தமிழ் இணைய ஆசான்
கல்விக்கான இலவச கணினிப்பயிற்சி
Integrating the device in our everyday learning has to make us efficient and productive
தமிழ் அநிதம் நிறுவனம் சில ஆண்டுகளாகக் கல்விக்கான கணினிப் பயிற்சியை இலவசமாக, தமிழக, தமிழ்த்துறை பேராசிரியர்களுக்கு நல்கி வருகிறது. கல்வியையும் கணினியையும் இணைக்கும் வண்ணம் கல்வி மாநாடுகளையும் நடத்தி வருகிறது,இப்பணியின் அடுத்தக் கட்டமாக தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான ஒரு இலவச தன்னார்வ கணினி வகுப்பை இணையம் வழி நடத்தி வருகிறது,
முதல் ௧ட்ட வகுப்புக்கள் வாரங்கள் முடிந்த நிலையில் அடுத்த வகுப்புகள் 12/6/22 (ஜீன் 12 2022 மாலை இந்திய நேரம் 5:30 மணிக்கு இணையம் வழி நடக்க இருக்கிறது.
அறிமுக வகுப்பு
இரண்டாவதாக நடக்க இருக்கும் வகுப்பு அறிமுக வகுப்பாக அமைகிறது. இவ்வறிமுக வகுப்பில், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் தேவையை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படும். இது அறிமுக வகுப்பாக இருந்தாலும் முதல் ௧௬ வாரங்களில் கலந்து கொண்ட மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் தாங்கள் கற்றதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாகவும் இந்த வகுப்பு அமையும். கரோனோ காலத்தில் இணையம் மட்டுமே சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய நாம் நேரடி வகுப்புக்களிலும் இனி எவ்வாறு கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது மிக முக்கிய அம்சமாக நம் வகுப்புகளில் அமையும். வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர்
கீழ்க் கண்ட இணைய இணைப்பில் கலந்து கொள்ளவும்.
ஆசிரியர்கள், மாணவர்கள் இவர்களின் தேவையைப் பொறுத்து, வகுப்பு விரிவுரையாகவோ, அல்லது செய்முறை பயிற்சியாகவோ அமையும்.
வகுப்பு ஒரு மணி நேரம் நடக்கும் . முதலில் பங்கு கொள்பவர்களின் சந்தேகங்கள், அதன்பின் விரிவுரை\செய்முறை கேள்வி பதில் என்ற வகையில் வகுப்பின் அமைப்பு இருக்கும்.
வகுப்பில் கலந்து கொள்ள, கூகுளை மீட் செயலித் தேவை.
To join the video meeting, click this link:
https://meet.google.com/tpx-mzmz-vqm
ஆசிரியர்களுக்கான வழிகாட்டி
எஸ் சிவகுமார்.
முதல்வர் (பணி நிறைவு) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
காஞ்சிபுரம் மாவட்டம்
கைப்பேசி..6383690730
மின்னஞ்சல். sivakumardiet@gmail.com
கணினி வகுப்பு நடத்துபவர்
சுகந்தி நாடார் தமிழ் அநிதம் அமெரிக்கா
மின்னஞ்சல்:tamilunltd@gmail.com