ஆறாவது பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு – 2025

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பதை பலரும் உணர்ந்து தொழில் நுட்பங்கள் வழி கற்றும் கற்பித்தும் வருகின்றனர். பசுமரத்தாணி போல் பாடங்களை தெளிவாய் மனதில் பதிய வைப்பதற்கு தொழில்நுட்ப வழிக்கல்வி அவசியமாகிறது.

சமூக ஊடகங்களான தொலைக்காட்சி, அலைபேசி, வாட்ஸ்அப், YOUTUBE முதலான சாதனங்கள் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணை புரிகின்றன. பாடங்கள் கற்பிப்பதோடு மட்டுமல்லாது மருத்துவம், சமையல், ஆன்மீகம், சோதிடம், கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்கள் பலவற்றையும் கற்றுத் தருகின்றன.

இணையத்தில் இல்லாதவை எதுவும் இல்லை என்கிற அளவிற்கு அறிவியல் வளா்ச்சியடைந்துள்ளது.

ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப இன்றைய கல்வியும் தொழில் நுட்பங்களின் துணைகொண்டு கற்றுத்தரப்படுகின்றன. இத்தகைய சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்டு எவ்வாறு கல்வி கற்றுத்தரப்படுகின்றன என்பதைபற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


தமிழ் கம்ப்யூட்டிங் ஜர்னல் என்பது கல்வி தொழில்நுட்பங்கள் குறித்த கள ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இந்த பணியின் விளைவாகும். இது தமிழ் மக்களின் மொழி மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதாகும்.

பயனர்களுக்கிடையேயும் நிரலர்களுக்கிடேயேயும் தமிழுக்கானத் தனிப்பயனாக்கப்பட்ட கல்வித் தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வையும் தேவையையும் ஏற்படுத்துவதை இந்த இதழ் நோக்கமாகக் கொண்டுள்ளது கல்வியியல் மாநாட்டுக் கஓவை என்னும் தமிழ்க் கணினி ஆராய்ச்சி இதழ் தமிழ் கம்ப்யூட்டிங் ஜர்னல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கல்வியியல் மாநாட்டுக் கஓவை என்னும் தமிழ்க் கணினி ஆராய்ச்சி இதழ் தமிழ் கம்ப்யூட்டிங் ஜர்னல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டு இதழ்களில், நான்காம் பன்னாட்டுக் கல்வியியல் மாநாட்டின் ஆய்வுக் கட்டுரையின் தொகுப்பாகும்.