தமிழ்வளர்ச்சியில்  தமிழுக்கான மென்பொருளின் பங்கு

முனைவர்.கெ.செல்லத்தாய்

முதல்வர் (பொறுப்பு)

சைவபானு சத்திரிய கல்லூரி,

அருப்புக்கோட்டை

முன்னுரை:

தமிழ் இலக்கியம் என்பது நமது முன்னோர்களின் வாழ்வியல் சார்ந்த தொன்மையைப் புலப்படுத்தும் ஓர் அரிய ஆவணமாகும். பழந்தமிழர்களின் வாழ்க்கையில் இயற்கையும் அறிவியலும் பின்னிப் பிணைந்து கிடந்தன என்பதற்கு பல்வேறு நூல்கள் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. அவை காலத்திற்கேற்ப மாற்றம் பெற்றுள்ளது. இவற்றை அடுத்தத் தலைமுறையினரும் அறிய வேண்டியது அவசியமாகின்றது. இன்றைய கணினி உலகில் அவர்கள் கையாண்ட பல்வேறு நிலைகளன்கள் இன்றளவும் பயன்தரத் தக்கவகையில் உள்ளது என்பதனை இக்கட்டுரை மூலம் காணலாம்.

தமிழும் அறிவியலும் இணைந்து செயலாற்ற வேண்டிய களங்கள்

தமிழினத்தின் வேளாண் அறிவியல் நுட்பங்களைப் பொதுமைப்படுத்துதல் மற்றும் பயன்பாட்டு அறிவியலாக மாற்றுதல் , (இயற்கை, வேளாண் முறையை மற்ற நாடுகளின் வேளாண்மையுடன் ஒப்பீடு செய்தல், தமிழகத்தின் மருத்துவத் தன்மையுள்ள விளை பொருட்களின் சந்தையை விரிவுபடுத்துதல்

தமிழின் வானியல் அறிவியலை எளிமையாகப் புரியும் வகையில் பொதுப் பயன்பாட்டில் ஊக்கப்படுத்துதல்.தொல்காப்பியம்ஃசங்கஇலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் , திருமந்திரம், திருவாசகம், முக்கூடற்பள்ளு போன்ற நூல்கள்மூலம் பழந்தமிழர் கையாண்ட அறிவியல் நுணுக்கங்களைக் காணலாம். கீழ்நோக்குநாள், மேல்நோக்கு நாள் போன்றவற்றுடன் புவி, நிலவு ஈர்ப்புவிசை நிகழ்வுகளைத் தரவுகளாக்கி அதனைப் பயன்பாட்டியலில் கொண்டு சேர்க்கலாம்.

தமிழக பாரம்பரிய கட்டிடக்கலையை (கோயில்கள், அரண்மனைகள்) அடிப்படையாகக் கொண்ட நவீன கட்டிடங்களை உருவாக்கும் முயற்சிகல்லணை, மாமல்லபுரச் சிற்பங்கள், குடைவரைக் கோயில்கள், நெடுநல்வாடைகளில் வரும் அரண்மனை அமைப்பு, தஞ்சை பெரியகோவில் போன்றக் கட்டக்லை நுணுக்கங்களைக் கட்டிடக்கலை நுணக்கத் தரவுகளாக மாற்ற வேண்டும்.தோட்டக் கலையில் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செடிகள், மலர்கள் ஆகிவற்றை வணிகப்படுத்துதல்  அவசியம் முக்கியமாகக் குறிஞ்சிப்பாட்டில் உள்ளத் தொண்ணூற்று ஒன்பது பூக்களின்ன் அறிவியல் பெயர் வளர்ப்பு முறை அதன் பயன்கள் ஆகியவற்றை விவசாயத் தரவுகளாக மாற்ற வேண்டும். தமிழர்களின் நம்பிக்கைகள் வாழ்வியல் முறை மனோதத்துவவியல் சார்ந்த விளக்கங்கள் ஆகியவற்றை விரிவான முறையில் ஆய்வு செய்து உலகின் மற்ற நிலப்பரப்புகளில் பொதுத் தன்மையைக் கண்டறிய வகை செய்ய வேண்டும்.

 தமிழ் வளர்ச்சியில் உருவாக்கப்பட வேண்டிய மென் பொருட்கள்:

தமிழில் அனைத்து நூல்களையும் டிஜிட்டலைஸ் செய்து. தனித்துவமான நிரலியை உருவாக்கிக் கிளவுட் கம்ப்யூட்டிங் (கொளவுக் கணிமை)முறையில் சர்வதேச அளவில் பயன்படுத்தும் வகையில் மாற்றும் வகையில் கணினி மாணவர்களை மென்பொருல்கள் செய்ய ஊக்குவிக்க வேண்டும்..தமிழில் அனைத்து நூல்களையும் எந்த மொசழியிலும் கேட்கும் வகையிலான  தமிழை முதல் மொழியாகக் கொண்ட மொழிபெயர்ப்புக் கருவிகளை உருவாக்கவும், .தமிழின் பாரம்பரிய அடையாளங்களை வணிகமயமாக்கவும் முயற்சிகள் செய்ய வேண்டும். தமிழக மன்னர்களை அடிப்படையாகக் கொண்ட மெய்நிகர் விளையாட்டுகள்  தமிழ் கற்றலையும் கலாச்சாரத்தையும் மென்பொருளாக்க வழிசெய்யும் உதாரணமாகும்.

            முக ஒப்பனை நிரலிகளில் தமிழ் பாரம்பரிய அணிகலன்களை அடிப்படையாகக் கொண்டு, விளையாட்டுக்களை உருவாக்குதல்.ச மாணவர்களிடையே  தமிழுக்கான ஆவலைத் தூண்டும். சிலப்பதிகாரத்தில் மாதவியின் அணிகலன்கள், ஆடல்வகைகளை குறுஞ்ச் செயலி விளையாட்டுக்களாகப் பிரபலம் அடையும்.சங்ககாலப் புலவர்கள், மனிதர்களைச் செய்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்மூலம் ஓவியங்களாக்க மாற்ற முயற்சித்தல், அதனை ஆடை வடிவமைப்புகளில் புகுத்துதல்)4.தாலாட்டு, ஒப்பாரி, நடவுப்பாட்டு, ஆகியவற்றை மேம்படுத்தப்பட்ட முறையில் ஒலி வடிவமாக்கி பொதுப்பயன்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்தல். ஆகியவற்றை கற்றல் கற்பித்தல் விளையாட்டு மென்பொருட்களாக உருவாக்கலாம்.

இணைய நூலகங்கள்:

தமிழகத்திற்கான தனித்துவமான இணை நூலகத்தை உருவாக்கி அதனை உலக நாடுகளின் அனைத்து பொது இணைய நூலகங்களிலும் இணைத்தல் அறிவியல் இணைய தமிழ்நிறைய விக்கிப் பக்கங்களைத் தமிழில் உருவாக்குதல்அறிவியல் விஞ்ஞானிகள்பற்றிய தொகுப்பையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் இணையத் தமிழில் வடிவமைத்து எளிமைப்படுத்தி அனைவரும் நுகரும் வண்ணம் செய்தல், சாட்.ஜி.பி.டி.மற்றும் கூகிளின் பிராட் செயற்கை நுண்ணறிவு தளங்களில் நிறையப் பயன்படுத்தி புதிய சொற்களை உருவாக்குதல், அவற்றின் எ.ஐ மாடல்களை( செயற்கை நுண்ணறிவுச் மாதிரிகள்). மேம்படுத்துதல் ஆகியவை இணைய நூல்களின் வளமாக மாற வேண்டும்.

பேட்டன் ரைட்ஸ்(ஆக்கவுரிமை பட்டயம்)

தமிழ் பல்லைக்கழகங்களில் பொதுவாக அனைவரும் பகிர்ந்து உபயோகிக்கும் வண்ணம் ஒரு பேட்டர்ன் ரைட்ஸ் தரவுகளை உருவாக்குதல் பேட்டர்ன் ரைட்ஸ் தகவல்களைத் தேடி அறிவிக்கும் தேடுபொறிச்செயலிகளை உருவாக்குதல் ஆகியவை தமிழ் மொழி, ஒரு அறிவியலாக வளரக் கண்டிப்பாக உதவி செய்யும்.

இவை எல்லாவற்றையும் நான் என் மாணவர்களோடு  கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களே, இங்குக் கட்டுரையாகச் சமர்பிக்கப்பட்டுள்ளது.

முடிவுரை:

இதையெல்லாம் செயல்படுத்தும் தீர்வுகளாக, தமிழ் பயிலும் மாணவர்களுக்குக் கணினி அறிவியல் பாடங்களை எளிமையான முறையில் கற்றுத்தருவதற்கான வழிமுறைகளையும் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது நல்லத் தீர்வாக அமையும். அடுத்து தமிழ் மொழி அறிவையும் கலாச்சார அறிவையும் வளர்க்க வேண்டும். தமிழ் மென்பொருள்  உருவாக்குபவர்கள், தமிழ் இலக்கணம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில் உருவாக்கப்படும்  தமிழ் மென்பொருட்களில்  தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு, தமிழ் மென்பொருட்களை உருவாக்கத் தேவையான பாடங்களையும் பயிற்றுவிக்க வேண்டும், அதற்குத் தகுந்த ஆசிரியர்களும் இருக்க வேண்டும். தமிழ் ஆசிரியர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் தமிழ் மொழியும் கலாச்சாரமும் இணைய உலகில் வலம் வருவதற்கு  ஒரு வழிகாட்டுதலாக அமையும். தமிழ் மென்பொருள் துறை வளர வேண்டும் என்றால் தமிழ்ப் பேராசிரியர்கள், கணினிப் பேராசிரியர்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல்  போன்றத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டுத் தமிழ் மொழியில் புதிய மென்பொருட்களை உருவாக்க முடியும்., அது ஒரு சிறந்த ஆராய்ச்சித் தளமாக அமையும் அப்போது  தமிழ் மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் தமிழ் மொழித் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையலாம். அதற்கு ஏற்ப தமிழ் மென்பொருள் உருவாக்குவது குறித்து  பயிற்சி வகுப்புக்களையும் நடத்துவது தமிழ் வளர்ச்சிக்கு  ஒரு சிறந்த தொழில்நுட்ப வழிகாட்டுதலாக அமையும்.

error: Content is protected !!