மு. மணிமேகலை எம்.ஏ., எம்.பில்., பி.எட்.
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி,
திண்டுக்கல்.
இந்த நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் சாதனமாகக் கணினியில் நூல்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் பணி உலகெங்கிலும் எல்லா மொழிகளிலும் வெகுவேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய நூல்களைக் கணினியில் சேமித்து வைக்கம் வேலை அரசாலும், அரசு சார்புடைய அமைப்புகனாலும், தனிநபரின் பலரின் ஆர்வத்தாலும் நடைபெற்று வருகிறது. சென்னை பல்கலைக்கழகமும், மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் வேலையைச் செய்து வருகிறது.
கே.கல்யாணசுந்தரம் என்பவர் தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் வேலையை 1988 ஆம் ஆண்டு தொடங்கினார். இது தமிழ் நூல்களைக் கணினியில் சேமிக்கும் முதல் பணியாகக் கருதப்படுகிறது. இவர் தொடங்கிய திட்டத்திற்கு மதுரைத் திட்டம் என்று பெயர் வந்தது.
நூலக திட்டங்களை அமைத்து அனைத்து நூலகங்களிலும் மின்னூல் பணியை ஆரம்பித்தனர். இதுவே நூலக திட்டம் என்று குறிப்பிடுகின்றார். தமிழக அரசாங்கம் தமிழகத்தில் உள்ள கன்னிமார நூலகம, தேவநேயப் பாவணார் நூலகம், தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், தமழ் பல்கலைக்கழக நூலகம் கும்பகோணத்தில் உள்ள அரசினர் கலைக்கல்லூரி நூலகம் போன்ற புகழ் மிக்க நூலகத்தில் பழமையான நூல்களைக் கணினிமயமாக்கி பாதுகாத்து வருகிறது.
மேற்கூறிய பணிகளில் சில நூல்கள் முழுவதுமாகப் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சில நூல்களின் பட்டியலைப் பார்வையிடும் வகையில் அமைந்துள்ளது. இங்ஙனம் தமிழ் நூல்களைக் கணினியில் சேமித்து இணையப் பயன்பாட்டின் மூலமாக எவரும் எங்கிருந்தும் பார்க்கும் வகையில் நூலகமாக அமைத்திடும் முறையையே மின் நூலகம் என்று குறிப்பிடப்படுகின்றது.
மின் நூலகங்கள்:
1. எண்ணிம நூலகம்
2. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின்நூலகம்
3. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
4. சென்னை மின் நூலகம்
5. நூலகம் நெட்
6. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்
மதுரைத்திட்டம்:
மதுரைத்திட்டம் எந்தவித அரசாங்கம் அல்லது தனியார் நிறுவன உதவியின்றி , வியாபார நோக்க மின்றியும் நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ முயற்சி ஆகும். 1988 ஆம் ஆண்டுத் தமிழர் பொங்கல் திருநாள் ன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை றடத்தி வருகின்றனர்.
உள்ளடக்க மின்னூல்கள்:
மின் நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்கள் இலக்கண நூல்கள், சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், திரட்டு நூல்கள், நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், தமிழ் இலக்கிய உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்னும் வகைப்பாட்டு முறைமையில் பகுத்தமைக்கப்பட்டுள்ளன.
உரோமன் வரிவடிவ நூல்கள்:
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்கள் முழுமையாக உரோமன் வரி வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
அகராதிகள்:
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் – தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி, மு. சண்முகம்பிள்ளையின் தமழ் – தமிழ் அகரமுதல் ஆகிய நான்கு அகராதிகள் இடம் பெற்றுள்ளன. சொற்களுக்கான பொருளை அகர வரிசை முறையிலும், வேண்டிய சொற்களுக்கான பொருளைத் தேடிப் பெறும் வகையிலும் அச்சுவடிவ அகராதியைப் பார்ப்பதைப் போலவே பக்கம் பக்கமாகப் பார்க்கும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கலைச்சொற்கள்:னிடவியல்
சமுதாயவியல், கலை மானிடவியல், அறிவியல், மருத்துவவியல், தகவல் தொழில் நுட்பவியல், சட்டவியல், கால்நடை மருத்துவவியல், பொறியியல் தொழில் நுட்பவியல், மனையியல், உயரியத் தொழில் நுட்பவியல், வேளாண்மை பொறியியல் ஆகிய துறைகளைச் சார்ந்த கலைச்சொற்கள் இந்நூலகத்தில் அடங்கியுள்ளது.
சுவடிக்காட்சியகம்:
ஓலைச்சுவடிகளுள்ள தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்கும் வகையிலும் இம்மின்னூலகம் பணியாற்றி வருகிறது. ஓலைச்சுவடிகளை ஒளிப்பட நகல் எடுத்துப் பாதுகாத்து வருகிறது. ஓவைச்சுவடிகள் மட்டுமின்றிச் சில அரிய காகிதச் சுவடிகளையும் பாதுகாத்து வைப்பதோடு அவற்றை இணையம் வழியாகக் காட்சிக்கும் அளிக்கிறது. அவ்வகையில் கீழ்காணும் ஓலைச்சுவடிகள் காணக்கிடைக்கின்றன.
பண்பாட்டு காட்சியகம்:
தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பின்வரும் பகுதிகள் அமைந்துள்ளன. ஓவ்வொன்றும் பற்றியும் சுருக்கமான விளக்கம், படக்காட்சிகள், ஒலி ஒளிக் காட்சிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
திருத்தலங்கள்
சமணத்தலங்கள் – 14
சைவத்தலங்கள் – 101
வைணவத்தலங்கள் – 93
இசுலாமியத் தலங்கள் – 9
கிருத்துவத்தலங்கள் – 13
திருவிழாக்கள் – 7
தேர்திருவிழாக்கள் – 8
கலைகள் – 16
வரலாற்றுச் சின்னங்கள் – 3
விளையாட்டுகள் – 5
தமிழ் மொழியில் இன்று பரவலாக இருக்கும் நூல்கள் அனைத்தும் மின்னூலாக மாற்றி வருகின்றனர். மின்னூல்களை ஒரு கட்டமைப்பாக வைப்பதற்கு மின்னூலகங்கள் உருவாக்கினர். இனி வரும் காலங்களில் கட்டமைக்கப்பட்ட புத்தகங்களைப் படிப்பதைத் தவிர்த்து விட்டு மின்னூல் படிக்கும் முறை அதிகமாக வளர்ந்து வருகின்றன.