தமிழ் மொழி வளர்ச்சியில் இன்றைய வலையொளித் தடங்களின் பங்கு

பேரா.சோ.ஹரிபாண்டிராஜன்,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுயநிதி),

வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி(தன்னாட்சி),

 விருதுநகர்.

முன்னுரை :

            இன்றைய காட்சி ஊடகம் வண்ணக் கலவை ஒலிக் கலவை இரண்டையும் எடுப்பாகக் கலந்து மக்கள் எல்லாரையும் மிக விரைவாகத் தம்பால் ஈர்த்து விடுகின்றது. எழுத்து ஊடகம் எழுதும் ஒரு பக்கக் கதையினைக் காட்சி ஊடகம் ஒரு காட்சியில் காட்டி எளிமையாகப் புரிய வைத்து விடுகின்றது. எழுத்து ஊடகம் பக்கம் பக்கமாக நீளும்; மேலும் இன்றைய அவசர உலகில் வாசிப்பு விரைந்து சலிப்பைக் கொடுத்து விடும். இந்தக் காட்சி ஊடகங்களுள் வலையொளி தடம்(YOUTUBE CHANNEL) மிக முக்கியமான இடம் பெற்றுள்ளது   இந்தியாவில் மட்டும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தடங்கள் இருப்பதாகத் தகவல் உள்ளது. கார்ட்டூன் தடம் தொடங்கி சமையல் தடம்வரை இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன. இதற்குக் காரணம் இதன்வாயிலாக வருமானம் ஈட்டலாம் என்ற மனநிலையும் தான். இன்றைய நிலை இப்படி இருக்க தமிழ் மொழியின் வளர்ச்சிக்குச் செயல்படுகின்ற சில வலையொளி தடங்கள்குறித்துக் கட்டுரை விளக்குகின்றது.

வலையொளி வரலாறு :

வலையொளி (YouTube) என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வு மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005-இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளிப் பயனர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் மணிநேரக் காணொளிகளைக் காணுகிறார்கள். யூடியூபர்கள் எனப் பிரபலமாகக் குறிப்பிடப்படும் யூடியூப் உள்ளடக்கப் படைப்பாளர்கள் நிமிடத்திற்கு 100 மணி நேர உள்ளடக்கத்தைப் பதிவேற்றுகிறார்கள். 2006-ஆம் ஆண்டில், யூடியூப் ஒரு வயதாக இருந்தபோது, கூகிள் அதை 651.65 பில்லியனுக்கு வாங்கியது. இது ஒரு சிறிய காணொளி ஸ்ட்ரீமிங் தளத்திலிருந்து பிரபலமான கலாச்சாரம், இணையப் போக்குகள் மற்றும் பல மில்லியனர் பிரபலங்களை உருவாக்கும் ஒரு சமூக ஊடகம் ஆகும். ஒரு நிறுவனமாக யூடியூப் 2020-ஆம் ஆண்டில் $19.8 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது. அதனால் கூகுளுக்குப் பிறகு யூடியூப் உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட வலைத்தளமாகும், இதில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மாதப் பயனர்கள் உள்ளனர். யூடியூப்பின் கூகிளின் உரிமையும் அதன் வணிக மாதிரியை மாற்றியுள்ளது; இது இனி விளம்பரங்களிலிருந்து மட்டும் வருவாய் ஈட்டாது. திரைப்படங்கள் மற்றும் பிரத்தியேக உள்ளடக்கம் போன்ற கட்டண உள்ளடக்கத்தை யூடியூப் இப்போது வழங்குகிறது. கூகிளின் ஆட்ஸன்ஸ் திட்டத்தில் யூடியூப் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படைப்பாளிகள் பங்கேற்கிறார்கள், இது இரு தரப்பினருக்கும் அதிக வருவாயை ஈட்டுகிறது.

பல ஆண்டுகளாக வலையொளி(YOUTUBE) வலைத்தளத்தைத் தாண்டி கைப்பேசி செயலி, வலைப்பின்னல் தொலைக்காட்சி மற்றும் டிஸ்கார்ட் மற்றும் நிண்டெண்டோ போன்ற பிற சேவைகளை அதனுடன் இணைக்க அனுமதிக்கிறது. வலையொளியில் உள்ள காணொளிகளின் வரம்பு எல்லையற்றது; இசைக் காணொளிகள், நிகழ்படத் துண்டுகள், குறும்படம், முழு நீளத் திரைப்படம், ஆவணத் திரைப்படம், குரல் பதிவுகள், நேரடி ஒளிபரப்பு திரைப்பட முன்னோட்டங்கள் போன்றவை பிரபலமான வலையொளி நேயர்களிடமிருந்து தொடர்ந்து பதிவேற்றப்படுகின்றன. அன்றாடம் இவற்றின் உள்ளடக்கத்தைக் காணலாம். இன்றைய பெரும்பாலான உள்ளடக்கம் தனிநபர்களால் உருவாக்கப்படுகிறது, இதில் வலையொளி நேயர்களுக்கும் அவர்களுக்கு நிதியளிக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அடங்கும்.

2015-ஆம் ஆண்டிலிருந்து, நிறுவப்பட்ட ஊடக நிறுவனங்களான டிஸ்னி, வியாகாம் சிபிஎஸ் மற்றும் வார்னர்மீடியா ஆகியவை தங்கள் உள்ளடக்கத்தை அதிகப் பார்வையாளர்களுக்கு மேம்படுத்துவதற்காகத் தங்கள் நிறுவன வலையொளி தடங்களை உருவாக்கி விரிவுபடுத்தியுள்ளன. கூகுள் கணக்கைக் கொண்ட பயனர்கள் தங்கள் சொந்தக் காணொளிகளைப் பார்க்கவும் பதிவேற்றவும், காணொளிகளில் கருத்துத் தெரிவிக்கவும், காணொளிகளை விரும்பலாம் அல்லது விரும்பாதீர்கள், பிளேலிஸ்ட்களை உருவாக்கலாம் மற்றும் பிற பயனர்களுக்கும் சேனல்களுக்கும் குழுசேரவும் வலையொளி ஒரு சமூக வலைப்பின்னலாகச் செயல்படுகிறது. வலையொளியின் விரிவாக்கம் நவீன இணையத்தின் அடையாளங்களில் ஒன்றாகவும், பல பயனர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் மாறியது. பில்லியன் கணக்கான மணிநேர உள்ளடக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான முக்கியக் குழுக்களுடன் வலையொளி ஒரு பெரிய சமூகத் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மொழியும் வலையொளி பதிவுகளும் :

உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக இருக்கின்ற தமிழ் மொழியினைக் கணினித் துறையில் புகுத்தியது எளிதாகவில்லை. இருப்பினும் இன்று இந்திய மொழிகளில் கணினிப் பயன்பாட்டு மொழிகளுள் இன்றியமையாத மொழியாகத் தமிழ் மொழி இடம் பிடித்து விட்டது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் வலையொளித் தடங்கள்(youtube channel) ஆகும். இந்த வலையொளித் தடங்கள் வந்ததற்குப் பிறகு தான் தமிழ் மொழி இலக்கணங்கள், இலக்கியங்கள், மொழி வரலாறு, இன வரலாறு, இணைய வரலாறு எனப் பல்நுட்பங்களைக் கணினியில் காணொலியாகக் காண முடிகின்றது.

கணினி உலகில் மின்னஞ்சலைக் (Email) கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகவூரைச் சேர்ந்த சிவா அய்யாத்துரை என்னும் தமிழர். உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு. சுந்தர் பிச்சை அவர்களும் தமிழர் என்பதில் ஒட்டுமொத்தத் தமிழினமும் பெருமை கொள்ள வேண்டும். லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற பி.பி.சி. செய்தி நிறுவனம் (British Broadcasting Corporation-BBC) சமூக ஊடகங்களில் ‘பி.பி.சி. தமிழ் முகநூல்’ (Facebook), ‘பி.பி.சி. தமிழ் சுட்டுரை’ (Twitter), ‘பி.பி.சி. தமிழ் படவரி’ (Instagram), ‘பி.பி.சி. வலையொளி’ (YouTube) எனத் தமிழை அறிமுகம் செய்து பெருமை சேர்த்துள்ளது. ஆனால் இன்றும் ஒரு தேர்ந்த வலையொளித் தடங்களை அரசு போன்ற ஒரு நிர்வாக அமைப்புகள் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் உள்ளது.

வலையொளியைப் பதிவிட :

வடிவமைக்கப்பட்ட பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிக் காணொலியைப் பதிவிட்டு பாதுகாப்பாய் அமைத்துவிடுவதற்காகவே வலையொளியின் துணையானது நாடப்பட்டது. தயாரித்த காணொலியை முதலில் வலையொளியில் பதிவிட முதலில் சுயமாய் ஒரு ஜிமெயில் இருத்தல் அவசியம். பின்பு சுயமாய் வலையொளியில் பக்கம் பதிவிட வேண்டும். வலையொளியின் முகப்புப் பகுதியில் அமைந்திருக்கும் மேல் வலது பகுதியில் அமைந்திருக்கும் காணொலியின் படத்தைக் கிளிக் செய்து பின்பு காணொலி பதிவை கிளிக் செய்து தயாரித்த பவர்போயிண்ட் விளக்கக்காட்சிக் காணொலியைப் பதிவிட வேண்டும். மேலும், காணொலிக்கு தகுந்த தலைப்பிட வேண்டும். அக்காணொலியை எந்த வயதினர்கள் வரை காண முடியும் என்பதையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இறுதியாகக் காணொலியும் வலையொலியில் காணத் தயார்நிலையில் அமைந்தது. இதுவே தயாரிக்கப்பட்டு பின்பு காணொலி-வலையொலியில் இணைக்கப்பட்ட இணைப்பாகும்.

தமிழ் மொழி சார்ந்த வலையொளிகளில் சில :

உலகம் முழுவதும் சமீபத்தில் இடையூறு செய்த கொரொனா போன்ற இயற்கைப் பேரிடர்களுக்குப் பின்பு நேரடி வகுப்புகள் என்ற பழைய மரபார்ந்த முறைகளில் இருந்து மாறிப் புதிய இணைய வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதன் பிறகு இன்னுமின்னும் கூடுதலாக வலையொளிப் பதிவுகள் நாளொரு வண்ணம் பொழுதொருமேனியாகப் புற்றீசல் போல வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே உண்மையான தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்ய எண்ணுபவர்கள் கட்டாயமாகத் தரமான உண்மைக்கு உடைமையான தரவுகளுடன் புதிய புதிய தடங்களைத் தொடங்கி வலையொளிகளைப் பதிவு செய்வது சிறப்பாகும். 

முடிவுரை :            தாய் மொழியாம் தமிழ் மிகவும் பழமை வாய்ந்தது. தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள்  போன்றவைகளை இந்தத் தடங்கள் வழியாகக் கேட்டு ரசிக்கலாம், மேலும் தமிழ் மொழி, பண்பாடு ,சார்ந்த தகவல்களை இதன் வழியாகப்  பெறலாம். உயர் செம்மொழியாய் இன்று பட்டம் சூடியுள்ள தமிழ் மொழி.  இத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழியை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அடிப்படைத் தமிழ் இலக்கணம்(Basic Tamil Grammar),TNPSC,TET,TRB போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் இலக்கண இலக்கிய பகுதிகள் , இளங்கலை (B.A,B.Lit,B.Sc),முதுகலை (M.A) பட்ட படிப்புகளுக்கான இலக்கண இலக்கிய பகுதிகள்,10,11,12- ம் வகுப்பு மாணவர்களுக்கான இலக்கண இலக்கிய பகுதிகள்,பண்டைய தமிழர்களின் வாழ்வியல் குறிப்புகள் ,தமிழ் மண்ணை ஆட்சி செய்து செம்மைப்படுத்திய மன்னர்களின் வாழ்வியல் குறிப்புகள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வியல் குறிப்புகள், பழமொழிகள் மற்றும் கதைகள் போன்றவைகள் வலையொளித் தடங்களில் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. இதனைப் பதிவிடுவதின் மூலம் இயல்பாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் காப்புரிமையைப் பெற முடிகின்றது. மேலும் இது போன்ற தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவுகின்ற ஏராளமான வலையொளித் தடங்களை ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் தொடங்க வேண்டும்.

error: Content is protected !!