கட்டற்ற வளங்களுக்கான காப்புரிமங்கள்

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்,

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர்

Abstract

We refer to open source software as free software. The term free is used to refer not only to software but also to electronic content on open source resources such as Wikipedia, Wikisource, Wiktionary, and WordPress.

MIT License, GNU Public License 3.0, GNU Public License Version 2, GNU Lesser Public License 2.1, GNU Free Documentation License, Apache License, Version 2.0, BSD License, Mozilla Public License, Public The primary objective of this article is to discuss software licenses such as Development and Distribution License and copyrights for open resources such as Wikipedia and WordPress. Through this article, you can understand the need of open resources and the conventions of copyright for open resources.

குறிச்சொற்கள்

கட்டற்ற வளங்கள், திறந்த மூல மென்பொருள்கள், விக்கிப்பீடியா, வேர்டுபிரசு, காப்புரிமங்கள்,  Open source software, Wikipedia, WordPress, Copyrights

முன்னுரை

மென்பொருள்களைத் தனியுரிம மென்பொருள்கள் என்றும் திறந்தமூல மென்பொருள்கள் என்று வகைப்படுத்துகிறோம். தனியுரிம மென்பொருள்களின் மூல நிரல்களை, உருவாக்கியவர் தவிர யாரும் பயன்படுத்த முடியாது. ஆனால் திறந்த மூல மென்பொருள்களின் மூல நிரல்களைப் பலரும் பயன்படுத்தவும் மேம்படுத்தவும் முடியும். இந்த திறந்தமூல மென்பொருள்களைக் கட்டற்ற மென்பொருள்கள் என்று குறிப்பிடுகிறோம். கட்டற்ற என்ற சொல்லானது மென்பொருள்களை மட்டும் குறிப்பிடாமல் திறந்தமூல வளங்களான விக்கிப்பீடியா, விக்கி மூலம், விக்சனரி, வேர்டுபிரசு போன்ற மின் உள்ளடக்கங்களையும் குறிப்பிடப் பயன்படுகிறது. தனியுரிம மென்பொருள்களையே அதிகமாகப் பயன்படுத்திவரும் இன்றைய சூழலில் கட்டற்ற வளங்களையும் அவற்றுக்கான உரிமங்களையும் அறிந்துகொள்வது காலத்தின் தேவையாகிறது.

படைப்பாக்கப் பொதும உரிமம்

அறிவு தனியுடைமை அல்ல அது பொது உடைமை என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது இவ்வுரிமம்.“கட்டற்ற மென்பொருள்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் (Creative Commons) என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன“   இந்த உரிமத்தின் அடிப்படையில் யாருடன் பகிர, திருத்தி எழுதி வெளியிடவும் வணிக அடிப்படையில் பயன்படுத்தவும் முடியும். அதில் மூல ஆசிரியர் பற்றிய விவரங்களைச் சேர்த்துத் தரவேண்டும் என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது. இந்த உரிமமானது சட்டப்படி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளலை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். “இது 2001 இல் லோறன்ஸ் லெஸிக் என்பவரால் தொடங்கப்பட்டது. இது ஆக்கர்களுக்கும் பயனர்களுக்கு இடையேயான ஒரு பாலமாக அமைகிறது.” 

எம்ஐடி உரிமம் (The MIT License – Massachusetts Institute of Technology)

எம்ஐடி உரிமம் என்பது 1980களின் பிற்பகுதியில் “மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இல் தொடங்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட இலவச மென்பொருள் உரிமமாகும்.”   ஒரு அனுமதிக்கப்பட்ட உரிமமாக, அது மறுபயன்பாட்டுக்கு மிகவும் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்கிறது,

குனூ பொதுப் பொது உரிமம் 3.0 (GNU General Public License (GPL) 3.0)

குனூ பொதுமக்கள் உரிமம் (GNU GPL) என்பது ”குனூ திட்டத்திற்கென ரிச்சர்ட் ஸ்டால்மன் என்பவரால் எழுதப்பட்ட மென்பொருள் உரிம ஒப்பந்தமாகும்.”    இதுவே தளையறு மென்பொருட்களுக்கென இன்று பயன்படுத்தப்படும் உரிம ஒப்பந்தங்களுள் மிகவும் புகழ்பெற்றதாகும். இவ்வுரிம ஒப்பந்தத்தின் மிக அண்மைய வெளியீடு, குனூ பொது மக்கள் உரிமம் பதிப்பு 3 (GPL v3) ஆகும். இப்பதிப்பு 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த உரிம ஆவணத்தின் சொற்களஞ்சிய நகல்களை (verbatim copies) நகலெடுத்து விநியோகிக்க அனைவருக்கும் அனுமதி உண்டு, ஆனால் அதை மாற்றுவது அனுமதிக்கப்படாது.

குனூ குறைவான பொது பொது உரிமம், பதிப்பு 2.1 GNU Lesser General Public License)

குனூ குறைவான பொது பொது உரிமம் என்பது இலவச மென்பொருள் அறக்கட்டளை (FSF) வெளியிட்ட ஒரு இலவச மென்பொருள் உரிமமாகும். இதன் தொடர்ச்சியாக ”குனூ குறைவான பொது பொது உரிமம், பதிப்பு 3”   வெளியிடப்பட்டது.

குனூ தளையறு ஆவண உரிமம் (GNU Free Documentation License, GNU FDL

குனூ தளையறு ஆவண உரிமம் என்பது கட்டற்ற ஆக்கங்களை உறுதி செய்வதற்கான அளிப்புரிமை (Copyleft) தரும் உரிமம் ஆகும். இது கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (FSF) குனூ திட்டத்திற்காக உருவாக்கிய உரிமம் ஆகும். ஆரம்பத்தில் மென்பொருள் ஆவணப்படுத்தலுக்காகப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டாலும் பிற படைப்புகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ”படைப்பாக்கத்தின் பயனைத் தடுக்காமல் மேலும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதால் இது பொதுவாக அளிப்புரிமம் என வழங்கப்படுகிறது.”   இதன்படி ஒரு படைப்பாளி உரிமம் வழங்குகிறார் என்றால் குனூ தளையறு ஆவண உரிமம் வரையறைகளின் கீழ் எவரும் தனது ஆக்கத்தை மீண்டும் வெளியிடவோ, பகிரவோ, மாற்றவோ அவருக்கு ஒப்புதல் அளிக்கிறார் என்று பொருள்.

அப்பாச்சி உரிமம், பதிப்பு 2.0 (APACHE LICENSE, VERSION)

அப்பாச்சி உரிமம் “அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை (ASF) எழுதிய ஒரு இலவச மென்பொருள் உரிமம் ஆகும்.”   அப்பாச்சி உரிமத்தைப் பயன்படுத்தும்போது பதிப்புரிமை அறிக்கை மற்றும் நிபந்தனைகளை எப்போதும் வெளியிட நிர்ப்பந்திக்கிறது. இலவச மென்பொருள் உரிமம் போல, அப்பாச்சி உரிமத்துடன் பயனருக்கு மென்பொருள் சுதந்திரம் உரிமம் நிபந்தனைகளின் கீழ், அதை மாற்ற, அதை விநியோகிக்க, மற்றும் மென்பொருள் மாற்றம் பதிப்புகள் விநியோகிக்க பயன்படுத்த அனுமதி உண்டு.

ஆண்ட்ராய்டு காப்புரிமம்

ஆண்ட்ராய்டு மென்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணக் கோப்புகளின் நகலைப் பெறும் எந்தவொரு நபருக்கும், மென்பொருளைப் பயன்படுத்துவதற்கும், நகலெடுப்பதற்கும், மாற்றியமைப்பதற்கும், ஒன்றிணைக்கும் உரிமைகள் உட்பட, கட்டுப்பாடுகள் இல்லாமல் மென்பொருளைக் கையாள்வதற்கும் இதன்மூலம் அனுமதி இலவசமாக வழங்கப்படுகிறது. ”Android SDK ஐ பதிவிறக்கம் செய்யலாம், பயன்பாடுகளை உருவாக்கலாம் மற்றும் எந்த பதிவு அல்லது கட்டணமும் இல்லாமல் அவற்றை உலகிற்கு விநியோகிக்கலாம்.” 

பிற உரிமங்கள்

கட்டற்ற மென்பொருள்களுக்கான உரிமங்களுள், பி.எஸ்.டி உரிமம் (Berkeley Software Distribution), கலை உரிமம் (The “Artistic License), பொது வளர்ச்சி மற்றும் விநியோக உரிமம், மொசில்லா பொது உரிமம் (CDDL –  Common Development and Distribution License) மொசில்லா பொது உரிமம்  (Mozilla Public License), ஆகிய உரிமங்கள் குறிப்பிடத்தக்கன.

விக்கிப்பீடியா பின்பற்றும் உரிமம்

தேடுபொறிகளில் என்ன தேடினாலும் பெரும்பாலும் பரிந்துரைகளாகக் கிடைப்பது விக்கிப்பீடியா பக்கங்களாகும். விக்கிப்பீடியாவின் கட்டுரைகளை எந்தப்பக்கத்திலிருந்து பெறப்பட்டது என சுட்டிப் பயன்படுத்தவேண்டும். அதுபோல விக்கிப்பீடியாவில் நாம் உள்ளீடு செய்யும் செய்திகளும் ஒருவர் காப்புரிமம் பெற்ற நூலில், இணையதளங்களில் இருந்து எடுத்து உள்ளீடு செய்யக்கூடாது. ”அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன” சுட்டல்/ஒன்றேபோல் பகிர் (Creative Commons Attribution/Share-Alike) 3.0 மற்றும் GFDL இரட்டை உரிமம் என்ற உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது.

வேர்ட்பிரசின் காப்புரிமம்

“வேர்ட்பிரசு, குனூ பொதுப் பொது உரிமம் (GPLv2) என்ற உரிமத்துடன் செயல்படுகிறது.” இந்த உரிமமானது, வணிகப் பயன்பாடு, விநியோகம், திருத்தம், காப்புரிமை பயன்பாடு, தனியார் பயன்பாடு ஆகிய அனுமதிகளையும் ஆதாரத்தை வெளிப்படுத்துதல், உரிமம் மற்றும் பதிப்புரிமை, அறிவிப்பு, அதே உரிமம் கட்டுப்பாடுகளையும் பொறுப்பு மற்றும் உத்திரவாதத்தையும் வழங்கும் உரிமமாகும்.

நிறைவுரை

•           படைப்பாக்கப் பொதும உரிமம், எம்.ஐ.டி உரிமம், குனூ பொதுப் பொது உரிமம் 3.0, குனூ குறைவான பொது பொது உரிமம், பதிப்பு 2.1, குனூ தளையறு ஆவண உரிமம், அப்பாச்சி உரிமம், பதிப்பு 2.0, பி.எஸ்.டி உரிமம், கலை உரிமம், பொது வளர்ச்சி மற்றும் விநியோக உரிமம், மொசில்லா பொது உரிமம், ஆண்ட்ராய்டு ஆகிய உரிமங்கள் கட்டற்ற மென்பொருள்களுக்கான உரிமங்களாகும். விக்கிப்பீடியா, வேர்டுபிரசு ஆகிய கட்டற்ற வளங்களுக்கும் படைப்பாகப் பொதும உரிமம் ஆகிய காப்புரிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

•           தனியுரிம மென்பொருள்கள்களுக்கு இணையாகக் கட்டற்ற வளங்கள் உள்ளன என்று அறிவதும். கட்டற்ற வளங்களுக்கான உரிம மரபுகளை அறிந்துகொள்வதும் கட்டற்ற வளங்களைப் பரப்புவதற்கான எளிய வழியாகும்.

சான்றெண் விளக்கம்

1 முனைவர் இல.சுந்தரம் – கணினித் தமிழ், – 185

2 https://ta.wikipedia.org/wiki/ படைப்பாக்கப்_பொதுமங்கள்

3 https://en.wikipedia.org/wiki/MIT_License

4 https://en.wikipedia.org/wiki/GNU_General_Public_License

5 https://opensource.org/license/lgpl-license-html/

6 https://ta.wikipedia.org/wiki/ குனூ_தளையறு_ஆவண_உரிமம்

7 https://ta.wikipedia.org/wiki/ அப்பாச்சி_அனுமதி

8 https://developer.android.com/legal

error: Content is protected !!