Tamil Computing Journal

ஐந்தாவது பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு – 2024

அறிவிப்பும் அழைப்பும்

பல்துறைக் கற்றல் கற்பித்தலில் கணினித் தொழில்நுட்பப் பயன்பாடுகளும்  வாய்ப்புகளும்

Fifth International Educational Conference – 2024

On

Recent Avenues and Opportunities in Multidisciplinary Education Through Computer Technology

நாள் : 8,9 ஆகஸ்டு, 2024

அன்புடையீர்,

செம்மொழியான தமிழ்மொழி இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ளது. மனித மூளையின் வியக்கத்தக்க படைப்புகளே மனிதரின் இயற்கை மொழிகள். ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் படிப்படியாக மாற்றம் பெற்று நூல் வடிவமாகி இன்று கணினியிலும் வளர்ச்சியடைந்து உயர்ந்து நிற்கின்றது. இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலில் நாம் முன்னேற்றம் பெற வேண்டும். தமிழ்மொழியின் வளர்ச்சியிலும்,  பிற துறைகளின் வளர்ச்சியிலும் கணினித் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை அனைவரும் அறிந்துகொண்டு தங்களின் பங்களிப்பினை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தைக் கருத்தில் கொண்டு தமிழ் அறிஞர்களும், கணினித் தொழில்நுட்ப வல்லுனர்களும் மற்றும் அனைத்துத் துறைகளையும் சார்ந்த கல்வியாளர்களும் இணைந்து செயலாற்றும் வகையில் மேற்குறிப்பிட்ட அனைத்து நிறுவனங்களும் இணைந்து “பல்துறைக் கற்றல் கற்பித்தலில் கணினித் தொழில்நுட்பப் பயன்பாடுகளும் வாய்ப்புகளும்” என்ற பொருண்மையில் பன்னாட்டு மாநாட்டினை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

இம்மாநாடு 8, 9 ஆகஸ்டு, 2024 ஆகிய தேதிகளில் திண்டுக்கல், ஜி.டி.என் கலைக்கல்லூரியில் (தன்னாட்சி), நேரடியாகவும் இணையவழியாகவும் இரண்டு நாள் கருத்தரங்கமாக நடைபெற உள்ளது “பல்துறைக் கற்றல் கற்பித்தலில் கணினித் தொழில்நுட்பப் பயன்பாடுகள் வாய்ப்புகள்” பற்றிய அறிஞர்களின் கருத்துக்களையும் ஆய்வாளர்களின் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளும் வகையில் இம்மாநாடு அமையவுள்ளது. விளைவு சார்ந்த கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றலை எளிதாக்கிக் கொள்ள வேண்டும். இம்மாநாட்டில் உலக நாடுகளில் உள்ள தமிழின்பால் பற்றுக்கொண்ட பல்துறைக் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கணினியியல், மொழியியல், கல்வியியல் சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள்,  நிரலாளர்கள் ஆகிய அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநாட்டுக்குழு அன்புடன் அழைக்கின்றது.

தமிழ் அநிதம் (அமெரிக்கா),

ஜி. டி. என். கலைக்கல்லூரி (தன்னாட்சி),

தமிழ் உயராய்வு மையம் மற்றும் கணினிப் பயன்பாட்டுத்துறை, திண்டுக்கல்,

மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,

தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி,

பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திண்டுக்கல்,

சைவபானு சத்திரிய கல்லூரி, அருப்புக்கோட்டை,

ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி), சாத்தூர்,

ஓயிஸ்கா நிறுவனம் (அமெரிக்கா),

உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா),

பாரதித் தமிழ்ச்சங்கம், பஹ்ரைன், நாகூர் தமிழ்ச்சங்கம், நாகூர்,

வல்லமை (மின்னிதழ்), முத்துக்கமலம் (மின்னிதழ்)

தமிழ் அநிதம் அறக்கட்டளை, இந்தியா இணைந்து நடத்தும்

Tamil Computing Journal என்ற ஆய்விதழ் 2024ம் ஆண்டிலிருந்து வருட த்திற்கு நான்கு முறை வெளியாக இருக்கின்றது.  வெளிவரப் போகும் நான்கு இதழ்களில் ஒரு இதழ் கல்வியியல் மாநாட்டு  இதழாகவும், இரு இதழ்கள் ஆய்வு  மாணவர்களின் ஆராய்ச்சிக்காகவும் ஒதுக்கப் படுகின்றன.

இணையப் பதிப்பு ISSN 06002767 எண்ணிலும் அச்சுப் பதிப்பு ISSN 2767-0597 எண்ணிலும் வெளிவருகின்றன. ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைக்கலாம். ஆனால் பொருண்மை கல்வியியலுக்கான தொழில்நுட்பம் பற்றியும் தமிழ் மொழிக்கான  தொழில்நுட்பம் பற்றியும் இருக்க வேண்டும்.

ஆய்வுக் கட்டுரைகளை இணையத்திலும் PDFலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அச்சுப்பதிப்பு அமேசானில் விலை கொடுத்து வாங்கிக் கொள்ள இயலும்.

ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்பித்தவர்களுக்கு அதற்குரியக் கடிதம் மட்டுமே அனுப்பப் படும். மாநாட்டில் கலந்து கொள்ளும்போது மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படும்.

 ஆய்வு நூல்கள் மின்னூலாகவும் ஒலிப்புத்தகமாக்கவும் கிடைக்குமிடங்கள்.

The list of paper is listed in this post.

error: Content is protected !!