இணையத்தில் விளையாட்டு வழி கற்றல் முறைகள்
முனைவர் ஜெ. காவேரி,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை,
வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,
விருதுநகர்.
ஆய்வுச் சுருக்கம்
இணையத்தின் வழி இன்றைய உலக இயக்கம் சுருங்கியதொன்றாக திகழ்கின்றது. கணினியின்றி இயங்காத துறைகளே இல்லை எனுமளவு அனைத்துத் துறைகளிலும் கணினியின் பயன் இன்றியமையாததொன்றாய் திகழ்கின்றது. இன்றைய பேரிடர் காலச் சூழலில் கல்வி மேம்பாட்டிற்கு கணினியே பிரதான வழியாக உள்ளது. இணைய வழி கற்றல் கற்பித்தல் முறைகள் என்பது இன்றைய காலகட்டத்தின் தேவையானதாய் அமைகின்றது. மழலையர் பள்ளி முதல் முதுநிலைக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் கணினியின் வழி கற்றல் நடைபெற்று வருகின்றது. கால மாற்றத்தால் கற்பித்தல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆரோக்கியமானதாகவும் மகிழ்வானதாகவும் அமைய வேண்டும். இளஞ்சிறார்கள் முதல் கணினி வழி, கல்வியைக் கற்கும் சூழலில் புதிய கற்பித்தல் முறைகளாக விளையாட்டு முறை தேவையானதொன்றாய் உள்ளது. அவ்வகையில் இணையத்தில் விளையாட்டு வழி கற்றலுக்கென்று செயலிகள் பல உள்ளன. கல்வியாளர் களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் செயலிகள் மட்டுமே இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. BookWidgets. … Photomath. …Aurasma. … Poll Everywhere. … Explain Everything. … Quizlet. … ‘Seesaw‘ ,Kahoot, Socrative, Nearpod.. போன்று பல செயலிகள் கணினி மற்றும் திறன் பேசியில் காணப்படுகின்றன. இச்செயலிகளின் அமைப்பு முறை, அவற்றைப் பயன்படுத்தும் முறை இச்செயலிகளைப் பயன்படுத்தும் மாணவர் களின் உளவியல் நிலை போன்றவற்றை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகின்றது.
இணையத்தின் வழி இன்றைய உலக இயக்கம் சுருங்கியதொன்றாக திகழ்கின்றது. கணினியின்றி இயங்காத துறைகளே இல்லை எனுமளவு அனைத்துத் துறைகளிலும் கணினியின் பயன் இன்றியமையாததொன்றாய் திகழ்கின்றது. இன்றைய பேரிடர் காலச் சூழலில் கல்வி மேம்பாட்டிற்கு கணினியே பிரதான வழியாக உள்ளது. இணைய வழி கற்றல் கற்பித்தல் முறைகள் என்பது இன்றைய காலகட்டத்தின் தேவையானதாய் அமைகின்றது. மழலையர் பள்ளி முதல் முதுநிலைக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் கணினியின் வழி கற்றல் நடைபெற்று வருகின்றது. கால மாற்றத்தால் கற்பித்தல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆரோக்கியமானதாகவும் மகிழ்வானதாகவும் அமைய வேண்டும். இளஞ்சிறார்கள் முதல் கணினி வழி, கல்வியைக் கற்கும் சூழலில் புதிய கற்பித்தல் முறைகளாக விளையாட்டு முறை தேவையானதொன்றாய் உள்ளது. அவ்வகையில் இணையத்தில் விளையாட்டு வழி கற்றலுக்கென்று செயலிகள் பல உள்ளன. கல்வியாளர் களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் செயலிகள் மட்டுமே இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. Kahoot, BookWidgets. … Photomath. …Aurasma. … Poll Everywhere. … Explain Everything. … Quizlet. … ‘Seesaw‘ , Socrative, Nearpod.. போன்று பல செயலிகள் கணினி மற்றும் திறன் பேசியில் காணப்படுகின்றன. இச்செயலிகளின் அமைப்பு முறை, அவற்றைப் பயன்படுத்தும் முறை இச்செயலிகளைப் பயன்படுத்தும் மாணவர் களின் உளவியல் நிலை போன்றவற்றை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகின்றது.
இணைய வழிக் கல்வி
இணைய வழிக் கல்வி என்பது இன்று அனைத்து மொழிகளிலும் தவிர்க்க முடியாததொன்றாகி விட்டது. தமிழில் தமிழ் இணையக் கல்விக் கழகம் என்ற ஒன்றே இப்பணியினை, உலகளாவிய நிலையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு வேற்று நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் தமிழைக் கற்கும் நோக்குடன் மழலையர் கல்வி முதல் பட்டப் படிப்பு வரை இணையத்தில் அளித்து வருகின்றது. இது போக வேறு சில தளங்களிலும் இன்று தமிழைக் கற்பிக்கும் முறை நடந்து வருகின்றது. பிற படிப்புகளைக் கற்பது போன்று தமிழ் மொழியைக் கற்பதற்கென்று பல தளஙகள் இல்லாவிடினும் இன்று அதற்கான முயற்சிகளும் கல்வியானர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இணையமும் வகுப்பறையும் இணைந்து கல்வி கற்கும் நிலை இன்று கல்லூரி அளவுகளில் மிகுந்து காணப்பட்டு வருகின்றது. அவ்வாறு இருக்கின்ற சூழல்களில் மாணவர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கும் வண்ணம் மேற்சுட்டிய விளையாட்டு வழிக் கற்றல் தளங்கள் காணப்படுகின்றன.
Kahoot
இணைய வழிக் கல்வியில் விளையாட்டு அடிப்படையில் கற்றலுக்கு, இன்று பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ள மென்பொருள் இது. பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் கல்வி தொழில்நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் ஆசிரியர்கள், அனைத்து பாடங்களுக்கும் வினாக்கள் தயார் செய்து மாணவர்களைப் பங்கேற்கச் செய்ய முடியும்.
நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கூட்டுத்திட்டத்தில் ஜோஹன் பிராண்ட், ஜேமி ப்ரூக்கர் மற்றும் மோர்டன் வெர்சிவிக் ஆகியோரால் 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த தளம். இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செப்ட்பர் முதல் துவங்கப்பட்டது. ஆனால் இது துவக்கப்பட்ட காலத்தில் பயன்பாட்டிற்கு இருந்ததை விட இன்றைய பேரிடர் கொரனோ தொற்று காலத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பன்மடங்கு பயனைத் தருவதாய் திகழ்கின்றது.
Kahoot, Kahoot.it மற்றும் GetKahoot.com இரு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது விளையாட்டில் சேரும் முறை. இரண்டாவது ஆசிரியர் வினாக்களைத் தொடங்கி மாணவர்களை விளையாட அழைக்கும் முறை. முதல் முறையில் ஆசிரியர் அனுப்பிய இணைப்பு வழி நாம் சென்று நமக்கான வினாக்களை விளையாட்டு வழிச் செய்தல். இரண்டாம் முறையில் நாம் நமக்கென்று ஒரு கணக்கினை Kahootஇல் இலவசமாகப் பதிவு செய்து, மாணவர்களுக்கு விளையாட்டை அனுப்பல்.
வினாடி வினா வடிவத்திலேயே பெரும்பான்மையான தேர்வுகள் இதில் இடம்பெறும். வினாடி வினா தேர்வு வைக்க முதன்மைப் பக்கத்தில் உள்ள வினாடி வினா என்பதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். அதன் முதல் கட்டத்தில் அவர்கள் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பின்னர் வலது பக்கம் உள்ள பச்சை பட்டனை அழுத்தித் தொடர வேண்டும். அதனை அடுத்து நமது வினாக்களை அடிக்க வேண்டும். அதனுடனே மாணவர்கள் விடையளிக்க வேண்டிய கால எல்லை போன்றவற்றை எல்லாம் உள்ளீடு செய்து கொள்ளலாம். பொருத்தமான விடையமைப்பில் குறைந்தது இரண்டு முதல் நான்கு விடைகளை வழங்கலாம். இதில் மாணவர்கள் வரியான வினாக்களை டிக் செய்யும் வழிமுறை உள்ளது. இதில் நம் வினாக்களை எழுத்து வடிவில் அடிப்பதுடன், படம், அல்லது வீடியோ வடிவிலும் கேட்கலாம். இவ்வடிவில் கேட்பது மாணவர்களுக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டுவதாய் அமையும். இந்த Kahoot தளம் மூலம் மாணவர்கள் விளையாட்டு வடிவில் தாங்கள் படித்த பாடங்களுக்குரிய வினாக்களுக்குப் பதில்களை தேர்வு மூலம் புரிகின்றனர். மாணவர்கள் தேர்வு முடித்தவுடனேயே அவர்களுக்கான மதிப்பெண்களும் தரவரிசையும் வந்து விடுகின்றது. ஆதலால் மேலும் ஆர்வமுடன் இதனைச் செய்கின்றனர். மேலும் இத்தளம் பல வண்ண வடிவங்களில் இருப்பதால் மாணவர்களின் மனதைக் கூடுதலாகக் கவர்வதாய் உள்ளது.
BookWidgets. … Photomath. …Aurasma. … Poll Everywhere. … Explain Everything. … Quizlet. … ‘Seesaw’ , Socrative, Nearpod.. போன்ற தளங்களும் மேற்சொன்ன Kahoot வடிவ அமைப்பிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன. எல்லா தளங்களுக்குமே நமக்கென்று பயனர்சொல்லும், கடவுச் சொல்லும் அவசியமாகின்றது. பெரும்பாலும் பொருத்தமான விடை அளிக்கும் வகையிலேயே அமைகின்றன. மாணவர்களின் தரவரிசையை வெளிப்படுத்தும் முறையிலேயே ஒவ்வொரு தளங்களும் தம்முள் வேறுபடுகின்றன. பெரும்பாலும் மீதி செயல் அமைப்பு முறைகளில் ஒன்றுபட்டே உள்ளன. பக்க எல்லையினால் அனைத்தையும் பற்றி இங்கு விளக்கவில்லை.
இயந்திரமயமான இன்றைய உலகில் மாணவர்கள் கல்வியைக் கல்வி நிலையங்களில் கற்பதுடன் அதனை வீட்டிலும் தொடர்வது இன்றியமையாததாகி விட்டது. அதற்கு இத்தகைய தளங்கள் பெரிதும் துணைபுரிவதாய் உள்ளது. இன்றைய கொரனோ கால கட்டத்தில் கல்லூரி பருவத் தேர்வுகள் மூலம் வகுப்புத் தேர்வுகள் வரை அனைத்தும் இயங்கலை வழியே நடைபெற்று வருகின்றது. கற்றலும் அத்தகைய இயங்கலை வழியேவே நடைபெற்றுக் கொண்டுள்ளது. இத்தகைய முறைகள் மாணவர்களுக்கு,
கல்வியை எளிதில் தாங்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்வதாய் அமைகின்றது.
புரிவதற்கு கடினமான சில பாடங்களை இயங்கலை வழியில் காட்சி ஊடகங்களின் மூலம் காட்டுவதால் எளிதில் புரிந்து கொள்ள வழிவகுக்கின்றது.
மாணவர்கள் எங்கு இருந்தாலும் எத்தகைய சூழலிலும் பாடங்களைக் கற்றுக் கொண்டு தேர்வு எழுத முடியும்.
மாணவர்கள் எவ்வாறு கல்வி கற்கின்றனர், அவர்களது படிப்பின் நிலை போன்ற அனைத்தையும் பெற்றோரும் உடனிருந்தே அறிந்து கொள்ள முடிகின்றது.
இவ்வாறு இத்தகைய இணைய வழி விளையாட்டு வழிக் கல்வி மூலம் நன்மைகள் பல இருப்பினும் இதனால் இடர்பாடுகளும் காணப்படுகின்றன.
இயங்கலைத் தேர்வுகளின் நம்பகத்தன்மை சற்று குறைவாகவே காணப்படுகின்றது. மாணவர்கள் வினாக்களுக்கு விடைகளைப் படித்து பார்க்காமல் எழுதுகின்றார்களா என்பதை அறிந்து கொள்வது சற்று கடினம்.
ஆர்வத்தின் காரணமாக இத்தகைய கற்றல் முறைகளில் முதலில் ஈடுபாடு காட்டுகின்றனர். பின்னர் அவர்களது கவனம் சிதறி இதனை வெறும் சம்பிரதாயமாக ஆன் செய்து விட்டு பிற வேலைகளில் கவனம் செலுத்துகின்றனர்.
நீண்ட நேரம் தொடர்ந்து இத்தகைய வகுப்புகளில் கவனம் செலுத்தும் பொழுது மனம், மற்றும் உள்ளம் சோர்வடைகின்றது.
மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறனை ஆசிரியர்களால் எளிதில் அறிந்து கொள்ளும் வாய்ப்பு குறைவு.
நேரடி பள்ளி, கல்லூரி கல்விகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் இத்தகைய கற்றல் முறைகள் இருப்பது சிறப்பு. ஆனால் அவற்றிற்கு மாற்று என்ற நிலையில் இத்தகைய கற்றல் முறைகள் பலனைத் தருவது சற்று குறைவு என்றே குறிப்பிடலாம்.
துணைபுரிந்த புத்தகங்கள் மற்றும் தளங்கள்
2.https://en.wikipedia.org/wiki/Kahoot!.
3. https://ta.wikipedia.org/wiki/இணையவழிக்_கல்வி
4. துரையரசன்.க, இணையமும் இனிய தமிழும், இசை பதிப்பகம், கும்பகோணம்.
5. மணிகண்டன்.துரை. தமிழ் கணினி இணையப் பயன்பாடுகள், கமலினி பதிப்பகம், தஞ்சை.
6. சுந்தரம்.இல. கணினி தமிழ், விகடன் பிரசுரம், சென்னை.