத்தினையோ,  ஒலியினையோ இணைத்து தர இயலும்.

            சட்டமீறல்கள் ஏதேனும் இருப்பின்  வலைப்பதிவுகளை நீக்குவதற்கான உரிமை உண்டு.  சில  வலைப்பதிவுகள் பணம்  செலுத்தி பெற இயலும்.  இத்தகைய வலைப்பதிவின் சிறப்பு அம்சம் யாதெனில் , பிற்காலத்தில் நிறைய பயனாளர்களைப் பெற்றபின்னர், அவ்வலைப்பதிவினை வேர்ட்ப்ரெஸ்.ஆர்க்(wordpress.org) . மற்றவருக்கு விற்கவும் இயலும்.            பெரியவர்களுக்கான வலைப்பதிவில் விளம்பரப்படுத்துதல் என்பது  கிடையாது. இருப்பினும்  addsence  மூலம் , வலைப்பதிவில் பணம் ஈட்டுவதற்கான  வழிமுறையும்  உண்டு.

wordpressr.com –  www.blogger.com  ஒப்பீடு  :

அடிப்படைப்பகுதிகள் :

ஒவ்வொரு வலைப்பதிவும் சில அடிப்படை உறுப்புகளைப் பெற்றிருக்கும் அவை,

Ø  வலைப்பதிவு தலைப்பு

  • வலைப்பதிவு முகப்பு
  • பதிவின் தலைப்பு
  • பதிவின் உடல்பகுதி
  • பதித்த நாள், பதித்தவர் பெயர்
  • பின்னூட்டம்
  • சேமிப்பகம்
  • இணைப்புகள்

மேலே குறிப்பிட்ட  பகுதிகள் அனைத்தும்  வலைப்பதிவின் அடிப்படை உறுப்புகள் ஆகும். இவை தவிர,  வேறுசில இணைப்புகளும் உண்டு. “நிரல் துண்டு”   என்பது  சிறப்பான தேவைகளுக்கென வலைப்பதிவொன்றில் பொருத்தப்படும் மேலதிக ஆணைத்தொடர் ஆகும்.

 

வலைத்தளங்கள் – வலைப்பதிவுகள்  ஓர் ஒப்பீடு:

இணையத்தின்  முக்கிய அங்கமாக விளங்கும்  வலைத்தளம்  வலைப்பதிவிலிருந்து வேறுபட்டவை.  வலைத்தளங்கள்  அமைத்துக்கொள்ள கட்டணம் உண்டு. வலைத்தளங்களை  உருவாக்க  html அறிவு ஒரளவேனும் தேவை. வலைப்பதிவுகளை உருவாக்க  இத்தகைய html  அறிவு தேவை இல்லை. வலைத்தளத்திற்கான உள்ளடகத்தினை உருவாக்கித்தருபவர் ஒருவராகவும், html கொண்டு அத்தகவலை உள்ளிட்டு வடிவமைப்பவர் வேறு ஒருவராகவும் இருப்பர்.

வலைப்பதிவில் ,வலைப்பதிவிற்கான  உள்ளடக்கங்களை எழுதுபவரே உள்ளீடு செய்பவராகவும் இருப்பார். இதற்கென எந்த ஒரு  தனிப்பட்ட மென்பொருளும் அவசியம் இல்லை.

வலைத்தளங்கள்  அடிக்கடி  புதுப்பிக்கப்படுவதில்லை. ஆனால் , வலைப்பதிவுகள் அன்றாடம் புதுப்பிக்கப்படல் வேண்டும். வலைத்தளங்களில்  பெரும்பாலும்  கருத்துப்பரிமாற்ற  வசதி  இருப்பதில்லை.மின்னஞசல் வழிப் பின்னூட்டம் பெற சில தளங்களில்  உண்டு.  வலைப்பதிவில்  வாசகர்கள் உடனுக்குடன் கருத்து தெரிவிக்கும் வசதி உண்டு. இற்றைப்படுத்தல்களை உடனுக்குடன்  பரிமாற உதவும்( xml முகவரி).  இச்செய்தியோடை வசதியே  வலைப்பதிவு திரட்டிகளும் வலைப்பதிவர்  சமுதாயங்களும்  இணைவதை  சாத்தியப்படுத்தியுள்ளது.

வலைப்பதிவுச் சேவை வழங்குவோர் :

            இணையதளங்கள் பல  வலைப்பதிவு சேவையை இலவசமாக வழங்குகின்றன,அவற்றுள் சில,

  • ·         http:/www.blogger.com
  • ·         http:/www.blogdrive.com
  • ·         http:/www.livejournal.com
  • ·         http:/www.blog.sify.com
  • ·         http:/www.wordpressr.com
  • ·         http:/www.blogsome.com
  • ·         http:/www.rediffblogs.com

இந்த  இணைய தளங்கள் மட்டுமன்றி  வேறுபல இணையத்தளங்களும் வலைப்பதிவுச் சேவையை வழங்குகின்றன.

          wordpress வேகமாகவும் விரைவாகவும் செயல்படுகின்றது. மேம்படுத்தப்பட்ட ஊடகமாகச் செயல்படுகின்றது. ஆரம்பநிலை  கணினிபயன்பாட்டாளர்களுக்கு   wordpress   மிகச்சிறந்த வகையில்  உதவுகிறது.

http:/www.blogger.com வலைப்பதிவு சேவைகளிலே மிகவும் விரும்பிப் பயன்படுத்தப்படுவது. எளிமையும் பல வசதிகள் நிறைந்ததாகவும் உள்ளது. நம்பகத்தன்மை உடையதாகவும்  காணப்படுகிறது. தமிழ் பதிவாளர்கள் பலராலும் பாரட்டப்படுகிறது.

வலைப்பதிவின் தேவைகள் :

 வலைப்பூக்கள், எழுத்து ஆர்வமிக்கவர்களுக்கான நல்ல களத்தை அமைத்துக்கொடுத்தன. படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை வெளியிடச் சிற்றிதழ்களையும் வெகுஜன இதழ்களையும் நம்பியிருந்த காலம் வலைப்பூக்களின் வரவால் மலையேறியது. “ மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல “ வலைப்பூக்களும் ஃபேஸ்புக்கின் வரவிக்கிற்குப் பின்னர் , உதிர்ந்து விழ ஆரம்பித்தன. ஆனால் இவற்றில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் அதிகம்.

              தற்பொழுது மக்களிடையே வாசிப்புத்திறன் குறைந்து காணப்படுவதால், கணநேரத்தில்  வாசித்து  அறிந்துக்கொள்ளும்  ஊடகமான  ஃபேஸ்புக்கையே அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும்  ஒரு கட்டுரை படிக்கும் விதத்தில்  ஆழமான கருத்துக்கள் விரிவான முறையில் அமைய வேண்டும் எனில்  இணைய எழுத்துக் கலாச்சாரத்தை  உருவாக்க வேண்டும்.  மீண்டும் வலைப்பதிவுகளுக்குப் புத்துயிர் அளிக்க  வேண்டும். இன்று ஏராளமான புதிய பதிவர்கள்  வலைப்பூக்களைப் பயன்படுத்துகின்றனர்.  மேலும் பதிவர்கள்  தங்களுடைய முழுநேர வேலையாகவும் பயன்படுத்தி வருமானமும் ஈட்டுகின்றனர்.

தமிழ் வலைப்பதிவுகள் :

             தமிழ்  மொழியில்  வெளியிடப்படும்  வலைப்பதிவுகள்மூலம்  கண்டம் கடந்து,  நாடு கடந்து, சாதி மத பேத கடந்து தமிழர் எனும்  உணர்வைத் தருகிறது.  இவ்வகை வலைப்பதிவுகளால்  தனிமனித கருத்துக்களை  உலகம் முழுதும் பரந்து விரிந்துள்ள  மற்ற தமிழர்களுடன் நம் உணர்வைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக உள்ளது. தற்காலச்சுழலில் தமிழ் வலைப்பதிவுகள் அதிகாித்து வருகின்றன என்றே கூறலாம். சிறந்த தமிழ் வலைப்பூக்களாகத் தமிழ்த்தோட்டம்  (https://tamilthottam.forumta.net/t44925-1123) சுமார் 122 வலைப்பதிவுகளைச் சுட்டியுள்ளது.

 சிறார்களுக்கான  (நாளைய  படைப்பாளிகள்வலைப்பதிவுகள்  :

             இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்கள் என்னும் வகையில் சிறுவர்களுக்கான  வலைப்பதிவுகளில்,  குழந்தைகளின் அறிவு வளர்ச்சியைத் தூண்டும் வகையில் கதைகள்  இடம்பெறுகின்றன. இன்றையச் சூழலில் ,குழந்தைகளின் அறிவு வளர்ச்சி அதிகமாகவே உள்ளன . தற்பொழுது அக்குழந்தைகளின் நற்பண்புகளை வளர்ப்பதே ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கடமையாக உள்ளது.  அவ்வகையில் நீதிக்கதைகள் அடங்கிய வலைப்பூக்கள் உள்ளன. குழந்தை வளர்ப்பு,  குழந்தை மனநலம் , குழந்தைப்பாடல்கள், அம்மாக்களின் பகிர்வுகள், போன்றவை

பற்றியும் இவ்வலைப்பதிவு https://blogintamil.blogspot.com/2011/03/blog-post_20.html எடுத்துரைக்கின்றது.

தொகுப்புரை :

வலைப்பதிவு,  மனிதனுக்குள்ளிருக்கும்  படைப்பாக்கத்திறனை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் அவனது படைப்பைப் பரவலாக்குதல் என்னும் பணியினைச் செய்கிறது.  படைப்பாளி –  வாசகன் என்னும் வேறுபாட்டை  நீக்குகிறது. வலைப்பதிவு    கட்டற்ற சுகந்திரம் உடையதாகவும் விளங்குகிறது. இவ்வலைப்பதிவின் வளர்ச்சி நிலையே  தற்போதைய  you tube    சேவையின் அடித்தளம்  என்று கூறுமளவிற்கு  இதன் வளா்ச்சி அமைந்துள்ளது.  இன்று  பல பதிவர்கள்  வலைப்பதிவுகளைத் தங்களுடைய முழுநேர பணியாகவும் மாற்றியுள்ளனர். தமிழ் வலைப்பதிவுகள் இன்றைய தலைமுறைகக்கு கற்றல் பணியினையும்  நாளைய தலைமுறைக்கான கற்பித்தல் பணியினையும் செய்கிறது.

சான்றெண் விளக்கம் :

  • 1.    கவர்னரின்ஹெலிகாப்டர்     –     எஸ்.பி.கே.கருணா ,   வம்சிபுக்ஸ்வெளியிடு,                          
  •                                                                         திருவாண்ணாமலை.      
  • 2.    இணையத்தில்தமிழ்வலைப்பூக்கள்   –   முனைவர்துரை.மணிகண்டன்

  கௌதம்பதிப்பகம் , சென்னை.

  • படர்க்கை                                       –     முனைவர்நா.இளங்கோ, காவ்யா வெளியீடு,

                                                                          சென்னை.

error: Content is protected !!