பா.நாகேஸ்வரி,
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர்
Abstract
When computers appeared, their applications were largely English-language oriented. Due to scientific development, every language developed software according to the usage of their mother tongue. Fonts are the major problem of Tamil language. A number of fonts were invented as a means of eliminating typography. Thus, were the early stages of Tamil typing on computers. Nowadays, Unicode is the most widely used font. A number of applications have emerged that replace typing on a computer with speaking. Nowadays, there are many speech converters that are suitable for typing Tamil easily. In this article, we will see about the way the actuators are developed and how they are used.
Keywords
Speakers – Google – Typing – Play store
சொல்லடைவுகள்
பேச்சொலிகள் – கூகுள் – தட்டச்சு – பிளே ஸ்டோர்
கணினிகள் தோன்றியபோது அவற்றின் பயன்பாடுகள் பெரிதும் ஆங்கில மொழியிலேயே செயல்படும் விதமாக அமைந்தது. அறிவியல் வளர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு மொழியும் தங்களது தாய்மொழியின் பயன்பாட்டிற்கேற்ப மென்பொருள்களை உருவாக்கினர். தமிழ்மொழியின் பெரும்சிக்கலாக அமைந்தது எழுத்துருக்களே ஆகும். அச்சிக்கலைப் போக்கும் விதத்தில் பல எழுத்துருக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு தமிழை கணினியில் தட்டச்சு செய்வதற்கு தொடக்க கால இடற்பாடுகளாக இவை அமைந்தன. இன்றைய காலத்தில் ஒருங்குறி (Unicode) என்ற எழுத்துருவே மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது. கணினியில் தட்டச்சு என்பது மாறி பேசுவதன் மூலம் தட்டச்சு செய்யும் செயலிகள் பல தோன்றியுள்ளன. இன்றைய காலத்தில் எளிமையான முறையில் தமிழை தட்டச்சு செய்வதற்கு ஏற்ற வகையில் பல பேச்சு எழுத்துமாற்றிகள் தோன்றியுள்ளன. அச்செயலிகள் உருவான விதம் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பேச்சொலிகளை எழுத்துகளாக மாற்றும் முறை
பேச்சொலிகளை எழுத்துகளாக மாற்றுவது பேச்சு – எழுத்து மாற்றி ஆகும். பேச்சுணரியில் பேசுபவர் தாம் பேசும் சொற்களுக்கிடையே இடைவெளி விட்டு பேசுதல் வேண்டும். பேசுபவர் உச்சரிப்பில் தெளிவாக இருப்பின் எழுத்துப்பிழையானது ஏற்படாமல் எளிமையான முறையில் தட்டச்சு செய்வதற்கு பயன்படும். கணினியானது பேச்சொலிகளை புரிந்துக் கொண்டு அவற்றை அப்படியே வெளிப்படுத்துவது கடினமான செயலாகும். நம்மில் சிலர் சொற்களுக்கிடையில் நிறுத்தி பேசுபவர் உண்டு, சிலர் வேகமாக பேசுபவரும் உண்டு அவற்றைப் புரிந்துக்கொண்டு கணினியானது நாம் கூற வருவதை தெளிவாக த்ட்டச்சு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி தனிநபர் கணினியாக (Personal Computer) வைத்திருந்தால் ”அவரது பேச்சொலிகளை உணர்வதற்கான திறனைக் கொண்டிருக்க வேண்டும். அதற்குக் கணினியில் பேசுபவரது ஒலிமாதிரிகளை முன்கூட்டியே பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும்.”
இன்றைய காலத்தில் வேகமாக சென்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் வேலையை எளிமையாக்குவதற்கு இவை பயன்படுகின்றன. அதிகமான பக்க எண்ணிக்கைக் கொண்டிருக்கும் செய்திகளை குறுகிய நேரத்தில் வோர்ட்டில் மாற்றிக் கொடுத்துவிடும்.
பேச்சு எழுத்து மாற்றிகள் (Speech to Text)
1.கூகுள் டாக்ஸ் (Google Docs)
தகவல்களை தட்டச்சு செய்வதற்கு தட்டச்சு செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை. தட்டச்சு செய்வது இன்றைய நிலையில் எளிமையாக உள்ளன. அவற்றிற்கு இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும் எளிமையான முறையில் தட்டச்சு செய்யலாம். அவற்றில் கூகுள் டாக்ஸை ஈமெயில் மூலமாகவோ, கூகுள் தேடலின் மூலமாகவும் பயன்படுத்தலாம்.
கூகுள் டாக்ஸ் தேர்வு செய்துக் கொண்டு, அவற்றில் புதிதாக டைப் செய்வதற்கு பிளாங்க் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். வேர்ட்டில் டைப் செய்வது போன்று தோன்றும். அவற்றில் டூல்ஸ் என்பதில் வாய்ஸ் டைப்பிங்கை கிளிக் செய்துக் கொண்டு அவற்றை பயன்படுத்தலாம்.
கூகுள் டாக்ஸ் வாய்ஸ் டைப்பிங்கை கிளிக் செய்தால் வேர்டின் அருகில் மைக் ஒன்று தோன்றும். அவற்றில் பல மொழிகள் உள்ளன. நாம் பேசக்கூடிய மொழியினை தேர்வு செய்துக் கொண்டு பேசலாம். தமிழில் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்) நான்கு வகையான மொழிகளில் தோன்றும். அவற்றில் பேசக்கூடிய மொழியைத் தேர்வு செய்துக்கொண்டு பேசினால் நாம் பேசுவது தட்டச்சாக மாறும். தட்டச்சு செய்த டாக்ஸ்ஸை தேர்வு செய்துக் கொண்டு அதனை வேர்டில் அப்படியே மாற்றிக் கொள்ளலாம்.
2. ஸ்பீக் டைப்பிங் (Speech Typing.com)
தகவல்களை எளிமையான முறையில் தட்டச்சு செய்வதற்கு ஸ்பீக் டைப்பிங் பயன்படுகிறது. ஸ்பீக் டைப்பிங்க் மூலமாக பல மொழிகளிலும் டைப் செய்துக் கொள்ள முடியும். கூகுள் இணையத்தில் ஸ்பீக் டைப்பிங் என்ற வலைத்தளத்தை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
தட்டச்சு செய்வதற்கு வேண்டிய மொழியை தேர்வு செய்தவுடன் பேசுவதற்கான பக்கம் உருவாகும். அவற்றில் மைக் குறியீடு இருக்கும். அதைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யலாம். தட்டச்சு செய்து முடித்த பின்பு (Copy, paste, Save As Text File, Save As Doc File, Open in Editor) போன்ற செயல்பாடுகள் தோன்றும். அவற்றைக் கொண்டு வேர்டாக மாற்றிக் கொள்ளலாம். Open in Editor என்பதை தேர்வு செய்தால் வேர்டு தட்டச்சு செய்வது போன்று (Font, Alignment, Color, Size) அனைத்தையும் மாற்றிக் கொள்ளலாம்.
3.ஸ்பீக்நோட்ஸ் (Speechnotes.co)
ஸ்பீக்நோட்ஸ் என்ற வலையொளியின் மூலம் எளிமையான முறையில் தட்டச்சு செய்துக் கொள்ள முடியும். ஸ்பீகநோட்ஸ் மூலமாக பல மொழிகளிலும் டைப் செய்துக் கொள்ள முடியும். கூகுள் இணையத்தில் ஸ்பீக்நோட்ஸ் என்ற வலைத்தளத்தை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
தட்டச்சு செய்வதற்கு வேண்டிய மொழியை தேர்ந்தெடுத்து, மைக்கை தொட்டு பேச ஆரம்பித்தவுடன் தட்டச்சு செய்யும். அவற்றில் பேசும்பொழுது வார்த்தைகளை நிறுத்தி உச்சரித்தால் மட்டுமே எழுத்துப்பிழையின்றி தட்டச்சு ஆகும்.
4.ஜி.போர்ட் (G. Board)
கணினி வழியில் தட்டச்சு செய்வது என்பது மிகவும் குறைந்துவிட்டது. அனைவரிடமும் ஆன்டிராய்ட் தொலைபேசியின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. ஆதலால் அவற்றின் வாயிலாக எளிமையான முறையில் தட்டச்சு செய்து கொள்கின்றனர். பிளே ஸ்டோரில் ஜி.போர்ட் என்பதை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம்.
ஜி.போர்ட் பயன்படுத்துவதற்கு தங்களது மொபைலில் சில அமைப்பு (Setting) முறைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதன்பிறகு தட்டச்சு செய்ய வேண்டிய இடத்தில் மைக்கை பயன்படுத்தி பேசுவதன் மூலம் தட்டச்சு செய்யலாம். இவற்றில் மைக்கை பயன்படுத்துவது மட்டுமின்றி Thunkenglish தட்டச்சு செய்தால் உரிய தமிழ் வார்த்தையாக மாறிவிடும்.
5.வாய்ஸ் தமிழ் தட்டச்சு (voice Tamil Typing)
வாய்ஸ் தமிழ் தட்டச்சு என்ற செயலியும் பிளே ஸ்டோரை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இவற்றில் பல பக்கங்களை குறைந்த நேரத்தில் தட்டச்சு செய்துக் கொள்ள முடியும். தட்டச்சு செய்த செய்தியினை நகலெடுத்து அதனை வோ்ட்டில் மாற்றலாம்.
மேலும் Tamil Kural Voice Typing, Tamil Keyboard போன்ற செயலிகள் தட்டச்சு செய்வதற்கு பயன்படுகிறது. Google Voice typing, What’s app Voice typing மூலமாகவும் தட்டச்சு செய்து கொள்ள முடியும்.
பேச்சு மாற்றிகளில் ஏற்படும் சிக்கல்கள்
- பேச்சு மாற்றிகளில் உச்சரிப்பின் தன்மையை பொறுத்தே அதிகமான பிழைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
- எழுத்துப்பிழை ஏற்படின் அவற்றை தானாக சரிசெய்துக் கொள்ளும் செயிலிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை.
- கூகுள் டாக்ஸ் போன்ற செயலிகளை தவிர மற்றைய செயலிகள் வோ்டின் வடிவத்தில் மாற்ற வேண்டியுள்ளது.
இன்றைய கால வளர்ச்சிக்கேற்ப கணினியின் பயன்பாடு அதிகமாக உள்ளது. பல பக்கங்களின் செய்திகளை குறைந்த நேரத்தில் தட்டச்சு செய்து கொள்ள பயன்படுகிறது. இவற்றின் மூலம் வேலை நேரமானது குறையும். கணினி என்பது இல்லையென்றாலும் ஆன்ராய்ட் தொலைபேசியின் மூலமாகவே தட்டச்சு செய்யும் எளிமை வழிமுறைகள் பல உள்ளன. அவற்றின் பயன்பாடுகளை எடுத்துரைப்பதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
துணைநூல் பட்டியல்
- தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்: முனைவர் துரை.மணிகண்டன், த.வானதி
- https://docs.google.com
- https://Speechtyping.com
- https://Speechnotes.co
- Play Store- G.Board, Tamil Voice Typing