மாணவர் கற்பித்தலுக்கான நுட்பவியல்கள்

முனைவர் செ.சங்கீதா M.A,M.A,M.ED,M.Phil,Ph.D

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,

நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும்அறிவியல் கல்லூரி

முன்னுரை

                     கணினி அடிப்படையிலான கல்வி பாடப் பொருள்களின் மென் பொருட்களைக் கணினியில் நிறுவி, அதை மாணவர்களே இயக்கிக் கற்றலை, கணினி வழிக்கற்றல் என்று கூறலாம். கணினி ஒரு கருவிதான் தானாகவே அதனால் சிந்திக்க இயலாது கணினி வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட பாடப் பொருட்களை அதில் நிறுவிய பின் தான் மாணவர்கள் கணினியைப் பயன் படுத்திக் கற்க இயலும்.

கணினி அடிப்படையிலான கல்வி படிநிலைகள்:

  • ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு கணினியின் முன்,கணினியின் திரையினைக் காண்பர்.
  • ஒவ்வொருவரும் தாம் அன்றைக்குக் கற்க வேண்டிய பாடத்தினை சுட்டெலி (Mouse) மூலம் இயக்க வேண்டும்.
  • மாணவர்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை விசைப் பலகை மூலம் உள்ளீடு செய்ய வேண்டும்.
  • கணினி ஒவ்வொரு மாணவரின் முன்னேற்றத்தையும் தனித்தனியே பதிந்து வைத்துக் கொள்ளும்.
  • பின்பு தாங்கள் விரும்பும் பாடத்தின் பகுதிகளைப் படித்து அறிந்த பின், கணினி எழுப்பும் வினாக்களுக்கு விடையளிக்க வேணாடும்.
  • முழுமையாக நாம் ஒருபாடத்தைக் கற்றுத் தேர்ச்சி அடைந்த பின், கணினி தானாகவே மாணவரை அடுத்தடுத்த பாடங்களுக்கு அழைத்துச் சென்று செய்தி வழங்கும்.
  • மாணவர்கள் தாம் விரும்பும் நேரம் வரை கற்கலாம்.
  • மாணவர்கள் முழுத்தேர்ச்சி பெறும் வரை பாடங்களைக் கணினி கற்றுக் கொடுக்கும்.

கணினி அடிப்படையிலான கல்வி பயன்கள்:

  • மாணவர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் தாங்களாகவே தங்களுடைய வேகத்தில் கற்க இயலும். இதனால் தனியொரு மாணவரின் தேவைகளுக்கேற்பக் கல்வி வழங்க முடிகின்றது.
  • மாணவர்களின் செயல்பாடுகளின் மதிப்பீட்டினைக் கணினியே சேமித்து வைத்துக் கொள்வதால், தொடர் மதிப்பீடு செய்ய இயலும்.
  • ஒவ்வொரு கருத்தினையும் கற்றபின் அது பற்றிய பல வினாக்களுக்குக் கணினியில் பதில் கொடுப்பதால் தொடர் மதிப்பீடு எளிமையாகிறது. 
  • வண்ண, வண்ண படங்கள், எழுத்துக்கள், நிழற்படங்கள், நுகர் படங்கள், ஒலி, ஒளி நிகழ்ச்சி போன்றவற்றைப் பார்த்துக் கற்றுக் கொள்வதால் அவர்களிடம் கற்கும் ஆர்வம் அதிகமாக காணப்படும்.
  • ஆய்வகங்களில் செய்து காணும் கடினமான சோதனைகளைக் கணினியில் செய்து காண்பது எளிதாகும்.
  • உடல் ஊனமுற்றவர்கள், கற்றல் குறைபாடு உடையவர்கள், அறிவாண்மை மிக்க மாணவர்கள் ஆகியோருக்கும் கணினி வழியாக சிறப்பான கல்வி வழங்க முடியும். 
  • மீண்டும் மீண்டும் ஒரே செயலைப் பல மாணவர்கள் செய்து பார்க்க வேண்டிய சூழலில் கணினி அவர்களுக்கான கருத்துக்களைச் சோர்வில்லாமல் வழங்கும்.

கணினி வழிக் கற்றலின் முக்கியத்துவம்: 

                      கணிப்பொறியில் செய்திகளை விரைவாகவும், துல்லியமாகவும் பெற முடியும். கற்போருக்குச் செய்திகள் உடனடியாகவும் நேரிடையாகவும் கிடைக்கின்றன. கற்பவரிடமிருந்து பல்வேறு வகையான பதில்களையும் கணினி ஏற்றுக் கொள்கிறது. கற்பிக்க வேண்டிய செய்திகளைப் பாடப்பொருள் வடிவிலும் வரைபட முறையிலும் உயிரோட்ட செயல்கள் வடிவிலும் தருகின்றது. கற்றவரின் கற்கும் வேகத்தைப் பொறுத்து அவர் அடுத்துக் கற்க வேண்டிய பாடக்கருத்தைத் தீர்மானிக்கிறது. 

கணினி வழிக்கல்வி வகைகள்  : 

பயிற்சி முறை: 

                            ஒரு பாடப் பொருளை ஒட்டி மாணவருக்குத் தொடர்ச்சியான பயிற்சிகளைக் கணினி தருகின்றது. அப்பயிற்சிகளுக்கு மாணவர் விடை தருதல் வேண்டும். ஒரு மாணவர் கணினி தரும் பயிற்சிகளைச் செய்து முடித்தவுடன், அது மேலும் சிக்கலான ஆழமான பயிற்சிகளைத் தருகின்றது. கணினி தரும் பயிற்சிகளில் ஒரு மாணவர் அதிகமான தவறுகள் செய்வோரேயானால் அப்பயிற்சியினை விட எளிதான பயிற்சிகளைக் கணினி வழங்குகிறது. இவ்வாறு கணினி ஒரு மாணவரின் கற்றல் திறனுக்கேற்ற வகையில் பயிற்சியினை வழங்குகிறது.

    தனிப்பயிற்றுதல் முறை:

                              கணினியில் தனிப்பயிற்றுதல் முறையிலும் ஒரு மாணவருக்குக் கற்பிக்க முடியும். இம்முறையில் மாணவர் கணினியுடன் உரையாடுதல் செய்து கற்க முடியும். இதில் ஒரு பாடக்கருத்தினைக் கணினியானது கேள்வி பதில் என்ற முறையில் மாணவருக்குக் கற்பிக்கின்றது.

    பாவனை முறை:

                                     உண்மையான வாழ்க்கையில் நேரடியாகக் கண்டறிய முடியாத செயல்களைப் பாவனை முறையில் கணினியில் கற்க முடியும். எடுத்துக்காட்டாக, தவளையை அறுத்து அதன் பல்வேறு உறுப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக எப்படி வரிசையாக பிரித்து ஆய்வது என்பதைக் கணிப்பொறியில் வரைபடத்தின் துணையால் கற்க முடியும்.

    • சேமிப்புத் தளம்:

              கணினி செய்திகளைச் சேகரித்து வைக்கும் சேமிப்புத்தளமாக பயன்படுத்த முடிகின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளி நூலகத்திலுள்ள புத்தகங்களின் விவரங்களைக் கணிப் பொறியில் சேமித்துப் பின்னர் தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்த முடியும்.

       கணக்கிடுதல்:                                                                                                                                                  அறிவியல், கணிதம், புள்ளியியல், போன்ற பாடத்துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு மிக எளிதில் கணக்குகளைச் செய்து முடித்திட கணிப்பொறி உதவுகிறது.

      கணினி வழிக் கல்வியில் ஆசிரியரின் பங்கு :

                            வழக்கமாக வகுப்பறைகளில் அமர்ந்து கற்பிக்கும் முறையில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலையினைக் கணினி தந்துள்ளது .புதிய நோக்கில் செயல்பட வேண்டிய புதிய பணிகளையும் கணினி ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது அவையாவன: கணினியின் வழியே கற்பித்தலுக்கு உரிய பாட அலகுகளையும் கலைத்திட்டத்தையும் ஆசிரியர் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும். ஆசிரியர் மாணவர்களோடு சேர்ந்து அமர்ந்து அவர்களுடைய திறன்களையும் தேவைகளையும் விருப்பங்களையும் முன்கூட்டியே தீர்மானித்து அதற்கேற்றவாறு கற்பித்தல் பகுதிகளைத் தயாரிக்க வேண்டும் பொருத்தமான கணினி மொழியைப் பயன்படுத்தி ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசிரியர் கணினித் திட்டம் தயாரிக்க வேண்டும்.

    இ – லேர்னிங் : 

                            இ – லேர்னிங் தலையாய் சிறப்பே “எங்கேயும் எப்போதும்” தான் வகுப்புகளில் சேர இடம் .பெற முடியாத வரும் படிப்பை பகுதி நேரமாக  படிக்க விரும்புபவர்களுக்கும், பள்ளி, கல்லூரி இல்லாத கிராமப்புறம்  வசிப்பவர்களுக்கும் குடும்ப பெண்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கிறது.

                            இ – லேர்னிங் முறையில் பாடங்கள் முறையாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டு தேர்ச்சி பரிசோதிக்கப்படுகிறது பயிற்றுவிப்பவர்களின் திறமையில் உள்ள மாறுபாடு அகற்றப்படுவதால் கல்வியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கிறது.             தொலைதூர கல்வி எவ்வாறு மெதுவாக புகழ்பெற்றதோ அவ்வாறே    இ – லேர்னிங்கும் தற்போது புகழ்பெற துவங்கியுள்ளது .வயது, தொழில், அந்தஸ்து ,குடும்பப் பின்னணி போன்ற எந்த பாகுபாடும் இல்லாத அனைவரும் எட்ட கூடிய ஒரு படிப்பாக இது இருக்கிறது.    நாம் படிக்க விரும்பும் படிப்பை இன்டர்நெட் வசதி மூலம் நாம் இருக்கும் இடத்திலேயே நமது வசதிக்கேற்ப படிக்கலாம். நேரம், விரயம் ,செய்வதையும் ,போக்குவரத்து செலவுகளையும்   இ – லேர்னிங் தவிர்க்கிறது.  பரந்த விரிந்த இவ்வுலகையே வகுப்பறையாக கொண்டு இயங்கும். இ – லேர்னிங் முறை உலகளாவிய நட்பு வட்டத்தை உருவாக்குவதோடு குறுகிய வரையறைகளைத் தகர்க்கிறது

    இந்தியாவில் இ – லேர்னிங் படிப்புகள்:

          திரிபுராவின் ICFAI கல்வி நிறுவனம் (w.w.w.iutripura.edu.in/fexible Programs.asp.என்ற இணைய தளம் மூலம் வழங்குகிறது இன்று நாம் அறிவியல், தகவல், தொழில்நுட்ப துறையில் புரட்சிகர மாற்றங்களை சந்தித்து வருகிறோம். நமது அன்றாட வாழ்வின் போக்கையே இவை மாற்றியுள்ளது என்றால் அது மிகையாகாது 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வங்கிகளின் ஏடி எம் கள் பணத்தின் உபயோகத்தை மாற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இ.சி.எஸ் முறையில் பணம் செலுத்தும் வசதி இன்டர்நெட் ஆன்லைன் ரயில்வே ரிசர்வேஷன் என பலப்பல விஷயங்கள் நமது உலகை மாற்றியுள்ளன குறிப்பிட்ட நேரம் மட்டுமே சேவை புரிந்த அரசுடைமை வங்கிகள் இன்று 12 மணி நேர சேவையை தந்துக் கொண்டிருக்கின்றன நெட்வொர்க்கிங் வசதி பெற்றதால் வங்கிகளிலும் காப்பீட்டு நிறுவனங்களிலும் சேவையின் தன்மையே அதிரடியாக மாறியுள்ளது. காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் வணிக உலகை மாற்றியது போல் கல்வித்துறையிலும் எண்ணற்ற மாற்றங்கள் அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றன. வகுப்பறைகளில் நடக்கும் கல்வியின் முகம் வகுப்பறைகளைத் தவிர்த்து கம்ப்யூட்டர் முன் துவங்க தொடங்கியுள்ளது. இத்தகைய கல்வியே இ – லேர்னிங் (எலக்ட்ரானிக் லேர்னிங்) எனப்படுகிறது. 

    எம்- லேர்னிங்கின் சிறப்புகள்:

      இந்த முறையில் கல்வி பயிலுவது என்பது தனிநபர் தொடர்புடையதாகிறது. இம்முறையில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படிப்பது என்பது ஏதுவாகிறது. பயிற்சிகளும் உதவிகளும் சக்திவாய்ந்த தகவல் பரிமாற்ற கருவிகள் மற்றும் கணினிகள் மூலமாக வழங்கப்படுகிறது. இம்முறையில் நாம் உபயோகிக்கும் கருவிகளைத் தனியே நாம் வாங்குவதில்லை நமது அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் கருவிகள் என்பதால் படிப்புக்கான மூலதனச் செலவு என்பது தனியே கிடையாது.

    மின்னியல் புத்தகம்/ இ – புத்தகம் :பொருள் :

    அச்சடிக்கப்பட்ட புத்தகங்களுக்கு இணையாக மின்னணு வடிவில் பாடக் கருத்துக்களை அளிப்பதே இ – புத்தகம் (மின்னியல் புத்தகம்) என்று பெயர், பொதுவாக மின்னியல் புத்தகங்களை தனியாள் கணிப்பொறி அல்லது மின்னியல் புத்தக வாசிப்புக் கருவிகள் மூலம் வாசிக்கலாம். அலைபேசிகள் மூலம் மின்னியல் புத்தகங்களை வாசிக்கலாம்.

    பள்ளிக் கற்றல் சூழலை வடிவமைத்தல்: 

    ஆதிக்கம் நிறைந்த சூழல்

                        இந்நிலையில் ஆசிரியர் தனக்குத் தெரிந்த கருத்துக்களை வரிசையாக சொல்லிக்கொண்டு செல்வாள் மாணவர் மனப்பான்மை, விருப்பத்தைப் பற்றி அக்கறையில்லாமல் தன் எண்ணங்களையும் அறிவுத் திறன்களையும் விளக்குவார். மாணவர்களின் வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் இடமளிக்க மாட்டார் மாணவர்களை நண்பர்களாக நடத்தி, செயல்களை செய்ய சொல்லாமல் கட்டளைகள் மூலம் செய்யச் சொல்வார். மாணவர்களின் நடத்தைகளை மாற்றுவதற்காக பக்குவமாக சொல்லாமல் அவற்றை வகுப்பறையில் விமர்சித்து அவர்கள் தலை குனியும் படி செய்வார். அவர் தன்னை ஒரு உயர்ந்த நிலையில் வைத்துக் கொண்டு மற்றவர்கள் அனைவரும் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்துடன் செயல்படுவார். இக்காரணங்களால் மாணவர்கள் ஆசிரியர் மீதும் அவர் கற்பிக்கின்ற பாடத்தின் மீதும் வெறுப்புக் கொள்ள கூடும் ஆசிரியைப் பற்றி ஒரு தவறான எண்ணமும் அவர்கள் மனதில் ஏற்படும் அவர் பாடத்தை விரும்பி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதோடு கற்கின்ற மாணவர்களில் தேர்ச்சி பெறுகின்றவர்களின் எண்ணிக்கையும் குறையும்.

    கட்டுப்பாடற்ற சூழ்நிலை :

                                 எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சட்டங்கள் எதனையும் வகுக்காமல், அவை நிகழும் வண்ணமே நிகழ அனுமதிக்கும் சூழ்நிலை என்று இதனைக் கூறலாம். இம்முறையில் ஆசிரியர் தான் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று வரையறுத்துக் கொள்ளாமல். எது எப்படிச் செல்கிறதோ அவ்வாறே தானும் செல்வதைக் குறிக்கும். இதில் ஆசிரியர் மாணவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?கற்க வேண்டும்? என்று சொல்கின்றார்களோ அவற்றைச் செய்தல் கற்றலில் அடங்கும் அதனால் மாணவர்கள் அளவுக்கு மீறிய சுதந்திரம் பெறுகின்றனர். அதனைப் பயன்படுத்தும் முறை அவர்களுக்குத் தெரியாது ஆகையால் கற்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் வீணாக காலத்தைக் கழிக்க விரும்புவர். மாணவர் ஆதிக்கம் நிறைந்தும். குழுவாகச் செயல்படும் தன்மையும், வேண்டியவற்றைக் கற்க வாய்ப்பும் இருக்கும் ஆசிரியர் நண்பராகவும், வழிகாட்டியாகவும், உதவி புரிபவராகவும் விளங்குவார்.

    ஆசிரியர் மாணவர் இணைந்து செயல்படுகின்ற சூழல்:

      இது முன் அறிந்த  இரு முறைகளுக்கும் இடைப்பட்டதாகும். இந்நிலையில் ஆசிரியர் மாணவர்களுக்குத் தேவையான முக்கியத்துவம் கொடுக்கிறார். அவர்களுடைய உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும், மதிப்பளித்து அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய இடத்தில் ஏற்றுக் கொள்கிறார். அவர் மாணவர்களைப் பாராட்டுகிறார் வகுப்பறைச் செயல்களில் மாணவர்கள் பங்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களை வினாக்கள் கேட்கிறார்.

    பாட தலைப்புகளைத் தொடங்கும் முன்னர்:  

    ஆசிரியர் மாணவர்களைக் கலந்து தலைப்புகளைத் தேர்ந்தெடுக்க சொல்கிறார் தவறான தலைப்பினை மாணவர் தேர்ந்தெடுப் பின் கற்பித்தலின் நோக்கங்களை மாணவர்களுக்கு விளக்கி அவற்றின் அடிப்படையில் புதிய தலைப்புகளைத் தேர்ந்தெடுக்க சொல்கிறார். பின்னர் மாணவர் ஒத்துழைப்புடன் பாடத் தலைப்புகளைக் கற்பிக்கின்றார். இந்நிலையில் ஆசிரியர் ஒரு நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருப்பதோடு மாணவர் நலனில், முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராகவும் உள்ளார். அவர் கண்டிப்பானவராக இருப்பதோடு மாணவர்களுக்கு சுதந்திரம் அளிப்பவராகவும் உள்ளார். இந்நிலையில் பின்தங்கிய மாணவர் ஆர்வத்துடன் ஆசிரியரை அணுகவும். மித்திரம் பெற்றோர் தங்கள் கல்வியை மேலும் வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன.மேற்கண்ட மூன்று வேறுபட்ட வகுப்பறைச் சூழல்களில் எது சரியான சூழல்? எந்த நடத்தைகளை ஆசிரியர் பின்பற்றினால் மாணவர்களிடம் கற்றல் சிறப்பாக எலும்? இவ் வினாக்களுக்கு விடை காண வேண்டியது அவசியம் .

    முடிவுரை:

     பொதுவாக ஒரு வகுப்பறைச் சூழல் கற்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டுமானால் ஆசிரியர் சில நேரங்களில் நேரடி ஆதிக்கத்தையும் சில நேரங்களில் இணைந்த செயல்முறையையும் பின்பற்ற வேண்டியது அவசியம். மேல் நோக்காகப் பார்க்கும்போது இது ஆராய்ச்சிகளின் முடிவுகளுக்கு எதிரானதாக தோன்றும். ஆனால் ஆராய்ச்சிகளுக்காக எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு கவனிக்கும்போது ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியரின் நேரடி ஆதிக்கமும் இணைந்த செயல்முறையும் இருந்ததைக் கண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. சில புள்ளி விவரங்கள் ஐந்து முதல் ஏழு வயது வரை உள்ள குழந்தைகள் பெரிய மாணவர்களைப் போல் ஆசிரியரின் நேரடி ஆதிக்கத்தினால் பாதிக்கப்படுவதில்லை என்று கூறுகின்றன. வேறு புள்ளி விவரங்கள் கணிதமும் அறிவியலும் சாதாரணமாக அதிக நேரடி ஆதிக்கத்திற்கும் உட்பட்டது என்றும். அதனால் தான் இம்மாணவர்கள் அதிகம் கற்கின்றார் என்றும் கருதுகின்றன ஒரு வகுப்பறை என்றால் நேரடி ஆதிக்கம் இருக்க வேண்டிய நேரமும் இணைந்த நேரமும் இருக்க வேண்டிய நிலையும் உண்டு சிறந்த ஆசிரியர்  இந்நிலைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு தன் பணியினைச் செய்ய வேண்டும்

    அடிக்குறிப்புகள் :

    • கலைத்திட்டமும் கற்பித்தலுக்கான நுட்பவியல்கள், முனைவர் இரா. பரமேஸ்வரி, முனைவர் ஸ்ரீ பாலாஜி லோகநாதன் இல.சுந்தரம்
    error: Content is protected !!