கணினியில் பயன்படுத்தப்படும் எழுத்துசார் தொழில்நுட்பம்

       அ.முருகலெட்சுமி

                 உதவிப் பேராசிரியார்,

ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி,

                சாத்தூர்.

ஆய்வு நோக்கம்:

            நூலகம் சென்று படிக்கும் ஆர்வம் சற்று குறைந்து வரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகங்கள் உருவாகி வருகின்றன. ஆதனை படிப்பதற்கு ஏதுவாக கணினியில் சில எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை எடுத்தியம்புவனவாக அமைவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

ஆய்வு கருதுகோள்:

            மக்களின் வாழிவோடு இயைந்து பயணிக்கும் கணினியில் பயன்படுத்தப்படும் எழுத்துச்சார் தொழில் நுட்பமான தமிழ் எழுத்துருக்கள் குறித்தும், பிற எழுத்துக்களாகிய தாரகை, இ-கலப்கை,அஸ்க்கி போன்றவை எவ்வாறு பயன்படுகிறது என்பதை கூறுவதே இக்கட்டுரையின் கருதுகோளாகும்.

தமிழ் எழுத்துருக்ககள்:

                                    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் தமிழ்ச் சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார். ஆம், அஃது இன்று உண்மையாகிவிட்டது. உலகத்தைச் சுற்றிவந்தால்தான் கனி என்றான் சிவன். மகன்களில் முருகன் மயில் மீது ஏறி உலகைச் சுற்ற, மற்றொரு மகன் கணபதி தன் தாய் தந்தையைச் சுற்றிவிட்டு கனியைப் பெற்றுக்கொண்டான் என்கிறது புராணம். இன்றும் அவ்வாறே கணிப்பொறி ஒன்றும் அதனோடு இணைய இணைப்பும் இருந்துவிட்டாலும் உலகை நாம் உட்கார்ந்த இடத்திலிருந்து பார்த்துவிடலாம், கண்டுவிடலாம்.

                                    இன்று நாம் கணினித் திரையில் காணும் எழுத்துருக்கள் எங்கு? யாரால்? எவ்வாறு? தோற்றம் பெற்றிருக்கும் என்று நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனவே இக்குறைபை; போக்க தமிழ் எழுத்துருக்களும் மென்பொருள்களும் இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

                                    தமிழில் நீங்கள் கணினியைப் பயன்படுத்தி ஏதேனும் எழுத விரும்பினால் முதலில் உங்களுக்கு தேவைப்படுவது ஃபான்டஸ் (fonts)என ஆங்கிலத்தில் கூறப்படும் எழுத்துரு. நவீனக் கணினி இயங்குதளங்களில் (ஆப்ரேட்டிங் சிஸ்டம்களில்) தமிழில் தட்டச்சு செய்ய இது ஒன்றே போதுமானது.

                                    பல கணினி இயங்குதளங்கள் நேரயொக தமிழில் உள்ளீடு செய்வதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதில்லை. ஆங்கிலத்திற்கும் தமிழ் போன்ற மொழிகளுக்கம் கணினியில் கையாள்வதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளன. எளிமையாக கூறுவதென்றால். நாம் பயன்படுத்தும் விசைப் பலகைகள் ஆங்கில மொழியில் உள்ளீடு செய்வதற்கு ஏற்றவாறு , ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில மொத்தம் 26 எழுத்துக்கள்தான் ஆனால் தமிழில் 247 மற்றும் சில சமஸ்கிருத எழுத்துக்களை நாம் உள்ளீடு செய்யும் வகையில் விசைப் பலகைகளின் அமைப்பு இல்லை. இத்தகைய பிரச்சினைகளைக் கையாளச் சில உத்திகள் மென்பொருட்களின் மூலம் செய்யப்படுகின்றன. இத்தகைய மென்பொருள்களின் உதவி இல்லாமல் நம்மால் தமிழில் உள்ளீடு செய்ய முடியாது.

                                    மேலும் ஆங்கிலத்திற்கு ஒரே உள்ளீட்டு முறைதான் உள்ளது (typing method)> ஆனால் தமிழுக்குப் பல்வேறு உள்ளீட்டு முறைகள்(;(typewriter,typewriter old,phonetic,transliteration,tamil 99,Nghd;wit))உள்ளன. ஒரு முறையில் பழகியவர்களால் வேறு முறைகளில் உள்ளீடு  செய்ய முடியாது. ஆகவே இவற்றிற்கு ஏற்ப எழுத்துருக்களைப் பயன்படுத்துவதற்கு மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

                                    இவை தவிர ஆங்கில இலக்கணமும் தமிழ் இலக்கணமும் வெவ்வேறானவை என்பதால், பிழைதிருத்தி, பக்க வடிவமைப்பு போன்ற தமிழ் சார்ந்த கணினி வேலைகளுக்கெனச் சிறப்பான மென்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

                                    முடிவாகக் கூறுமிடத்து எழுத்துரு என்பதும் ஒரு வகையில் ஒரு சிறு மென்பொருள்தான். அதனை நேரடியாகப் பயன்படுத்துவதில் குறிப்பாக விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களைத் திறமையுடன கையாள்வதற்காகவும், ஆங்கில மொழியில் உள்ளீடு செய்யும் பொழுது அது தரும் மொழிசார்ந்த துணைக் கருவிகளைப் போல் (இலக்கணத் திருத்தி, சொல்திருத்தி, போன்றவை) தமிழுக்கும் உருவாக்கப்பட்டவையே தமிழ் மென்பொருட்களாகும் என இரா.கிரு~;ணன் குறிப்பிட்டுள்ளார்.

                                    ஒரு மொழியில் உள்ள எல்லா எழுத்துக்களையும் விருப்பபட்ட வடிவில் (style, design) வடிவமைத்து, கணினி, ஏற்றுக்கொள்ளும் முறையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறு மென்பொருள்களாகும். டிரெடில் அச்சுக்கோர்க்கும் முறையில் கூறுவதென்றால் அஞ்சறைப் பெட்டி வடிவத்தில் பல எழுத்துக்களின் பிளாக்குகளைப் போட்டு வைத்திருக்கும் சட்டகங்களைப் போன்றதே எழுத்துரு எனப்படுவது.

                                    தொடக்கத்தில் கணினிகள் பெரும்பாலும் ஆங்கித்திலேயே இயக்கக் கட்டளைகளைக் கொண்டிருந்தன. ஆத்துடன் ஆவணங்கள், படம், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என கணினியில் திறமையாக இயக்குமாறு ஆங்கில மூல மென்பொருள்களை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர். இம்மென்பொருள்கள மக்களின் பல தேவைகளை மிகச் விரைவாக செய்து முடித்தன.

மயிலை:

                        தொடர்ந்து 1985- ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள முனைவர்  கு. கல்யாணசுந்தரம் என்பவர் உருவமைத்த மயிலை எனும் மென்பொருள் ஆங்கில எழுத்துருக்களைப் கொண்டு உருவமைக்கப்பட்டது. இம்மென்பொருள் ஆங்கில எழுத்தாகிய A – வைத் தட்டினால் அது அ- என்ற தமிழ் எழுத்து தோன்றும் விதமாக உருவாக்கப்பட்டது. இதைப்போன்று k–க, O-கொ என உருவாகும் முறையில் அமைந்திருந்தன. மேலும் இவருடன் இணைந்து முத்தெழிலனும் மயிலை, இணைமதி, தமிழ், ஃபிக்ஸ் போன்ற எழுத்துருக்களையும் உருவாக்கிச் செயல்படுத்தினர்.

கு.கல்யாணசுந்தரம் வடிவமைத்த மயிலை எழுத்துரு அமைப்பு:

தமிழ் லேசர்:

                        அமெரிக்காவில் உள்ள பெர்க்லி பல்கலைகழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் என்பவர் உருவமைத்த தமிழ் லேசர் (tamil laser) காஞ்சி என்ற இரண்டு குறியீட்டு முறையில் அமைந்த மென்பொருளை உருவாக்கியுள்ளார்.

ISCII -83:

                        இந்திய அரசால் நிறுவப்பட்ட l Centre for  Developments for Advanced Computing (CDAC)என்ற அமைப்பால் ISC II -83 என்ற தமிழ் மென்பொருள் உருவாக்கப்பட்டன.

                        தமிழ் இணையம் TAM – 99 கருத்தரங்க முடிவில் 1-6-1999 அன்று தமிழக அரசின் பரிந்துரையில் தமிழ் அச்சுப் பணிகளுக்கு அழகூட்டும் வகையில் தமிழ் எழுத்துருக்களை மட்டுமே கொண்ட TAM   என்ற ஒரு தமிழ் எழுத்துத் தரம், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது.

பிற தமிழ் எழுத்துருக்கள்;(tamil fonts):

                    அமெரிக்கத் தமிழர் மருத்துவர் பெரியண்ணன் குப்புசாமியால் தொடங்கப்பட்ட அணங்கு, கனடாவில் வசிக்கம் தமிழ் ஆர்வலர் முனைவர் திரு.விஜயகுமாரின் சரஸ்வதி போன்ற தமிழ் மென்பொருள்களும் உருவாக்கப்பட்டன.

                        1990-இல் அமெரிக்கவைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் வு.கோவிந்தராசு என்பால் உருவமைத்த பல்லாடம், சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ்ப் பேராசிரியர்    நா. கோவிந்தசாமியின் கணியன் போன்ற மென்பொருள்கள் தமிழில் உருவாகி தமிழ் மொழி இணையத்தில் கணிப்பொறியிலும் வளர வழிவகுத்தன.

தாரகை:

                        சிங்கப்பூர் உள்ள ஆர்.கலைமணி என்பவரால் வடிவமைக்கப்பட்டதுதான் தாரகை எழுத்தரு மென்பொருளாகும், இவை மட்டுமன்றி தமிழகத்தைச் சார்ந்த கணிப்பொறி வல்லுனர்களும் மென்பாருள்களைக் கண்டுபிடுத்துள்ளனர். மேலும் திரு.செல்லப்பனின் Asian printers,  க.இளங்கோவனின் CAD Graph, டாக்டா. கூப்பர் modular infotech, திரு துளுக்காணம் அவர்களின் lastech,  மா. ஆண்டோபீட்டர் அவர்களின் softview(inscipt fonts)திரு.தியாகராசனின் வானவில் போன்றவைகளும் அடங்கும்.

இ-கலப்பை:

                        முரசு 2000-த்தை தொடர்ந்து மென்பொருள் தயாரிப்பாளர் திரு. முகுந்தராஜாவின் முயற்சியால் இ-கலப்பை என்னும் மென்பொருள் ஒருங்குறியீட்டில் ((Unicode)  பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இ-கலப்பையைக் கணினியில் நிறுவுதல். தொடர்ந்து யூனிக்கோடு எழுத்துருக்களை நிறுவுதல் என்ற இரு செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இம்மென்பொருள் உருவாக்கப்பட்டு வெளிவந்தது.

தமிழில் குறிமுறை நியமங்களின் வரலாறு:

அஸ்க்கி: (ASCII)

            ஆரம்பகாலத்தில் தமிழ்த் தட்டச்சுக் கருவியைத் தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாகத் தமிழை உட்புகுத்தியது. பாமினி எழுத்துரு தற்பொழுது பெரும்பாலான அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப் பெறுகிறது.

தகுதரம் (TSCII):

            இந்த ஏற்பாட்டில், இணையத்தின் வரவு புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப்பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப்  பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. பல தரவுத் தளங்களில் ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேர்க்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு மதுரைத்திட்டக் குழுவினரால் வடிவமைக்கப்பட்ட தகவல் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (அதாவது, Tamil Standard Code for Information Interchange (TSCII)  உருவாக்கப்பட்டது. இதில் முதல் 0-127 எழுத்துக்கள் தகவல் பரிமாற்றத்திற்;கான அமெரிக்க முறையை ( Tamil Standard Code for Information Interchange (TSCII)  ஒத்தது. மிகுதியான 128-155ல் தமிழில் எழுத்துக்கள் நிரப்பப்பட்டன. விண்டோஸ் 3.1,95,98,ஆந  ஆகிய பதிப்புகளில் TSCIIஆதிக்கம் செலுத்தின.

மேலும் சில தமிழ் எழுத்துருக்கள்:

            மலேசியாவைச் சேர்ந்த கே.பால் இரவீந்தரன் என்பவர் துணைவன் 2.3 என்ற எழுதியை உருவாக்கியுள்ளர். பாரிசில் வாழும் கோபாலகிருட்ணன் என்பவர் புதுச்சேரி என்ற தமிழ் மென்பொருளை உருவாக்கியுள்ளார். வட அமெரிக்க வாழ் தமிழர்களான ஞானசேகரன் மற்றும் பால. சுவாமிநாதன் ஆகியோர் யுனிக்ஸ் முறையில் அமைந்த எழுத்துருக்களை உருவாக்கினர். நா. கோவிந்தகாமி என்பவர் தமிழ்நெட் என்றதொரு எழுத்துருவை உருவாக்கினார். உமர் தம்பி தேனி இயங்கு எழுத்துருவை உருவாக்கினார். சுரதாவின் தமிழ் எழுதி, யுனிகோடு முறையில் எழுத உதவும் எழுதியாகும். சுரபி என்ற தமிழ் எழுதி ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. மின்தமிழ் என்ற எழுதி வாப்டெக்;(vabtech) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

அகபே தமிழ் எழுதி:

            அகபே தமிழ் எழுதி தமிழில் எளிமையாகத் தட்டச்சு செய்ய உதவும் தமிழ் எழுதி மென்பொருள். இந்தத் தமிழ் எழுதியை இலவசமாக வலைப்பூக்களிலும் வலைத்தளங்களிலும் நிறுவிக் கொள்ள முடியும்.

அழகி மென்பொருள் (azhagi.com/docs.htm)):

             விஸ்வநாதன் தமிழ்க்கணினி உலகிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல, அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க எவ்வளவோ இருக்கிறது. தன்னை நோக்கிக் காலம் விடும். சவால்களை ஆன்மீக பலத்தோடு எதிர்நோக்கி வெற்றியடையும் இவரது மனோதிடம் வியக்கத்தக்கது. இவரது அயராத முயற்சியால் உருவான மென்பொருள் அழகி ஆகும்.

            மிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible)ஆங்கிலம் – தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English – to – Tamil phonetic Key’ Mappings) மூலம், உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை(productivity) அழகி இயல்பாய் அதிகரிக்கிறது.(அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவிகிறது). உதாரணத்திற்கு, ஸ்ரீதர் என்று தட்டச்சிட scidhar,srithar,shridhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம் (flexible translitration). நீங்க, விஸ்வம், நன்றி, கஸ்தூரி, பொய், மஞ்சு, கற்று, என்று தட்டச்சிட neenga, viswam,nandri,keshoori,poi,manju,katru என்று அப்படியே டைப் செய்திடலாம் easy,natural,intuitive and straight forward)

            ஓலியியல் முறையில் தமிழில் மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளான ஹிந்தி (சமஸ்கிருதம், மராத்தி,கொங்கனி,….,..) தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பெங்காலி (வங்காளம்), பஞ்சாபி, ஒரியா, அசாமீஸ் முதலியவற்றிலும் தட்டச்ச செய்யவல்லது.

என்.எச்.மென்பொருள்: (new horizon media)

            சென்னையில் உள்ள கிழக்குப் பதிப்பாக இயக்குநர் திரு.பத்ரிசேசாத்திரி அவர்களின் முழுமுயற்சியோடு திரு.கே.எஸ்.நாகராஜன் அவர்களால் இம்மென்பொருள் உருவாக்கப்பட்டது. இதுவரை வந்துள்ள தமிழ் ஒருங்குறியீட்டு மென்பொருள்களில் முதன்மையானது என்று கூறலாம். இதனை இலவசமாகக் கணிப்பொறியியல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். இம்மென்பொருள் தமிழ்மொழித் தவிர பிற இந்திய மொழிகளிலும் பயன்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் கணியன் பூங்குன்றான் விருது இம்மென்பொருள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்லினம் மென்பொருள்; (sellinam.com):

            செல்லின் மென்பொருள் என்பது ஒருங்குறிப்பைப் பயன்படுத்திச் செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தiமையிலான முரது நிறுவனம் உருவாக்கியது. பொங்கல் திருநாளான ஜனவரி 15,2005 முதல் சிங்கப்பூரில் வணிகப்பயன்பாட்டுக்காக அறிமுகமாகி வெளியிடப்பட்டது.

பொன்மொழி:

            பொன்மொழியில் மென் தமிழ் சொல்லாளரில் இருப்பதைப் போன்று சொற்பிழைத்திருத்தியுடன் சந்திப்பிழத்திருத்தியும் இணைந்து இடம் பெற்றுள்ளன. பொன்மொழி சந்திப்பிழைத் திருத்தியில் எந்த எந்த இடங்களில் சந்திப் பிழை வரும், வராது என்பதை சுட்டிக் காட்டும் சிறப்புடையது. இதனையும் தமிழ் ஆய்வுலகம் வாங்கி பயன்படுத்த வேண்டும். இதுவும் ஒரு மிகச்சிறந்த தமிழ் மென்பொருள் ஆகும்.

சொல்திருத்தி:

            தமிழா எனும் குழு. இ.கலப்பை என்ற தமிழ் தட்டச்சு மென்பொருளை பின் hunspell என்ற  மெம்பொருளை அடிப்படையில் கொண்டு ஒரு சொல்திருத்தி உருவாக்கி வருகிறது. Firefox plugin ஆகவும் ஒரு பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்பு: இளஞ்செழியன் – tamiliam@gmail.com, இளந்தமிழ் – elantamil@gmail.com இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டதை காண thamizha.org/ என்ற முகவரியிலும், மூலநிரலைக்காண github.com/thamizha/thamizha-solthiruthi என்பதில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

இலக்கணப்பிழைத் திருத்தி:

            தமிழா குழுவினர் ; languagetool என்ற மென்பொருள் மூலம் தமிழுக்குச் சந்திப்பிழை, இலக்கணப் பிழைத் திருத்தி உருவாக்கி libreoffice ல் இயங்கும் ஒரு plugin ஆக இளஞ்செழியன் வெளியிட்டுள்ளார்.

            இந்த இலக்கண பிழைத்திருத்தயை languagetool.org/ என்ற முகவரியில் காணலாம். இதன் மூலநிரலை github.com/thamizha/thamizha-ilakkanam என்பதிலும் காணொலியாக காண www.youtube.com/watch?v=r9qqrhfnbjA இந்த முகவரியிலும் பார்த்துக் கொள்ளலாம்.

அகராதி:

            விக்கிபீடியாவின் துணைத்திட்டமான விக்கிசனரி,ஒரு கட்டற்ற அகராதி ஆகும். இதில் வார்த்தைகளுக்கு பொருள் அறிவதோடு, நாமும் பல புது வார்த்தைகளையும் அவற்றின் பொருள்களையும் சேர்க்கலாம். பார்க்க ta.wiktionary.org/.

முடிவுரை:

            இன்றளவும் மனித வாழ்வில் இன்றியமையாமையாத் தேவைகளில் கணினியும் ஒன்று. அத்தகைய கணினியில் பல்வேறு விதமான எழுத்துசார் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நம்மால் உணர முடிகிறது.மேலும் பல்வேறு எழுத்துசார் தொழில்நுட்பங்கள் உருவாக இக்கட்டுரை மேலும் வழிவகுக்கும்.

error: Content is protected !!