விளையாட்டு வழி கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பங்கள்.

முனைவர் த. தினேஷ்.

 தமிழ் உதவிப் பேராசிரியர் 

வி. இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி. திண்டல் ஈரோடு. 

dhineshd@vetias.ac.in

தொழில்நுட்பங்கள்  வேகமாக  வளர்ந்து  வரும்  இன்றைய  காலகட்டத்தில்  கல்வியானது  பெரும்பாலோனோருக்கு  நுனிப்புல்  மேய்வதுபோல்  ஆகிவிட்டது.  அதிவேகமாக சுழன்று  வரும் இந்த  காலகட்டம்  அனைவரையும்  மிகச்சுருக்கமாக  வாழ வைத்துவிட்டது.  இவ்வாறு  வேகமாக  உருண்டு ஓடிக்கொண்டிருக்கும்  காலவெள்ளத்தின்  போக்கிற்கு  ஏற்ப  இன்றைய  கல்வி  முறைகளும்  கட்டாயம்  மாற  வேண்டிய  சூழலில்  உள்ளது. 

அப்படிப்பட்ட  கல்வி  முறையில்  பல்வேறு  புதுமைகளைப்  புகுத்தி  கற்றல்  வழிமுறைகளைச்  சிறப்பிக்க   வேண்டியது  இன்றைய  ஒவ்வொரு  கல்வியாளர்களின்  / ஆசிரியர்களின்  கையில்  தான்  உள்ளது.  காலம்  அனைவருக்கும்  ஒரு  நிர்ணயத்தைக்  கொடுக்கும்  இந்த  வகையில்  கல்வி   சூழலுக்கும்   காலம்  பல்வேறு  புதுமைகளைத்  தொன்றுதொட்டு கொடுத்துக்கொண்டு தான் உள்ளது.  ஒரு காலத்தில் கல்வெட்டுகளிலும்  ஓலைச்சுவடிகளிலும்  தவழ்ந்து  வந்த  நமது  மொழி  இன்று  கணினி,  இணையதளம் என  பன்முங்களில்  மிளிர்ந்து  நிற்கின்றது. 

 இவ்வாறு  2500  ஆண்டுகளாக  அந்தந்த  காலகட்டத்தில்  மொழியைக் காக்க  அதன்  பாதுகாவலர்களாக  விளங்கிய  புலவர்களும்  தமிழ்  ஆர்வலர்களும்   தான்  இதற்கு  காரணம்.  ஒவ்வொரு ஆசிரியரும்   எளிமையான முறையில்    விளையாட்டு  வழி  கல்வியை மாணவர்களுக்கு  எடுத்து  புரியவைப்பதன் மூலம்  கற்பித்தலில்  புதிய  இலக்கை   நாம் அடையமுடியும்.

கற்பித்தலும் புதுமை எண்ணங்களும். 

  கல்வி  என்பது  ஒவ்வொருவரின்  வாழ்க்கையில்  கண்டிப்பாக  மாற்றத்தை  ஏற்படுத்தும்  ஒரு  கருவியாகும்.  இன்றைய   இணையதள  சூழலில்  மாணவர்கள்  ஆசிரியரின்  துணையின்றி  பாடக்  குறிப்புகளை  இணையம் வழியாக சேகரிக்கவோ  அல்லது   தரவிறக்கம்  செய்யவோ முடியும்.  

அப்படியிருக்க ஆசிரியர்கள் வகுப்பறையில் தொடர்ந்து வெறும் பாடத்திட்டத்தை 

மட்டும் கூவிக் கொண்டிருப்பது மாணவர்களுக்கு  எவ்வித பயனையும் விளைவிக்காது.  ஒவ்வொரு  ஆசிரியரும்  காலத்திற்கு  ஏற்றாற்ப்போல்  சுழலும்  பம்பரங்களாக  மாற  வேண்டும்.  அப்போதுதான்   கற்றலில்  இனிமை  பயக்கும்.  ஆசிரியர்  மாணவர்  உறவுநிலை  என்பது  நல்ல  நிலையில்  அமைய  இன்றைய  விளையாட்டு  வழி  கற்றல்  கற்பித்தல் என்பது  மிகுந்த உதவிகரமாக  இருக்கும்.   உதாரணமாக  நம்  அன்றாடம்  பயன்படுத்தக்கூடிய  விடுகதைகள்,  வட்டார  வழக்கு சொற்கள்,  முதலானவற்றை ஆண்டராய்டு செயலிகள் வழி தொழில்நுட்பத்தைப் புகுத்தி எவ்வாறெல்லாம்  மாணவர்களுக்கு  சென்று  சேர்க்கலாம்  என்பதில்  மிகுந்த  கவனம்  கொள்ள  வேண்டும்.

மாணவர்களுக்கு பாடம் சார்ந்த அறிவை மேம்படுத்துவதுடன் அவர்களைப் பொழுதுப்போக்கின் வழி கற்பித்தலில் உட்செலுத்துவதின் மூலமும் நுண்ணறிவை வளர்க்க இயலும்.   இத்தகைய  புதுமையான எண்ணங்களால்  மட்டும்தான்  ஆசிரியர்  மாணவர்   உறவு  நிலைகளை  மேம்படுத்தும்

கற்பித்தலில் புதிய உத்திகள்

கல்வி மிக உன்னதமான நிலையை அடைய விளையாட்டு வழி கல்வி உத்திகள்  நமக்கு  மிகவும்  துணைப்புரியும்.  இன்று  அனைவரும்  அலைபேசிகளைப்   பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.  மடிக்கணினியைப்  பயன்படுத்த  தொடங்கிவிட்டோம்.  மேற்கண்ட கற்பித்தல் சாதனங்கள்  இரண்டும்  தற்கால  உலகில்  கல்விக்கு  கிடைத்த  இரு கண்களாகும்.  விளையாட்டு என்பது  அனைவருக்கும் விருப்பமான ஒன்று .                             பொழுதைப்போக்குவது  என்றால்  யாருக்குத்தான்  பிடிக்காது. இப்படிப்பட்ட  பொழுதுபோக்கின்  மூலம்  நமது  மூளைக்கு  ஏற்ற  விளையாட்டு  முறைகளைப்  பாடத்திட்டத்தில் உட்புகுத்தி மாணவர்களுக்கு விளங்க வைப்பதன் மூலம் அவர்களுக்கு  கல்வியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். 

இன்று ஸ்மார்ட் வகுப்பு என்று சொல்லக்கூடிய வகுப்புகள் தான் பெரும்பாலான  கல்லூரி மற்றும் பள்ளிகளில் நடைமுறையில் உள்ளன.  இந்த  ஸ்மார்ட்  வகுப்பின்  மூலம்  கற்றல் கற்பித்தல் செயலிகளைத் தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு புதிய வடிவில் வகுப்பு எடுக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகின்றது. 

விளையாட்டு வழி கற்பித்தல் கருவிகள்

எந்த ஒரு செயலையும் விளையாட்டு வழி நாம் செய்து பார்க்கும்போது அவை நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை.  வகுப்பறையில்  மாணவர்கள்  எப்போது  விளையாட்டு  வகுப்பு  வரும்  என்று  ஆவலாக காத்திருப்பர்.   விளையாட்டு  என்பது  உடலுக்கும்  மனதிற்கும்  புத்துணர்ச்சி  தரக்கூடியது  அப்படிப்பட்ட  புத்துணர்ச்சியை  கல்வி  என்ற  கருவி  மூலம்  நெறிப்படுத்துவதன்  மூலம்  மாணவர்களுக்கு  எளிமையாக  நாம்  கூறவேண்டிய செய்திகளை எளிமையாக தர முடியும். 

 கஹூட்  என்ற  ஒரு  செயலி   வழியே  நாம்  மிகப்பெரிய  ஒரு  வினாடி  வினாப்  போட்டியை  நடத்தமுடியும்.  வகுப்பில்  மாணவர்களுக்கு  மிகுந்த  உற்சாகத்தைத்  தரக்கூடிய முறையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது 1.  வகுப்பறை மாணவர்கள் அனைவரையும் இதில் ஒன்றினைத்து குறைந்த நேரத்தில் மாணவர்களின் கவனத்தீயை பற்றவைக்க முடியும்,  இதானால் கற்றலில் புதியமுறைகளையும் கையாள முடியும்.

இது மட்டுமல்லாது கூகுள் பார்ம் மூலமோ PPT கருவி மூலமாகவோ நாம் கருத்துப் படங்கள் மூலம்   மாணவர்களுக்கு  கல்வியை  எளிதாக  கற்பிக்க  முடியும்.  எவ்வளவு  கடினமான வகுப்பாக  இருந்தாலும் நாம்  PPT  முறையில்  படங்கள்  காணொளிகள்  முதலானவற்றைப்  பயன்படுத்தி  பாடத்திட்டம்  அல்லாத   பிறக்கருத்துப்படங்களையும் காணொளிகளையும் அதற்கான  தகவல்களை  உட்புகுத்தி   மாணவர்களுக்கு  தரும்போது  அவர்களின்  கற்றலில்  விரைவும்  புதுமையும்  ஏற்படுவதை  ஒரு  ஆசிரியராக நம்மால்  உணர்ந்து கொள்ள முடியும்.

தேர்வில் புதுமை. 

முன்பெல்லாம்  மாணவர்கள்  தேர்வு  என்றாலே  படபடப்பாக காணப்படுவர். 

தேர்வு  பயமே  அவர்களின்  வெற்றிக்கு  பெரும்  தடையாய்  இருக்கும்.  நிறைய  மாணவர்களுக்கு   எழுதுவதற்கான  நேரம்  போதவேபோதாது.  அத்தகைய  நேரத்தினை  இன்று  கூகுள்  பாரம்  சரி  செய்கின்றது.  கூகுள்  பாரத்தை  கொண்டு  நாம் எளிமையாக  மாணவர்களுக்கு   கட்டுரைப்  போட்டிகள்,  வினாடி-வினா போட்டிகள்,  ஓவியப் போட்டிகள்,  பேச்சுப் போட்டிகள்  முதலானவற்றை  ஒருங்கே  நடத்த  வாய்ப்பாக  அமையும்.  

இதில்  பொருத்தப்படும்  தானியங்கி  சான்றிதழ  ஒரு  1300  பேருக்கு தானியங்கி சான்றிதழ் வழங்குகிறது.  முன்பெல்லாம் நாம் கைப்பட எழுதி  எழுதி  அனுப்பவேண்டும்,   இப்போது அந்த முறை இல்லை காலம், நேரம் இவை இரண்டும்

 சுருங்கிவிட்டது. 10  ஆயிரம்  மாணவர்களுக்கு  பத்து  நாட்களுக்குள்  சான்றிதழ்  வழங்குவதற்கான  தொழில்நுட்ப  வசதிகள்  எல்லாம்  இன்று  வந்துவிட்டன.  அதனை நாம் பயன்படுத்தும் போது நமக்கு நிறைய கால செலவானது குறைகின்றது.  இன்றைய கற்றல் சூழலில் விளையாட்டு வழியை மாணவர்களுக்கு உட்புகுத்தி கற்பித்தல்  மேற்கொள்வதன் மூலம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக நல்ல ஒரு உறவு முறை  அமைய வாய்ப்புள்ளது. 

நாம்  மேடையில்  அரங்கேற்றிய  ஒவ்வொரு  செயலையும்  இன்று  வீட்டில்  இருந்தவாறே  இணையதள  கருவிகளின்  உதவியுடன்  அரங்கேற்றம்  செய்ய முடியும்.  இந்த நோய்த்தொற்று காலங்களில் நம்மை நான்கு மாதங்களாக கொடிய வைரஸ் ஆனது  முடக்கி வைத்துள்ளது. இருந்தாலும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் கல்வி கற்றலில் தொழில்நுட்ப  துணைகருவிகள்  மூலம்  தொடர்ந்து   பாடங்களை  நடத்திக்  கொண்டுதான்  இருக்கின்றது. இவற்றிக்கு கூகுல் மீட் 2. சூம் செயலி3. புளூ ஜீன்ஸ்4. டீம் லிங்க்5.  கோ. டூ. மீட்6 என ஏராளமான இணையவழிச் செயலிகள் இதற்க்கு துணைபுரிகின்றன.   பிற்காலத்தில்  அரசுப் பள்ளிகளிலும்  இத்தகைய  கற்றலின்  புதிய  முறைகளைக்  கொண்டு  வந்தால் மாணவர்களுக்கு அவை நலன் பயக்கும். 

முடிவுரை

ஆக இன்றைய சூழல் என்பது அனைத்திற்க்கும் சாத்தியமான உகந்த ஒரு சூழாலக  அமைந்த்தால் மட்டுமே இத்தகைய புதுமைக் கல்விக்கு சாத்திய ஆயிற்று.  ஒவ்வொரு ஆசிரியரும் மேற்கண்ட புதுமை முறைகளை நன்கு பயன்படுத்தி தங்களது மாணவர்களுக்கு போதிப்பதன் மூலம் வளமான மாணவசமூதாயத்தை கண்டிபாக வழங்கமுடியும் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

  1. https://kahoot.com/
  2. https://meet.google.com/
  3. https://zoom.us/signin
  4. https://www.bluejeans.com/
  5. https://www.teamlink.co/
  6. https://www.gotomeeting.com/en-in/meeting/join-meeting
error: Content is protected !!