செயற்கை நுண்ணறிவுத் தமிழ் 2025 

பன்னாட்டுக் கல்வியியல் கருத்தரங்கம்

Tamil AI 2025


அழைப்பும் அறிவிப்பும்

கருத்தரங்க நாள் : .  29.08.2025

ஆய்வுச்சுருக்கத்தின் கடைசி நாள்  15.07.2025


abstract@tamilcomputingjournal.org


கருத்தரங்கப் பதிவிற்கான இணையச் சுட்டி

https://forms.gle/cBprE5DfZ8Vc4cqQA


இடம் : சந்திரா கருத்தரங்கக் கூடம்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

கோயம்புத்தூர் - 641 004


ஆய்வுப் பொருண்மைகள் : 

  • கணித்தமிழ் வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்.

  • தமிழும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும்.

  • தமிழ்மொழியின் வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப்பபபணிகள்.

  • தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு.

  • சாட் ஜிபிடியும் தமிழ் இலக்கியமும்.

  • செயற்கை நுண்ணறிவில் மொழியியலின் பங்கு.

  • தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்.


கருத்தரங்கப் பதிவுக் கட்டணம் :  

  • ஆய்வாளர்கள் : ரூ.400/-

  • பேராசிரியர்கள் :ரூ. 800/-

  • ஆர்வலர்கள் : ரூ.300/-

  • பங்கேற்பாளர்கள் :ரூ. 200/-

  • அயல்நாட்டினர் : ரூ.1000/-

  • Name : PSGR KRISHNAMMAL COLLEGE FOR WOMEN  

  • Bank Name: HDFC Bank Ltd

  • Account No.:50100811268160.

  • IFSC Code.: HDFC0001250.

  • Address: Sreenivas Bavan, 1050 Avinashi Road,     Coimbatore - 641018.

கருத்தரங்கின் நோக்கம் :

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களில் ஒன்றாகும், இது கல்வி, தொழில் மற்றும் சமூகத்தை ஒட்டுமொத்தமாக மறுவடிவமைக்கிறது. தமிழ்மொழி காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் இயல்புடையது. எனவே தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்துடன்  இணைந்து செயலாற்றி வருகிறது தமிழ்மொழி. தமிழ் ஆர்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும் செயற்கை நுண்ணறிவுத் தமிழில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில்,

  • தமிழ் மொழியில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.

  • தமிழில் AI தொழில் நுட்பங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல்.

  • தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை  AI மூலம் பாதுகாக்கும் வழிகளை ஆராய்தல்.

  • மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  AI பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல்.

ஆகியவை இக்கருத்தரங்கின் நோக்கங்களாக அமைந்துள்ளன   



பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி:

இறை ஆற்றலும் அறிவியலும் ஒருங்கே அமைந்து பல நல்ல விஞ்ஞானங்கள் வளர்ந்தோங்கும் வகையில்,  கோவையில் பெண்களுக்கான கல்வி வழங்குவதில் தலைசிறந்த கல்வி நிலையமாக பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி  திகழ்கிறது. 1963 ஆம் ஆண்டு ஜி.ஆர் கோவிந்தராஜூலு, ஸ்ரீமதி சந்திரகாந்தி கோவிந்தராஜூலு அவர்களால் நிறுவப்பட்டது. பெண்களுக்குக் கல்வி அளித்து சமுதாயத்தில் முன்னேற்றம் அடையச் செய்து வருகின்றது. நிர்வாக அறங்காவலர் திரு.ஜி.ரங்கசாமி, கல்லூரித்தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி ரங்கசாமி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்புடன் இயங்கி வருகிறது. 

எம் கல்லூரியில் 37 இளங்கலைப் பாடப்பிரிவுகள், 17 முதுகலைப் பாடப்பிரிவுகள், 14 ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுத்துறைகளும் உள்ளன. 400 பேராசிரியர்களைக் கொண்டு 8,500 மாணவியர்களுக்கு எண்ம முறை வகுப்புடன்(Digital Teaching) கற்பிக்கப்படுகிறது. தன்னாட்சி உரிமை, ஐந்து நட்சத்திரத் தகுதி, சிறப்பு நிலைத் தகுதி (College of Excellence) தேசியத் தர மதிப்பீட்டில் A++ தகுதி, NIRF (2024) தேசியத் தர வரிசைப் பட்டியலில் 7-ஆவது இடம் போன்ற பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. DST - FIST மற்றும் DST உதவியுடன் அன்னூருக்கு அருகில் கிராமப்புறப் பெண்கள் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

Outcome Based Education (OBE) என்ற பாடத்திட்டத்தை வழங்கிய முதல் கலை அறிவியல் கல்லூரி என்ற சிறப்புக்குரியது. மேலும் ACS, CA, ICWA, BANKING, CIVIL SERVICE ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களும் இயங்கி வருகின்றன. எம் கல்லூரிப் பேராசிரியர்கள் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற ஆய்விதழ்களிலும் பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகின்றனர். பல விருதுகளைப் பெற்று பெருமைப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு):

எம்தமிழ்த்துறை 62 ஆண்டுகளாகச் சிறப்புடன் பணியாற்றி வருகிறது. காலத்திற்கேற்ப இத்துறை தொல்காப்பியர் தமிழாய்வு மையம், சந்திரகாந்தம் தமிழ்மன்றம், ஊடகவியல், வேலைவாய்ப்புக்  கல்வியெனப் பன்முகத்தன்மை கொண்டு இயங்கி வருகின்றது. மாணவிகளின் தனித்திறமைகளையும், படைப்பாற்றலையும் வெளிக்கொண்டுவரும் வகையில் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு அமைகின்றது.

 மேலும் மாணவியர்களுக்குக் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் போன்ற படைப்பாக்கத் திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு பயிற்சிப் பட்டறைகளை நடத்தும் பெருமை எமது தமிழ்த்துறைக்கு உண்டு. தமிழ்த்துறை பல பன்னாட்டு அமைப்புகளுடனும் பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்ற ஆய்விதழ்களுடனும் இணைந்து பல பன்னாட்டுக் கருத்தரங்கங்களை நடத்தியுள்ளது. இவ்வாறாகத் தமிழ்த்துறையானது தமிழ் மொழி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் தொழில் நுட்பம் சார்ந்த செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி  தமிழ் மொழியில்  அமைவதன் அவசியம் பற்றியதான பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தத்திட்டமிட்டுள்ளது. இக்கருத்தரங்கு  சிறப்பாக நடைபெற பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கி தங்களது ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தகவல் தொழில்நுட்பத்துறை (சுயநிதிப்பிரிவு):

2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட எங்கள் தகவல் தொழில் நுட்பத் துறை, கணினி அறிவியலின் வலுவான அடித்தளத்தையும் நுண்ணறிவான நிரலாக்கத் திறன்களையும் கொண்ட மென்பொருள் நிபுணர்களை உருவாக்க முனைவதாகும். 2016 ஆம் ஆண்டு உயிரிதகவல் அறிவியலை ஊக்குவிக்கும் நோக்கில்  DBT Star Scheme-இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு DBT Star Status-க்கு உயர்த்தப்பட்டோம். இது மாணவர்களின் கற்றல் அனுபவங்களை மேம்படுத்தும். எங்கள் துறை தொழில் துறை சார்ந்த பல்துறைக் கல்வியை வழங்குவதில் பெருமை கொள்கிறது.

தொழில் துறையின் தேவைக்கு ஏற்பப் பாடத்திட்டம் வடிவைமக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன், மென்பொருள் உருவாக்கும் திறன், பல்வேறு நிரலாக்க மொழிகள், இணைய உலகம் (IoT), விவரிக்கப்பட்ட/ மெய்நிகர் யதார்த்தம்(AR/VR) ஆகியவை உட்ப எண்ணிம  உலகைப் புரிந்து கொள்ளும் திறன்களுடன், கணினித் தொழில்நுட்பத்தின் சிறப்புப் பகுதிகளில் விருப்பப் பாடங்களையும் கற்றriந்து திறமையடைகின்றனர். 

எம்துறை தகவல் தொழில்நுட்பத்தில் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன்களுடன் கூடிய நடைமுறைக் கற்றலையும் அறிவையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. புதுமையான கற்பித்தல் கற்றல் செயல் முறை, குழுவாகப் பணியாற்றும் அணுகுமுறை, தலைமைப்பண்பின் மூலம் முக்கியமான தொடர்பாடல், புத்தாக்கச் சிந்தனை, வடிவமைப்புச் சிந்தனைத் திறன் ஆகியவற்றை உருவாக்குகின்றது.

தமிழ் அநிதம் அமெரிக்கா: 

       தமிழ் அநிதம் அமெரிக்கா, (TAMIL UNLIMITED LLC, (EIN 93-4304457), (Entity Num-ber: 0013612881) அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டிலிருந்து செயலாற்றி வரும் ஒரு நிறுவனமாகும். தமிழ் கற்றல் கற்பித்தலுக்காக உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், 2016 ஆம் ஆண்டிலிருந்து தென் தமிழகக் கல்லூரிகளில் தமிழ்க் கணிமை பற்றிய செயல்முறைப் பயிற்சிகளையும், கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளது. ஓயிஸ்கா நிறுவனம் (தமிழ்நாடு கிளை), உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா), பாரதி தமிழ்ச்சங்கம், பஹ்ரைன், நாகூர் தமிழ்ச்சங்கம், நாகூர் ஆகிய நிறுவனங்களுடன் தமிழ் அநிதம் கூட்டாகச் செயல்பட்டு ஐந்து பன்னாட்டுக் கல்வியியல் மாநாடுகளையும் நடத்தி வந்துள்ளது.

தற்போது ஆறாவது கல்வியியல் மாநாட்டை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையுடனும், தன்  தோழமை நிறுவனங்களோடும் இணைந்து கோயம்புத்தூரில் நடத்துவதில் பெருமிதம் கொள்கிறது.

ஓயிஸ்கா நிறுவனம் (தமிழ்நாடு கிளை):

OISCA சர்வதேச நிறுவனம் என்பது நிலையான வளர்ச்சி, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும்  கிளைகளையும்  செயல்பாட்டுப் பகுதிகளையும் கொண்ட  ஓர்  உலகளாவிய வலையமைப்பாகும். 1961- இல் ஜப்பான் டோக்கியோ நகரில் தோற்றுவிக்கப்பட்ட இத்தொண்டு நிறுவனம்  உலகின் நாற்பத்தியொரு நாடுகளில், முப்பதியொரு கிளைகளையும், இருபது பயிற்சி நிலையங்களையும் கொண்டுள்ளது.

உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா):

தமிழ் மென்பொருள் குடும்பம்  அமெரிக்கக் கணினிப் பொறியாளார் திரு.டேவிட் இராசாமணி அவர்களால்   தொடங்கப்பட்டது. தமிழ் கணினி நிரல் வளங்கள் திறவூற்றுத் தொழில்நுட்பத்தில் பல்கிப் பெருக வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அமைப்பைத் தொடங்கினார். அவர் உணவகங்களுக்கான வளரி என்ற  செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தின் சொந்தக்காரர். இவரது இத்தொழில்நுட்பம் தென் தமிழகத்தில் சோதனையோட்டத்தில் உள்ளது. இது தவிர வணிக ரீதியாகவும் தமிழ் செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தில் பல விஷயங்களைச் செய்து வருகிறார்.


பாரதி தமிழ்ச்சங்கம், பஹ்ரைன்:

பஹ்ரைன் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ் பண்பாட்டு மையம் அந்நாட்டில் பல்வேறு தமிழ்க் கலை நிகழ்சிகளையும் தமிழ்த் திருவிழாக்களையும் நடத்தி வளைகுடாப் பகுதியில் தமிழ் மொழியின் பாலமாகத் திகழ்கிறது. தமிழ்மொழி, தமிழ்  இலக்கியம், பண்பாட்டை வளர்த்தல், இந்தோ - பஹ்ரைன் உறவுகளை மேம்படுத்துதல் இவ்விரண்டும் இச்சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும். தமிழ்நாட்டின் பல்வேறு துறை சார்ந்த தமிழ் ஆளுமைகளைப் பஹ்ரைன் நாட்டிற்கு அழைத்து விருந்தோம்பல் செய்து  அப்பகுதி மக்களின்  தமிழ்த் தாகத்தை இவ்வமைப்புத் தணிக்கின்றது.

நாகூர் தமிழ்ச்சங்கம், நாகூர்:

தமிழ்ப் படைப்பாளிகளையும், படிப்பாளிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு இயக்கமாக “இலக்கியத்தால் இதயங்களை ஒன்றிணைப்போம்” என்ற நோக்கத்தோடு, பல்வேறு  தமிழ் இலக்கிய நிகழ்சிகளை நாகூர் தமிழ்ச் சங்கம் நடத்தி வருகின்றது. 2007-இல் தொடங்கப்பட்ட இந்தச் சங்கம் பல தமிழ் நூல்களை வெளியிட்டு இக்காலத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு ஊக்கம் தருகிறது.


கருத்தரங்கப் புரவலர்கள்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி


உயர்மிகு கோ. ரங்கசாமி

நிர்வாக அறங்காவலர்

முனைவர் நந்தினி ரங்கசாமி 

கல்லூரித் தலைவர்




கருத்தரங்க ஆலோசனைக்குழுத் தலைவர்

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி


முனைவர் நா.யசோதாதேவி

கல்லூரிச் செயலர்

கருத்தரங்கத் தலைவர்கள் 

முனைவர் பி. பீ. ஹாரத்தி

கல்லூரி முதல்வர்

மருத்துவர்  . வெங்கடேஷ் நாடார் 

இயக்குநர், CARE மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (அமெரிக்கா)

தமிழ் அநிதம் (அமெரிக்கா)

தமிழ் அநிதம் அறநிறுவனம் (இந்தியா

சிக்கலான இரத்தநாடி செருகுகுழாய் சிகிச்சைக் குழு (அமெரிக்கா)


திரு. நல்லபெருமாள் பிள்ளை

தலைவர்,

ஓயிஸ்க்கா நிறுவனம். தமிழ்நாடு கிளை 

வழக்கறிஞர் த.சரவணன்

தலைவர்,

தேசிய &சர்வ தேசிய வர்த்தக இசைவுத்தீர்வு குழுமம்(CNICA)


திரு. எம்.ஜி.கே. ஹுசைன் மாலிம்

நிறுவனர், 

பாரதி தமிழ்ச்சங்கம், பஹ்ரைன்

நாகூர் தமிழ்ச் சங்கம்


திரு. எம்.ஜி.கே. நிஜாமுதீன்

நாகூர் தமிழ்ச் சங்கம்

திரு. டேவிட்இராசாமணி 

 கணினிப் பொறியாளார் 

 தமிழ் மென்பொருள் குடும்பம், வளரி  தமிழ் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

திருமதி. சுகந்தி நாடார்

நிறுவனர், தமிழ் அநிதம் (அமெரிக்கா) நிறுவனர்,

 தமிழ் அநிதம் அற நிறுவனம் (இந்தியா)




கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்;

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி


முனைவர் கோ. சுகன்யா

தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதிப்பிரிவு),

கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளர்

  முனைவர் சே. பிரேமா, உதவிப்பேராசிரியர்

அமர்வு ஒருங்கிணைப்புக்குழு : 

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

தமிழ்த் துறை (சுயநிதிப்பிரிவு):

முனைவர் ஆ. அகிலாண்டேஸ்வரி 

முனைவர் ஜெ.கவிதா 

முனைவர் ந. பிரதீபா 

முனைவர் ப. மணிமேகலை 

திருமதி நா. குமுதா

முனைவர் இரா. மாலினி 

முனைவர் மு. அன்பரசி

முனைவர் ரா. நித்யலட்சுமி

முனைவர் சி. தீபா

தகவல் தொழில்நுட்பத்துறை:

முனைவர் கோ. சங்கீதா 

திருமதி கோ. ரூபாதேவி 

முனைவர் வெ. தீபா

முனைவர் இரா. ஜீவிதா 

முனைவர் ப. பார்வதி

முனைவர் இரா. சிவரஞ்சனி

முனைவர் ச.பியூலா பிரின்சி 

செல்வி செ. தேவிபிரியா 

முனைவர் த. சங்கீதா

தொடர்புக்கு:


தொடர்புக்கு

முனைவர் கோ.சுகன்யாதமிழ்த்துறைத்தலைவர் - 8940708989 

முனைவர் சே.பிரேமா, உதவிப்பேராசிரியர் - 7373542760