எழுத்துருக்களும் மென்பொருட்களும்

முனைவர் .மீனாட்சி

உதவிப்பேராசிரியர்

முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை

தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி

சிவகாசி.

இயந்திரத்தோடு இயந்திரமாக மனிதன் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவனது தேவைகளும் நேரத்தைச் சரியாகக்கணக்கிடுதலும் இணைய உலகில் சாத்தியமாகிறது. பழமைகள் வழிப் புதுமையான ஆக்கங்கள் மிட்டுருவம் பெறுகின்றன. காசியில் பேசுவதை காஷ்மீரில் கேட்கக் கருவிசெய்வோம் என்பன போன்ற ஆக்கப்பூர்வமான வரிகள் அடுத்ததலைமுறைக்கு ஆய்வுத்தேடலுக்கான விதையாகின்றது.

            பழையனகழிதலும் புதியனபுகுதலும் வழுவனகாலவகையினானே என்னும் நூற்பா காலத்தின் தேவைக்கேற்ப புதியவை உருப்பெறுதல் என்பது தவிர்க்க இயலாததாகிறது. உலகமக்கள் அனைவரும் ஒருபுள்ளியில் சந்திக்க நொடிப்பொழுதில் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளக் கணினி உருப்பெற்றதும் காலத்தின் அத்தியாவசியத் தேவையாகிறது. 

தரவுகளைத் தயாரித்தல் என்பது மட்டுமல்லாமல் மொழிசார் அறிவினையும் மனிதனைவிட நுட்பமாகச் சிந்திக்கும் பேராற்றலினை தன்னுள் கொண்டுள்ளது. அணுவைத் துளைத்து குறுகத்தறித்த குறள் என்று கூறுவது போன்று உலகநிகழ்வுகளை மட்டுமின்றி உள்ளுக்குள் ஒழிந்திருக்கும் திறமைக்கான அனுமதிச்சீட்டாகவும் இணையம் இணைந்துள்ளது. மனிதனது தேவைக்கேற்ப புதியவை ஆக்கம் பெறுதலும் ஆக்கம் பெற்றவைக்குள் புதியன உட்புகுத்தலும் நாளுக்கு நாள் புத்துணர்வு பெறுகின்றது. ஒரு குழந்தை ஜனித்தது முதல் அதன் ஒவ்வொரு நிமிடமும் அதன்வளர்ச்சிக்குப் புதியசத்தான ஆரோக்கியமான உணவுதேவை அதனைப்போல் கணினிஉலகில் மொழிசார்அறிவும் அவ்வறிவை வலுப்படுத்துவதற்கான காரணிகளும் ஆராக்கியமானதாக உருவாகும்போது விரல்நுனியில் விரிகிறது உலகம். கணினி உலகில் தமிழ்மென்பொருள் மற்றும் எழுத்துருக்களின் தேவை குறித்தும் ஆய்வதாக அமைகிறது.

மொழியும்தொழில்நுட்பமும்

            ஒருவர்தமதுகருத்தைமற்றொருவருக்குத்தெரிவிக்கமுதலில்சமிக்ஞையைமொழியாகக்கொண்டான். தான் அச்சமடைந்தவற்றை குறியீட்டுவடிவில் உணர்த்தி குறியீடு மொழியாகியது. காலம் கடந்து அக்குறியீடு மொழியாக எழுத்துருவம் பெற்றது. மனிதசமுதாயம் உருவாக்கிய முதல் தொழில்நுட்பம் எழுத்துமொழி . பானைகள் கல்வெட்டுக்கள் ஓலைச்சுவடிகள் எனத் தகவலினைத்தரவுகளாக்கும் முறைமையினை கற்றுத்தந்துள்ளான். இதன்படிநிலைவளர்ச்சியே தட்டச்சுஅச்சுப்பொறி கணினி எழுத்துருக்கள் எனத் தோற்றம் பெற்றுள்ளன. முதன் முதலில் கணினியில் தமிழ்எழுத்துக்கள் வடிவம் பெறவில்லை. ரோமன்எழுத்துக்களில் உள்ளீடுசெய்து தமிழ்எழுத்துக்களாக மாற்றும்நிலையே உருவானது. ஒருகுழந்தை கருக்கொள்வதுதான் கடினம் கருக்கொண்டுவிட்டால் அதற்கு என்ன சத்துதேவை என்பதை அறிந்து அதனை உள்ளீடு செய்து வெற்றி பெறலாம். அதைப் போல் எழுத்துக்கள் உள்ளீடு பணியின் அடுத்த நகர்வு விசைப்பலகை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வேர்டுவேர்டுஸ்டார் வெஞ்சுரா என்பன போன்ற மென்பொருட்களில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவரவர் தாய்மொழியில் கற்றல் கற்பித்தல் நிலை என்பது மிகப் பெரிய வெற்றியை உரித்தாக்கும். விசைப்பலகையிலிருந்து தமிழ் மென்பொருள் தேவை உருவானது. ஒரு தமிழ் மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்டத் தரவுகள் வேறொரு மென்பொருள் கொண்டு வாசித்தல் கடினமானது. இதற்கு அஸ்கி என்ற குறியேற்ற முறை தடையாக இருந்தது.

            தடைகள் யாவும் தகர்த்து தமிழில் இணையதளங்கள், குறுஞ்செயலிகள். வலைப்பூக்கள் தோன்ற ஆரம்பித்தன. அச்சுப்பயன்பாட்டில் இடம்பெற்ற தமிழ் மொழியாளுமை கணினிப் பயன்பாட்டில் மென்பொருட்களின் வழிநிலைத்த இடம்பெறலாயின. பன்னாட்டுக் கணினி நிறுவனங்களின் வணிக முயற்சியினால் ஒருங்குக் குறியேற்றம் அறிமுகப்படுத்தப்பட்டு எல்லாநாடுகளிலும் தமிழ்மொழிசார் எழுத்துருவாகியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. கணினியில் மட்மல்ல அன்றாடத் தேவைக்காகப் பயன்படுத்தப்பெறும் குறுஞ்செயலிகளிலும் தமிழ்மொழி ஆக்கமொழியாகியுள்ளது. இயந்திர மனிதன் நாம் கூறும் தகவல்களை ஏதோ ஒருவகையில் புரிந்து கொள்ளுதல் போன்று கணினியும் நாம் சொல்வதைப் புரிந்து கொண்டு செயல்படும் தொழில்நுட்பமாக உருப்பெற்றுள்ளது.

எழுத்துருக்கள்

பல்வேறு படிநிலை வளர்ச்சியில் உருவான எழுத்து கணினியின் உள்ளீடாக மாறாகத் தமிழ் தட்டச்சு முறையே அடிப்படை. பத்திரிக்கைகள், இதழ்கள் நடத்துவார் தங்களுக்கான எழுத்துருக்களைத் தாங்களே வடிவமைத்தனர். இம்முறை அனைவரும் பயன்படுத்த இயலாததும் தரமற்றதாகவும் இருந்தமையால் பொது எழுத்துருவாக்கத்தின் தேவை உருவானது.  முனைவர் பாலசுவாமிநாதன் உருவாக்கி மதுரை என்றொரு மென்பொருள் சின்னவார்த்தைகளை எழுத்துப்பெயர்ப்பில் வாசிக்க உதவியது. ஆனால் அது வலுப்பெறவில்லை. மீண்டும் எழுத்துருத் தேடல் தொடங்கியது. தமிழ் மூலம் மின்னஞ்சல் அனுப்பி அதன்வழி சில ஆய்வுகளைச் சிங்கப்பூர் மலேசியா நாடுகள் நிகழ்த்தலாயின. முரசு மின்னஞ்சல் தேடலுக்கான வழித்தடமாகியது. ஆவரங்கால், மைலை, இணைமதி, யூடோரா போன்ற எழுத்துருக்களும் தோன்றின. தகுதர நிர்ணயத்தின் அடிப்படையில் ஒருங்குறி தோற்றம் பெற்றது.

தமிழ் மென்பொருட்கள்

              கணினி இயங்கு தளத்தில் மென்பொருளினை உள்ளீடு செய்தல் என்பது ஆங்கிலமொழி மற்றும் தமிழ்மொழி இலக்கண அமைப்பில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இலக்கணத்திருத்தி, சொல்திருத்தி, பிழைதிருத்தி, தொடரமைப்பு, சொல்லமைப்பு முறைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவையே தமிழ்மென்பொருட்கள். பல்வேறு மாநாடுகளையும் கருத்தரங்குனளையும் பயிலரங்குகளையும் நடத்தி அதன்வழி வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு மென்பொருட்கள் உருவாயின. தமிழ், கலப்பை, தாரகை, இ கலப்பை போன்ற பல தமிழ் மென்பொருட்கள் தோன்றின. எம் எஸ் வேர்டில் நாம் ஒரு செய்தியைப் பதிவிடும்பொழுது அதில் ஏதேனும் பிழை இருப்பின் சிகப்பு நிறத்தில் அடிகோடிட்டு காட்டப்படும்பொழுது அதனைத் திருத்துவதற்கான வாய்ப்பினையும் அடுத்தகட்ட வளர்ச்சி நிலை எனலாம். இதனைத் தொடர்ந்து இயங்கு எழுத்துருத் தோற்றம் பெற்றது.

ஒலிமாற்றி மென்பொருள்

             ரோமன் எழுத்துக்களில் பேச்சு வழக்கில் எழுத்துக்களைத் தட்டச்சிடும்பொழுது அது தமிழ் எழுத்துக்களைத் தட்டச்சிடும். இம்முறையை பயன்படுத்தி வலைதளம் முதல் கணினி படங்கள்வரை தமிழில் தட்டச்சு செய்ய இயலும். சர்வதேச மொழியாக உள்ள ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும்போது இலக்கணச் சிக்கலின்றி மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் தமிழ் தட்டச்சு செய்யத் தெரியாதவர்களுக்கும் எளிமையாக உள்ளது.அந்தந்த நாட்டுக்கே உரிய தாய்மொழியினை கணினியில் புகுத்தும் முயற்சியில் பல தடைகளைத் தாண்டி வெற்றியடைந்துள்ளனர்.

இலக்கணப் பயிற்சி

              எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய யாப்புருப்புக்களை அடையாளப்படுத்துவது தமிழ்மொழியின் ஆளுமையினை அடையாளப்படுத்துகின்றது. இத்தகைய யாப்பினை தமிழ் தெரியாத ஆங்கில மொழி பேசும் மாணவர்கள் கூட மென்பொருளினை பயன்படுத்தி இலக்கணத்தினை கற்க இயலும். அவலோகிதம் தமிழ் பயிலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்குச் சிறந்த இலக்கணப் பயிற்சியினை வழங்கும் மென்பொருளாக உள்ளது.இலக்கிய வரிகளைப் பா அமைப்புடன் பொருத்தி யாப்பினை கற்றுத் தரும் இலக்கண ஆசானாக மென்பொருட்கள் செயல்படுகின்றன. CLIP மைக்ரோசாப்ட் காப்ஷன்ஸ் லாங்க்வேஜ் பேக் இதன் வழி ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இடைமுகச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அறிந்து கொள்ளலாம். அழகி மென்பொருள் ஆங்கிலம் தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே இதன் தனிச்சிறப்பாகும். தமிழ்ச் சொல்லாளர் மென்பொருளானது கணினி மொழியியல் (Computational Linguistics) மொழித்தொழில்நுட்பம் (Language Technology) ஆகிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மென் பொருளில் சொற்பிழைதிருத்தி சந்தி திருத்தி அகராதி விளக்கம் எனப் பல இன்றியமையாத பயன்பாடுகள் உள்ளன.

இவ்வண்ணம் உருவாக்கப்படும் மென்பொருள்கள் மூன்று வகையாகப் பாகுபடுத்தப்படும்

  •                         அமைப்பு மென்பொருள்
  •                         நிரலாக்க மென்பொருள்
  •                         பயன்பாட்டு மென்பொருள்

என்பதாகும்.கணினியின் வன்பொருள் பயன்பாட்டினை உள்ளடக்கியது அமைப்பு மென்பொருளாகும்.கணிப்பொறி நிரலாக்கங்களை எழுதுவதில் மொழிகளைப் பயன்படுத்தும் மென்பொருளாகும்.பரந்து விரிந்த மனிதத் தேவைக்கு ஏற்ப நிரலமைப்புகளை உருவாக்குதலாகும்.

செல்லினம்

            முத்து நெடுமாறனால் கண்டறியப்பட்டது. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைக் கண்டறிதல்.தமிழ்ச் சொல் விளக்கத்தினை  அகராதி பொருண்மையின் அடிப்படையில் கண்டறிதல் எனச்  சிறு சிறு வார்த்தை விளையாட்டுக்களின் வழி தமிழ் மொழி வளர்ச்சி நோக்கி அடுத்த கட்ட வளர்ச்சி தோன்றியது.கனியும் மணியும் என்னும் மின்னூலானது தமிழ் கற்றுத்தரும் சிறந்த களமாகும்.அசையும் படங்கள் கலந்துரையாடல் எனப் பல நிலைகளில் கற்றுத் தருவதற்கு இம்மின்னூல் உதவுகிறது.

            புகைப்படமாக இருக்கும் புத்தகப்பக்கங்களை கூகுள் ட்ரைவில் தரவேற்றம் செய்து மீண்டும் அதனைக் கூகுள் ஆவணமாகப் பயன்யடுத்த இயலும் என்பதும் ஆங்கில மொழியில் உள்ளத் தரவுகளைக் கூகுள் ஸ்கேனர் மூலம் தமிழ்மொழியில் மொழிபெயர்த்து வாசிக்கும்பொழுது பிறமொழி சார் அறிவினையும் பிறதுறை சார் அறிவினையும் தமிழ் வல்லுநர்கள் அறிந்து கொள்ள முடிகிறது.மக்களின் அன்றாடத்தேவைக்குப் பயன்படுத்தும் இரயில் டிக்கட் முன்பதிவு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல் வங்கிக் கணக்கு வரவுச் செலவு மின்னஞ்சல் என்பன போன்ற இணையதள குறுஞ்செயலி செயல்பாட்டில் தமிழ்மொழி தற்போது பெரும் பாங்காற்றி வருகிறது.

முடிவுரை

  • காலத்தின் தேவைக்கு ஏற்ப மனிதனது தேவை மட்டுமில்லாமல் கணினி செயல்பாட்டின் தேவையும் மெருகேற்றப்பட்டுள்ளது.
  • எழுத்துருக்குள் குழந்தை கருக்கொண்டு ஒவ்வொரு உறுப்புக்களாக வளர்ச்சியடைதல் போன்று பல்வேறு படிநிலைகளைக் கடந்து ஒருங்குறி அமைப்பினை பெற்றுள்ளது எனலாம்.
  • அமைப்பு மென்பொருள் நிரலாக்க மென்பொருள் பயன்பாட்டு மென்பொருள்  என மென்பொருன் செயல்பாட்டின் அடிப்படையில் வகைமைபடுத்தப்படுகின்றது.
  • கணினி மொழியியல் அறிவு இலக்கண அறிவினையும் வழங்குவதாக உள்ளது எனலாம்.
error: Content is protected !!