தமிழ் வளர்ச்சியில் கணினி மற்றும் இணையத்தின் பங்களிப்பும் பயன்பாடுகளும்

னைவர் வெ.முத்துலட்சுமி

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்

profmuthulakshmiv@gmail.com

முனைவர் ச.மாசிலாதேவி

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்

masiladevi2@gmail.com

ஜி.டி.என் கலைக் கல்லூரி(தன்னாட்சி)

திண்டுக்கல் – 05

 

ஆய்வுச்சுருக்கம்

இன்றைய சூழலில் கணினி மற்றும் இணையத்தின் பயன்பாடு மக்கள் மத்தியில் பெரிதும் பங்காற்றி வருகிறது.ஒரு மனிதன் இருந்தஇடத்தில் இருந்துக்கொண்டே தன் வேலைகளை சுலபமாக்கவும் நேரத்தை சுருக்கியும் தருவது இணையத்தின் செயல்பாடுகளாகும்.உள்ளங்கையில் உலகத்தை அடக்கி காணும் முயற்சியை கணினி ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது.தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் அபார வளர்ச்சிக்குக் காரணகாரியமாகவும் திகழ்கிறது.கணினி மற்றும் இணையத்தின் செயல்பாடுகளை விளக்கம் விதமாக இவ்வாய்வு அமைந்துள்ளது.

முன்னுரை

ஒரு செயலை விரைவாகவும் தவறின்றியும் தளர்ச்சியின்றியும் மேற்கொள்ள கணினி நமக்குப் பெருந்துணையாக நிற்கின்றது.இன்று எல்லாத் துறைகளிலும் நமது அன்றாடப் பணிகளைச் செய்ய தணினியையும் அதன் பல்வேறு வடிவங்களையும் சார்ந்தே செயல்பட வேண்டியுள்ளது.இவ்வகையில் கணினியின் வரலாறு, செயல்படும் விதம், வன்பொருள், மென்பொருள், தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படை அறிவை ஆராய்வதன் நோக்கமாக இவ்வாய்வு அமைந்துள்ளது.

கணினியின் பயன்பாடு

கணினியின் பயன்பாட்டை இவ்வளவுதான் என்று வரையறுக்க இயலாது.இது பயன்படுத்துவோரின் தேவையையும் அவர்களின் திறனையும் பொறுத்தே அமைந்துள்ளது.ஒரு செய்தியைத் தட்டச்சு செய்து அச்சு எடுத்தல் என்பது இலட்சக்கணக்கான பயன்பாடுகளில் ஒன்றாக அதுவே தொடக்கப் பயன்பாடாக உள்ளது.இவ்வாறான பயன்பாடுகளைக் கற்றுக்கொண்டு செயல்படுத்த சில அடிப்படை நுட்பங்களை நாம் தெரிந்திருக்க வேண்டும்.

இவ்வகையில் இத்தகைய அடிப்படையை நாம் கற்றுக்கொண்டால்தான் அவற்றின் பயன்பாடுகளைப் புரிந்துகொண்டு செயல்படுத்த முடியும்.எல்லாத் துறைகளிலும் கணினியின் பயன்பாடுகள் பெருகிவருகிறது என்பதை நாம் அறிவோம்.இன்றைய சூழலில் எந்ததத் துறை சார்ந்தவராக இருந்தாலும் கணினியின் துணையில்லாமல் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுவருகிறது.கணினியின் துணைகொண்டுதான் நாம கல்விபெறவும் பிறருக்குக் கற்றுக்கொடுக்கவும் வேண்டிருக்கிறது. இவ்வகையில் கணினியின் கட்டமைப்பையும் பயன்பாட்டையும் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் கணினியின் முதன்மைப் பாகங்கள், அவற்றின் செயல்பாடுகள், தொழில்நுட்பங்களுக்கான கலைச்சொற்கள் ஆகியவற்றையும் கற்று அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.

 

கணிப்பொறி செயல்படும் விதம்

கணினியின் வகை, அதன் கட்டமைப்பான மையச்செயலகம், உள்ளீட்டகம், வெளியீட்டகம் பற்றி இந்த அலகில் அறிந்துகொள்ளலாம். கணினியின் வன்பொருள்களை முதன்மை, துணைமை என்று வகைப்படுத்தி அதன் வகைகளையும் இணையம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களையும் அறிந்துகொள்வதோடு கணினி செயல்படும் விதம் பற்றியும் தெளிவுபெறலாம். மென்பொருள்கள் என்ற பகுதியில் அமைப்பு மென்பொருள், பயன்பாட்டு மென்பொருள் என்ற இருவகைகளைப் பற்றியும் அமைப்பு மென்பொருள் வகைகளுள் உள்ள இயக்க மென்பொருள்கள், பயனீட்டு மென்பொருள்கள், மொழிமாற்றிகள், நூலக நிரல்கள், இயக்கி மென்பொருள்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொண்டு அவை ஒவ்வொன்றிலும உள்ள வகைகளைப் பற்றியும் பதிப்பு வரலாற்றையும் அறிந்துகொள்ளலாம். இவ்வகையில் இயக்க மென்பொருள்களின் வகைகளான விண்டோஸ், மேக் லினக்ஸ் போன்றவற்றைப் பற்றியும் இவை ஒவ்வொன்றிலும் உள்ள பதிப்புகளைப் பற்றியும் பலகைக் கணினி, திறன்பேசிகளில் செயல்படும் இயக்க மென்பொருள்கள் பற்றியும் அவற்றின் வகை, பதிப்புப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

நச்சுநிரல் (Anti Virus)

பயனீட்டு மென்பொருள் பகுதியில் கணினியின் செயல்பாட்டைக் கெடுக்கும் நச்சுநிரல் பற்றியும் நிரல்மொழிகளில் எழுதக்கூடியவற்றைக் கணினிக்குப் புரியும் வகையில் 0,1 என்ற இரும எண்ணாக மாற்றித்தரக்கூடிய மொழிமாற்றிகள் பகுதியில் கணினி மொழிகள் பற்றியும் வன்பொருள்களை அடையாளம் கண்டு இயங்குதளம் செயல்படுவதற்குத் துணைசெய்யும் இயக்கி மென்பொருள் ஆகும்.

 

 

பயன்பாட்டு மென்பொருள்கள்

இயங்குதளங்களுடன் இயல்பிருப்பாக இருக்கக்கூடிய பயன்பாட்டு மென்பொருள்கள் பற்றியும் கணினிப் பதிப்புப் பற்றியும் தொகுப்பு மென்பொருள்கள் பகுதியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மைக்ரோசாப்ட் அலுவலகத் தொகுப்பு, அடோபி வடிவமைப்புத் தொகுப்புகளைப் பற்றியும் அவற்றில் உள்ள மென்பொருள்களின் பயன்பாட்டைப் பற்றியும் அறிமுகநிலையில் அறிந்துகொள்ளலாம். பயன்பாட்டு மென்பொருள் வகைகள் அடங்கும் கையடக்க மென்பொருள் பற்றியும், ஒரு மென்பொருளுக்குள் இருந்துகொண்டு பணிசெய்யும் வேறு மென்பொருளான உட்செயலிகளைப் பற்றியும் கையடக்கக் கணினி, திறன்பேசி போன்றவற்றில் செயல்படும் பயன்பாட்டு மென்பொருளான குறுஞ்செயலி பற்றியும் அறிமுக நிலையிலும் மின்னூல்களைப் படிக்க உதவும் மின்படிப்பான்களைப் பற்றியும் KB, MB, GB என்று அழைக்கப்படும் அளவுகளைப் பற்றியும் குறுவட்டு போன்வற்றில் தரவுத்தேக்கத் கொள்ளளவுகள் பற்றியும் இதில் விளக்கப்பெற்றுள்ளன.

கணினியில் பயன்படுத்தப்படும் சுருக்கக்குறியீடு

கணினியில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான தொடர்களின் சுருக்கங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள இருக்கிறீர்கள்.ஏனெனில் COMPUTER என்பதே Commonly Operated Machine Particulary Used in Technical and Educational Research என்பதன் சுருக்கமாகக் மைகயாளப்படுகிறது.இதேபோல இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களும் பெயர்களும் கலைச்சொற்களும் இவ்வாறான தொடர்களின் சுருக்கங்களாகவே பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன.எனவே, இத்தகைய சுருக்கங்களைப் பற்றிய தெளிவு வேண்டும்.

கணினியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கோப்புகளின் வகைகளைப் பற்றியும் கோப்புகளின் வரிவாக்கம் என்ன என்பது பற்றியும் கணினியை விரைவாகவும் எளிதாகவும் செயல்படுத்துவதற்கு உதவும் குறுக்குவிசைகள் பற்றியும், செல்பெசி, மின்னட்டை, கையட்க்கக் கணினி போன்றவற்றைக் கணினியோடு இணைத்துத் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படும் கணினி இடையூக்கி மென்பொருள்கள் பற்றியும் விள்க்கப்பட்டுள்ளன.

கணினியின் கட்டமைப்பையும் அவற்றிற்குப் பயன்படும் வன்பொருள்கள், மென்பொருள்கள், தொழில்நுட்பங்கள், அவை செயல்படும் விதம் போன்றவற்றையும் புரிந்துகொண்டால்தான் அவற்றை நாம் அன்றாட வாழ்க்கையில் எவ்வகையில் பயன்படுத்தி வருகிறோம் என்பதையும் கணினியை எவ்வகையில் பயன்படுத்தலாம் என்பதனைப் புரிந்துகொண்டு தயக்கமின்றி அதுகுறித்த பின்புல அறிவோடு அதனை இயக்கமுடியும், பிறருக்குச் சொல்லிக்கொடுக்கவும் முடியும்.

இணையத்தின் பயன்பாடு

இணையத்தின் அடிப்படையையும் அதில் ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதற்கு எவ்வாறான வசதிகள் இருக்கின்றன என்பது பற்றியும் தமிழை எவற்றிலெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றியும் ஒருசில அடிப்படைப் பயன்பாடுகள் பற்றியும் இணையத் தொழில்நுட்பத்தின் சில அடிப்படைகளுள் இணையதள முகவரிகள், தரவிறக்கம், தரவேற்றம், இற்றபை;படுத்தம் போன்றவற்றைப் பற்றியும் உலாவி, தேடுபொறி, மின்னஞ்சல், மின்குழுக்கள் ஆகிறவற்றைப் பற்றியும் தகவல்களைப் பெறுவதற்கும் பதிவுசெய்வதற்கும் அதவும் இணையதளங்கள், வலைப்பூகள் பற்றியும் பல வலைப்பூக்களில் இடப்படும் செய்திகளைத் தொகுத்துத் தரும் செய்தியோடைத் திரட்டியாகும்.

இணையத்தின் வழி நூல்களை வழங்கும் மின்னூலகப் பயன்பாட்டையும் இணையத்தின்வழி அச்சு நூல்களை வாங்க உதவும் இணையநூல் அங்காடிகள் பற்றியும் அறிந்துகொள்வீர்கள். மேலும் அச்சு எடுக்காமல் புத்தகத்தையோ, இணையத்தையோ பார்த்து நாம் படிக்காமல் ஏற்கனவே ஒலி வடிவில் படிக்கப்பட்டு உருவாக்கப்பட்டடிருக்கும் ஒலிநூல்கள் பற்றியும் ஒரு மென்பொருளைப் பயன்படுத்துவதற்குரிய பயிற்சியை வழங்கும் செயல்விளக்கக் காணொளிகள் பற்றியும் ஒரு சொல்லைத் தட்டச்சு செய்து உடனே அந்தச் சொல்லுக்கான பொருளை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள உதவும் மின்னகராதி பற்றியும் இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணையத்தின் பயன்பாடுகள் பலவாறாக நாள்தோறும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. தேடுபொறிகள், மின்னஞ்சல், இணையதளங்கள், வலைப்பூக்கள், சமூக இணையதளங்கள், நிகழ்படக் காட்சிகள், மின்னாளுகை, இணைய ஊடகங்கள், மின் தரவுதளங்கள், மின்கலைக்கூடங்கள், இணையக் கல்விக்கூடங்கள் என்றவாறு இவை பல்வேறு நிலைகளில் அன்றாட வாழ்வில நாம் இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம்.

நமக்குத் தேவையான செய்திகளைப் பனுவல் அல்லது உரை, படம், ஒலிக்கோப்பு, நிகழ்படம் போன்ற பல்வேறு வடிவங்களில் பெறுகின்றோம். மின்னஞ்கல் அனுப்புதல், கோப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல், பேருந்து தொடர்வண்டி வானூர்தி திரைப்படம் என எல்லாவற்றிற்கும் முன்பதிவு செய்தல், தேர்வு, தேர்தல் போன்றவற்றின் முடிவுகளைப் பெறுதல், நேரில் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவதுபோல் இணையவழிக் கலந்துரையாடல் செய்தல், இணைய வகுப்பறைகளில் கற்றுக்கொள்ளுதல், இதழ்களைப் படித்தல், இணையவழ தொலைக்காட்சி பார்த்தல், வணிகம் செய்தல் என இணையத்தின் பயன்பாடு இவ்வளவுதான் என்று வரையறை செய்ய முடியாக அளவுக்கு அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இணையம் ஆபார வளச்சியாக வளர்ந்துவிட்டது.

இணையத்தின் வழி தமிழ் பயன்பாடு

இந்நிலையில் அன்றாட வாழ்வில் இணையத்தைப் பயன்படுத்தினாலும் அதில் எந்தெந்த இடங்களில் தமிழைப் பயன்படுத்த முடியும் என்பதையும் தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.இவ்வகையில் இணையத்தின் பயன்பாடுகளைப் பற்றியும் தமிழின் பயன்பாட்டையும் பின்வரும் பகுதிகளில் தெரிந்துகொள்ளலாம்.

முதன் முதலில் 1996 ஆம் ஆண்டுதான் இணையத்திற்குத் தமிழ் சென்றது என்பது இணையத்தில் ஏற்றப்பட்ட முதல் இந்தியமொழி தமிழ் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தப் பதினெட்டு ஆண்டுகளுக்குள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு இணையத் தொழில்நுட்பமும் அதில் தமிழின் பங்களிப்பும் பெருகிவருகின்றது.இணையம் இப்போது மக்களுக்குத் தேவையான செய்திகளை அள்ளித்தரும் அமுதசுரபியாக விளங்கி வருகிறது. உள்;ர்ச் செய்திகள், வெளியூர்ச் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள் எனப் பலவகைச் செய்திகளை உடனுக்குடன் பெறமுடிகிறது. உள்;ர், வெளியூர், வெளிநாடு, வெளிக்கண்டம் ஆகிய எப்பகுதியில் உள்ள மனிதர்களிடமும் நேரில் பேசுவது போலக் காட்சி மற்றும் பேச்சு வழியாக உரையாடமுடிகிறது. கற்பித்தல், மருத்துவம், பொழுதுபோக்கு, விற்பனை, இடப்பதிவு, அஞ்சல் முதலான பல துறைகளில் இக்காலத்தில் விரைவான முன்னேற்றங்கள் இணையத்தால் ஏற்பட்டுள்ளன.

இணையம் என்பது உலகெங்கம் உள்ள நாடுகளில் உள்ள கணினிகளை இணைத்துத் தகவல் பெறவும் தகவல் அளிக்கவும் சேமிப்பதற்கும் பயன்படும் ஒரு வலைப்பின்னல் ஆகும்.இத்தகைய தொழிநுட்பத்தையே உலகளாவிய வலை என்கின்றனர்.உலகளாவிய முறையில் இணைப்பில் இருக்கம் கணினிகளில் உள்ள கட்டுரைகள், எழுத்துகள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் அடங்கிய தொகுப்பைக் குறிக்கும்.இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனிநபர் மற்றம் அரசு சார் கணினி – வலையமைப்புகள் உறுப்புகளாகச் செயல்படுகின்றன.

இணைவழிக் கற்றலும் – கற்பித்தலும்

பல்லூடகங்களைப் பயன்படுத்தி எவ்வாறு கற்பிப்பது என்ற நிலையில் குறுவட்டுகள் வழிக் கற்றல் – கற்பித்தல் பற்றியும், குறுஞ்செயலிகள் வழிக் கற்றல் – கற்பித்தல் பற்றியும் அறிந்துகொள்வதோடு இணையவழிக் கல்வி பற்றியும் இணைவழிக் கலந்துரையாடல் வாயிலாகக் கற்றல் – கற்பித்தல் பற்றியும் இணைய நூலகத்தைப் பயன்படுத்திக் கற்றல் – கற்பித்தல் பற்றியும் கூறப்படுகின்றது. இணைவழித் தமிழ்க் கல்வி வழங்கிவரும் தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வாயிலாக வழங்கப்பட்டுவரும் இணையவழிப் படிப்புகள், தேர்வுமுறை, குறுவட்டுகள், இணைய வகுப்பறைகள், மின்நூலகம், பயணியர் தமிழ், கணினித்தமிழ் சார்ந்த பிற செயல்பாடுகள் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.

கணினித்தமிழ் அமைப்புகளும் செயல்பாடுகளும் என்ற நிலையில் அரசு சார்ந்து செயல்படும் கணினித்தமிழ் ஆய்வு நிறுவனங்களுள் குறிப்பிடத்தக்கன பற்றியும் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்பட்டுவரும் கணினித்தமிழ் ஆய்வு சார்ந்த தன்னார்வ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

முடிவுரை

கணினிப் பயன்பாட்டின் அடிப்படைப் பகுதிகளாகிய மையச்செயலகம், உள்ளீட்டுக் கருவிகள், வெளியீட்டுக் கருவிகள், மென்பொருள்கள், வன்பொருள்கள் பற்றியும் அறிமுக நிலையிலும் இயங்குதளங்களுடன் இயல்பிருப்பாக இருக்கக்கூடிய பயன்பாட்டு மென்பொருள்கள் பற்றியும் கணினிப் பதிப்புப் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது. இணையத்தின் பயன்பாடு, இணையத்தின் வழி மின்னூல்களின் செயல்பாடுகள் மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை இணைத்தின் பங்கு பெரும்பங்கு வகிக்கின்றது.

அடிக்குறிப்புகள்

  1. த.பிரகாஷ், (2005) கணிப்பொறியில் தமிழ், ப.45
  2. இரா. பன்னிருகைவடிவேலன், (2002) தமிழ்க் கணினியியல் பரிமானங்கள் ப.24
  3. துரை. மணிகண்டன், (2004) இணையமும் தமிழும், ப.16
  4. இல. சுந்தரம், (2005) கணினித் தமிழ் ப.55
  5. முனைவா் துரை. மணிகண்டன், வானதி, (2001) தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் ப.32
error: Content is protected !!