தினசரி பாடத்திட்டத்தில் கணினி ஒரு துணைக்கருவி

தினசரி பாடத்திட்டத்தில் கணினி ஒரு துணைக்கருவி

பா.அன்னலட்சுமி,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீ.எஸ்.இராமசாமிநாயுடுஞாபகார்த்தக் கல்லூரி,

சாத்தூர்.

tamilzagianu@gmail.com

முன்னுரை

     ஆதிமனிதனின் சக்கரம் கண்டுபிடிப்புத் தொடங்கி, இன்று வேற்று கிரகத்தில் இடம் தேடும் அளவிற்கு மனிதனின் அறிவியலில்  முன்னேற்றம் அடைந்துள்ளான். ஆரம்பகால கல்வி முறை குருகுலக் கல்வியாக இருந்து  ஐரோப்பியர் வருகைக்குப் பின் மெக்காலே கல்வி முறையாக மாறியது. அச்சு இயந்திரத்தின் உருவாக்கத்தின் விளைவாக ஓலைச் சுவடியில் இருந்த தகவல்கள் பாட புத்தகமாக மாணவர்கள் கைகளுக்குச் சென்றது. இதன் தொடர்ச்சியாக செய்தித்தாள்கள்; கற்றல் கற்பித்தளுக்கு தகவல் தொடர்பு சாதனமாக உருபெற்றது. வானொலி வந்தபின் செய்திகள் கிராமங்கள் வரை சென்றது. வானொலியின் நிகழ்சிகள் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டியது அதில் கல்விக் கென்று நேரம் ஓதுக்கி நிகழ்சிகள் வளங்கின. இதை தொடர்ந்து தொலைக்காட்சி, கணினி, இணையம் என தொழில் நூட்பக்கருவிகள் என்னிலடங்காத அளவிற்;கு உருவாகின. கல்வி கொள்கையிலும் தொழில் நூட்பக்கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.

எந்திர மயமாதல்

     உலகமே இயந்திர மயமாகியுள்ளது. நூறு மனிதன் செய்யும் வேலையை இன்று ஒரு இயந்திரம் செய்து விடும். கல்வி, தொழில், மருத்துவம், கலை  என அனைத்திலும் இயந்திரம். மனிதனின்  பார்வையே  இயந்திரமாகிவிட்டது. மனிதனையும் மனித வாழ்வையும் இயந்திரமயத்திலிருந்து இன்று பிரித்துப் பார்க்க முடியவில்லை. இயந்திரம் வந்த பின் மனிதனின் உடல் உழைப்பு குறைந்தாலும் இயந்திரத்தை இயக்க மனிதனின் தேவை இருந்தது. எத்தனை மாற்;றங்கள்  வந்தலும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மனிதன் பழகியுள்ளான். காலத்திற்கு ஏற்ப ஏல்லா மாற்றங்களையும் மனிதன் ஏற்றுக் கொள்கிறான். இயர்கையோடு இயைந்து வாழ்ந்த காலம் மாறி  இயந்திரத்தோடு இயைந்து வாழும் காலமாக மாறிவிட்டது.

கணினியின் வருகை

     கணிதத்திற்காகவே கணினியை ஆரம்பத்தில் கண்டு பிடித்தனர். அன்றாட வாழ்வில் கனிதம் முக்கிய இடம் பெருகின்றது. ஆரம்பகாலத்தில் வணிகம் பண்டமாற்ற முறையாக இருந்தது. பின் நாணயம் வந்த பிறகு  கணிதம் அவசியமானது. கணக்கீட்டு கணிப்பு சாதனங்கள் உருவாக்கப்பட்டன. கணிப்பு சாதனத்தில் உச்சகட்ட கண்டுபிடிப்பே கணினி. ‘அபாகஸ்’ என்ற கருவியே முதல் கணினி. இதன் தொடர்ச்சியே ஒவ்வொரு கால கட்டத்திற்கும் மாற்றம் பெற்று முழு கணினியாக சார்லஸ் பாபேஐ; என்பவர் கண்டுபிடித்தார். இக்கணினியில் நிரல்கள் சேமிக்கப்படுகின்றன. தொடர்ந்து வந்த காலங்களில் பல்வேறு பொறியல் வள்ளுனர்கள் கணினி வளர்ச்சியில் பங்காற்றினர். கணிதத்திற்காகவே உருவாக்கிய கணினியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர்.

     விமானங்களையும், ஏவுகனைகளையும் வடிவமைக்க உதவும் ‘இஸட்-3’ என்னும் கணினியை வடிவமைத்தனர். இன்று அனைத்து துறைகளிளும் கணினியின் பங்கு அளப்பறியது.      

கல்வியில் ஆரம்பகால கணினியின் நுழைவு

    இன்று அனைத்து துறைகளிலும் கணினி மிக இன்றியமையாத இடத்தைப் பெற்றுவிட்டது. ஆரம்பத்தில் கணினியை பயன்படுத்த கடினமானதாக இருந்து, இன்று சிறுவர்கள் கூட எளிதில் பயன்படுத்துகின்றனர். ஏந்த வேலைக்கு சென்றாலும் கணினி அறிவு உள்ளதா என்று கேட்கின்றன. அந்த அளவிற்கு கணினி இல்லாத துறையே இல்லை. இப்படி எல்லா துறையிலும் கணினி இருப்பதால் பள்ளியில் உயர்கல்வி மாணவர்களுக்கு கணினியை ஒரு பாடமாக்கினர். கணினியில் அடிப்படையான அனைத்தும் மாணவர்கள் கற்றனர். புத்தகங்களை விட மாணவர்களுக்கு கணினி வழி கற்பித்தல் எளிமையாக இருந்தது.

கற்பித்தலில் கணினியின் பங்கு

      கற்றல் கற்பித்தலில் புதிய மாற்றமே கணினி பாடத்திட்டம்தான். “புதிய கற்பித்தல் முறை ஊடகங்களின் உதவி இல்லாமல் கல்வியின் குறிகோள்களை முழுமையாக ஒரு கல்வி நிலையம் அடைய முடியாது” என்கிறார் நெல்சன் ஹென்றி. தனியார் பள்ளிகள் ஆரம்ப கல்வியிலே மாணவர்களுக்கு கணினியை கற்பிக்கின்றனர். புத்தகங்களை விட கணினியே மாணவர்களை பெரிதும் ஈர்க்கின்றன. மாணவர்கள் ஆர்வத்தோடு பயில்வதால் கணினி பயன்பாடு வழங்கும் கல்வி நிலையங்களின் தரம் உயர்கின்றது. பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, செருமணி ஆகிய வளர்ச்சியடைந்த நாடுகள் கணினியை அதிகம் பயன் படுத்துகின்றன. கணினியை மையப்படுத்தி இயங்கும் வகுப்பிற்கு ஆங்கிலத்தில் (னபைவையட உடயளளசழழஅ) இந்த வகுப்பில் மாணவர்களுக்கு புரியும் வகையில் கணினி மூலம் கற்பிக்கின்றனர். கணினியில் மாணவர்கள் கற்கும் பொழுது புதிய சிந்தனைகள் உருவாகும். மாணவர்களின் கேள்விக்கான பதிலை அவர்களே தேடும் பொழுது அவர்களின் சிந்தனை விரிவாகும். இன்று அனைத்து நூல்களும் இணையத்தில் உள்ளது. வகுப்பறையில்  ஆசிரியர்கள் ஓரு தலைப்பைக் கூறி மாணவர்களே அதைப் பற்றி பேச வேண்டும். வகுப்பிலே பாடம் தொடர்பான விளையாட்டு, கதை, வினாடி வினா, குழு கலந்துரையாடல், வீட்டுப் பாடம், பயிற்சிக் கட்டுறைகள் தேர்வுகள் என வகுப்புகள் கணினியை மையப்படுத்தி  நடந்தால் மாணவர்கள் கல்வியை இன்னும் ஆர்வத்துடன் பயில்வார்கள்.

கணினி வழிக் கல்வி(SMART CLASS)

     இன்றய அறிவியல் வளர்ச்சி கல்வித்துறையையும் விட்டுவைக்கவில்லை. இன்று  கற்றல் கற்ப்பித்தலில் அதிக மாற்றம் பெற்றுள்ளது. கரும்பலகைகளை பயன்படுத்தி பாடம் நடத்தினர். ஆனல் இன்று திரையில் காட்சி படுத்தி மாணவர்களுக்கு பாடத்தை எளிமையாக கற்பிக்கின்றனர். கற்றல் சுமையாக கருதாமல் செயல் வழிக்கற்றல், செய்து கற்றல், விளையாட்டின் மூலம் கற்றல் என மகிழ்வுடன் கற்கின்றனர். இதற்கு பல்வேறு ஊடகங்களை ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். காணொளி (VIDEO), ஒலி அமைவு(AUDIO), இணையம் என மென்பெருளை பயன் படுத்தி பாடம் கற்பிக்கும் போது மாணவர்களின் கவனத்ததை பெரிதும் ஈர்க்கும். சிறு வயதில் இருந்தே மாணவர்களுக்கு தொழில்நூட்பத்தை பழக்கும் போது தொழில் நூட்பங்களை பொழுதுபோக்காக பயன்படுத்தாமல் அறிவை மேம்படுத்த பயன்படுத்துவர். 

அறிவியல் வகுப்பு

      நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்திலும் அறிவியல் கண்டுபிடிப்பு உள்ளது. மனித வாழ்வில் ஒன்றி இருப்பதை  புத்தகங்களில் வரும் படத்தை பார்த்து தெரிந்து கொள்வதை விட திரையில் காட்சி படுத்தி பாடங்களை விளக்கவேண்டும். அறிவியலில் இயற்பியல், வேதியல், தாவரவியல், உயிரியல் என பல பிரிவுகள் இருக்கின்றன. ஆரம்பக் கல்விக்கு புத்தகங்களை வைத்து கற்பிப்பர். மேல்நிலை வகுப்பிற்கு ஆய்வுக் கூடங்களுக்கு சென்று செய்முறையாக பாடம் நடத்துவர். ஆனால் இன்று அனைத்து மாணவர்களுக்கும் கணினியைப் பயன்படுத்தி திரையின் வழியாக காட்சி படுத்தி கற்பிக்கின்றனர். வேதியலில் ஏற்படும் மூலக்கூறு மாற்றங்களையும், கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியாக்களால் உடலில் ஏற்படும் மாற்றங்களை காணொளி மூலமாக பார்க்கும் பொழுது மாணவர்களுக்கு பாடம் பற்றியான அறிவு தேடல் அதிகமாகும். மாணவர்களுக்குள் எழும் வினாக்களுக்கு அவர்களே விடை தேட வேண்டும் அதற்கான சூழல் பள்ளிலிலும் கல்லுரியிலும்இருத்தல்வேண்டும்.IMG_20200919_175738.jpg

      சமூக அறிவியலில் வரும் வரலாற்று பாடங்களை மாணவர்களுக்கு புரியும் வகையில் வரலாற்று நிகழ்வுகளை படமாக காட்சி படுத்தினால் எளிமையாக எளிமையா கற்றுக முடியும். அண்டங்களில் உள்ள கோள்களை புத்தகங்களில்; பார்த்து தெரிந்து கொள்வதை விட பால்வெளி அண்டங்களோடு பயனிப்பது போன்ற உணர்வை இன்றைய தொழில் நூட்பமான முப்பரிமாண காணொளி (three-dimensional video)  மூலம் நிகழ்த்திக் காட்ட முடியும்.

கணித வகுப்பு

    கணித பாடம் என்றாலே அதிகமான மாணவர்களுக்கு பயமும் குழப்பமும் உள்ளது. கணிதத்தை மனனம் செய்து படிப்பது என்பது கடினம் புரிந்து பயில்தலே எளிமை. மாணவர்களுக்கு ஆரம்ப பள்ளியிலே கணிதத்தை எளிமையான முறையில் கற்றுத்து தரவேண்டும். கணிதத்தை வாழ்வியலோடு கற்றுத் தர வேண்டும். கணிதம் கற்பதற்கு இன்று ஏராளமான  செயலிகள் உள்ளன. விளையாட்டின் மூலம் கற்கும் பொழுது மாணவர்களுக்கு ஆர்வம் ஆதிவகரிக்கும். தவறுகளை திருத்தி கொள்வதர்க்கும், வினாக்களுக்கான பதிலை தேடும் பொழுதும் மாணவர்களின் பார்வை விசாலமாகும்.

முடிவுரை

     மணிதன் இயர்கையோடு வாழ பழகி கொண்ட காலம் தொட்டு இயர்கையை தனக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொண்டான். ஓலைச் சுவடிகளிளும், புத்தகங்ளிளும் பயின்று இன்று கணினியில் பயிலும் காலம் மாறிவிட்டது. படிப்பதர்க்காக வேற்று நாடு செல்ல வேண்டும் என்ற அவசியம் இன்று இல்லை. கணினியும், இணையமும் இருந்தால் வீட்டில் இருந்தே கற்க முடியும். பள்ளி கல்லூரிகள் அனைத்திலும் புத்தகங்ளை தவிர்த்து விட்டு மாணவர்கள் கையில் திறன்பேசியும் (SMART PHONE)  கணினியாகவும்  வகுப்பறை மாறும்.

error: Content is protected !!