கணினி சார்தொழில்நுட்பத்தில் தமிழ்

   ரா.வனிதா

   தமிழ், உதவிப்பேராசிரியர்,

  எஸ்.ஆர்.என்.எம். கல்லூரி, சாத்தூர்

முன்னுரை

            அறிவியல் உலகில் மனிதன் கண்டுபிடித்த மிகப் பெரிய அரிய கண்டுபிடிப்பு கணினி. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது கணினியே ஆகும். மனிதனின் மூளையைப் போன்று அதிவேக நுண்ணறிவுடன் செயல்படக்கூடியது. இன்றைய உலகில் ஏல்லா துறைகளிலும் கணினியின் தேவை இன்றியமையாதது. கணினி இல்லையென்றால் இந்த உலகம் இயங்காது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது கணினியில் ஏராளமான உலக மொழிகள் மிக எளிதாக செயல்படும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்திய மொழிகளுள் ஒன்றும் உலகளவிலான ஆறு செம்மொழிகளுள் ஒன்றுமான நமது தமிழ்மொழியும் கணினி தொழில்நுட்பத்தில் தனக்கான இடத்தைப் பெற்றுள்ளது. கணினி தொழில் நுட்பம் என்ற டிஜிட்டல் டெக்னாலஜி  பயன்படுத்துகின்ற பல்வேறு தளங்களிலும் தேவையான வடிவங்களில் தமிழ் மொழியும் மாற்றம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கணினியின் தோற்றம் வளர்ச்சி

            அறிவியல் வளர்ச்சியால் உலகம் செயல்பட முக்கிய காரணம் கணினி. அத்தகைய கணினியானது 1833 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் பாபேஜ் என்பவரால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.  இவர் தான் கணினியின் தந்தை என்று போற்றப்படும் பெருமைக்கு உரியவர். முதன் முதலில் 1946 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நுNஐயுஊ  ( நுடநஉவசழniஉ ரேஅநசiஉயட ஐவெநபசயவழச யனெ ஊழஅpரவநச ) என்ற கணினி தான் உலகின் முதல் பயன்பாட்டுக் கணினியாகும். இது பிரம்மாண்டமான கணினி ஆகும்.

இது 27,000 கிலோ கிராமுக்கு மேல் எடை கொண்டது. அபேக்ஸ் எனப்படும் சீனர்களின் அறிவியல் சாதனம் தான் கணினியின் முன்னோடி என்று சொல்லப்படுகிறது. அதுபோல 1824 ஆம் ஆண்டு டாக்டர் ஆலன் எம் டூரிங் என்பவர் மின்னணுக் கணினியைக் கண்டுபிடித்தார். மேலும் தற்போது பயன்படுத்தி வரும் கணினியை ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஹோவன்ட் என்பவர் தான் கண்டுபிடித்தார். ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகளான “லேடி லவ்வேஸ்” என்பவர் கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வடிவமைத்தமையால் முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்படுகிறார்.

ஆரம்ப காலத்தில் இருந்தே கணினியானது காலத்திற்கேற்ப பல வடிவங்களை பெற்றுக் கொண்டே வருகின்றது. இன்றைய நிலையில் கணினிகள் பல அளவுகளிலும் பல திறன்களிலும்  தயாரிக்கப்படுகின்றன. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக கணினியில் பல புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று கணினிகள் பல வகைகளில் வடிவமைக்கப்படுகின்றன. மேசைக் கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி, பணி நிலையக் கணினி என்று பல வகைகள் உள்ளன. தற்போது அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீத்திறன் கணினியை உருவாக்கி சாதனை படைக்க முயற்சித்து வருகின்றன. 

கணினி தொழில் நுட்பத்தின் பயன்பாடுகள்

            நம் அன்றாட வாழ்வில் கணினி இன்றியமையாத சாதனமாக செயல்பட்டு வருகிறது. வணிகம், அறிவியல், கல்வி, போக்குவரத்து, பாதுகாப்பு, மருத்துவம், தொலைத்தொடர்பு, மற்றும் விண்வெளி போன்ற பல துறைகளிலும் கணினி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் பேருந்து நிலையங்கள், வங்கிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் கணினியின் ஆட்சி நிலவுகின்றது. உடனுக்குடன் தகவல்களை பரிமாறவும்;, பெறவும் கணினி பயன்படுத்தப்படுகின்றது. வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தவும், தொழில் சார்ந்து பொருளாதரத்தை மேம்படுத்தவும் அலுவலங்களில் தேவையான முக்கிய விவரங்களைச் சேர்த்து வைக்கவும் பாதுகாக்கவும் கணினி பயன்படுகின்றது. இணையதளம் மூலம் நாம் அனைத்துத் துறை சார்ந்த செய்திகளை பெறுவதற்கும், அந்த செய்திகளை அழியாமல் சேமித்து வைப்பதற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பயன்படுகின்றது.

கணினியில் தமிழ் மொழி

            மனிதனின் மூளையால் கண்டுபிடிக்கப்பட்ட கணினி மனிதனின் மூளையையும் விஞ்சிவிட்டது. 1983 ஆம் ஆண்டு தமிழ்க் கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத்; தொடங்கினர். “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்திடல் வேண்டும்” என்ற பாரதியின் கனவை இன்று ‘கணினி’ நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. கல்வெட்டுகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் கணிப்பொறிகளில் எழுதப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். கல்லிலிருந்து ஓலைக்குத்தாவி, அங்கிருந்து காகிதங்களுக்கு தாவிய தமிழ் இப்போது கணினிக்குள் நுழைந்திருப்பது தமிழ் வளர்ச்சியின் அடுத்த நிலையாகும். இணையத்தின் வழிவகையடகக் கணினியால் தமிழரின் இணைப்பை இணைத்துவிடுகிறது.

தமிழில் மென்பொருள்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான வசதிகளே கிடையாது. தமிழ் எழுத்துருக்க விசைப்பலகைகள் உருவாக்கப்படவில்லை. தமிழ் உரையை ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்து, அதைத் தமிழ் எழுத்துருக்களில் மாற்றும் வசதி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று தமிழ் எழுத்துகளில் மாற்றிக் கொள்ளக் கூடிய வளர்ச்சியும் தமிழ் எழுத்துகளையே நேரடியாக தட்டச்சு செய்து கொள்ளக்கூடிய வளர்ச்சிiயை எட்டியது.

தற்போது உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகு தரமான யூனிகோடு (ருniஉழனந) என்ற எழுத்துருவால் உலக மற்றும் இந்திய மொழிகளின் இடையில் தமிழுக்கு என்று தனியிடம் கிடைத்துள்ளது. இந்த யூனிகோடு முறை மூலம் பதிக்கப்பட்ட தகவல்களைத் தமிழிலேயே தேடவும் பெறவும் மின்னஞ்சல்களை எளிதாக அனுப்பவும் முடியும். யூனிகோடு முறை என்பது தமிழ் இணையப் பயன்பாட்டில் மிகச்சிறந்த வளர்ச்சியாகும். இவ்வளர்ச்சியால் தமிழ் மொழியிலேயே கணினி பயன்பாடு அமைவது மிகச்சிறந்த மாற்றத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

1984 ஆம் ஆண்டு கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீனிவாசன் என்பவரால் தமிழில் முதன் முதலில் மென்பொருள்களில் ஆவணங்கள் எழுதும் ஆதமி (யுனயஅi) உருவாக்கப்பட்டது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக ‘ஆதவின்’ என்ற மென்பொருளும் ஆளு றுiனெழறள  இயங்கு தளத்தில் பயன்படக்கூடியதாகப் பின்னாளில் உருவாக்கம் பெற்றது.

தமிழ்த் தட்டச்சுப்பலகை

            தமிழ் எழுத்துகளை ஒருங்குறிமுறையில் கணினியில் என்.எச்.எம்., அழகி போன்ற மென்பொருட்களின் வழி தட்டச்சு செய்தாலும், தட்டச்சுப் பலகை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். தமிழில் தட்டச்சு செய்வோர் தமிழ்த் தட்டச்சு முறையிலோ, தமிழ்ஆங்கில முறையிலோ, ஆங்கில முறையிலோ தம் கருத்துகளை வெளியிடுகின்றனர். அதற்கேற்ப அரசே தமிழ் தட்டச்சுப் பலகைகள் வெளியிட ஆவணச் செய்ய வேண்டும்.

இணையத்தில் தமிழ் மொழி

            உலகில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கிறது இணையம். இதன் மூலம் உலகம் முழுவதிலும் தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. ‘இணையம்’ என்ற தமிழ்ச்சொல்லின் மூல ஆங்கிலச் சொல் இன்டர்நெட் ( ஐவெநசநெவ) என்பதாகும். பல்வேறு கணிப்பொறிகளில் தொகுக்கப்பட்ட தகவல்கள் முதல் கட்டமாக அந்தந்த நாடுகள் அளவிலும், பின்பு கண்டங்கள் அளவிலும் செயற்கைக்கோள்கள் மூலமாகவோ இணைக்கப்படுகின்றன. பின்பு அவ்வாறு இணைக்கப்பட்ட தகவல்களை (னயவய) யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளும் படி உருவாக்கப்பட்ட அமைப்பே இணையம். ஆரம்ப காலத்தில் மின்னஞ்சல் அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பி;ன்னர் படிபடியாகச் செய்திகள் பெறவும் தொடங்கியது.

            இன்று இணையத்தில் உலகின் பல மொழிகள் இடம் பெற்று வருகின்றன. ஆயினும்  இணையத்தில் ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக பயன்படுத்தப்படும் மொழி தமிழ் மொழியாகும் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். தகவல் தொடர்பின் ஒரு நீட்சியாகத்தான் கணினியும் இணையமும் நம்முடைய பணிகளை எளிதாக்கியது. முதலில் மின்னஞ்சல் வழியாக அனுப்பபட்ட செய்திகள் வலையங்கள் வழியாக செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் இணையத்தின் வளர்ச்சியால் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ள தமிழை இணையத்தில் தோற்றம் பெறச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். உலகெங்கும் பரவி வரும் தமிழர்கள் இணையத்தின் வழியாகத் தமிழில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினர். அவர்கள் தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கலை ஆகியவற்றைத் தொடர்ந்து கற்றுத் தெளியவும் தமிழ் இணையதளங்களை உருவாக்க விரும்பினர்.

1995 ஆம் ஆண்டில் நா.கோவிந்தசாமி ‘கணியன’; என்கிற பெயரில் நடத்தியதுதான் முதல் தமிழ் இணையத்தளம். இவ்விணையத்திற்கான தகவல்கள் சிங்கப்பூர் மற்றும் சென்னையிலிருந்து தொகுக்கப்பட்டன. இத்தளத்தினை படிக்க ‘கணியன்’ எழுத்துருவை பயன்படுத்த வேண்டும். முதன் முதலில் தமிழ் இணையத்தளம,; இணைய இதழ் எது என்பதில் குழப்பம் ஏற்பட்டாலும் இன்று இணையத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் தளங்களும், இணைய இதழ்களும் வெளிவருகின்றன. இவற்றில் சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியம், சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள், நூலகம், இணையப் பல்கலைக்கழகம், அகராதிகள், சினிமா போன்ற ஏராளமான தகவல்கள் லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்டுள்ளன.

எந்தவொரு அமைப்பும் தோன்றுவதற்கு முன்னர் மாநாடுகளும், கருத்தரங்குகளும் அவசியமாகின்றன. தமிழில் இணையத்தளங்கள் செம்மையுற அமைவதற்கு பல கருத்தரங்குகளும், மாநாடுகளும் நடத்தப்பட்டன. இவை அரசாலும், சில தனியார் நிறுவனங்களாலும் நடத்தப்பட்டன. பத்து உலகத்தமிழ் இணைய மாநாடுகள் இதுவரை நடத்தப்பட்டிருக்கின்றன.

தமிழ் இணைய நூலகம்

            தமிழ் மிகப்பெரிய கடல். அதில் ஏராளமான அரிய பொக்கிஷங்கள் கிடக்கின்றன. சில நூல்கள் எந்தவிதமான சிதைவுகளும் இன்றி முழுமையாக கிடைத்துள்ளன. ஒரு சில நூல்கள் கிடைக்காமல் போய்விட்டது என்று கூறலாம். ஆனால் தற்போது இணையத்தின் பயன்பாட்டினால் எந்த நூலை எப்போது படிக்க விரும்பினாலும் இணையத்தளத்திலேயே பதிவிறக்;கம் செய்து படித்துக் கொள்ளலாம். அனைவரும் பயன்பெறும் வகையில் இணையத்திலேயே நூல்களை பதிவிறக்கம் செய்வதற்கு உருவாக்கப்பட்ட செயலி தான் தமிழ் இணைய நூலகம். இதில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ் இணைய நூலகம் வழி உலகமெங்கும் தமிழ் மொழியின் பெருமை பரவி வருகின்றது. இணைய நூலகத்தினால் பல்வேறு தரப்பினரும் பயன்பெறுகின்றனர். மாணவர்கள் தங்கள் ஆய்விற்கு தேவையான நூல்களை இணையத்திலேயே பெற்றுக்கொள்ள முடிகிறது. தமிழ் மொழியானது உலக மொழிகளோடு போட்டியிட்டு முன்னேறுவதற்கு இத்தகைய தமிழ் இணையங்கள் உதவிபுரிகின்றன.

            தமிழ் கற்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஏராளமான செயலிகள் இணையத்தில் உள்ளன. ஆய்வு மாணவர்களுக்கு என்று உருவாக்கப்பட்டது தான் ‘ளுழவார பயபெய’ என்ற செயலி. இதில் முனைவர் பட்டம் முடித்தவர்களின் ஆய்வேடுகள் ஏற்றப்பட்டிருக்கும். அவர்கள் என்ன தலைப்பில் செய்தனர், எந்த பல்கலைக்கழகம் என்ற எல்லா விவரங்களும் இடம்பெறும். வருங்காலங்களில் ஆய்வு செய்வோருக்கு தேவையானச் செய்திகளைப் பெறுவதற்கும் தங்களின் ஆய்வை சிறப்பாக வழி நடத்திச் செல்வதற்கும் உறுதுணையாக இருக்கின்றது இந்த இணையம்.

கல்வியில் கணினியின் பங்கு

            கல்வித்துறையில் கணினியின் பயன்பாடு அளப்பரியது. இணையத்தில் கல்வித் தொடர்பான செய்திகளை மாணவர்கள் உடனுக்குடன் பெறவும், வேறு நாடு மற்றும் மாநிலம் சார்ந்த கல்வித்திட்டங்களை அறிந்து கொள்வதற்கும் பயன்படுகின்றது. மாணவர்கள் நேரடியாக ஒருவருக்கு ஒருவர் கல்வி கற்பதற்கும் கணினி பயன்படுகின்றது. கொரோனா போன்ற நோய்த் தொற்றுக் காலங்களில் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்பதற்குத் தேவையான பல்வேறு நிரல்களை உருவாக்க முடிந்தது.

 தமிழ் மொழி இணையத்தின் வாயிலாக வளர்ச்சியடைவதோடு மட்டுமின்றி ஆங்கிலம், கணிதம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், பொது அறிவு, நடனம், கைவேலைப்பாடு என எல்லாத் துறை சார்ந்து எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள முடியும்.

முடிவுரை   

          கணினி சார் தொழில் நுட்பத்தில் தமிழ் மொழியானது ஈடு இணையில்லா அந்தஸ்தைப் பெற்று வேகமாக வளர்ந்து வருகின்றது. தமிழ் மொழிக்கு என்று மென்பொருள் உருவாக்கப்பட்டு அதன் வழியே செய்திகளை உலகமெங்கும் பரப்பி வருகின்றது. தமிழ்ப் பண்பாட்டினை பரப்புவதற்குரிய ஒரு கருவியாக கணினியும் இணையமும் செயல்பட்டு வருகின்றது என்றால் அது மிகையாகாது என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது

error: Content is protected !!